Wednesday, June 9, 2010

திருமணமான பெண்ணைத் திருடலாமா?-ரவிசங்கர்


shockan.blogspot.com

வாழும் கலை’ ரவிசங்கரின் பெங்களூர் ஆசிரம துப்பாக்கிச்சூடு சம்பவத்தைச் சுடச் சுட ரிப்போர்ட் பண்ணிய நாம்... எடுத்த எடுப் பிலேயே இது ரவிசங்கருக்கு வைக்கப்பட்ட குறியல்ல என்று முதன்முதலாக ஓங்கி அடித்துச் சொன்னோம். மேலும் ஆசிரமத்திற்கே சென்று விவகாரத்தை துருவி... ஆசிரம நிர்வாக அதிகாரி நரேந்திர லம்பாவுக்கும் கேரளக்கார ரான கிரின் கோவிந்துக்கும் இடையே கடுமையாய் பவர் ஃபைட் நடந்துவருவதையும்.... அதே போல் வடநாட்டு தொழிலதிபரான சித்துவுக் கும் பூஜா என்ற இளம் பெண்ணுக்கும் காதல் மலர... இதைத்தொடர்ந்து ஆசிரம தலைமைச் செயலரான தீரஜ் கௌசிக்கிற்கும் சித்துவுக்கும் மோதல் உண்டானதையும் ஸ்மெல் செய்து திகுதிகு தகவல்களைத் தந்தோம்.

பூஜாவை அடைவதில் ஜெயித்த சித்து... அவரைத் திருமணம் பண்ணிய பிறகு, தன் வீட்டில் விட்டுவிட்டு பிஸ்னஸ் விசயமாக ஃபாரினுக்குப் பறந்தார். மீண்டும் பெங்க ளூருக்கு அவர் திரும்பி வந்தபோது வீட்டில்.. எதுவும் இல்லை. பூஜாவின் மாஜி காதலரான தீரஜ் கௌசிக்... பூஜாவின் மனதைக் கரைத்து.... அசையும் பொருள் அசையாப் பொருள் என அனைத்தையும் அப்படியே அபேஸ் பண்ணி யிருந்தார். திகைத்துப்போன சித்து... இது தொடர்பாக ஆசிரமத்திற்கு அருகில் இருக்கும் புலமாவோ காவல்நிலையத்தில் புகார் செய் தார். ரவிசங்கரின் ஆசிரமத்திற்கே போய் தீரஜை சத்தம்போட்டார். இது கர்நாடக ஐ.ஜி. யின் கவனத்துக்குப் போக.. இதைத் தொடர்ந்து ஒரு போலீஸ் டீம் ஆசிரமத்துக்குப் போய் பூஜாவையும் பொருட்களையும் மீட்டு... சித்துவிடம் ஒப்படைத்தது. இந்த காதல் பஞ்சாயத்தில் பங்கேற்ற ரவிசங்கர்... திருமணமான பெண்ணைத் திருடலாமா? இனி ஆசிரமத்தில் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என தீரஜைக் கடுமையாக எச்சரித்திருக்கிறார். இந்தக் கூத்து ஒரு பக்கம் இப்படிப் போக.. இன்னொரு பக்கம்... துப்பாக்கியை வெடித்தது அம்பேத்கர் மெடிக்கல் கல்லூரி சேர்மன் டாக்டர் மகாதேவ் பிரசாத்தான். ஆசிரமத்தில் இருந்து அரைமைல் தூரத்தில் இருக்கும் தனது பண்ணை வீட்டுக்குப்போன மகாதேவ்... தனது கோழிகளை வேட்டையாடிய தெரு நாய்களை நோக்கி... துப்பாக்கியால் சுட்டார். அதுதான் ஆசிரமத்திற்குள் விழுந்து காயப்படுத்தியது'' என தன் விசாரணை முடிவை அறிவித்தது போலீஸ்.

ஆசிரமத்திலேயே இருக்கும் ரவிசங்கரின் நடுநிலை சீடர்களோ ""துப்பாக்கிக் குண்டு மேலே இருந்து செயலிழந்து கீழே விழுந்திருக் கிறது என்று ஆரம்பத்தில் போலீஸே சொன்னது. அப்படியானால் டாக்டர் மகாதேவின் கோழிகளை வேட்டையாடிய நாய்கள் விண்ணில் பறந்துசென்றதா? அதை குறிவைத்து சுட்ட குண்டுகள்தான்... குறிதவறி சர்ரெனெ கீழே வானத்தில் இருந்து இறங்கி வினய் என்பவரின் தொடையை உரசியதா? என்னவோ கதை சொல்லி... விவகாரத்தை முடிக்கப்பாக்குறாங்க. மத்திய அமைச்சர் ப.சி.யே ரவிசங்கர் குறிவைக்கப்படவில்லை .ஆசிரமத்திற்குள்தான் ஏதோ பிரச்சினைன்னு சொல்லியிருந்தார். அதை இப்ப போலீஸை வச்சி ஆசிரமம் மறைக்குது'' என்கிறார்கள் எரிச்சலாய்.

பேசாமல் ரவிசங்கர் தனது ஆன்மீக பலத் தால் சுட்டது யார் என்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்திருக்கலாம்.

No comments:

Post a Comment