Tuesday, June 8, 2010

வைரமுத்துவின் கவிதை கேட்க மாறுவேடத்தில் வந்த ரஜினி

shockan.blogspot.com

சென்னை தீவுத்திடலில் தாஜ்மகால் செட் போடப்பட்டிருக்கிறது.

கவிஞர் வைரமுத்து தலைமையில் அந்த தாஜ்மகாலில் ஒரு காதல் கவியரங்கம் நடந்தது.பெருங்கூட்டம். காந்தக்குரலில் கவிதை சொன்னார் வைரமுத்து.



தாஜ்மகால் குறித்து, ‘’இதுதான் காதலுக்கு சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த்துளி. கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது’’வைரமுத்து சொன்ன போது மொத்த கூட்டமும் கைதட்டி ஆரவாரம் செய்தது.



கூவத்தின் அருகில் தீவுத்திடல் இருக்கிறது. அதனால், ‘’யமுனையை விட கூவம் தாஜ்மகாலே கொடுத்து வைத்தது... யமுனை வற்றிவிடும்...கூவம் வற்றாது’’ என்று வைரமுத்து கவிதை சொன்னபோது எழுந்த சிரிப்பலை அடங்க நெடுநேரமானது.



வைரமுத்துவின் இந்த கவிதையை நேரில் கேட்க ஆசைப்பட்டிருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால் நேரடியாக தான் வந்தால் கூட்டத்தை சமாளிக்க முடியாது என்று தெரிந்துகொண்ட அவர், வயதான முதியவர் போல் கைத்தடி ஊன்றிக்கொண்டு வந்திருக்கிறார்.



கைதட்டி, ஆரவாரம் செய்துகொண்டிருந்த அவரை ஒரு போலீஸ் அதிகாரி கவனித்துவிட்டார்.



ஆனாலும் ரஜினியின் வேண்டுகோளுக்கிணங்க அவர் கூட்டத்தில் யாரிடமும் காட்டிக்கொடுக்கவில்லை.

No comments:

Post a Comment