Sunday, May 2, 2010

ஐஸ்வர்ராராய்க்கு கராத்தே கற்றுக் கொடுத்தவர்!



shockan.blogspot.com
இவர் ஒரு டிஷ்யூம் பார்ட்டி. பேரு கராத்தே ரமேஷ். உலக கராத்தே போட்டியில் ஆறு கறுப்பு பெல்ட் வென்றவர். ஐந்து முறை இந்திய கராத்தே சாம்பியன் போட்டியில் வென்றவர். சொந்த ஊர் வேலூர்.

சினிமா ஹீரோ ஆசையில் கோடம்பாக்கம் வந்தவர். "சட்டம் ஒரு இருட்டறை' படத்தைத் தயாரித்த வடலூரான் கம்பெனி தயாரிக்க, கே. விஜயன் இயக்கிய "நீறு பூத்த நெருப்பு' படத்தில் ஹீரோவாக நடித்தார். படம் எதிர்பார்த்த மாதிரி வெற்றி பெறாததால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இது 1983-ஆம் ஆண்டு நிலவரம் . சரி; ஹீரோவாகத்தான் ஆக முடியவில்லை. எந்த கேரக்டர் கிடைச்சாலும் நடிக்கலாம் என்று மனசை தேற்றிக் கொண்டு, "கொம்பேறி மூக்கன்', "வேங்கையின் மைந்தன்' படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்தார். 1986- வரை வாய்ப்புக்காக அலைந்தும் சரியான வாய்ப்பு வரவில்லை.

"இனி நடிக்க வாய்ப்பு கேட்டு அலையறது வேஸ்ட்' என்ற முடிவுக்கு வந்த ரமேஷ் ஸ்டண்ட் யூனியனில் மெம்பராகி விட்டார். இப்போ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று எல்லா மொழிகளிலும் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து முடித்து விட்டார். அசப்பில் கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் சாயலில் இருந்ததால் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு விஷ்ணுவர்தனுக்கு டூப்பாக நடித்திருக்கிறார்.

"எந்திரன்' கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ரஜினியோடு மோதும் காட்சிக்காக ஒரு மாதம் நடித்திருக்கிறார். கமோண்டோ படைவீரர் ரோல். அப்போது ஐஸ்வர்யாராய்க்கு கராத்தே கற்றுக் கொடுத்திருக்கிறார்.

ஸ்டண்ட் நடிகராக நடித்துக் கொண்டே தமிழகம் முழுக்க எழுபது கராத்தே பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். இதுவரை இருபதாயிரம் பேர் இவர் சென்டர்களில் கராத்தே பயிற்சி பெற்றுச் சென்றிருக்கிறார்கள். இப்போதும் வேலூர் மாவட்ட காவல் துறையினருக்கு இவர்தான் கராத்தே ட்ரைனர். 80-களில் சென்னை காவல் துறைக்கும் இவரே கராத்தே மாஸ்டராக இருந்திருக்கிறார்.

கோலிவுட் தகுதியானவர்களைத் தூக்கி எறிவதும்; இல்லாதாரை தூக்கி விடுவதும் காலக் கொடுமை என்பதற்கு ரமேஷ் ஒரு உதாரணம்!

No comments:

Post a Comment