Wednesday, May 12, 2010

கொழுப்பை குறைக்கும் பாதாம், முந்திரி

shockan.blogspot.com

வாஷிங்டன்:பாதாம், முந்திரி போன்ற கொட்டை வகை உணவுகளை தினசரி உண்டு வந்தால், ரத்தத்திலுள்ள கொழுப்பு அளவு குறைகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.கலிபோர்னியாவிலுள்ள லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளால், ஏழு நாடுகளைச் சேர்ந்த 583 பேரிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு கொட்டை வகைகளை தினசரி உணவில் சேர்த்து, அதன் பிறகு நடத்தப்பட்ட 25 விதமான ஆய்வுகளிலிருந்து இந்த முடிவு பெறப்பட்டுள்ளது.


'பாதாம், முந்திரி போன்ற கொட்டைகளில் நம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, விட்டமின், மினரல் போன்றவை அடங்கியுள்ளன. அவற்றை உண்பது உணவுக் கட்டுப்பாட்டுக்குச் சமமானது' என்று அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டவர்களுக்குத் தினசரி 67 கிராம் அளவுக்கு பாதாம் பருப்பு போன்ற பொருட்கள் அளிக்கப்பட்டன. அந்த நேரத்தில் கெட்ட கொழுப்புகளை குறைக்கும் மருந்துகளும் இவர்கள் உட்கொள்ளவில்லை, இதனால், அவர்களின் ரத்தத்தில் மொத்த கொழுப்புச் சத்தில் 5.1 சதவீதம் அளவுக்கு கொழுப்பு குறைந்திருந்தது தெரியவந்தது. ரத்தத்தில் உள்ள மோசமான 'டிரைகிளிசிரைட் ' அளவு குறைந்திருந்தது.'பல்வேறு வகையான கொட்டைகளை உண்பதாலும் ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைகிறது' என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment