Wednesday, May 12, 2010

சூர்யா-ஸ்ருதி-முருகதாஸ் இணையும் மும்மொழிப் படம்!


shockan.blogspot.com
சூர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா சென்னையில் நடக்கிறது.

ரெட்ஜெயன்ட் மூவீஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிப்பவர் உதயநிதி ஸ்டாலின் . கஜினி படத்துக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் எழுதி இயக்கும் படம் இது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்தப் படம் குறித்து அறிவிக்கும் விழா வரும் மே 15 சனிக்கிழமையன்று சென்னையில் நடக்கிறது.

தமிழ் தவிர, தெலுங்கு , இந்தியிலும் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ள உதயநிதி, இந்தப் படத்தை பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். சூர்யா படங்களுக்கு தெலுங்கில் ஓரளவு மார்க்கெட் இருப்பதாலும், இந்தியில் அவர் நடிக்க ஆரம்பித்திருப்பதாலும் இந்தப் படத்தை மும்மொழிப் படமாகத் தயாரிக்கிறார்கள்.

சொந்தமாக உதயநிதி தயாரித்த குருவி, ஆதவன் போன்ற படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளதால், ஜெயித்தே தீர வேண்டிய சூழலில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் உதயநிதி. படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்குகிறது.

No comments:

Post a Comment