Tuesday, June 1, 2010

கொரிய கார் நிறுவனத்தை வாங்க மகிந்திரா-டன்லப் டயர்ஸ் கடும் போட்டி


shockan.blogspot.com

தென் கொரியாவின் ஸ்யான்ங்கோங் (Ssangyong) மோட்டர்ஸ் கார் நிறுவனத்தை வாங்க மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனமும், டன்லப் டயர் நிறுவனமும் கடும் போட்டியிட்டு வருகின்றன.

ஸ்யான்ங்கோங் நிறுவனம் ரெக்ஸ்டோன், கைரான் ஆகிய எஸ்யூவி ரக கார்களையும், சேர்மென் என்ற பிரபலமான விலையுயர்ந்த காரையும் தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் சீனாவின் எஸ்ஏஐசி நிறுவனம் 50 சதவீதம் வரை பங்குகளை வைத்திருந்தது. ஆனால், 40 சதவீதத்தை அந்த நிறுவனம் திரும்பப் பெற்றுவிட்டதாலும், உள்நாட்டில் கார் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாலும் ஸ்யான்ங்கோங் நிறுவனம் கடுந் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

கொரியாவின் 2 சதவீத கார் மாக்கெட்டை மட்டுமே வைத்துள்ள இந்த நிறுவனத்துக்கு கடந்த சில ஆண்டுகளில் ரூ. 100 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நிறுவனத்துக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்திடம் உள்ள தொழில்நுட்பம், மாடல்கள் ஆகியவை உயர்ந்த தரமுடையவை என்பதால் இதை வாங்க 2003ம் ஆண்டிலிருந்தே மகிந்திரா நிறுவனம் முயன்று வருகிறது.

இந் நிலையில் ஸ்யான்ங்கோங் நிறுவனத்தை வாங்க இப்போது இந்தியாவின் ரூயா குழுமமும் போட்டியில் இறங்கியுள்ளது. இந்தக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் தான் டன்லப் டயர் நிறுவனம் உள்ளது குறிப்பிடத்க்கது. இப்போது கார் தயாரிப்பிலும் ஈடுபட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து ஸ்யான்ங்கோங் நிறுவனத்தை வாங்க இரு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. இதை வாங்க ரூ. 1,400 கோடி முதல் ரூ. 2,300 கோடி வரை தர இந்த நிறுவனங்களும் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

கொரியாவிலும் தென் கிழக்கு ஆசிய கார் சந்தையிலும் நுழைய இந்த 'டீல்' பெரும் உதவியாக இருக்கும் என்பதால் மகிந்திரா கடும் போட்டியிட்டு வருகிறது.

இவர்கள் தவிர பிரான்சின் ரேனால்ட், வோல்க்ஸ்வேகன், டேவூ உள்பட மேலும் 5 நிறுவனங்களும் ஸ்யான்ங்கோங்கை வாங்க ஆர்வம் காட்டின. ஆனால், வோல்க்ஸ்வேகன், டேவூ இரண்டும் இப்போது போடடியில் இல்லை.

மகிந்திரா அண்ட் மகிந்திரா சமீபத்தில் தான் ரேவா மின்சார கார் நிறுவனத்தின் 55.2 சதவீத பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. ரூயா குழுமத்திடம் டன்லப் தவிர மேலும் 7 நிறுவனங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment