Sunday, May 2, 2010

சிறந்த பலன்களைத் தரும் எளிய பரிகாரம்


shockan.blogspot.com
தங்கம் இன்றைய உலகில் முக்கியத் துவம் வாய்ந்தது. வாழும் காலத்தில் ஒருசிலர் நேரம் காலம் பார்க்காமல் தங்க நகைகள், வைர நகைகள், கல் நகைகள் என்று வாங்கி குவிப்பார்கள். ஒரு காலகட்டத்தில், கிரகங்கள் ஜாதகத்தில் உள்ளபடி ஏதோ காரணத் திற்காக பெரும் சிரமத்தைக் கொடுத்து விடுகின்றது. அன்றாட வாழ்வுக்குச் சிரமம் மேற்கொண்டு வாழும்போது பணக்காரர் களானாலும், ஏழை- எளியவர்களானாலும் நகைகளைக் குறைந்த விலைக்கு விற்று தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றார்கள். பழைய நகைகளை நகைக் கடையிலே கொடுக்கும்போது, பாரம்பரிய நகைக் கடைக் காரர்கள் வாங்கும் நகையினை உருக்கி தங்கக் கட்டியாக்கி, புதிய நகைகளைச் செய்வார்கள். இப்படிச் செய்வதால் விற்றவர் கஷ்டப்பட காரணமான கிரகம், நகையை உருக்கி விடும் போது போய்விடுகின்றது. ஆனால் ஒருசில நகைக் கடையினர் இவ்வாறு செய்யாமல், திருமணத்துக்கான தங்கம் வாங்கக் காத்திருக் கும் குடும்பத்தாரிடம், குறைந்த விலைக்கு பழைய நகை தருகின்றோம் என்று, வாங்கிய விலையைவிட கூடுதல் விலை போட்டு, புதிய நகை விலையைவிட சற்று குறைவாகக் கொடுத்து விடுவார்கள். வாங்குபவர்கள் குறைந்த விலைக்கு நகை கிடைத்தது என்று மகிழ்ச்சி யாக வாங்கிச் செல்வார்கள். அந்த நகையோடு, பழைய நகையை விற்றவர் கஷ்டமும் சேர்ந்து வருகின்றது என்று உணரமாட்டார்கள். அனுபவத்தில் கண்ட வரை பழைய நகையை வாங்கி அணிந்தவர்கள் சிரமத்தையே அடைந்துள்ளார்கள். வாங்கி விற்ற நகைக் கடைக்காரரும் கஷ்ட சூழ் நிலைக்குச் சென்றுள்ளார்கள். நகைகளில் ஒவ்வொரு கற்களும் சக்தி பெற்றவை. அதன் தாக்கம் காரண மாகவே கஷ்ட சூழ்நிலையை உருவாக்கி, நகைக்குச் சொந்தக்காரரை விற்கச் செய்துள்ளது என்பதை நாம் உணர வேண்டும். எனவே பழைய நகை வாங்கு வோரும், வாங்கி அணிவோரும், தற்போது பழைய நகைகளை வாங்கியது முதல் சில சிரமங்களை அடைந்து வருவோரும் கீழ்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து நகையை உபயோகிக்கலாம். மேலும் பழைய நகை வாங்கினாலும், கீழ்கண்ட எளிய பரிகாரம் செய்து கொண்டால், நகையை விற்றவர் கஷ்டம் உங்களைத் தொடராது.

எளிய பரிகாரம்-1

நகையை விற்றுவர தாய்மார்கள், ஆடவர்களிடம் கொடுக்கும்போது ஏற்படும் கண்ணீரும் அவர்கள் பட்ட கஷ்டமும் கூடவே வந்து நிற்கும். அந்த பழைய நகைகளில் உள்ள கஷ்டமும் வாங்குவோரையும் வந்துசேரும். எனவே பழைய நகையை வாங்கியவுடன் வரக்கூடிய முதல் வெள்ளிக் கிழமையில் உங்கள் அருகில் உள்ள காளி கோவிலுக்கு நகையை எடுத்துச் சென்று, அம்மன் காலடியில் வைத்து முறையான பூஜை செய்து திரும்பப் பெற்று, அதன் பின்னரே அணிய வேண்டும். இப்படி செய்தால் நகையை விற்றவரின் கஷ்டங் கள் உங்களையும் வந்தடையாமல் போகும்.

எளிய பரிகாரம்-2

இதற்கு முன்னர் பழைய நகைகளை வாங்கி அணிந்து கொண்டிருப்போர் இதற்கு மாற்று பரிகாரம் இல்லையா என்று நினைப்பீர்கள். நீங்களும் வாங்கிய பழைய நகையினை வெள்ளிக் கிழமையில் அருகிலுள்ள காளி கோவி லுக்குச் சென்று அம்மனின் கால்களில் வைக்கச் செய்து, பூஜை செய்தபின் மீண்டும் அந்த நகைகளை கேது பகவான் காலடியிலும் வைத்து பூஜித்து பெற்று வரவேண்டும். கேது பகவான் காலடியில் வைக்கும்போது பல வண்ணத் துணியில் வைத்து வைக்க வேண்டும். துணியை அங்கேயே விட்டு வரவேண்டும். நகையை மட்டுமே கொண்டு வரவேண்டும். வீட்டில் வந்து அணிய வேண்டும். கஷ்டங்கள் தொடராது.

எளிய பரிகாரம்-3

பழைய நகைகளை வாங்கி, விற்பனை செய்பவர்கள் நகைகளை வாங்கி, வெள்ளிக் கிழமையில் காளி அம்மன் காலடியில் வைத்து வணங்கி வாங்கி வந்து வியாபாரம் செய்தால், உங்கள் கடை நல்ல முறையில் நடக்கும். பின்னடைவு வராது. பெருத்த நஷ்டமும் வராது.

No comments:

Post a Comment