Monday, June 7, 2010

திரைக்கூத்து!

விஜய்க்கு எதிர்ப்பு! ஷாருக்குக்கு ஸ்டாப்!


விஜய்யை விடுவதாக இல்லை போலிருக்கிறது இந்து மக்கள் கட்சி. சமீபத்தில் கூட விஜய்க்கு விபூதி பொட்டலம் அனுப்பும் போராட்டம் நடத்தியதை கூவியிருந்தேன். இந் நிலையில் இ.ம.க. கண்ணன் என்னிடம் பேசினார். ""விஜய் யின் "வேலாயுதம்' பட துவக்க விழாவுக்கு ஷாருக்கானை சீஃப் கெஸ்ட்டா கூட்டிட்டு வரப் போறாங்களாம். இலங்கை தமிழ்ச் சிறுவர்கள் வன்முறைப் பாதைக்கு போகாமல் அவங்களுக்கு கிரிக்கெட் கத்துத்தரப் போறதா சொல்லியவர் ஷாருக். சிங்கள வெறியர்களின் வன்முறைக்கு தமிழர்கள் பாதிக்கப்படுகிற உண்மையை மறைத்துப் பேசும் ஷாருக்கை படபூஜைக்கு அழைத்து வந்தால்... போராட்டம் நடத்துவோம். விஜய்க்கும் எங்களோட கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம் கோழி'' என குமுறினார் கண்ணன். இலங்கை விழா காரணமாக இந்தி நட்சத்திரங்கள் மீது கடுப்பில் இருக்குது கோலிவுட். இந்த நிலையில் ஷாருக்கை கூப்பிட்டு வருவாங்களா என்ன?

"வேலாயுதம்' தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திர னிடம் கேட்டேன்.

"ஆமா கோழி! ஷாருக் விழாவுக்கு வர சம்மதிச்சிட் டார். அவருக்கு வசதியாத்தான் இந்த மாசம் 20-ந் தேதிக்கு மேல பூஜை வச்சிருக்கோம்' என்றார். இந்து மக்கள் கட்சி யின் எதிர்ப்பையும், ஷாருக் மீது இருக்க அதிருப்தியையும் சொன்னேன். "அட... இவ்வளவு சிக்கல் இருக்கா? பிரச்சனையை முன் கூட்டியே சொன்னதுக்கு நன்றி கோழி. ஷாருக்கை சிறப்பு விருந்தினரா கூட்டிட்டு வரும் முடிவை கைவிட்டிடுறோம்' என்றார் ரவி.


வௌம்பரம் நோ!


ஹன்ஸிகா மொத்வாணி மும்பையிலிருந்து தெலுங்கிற்கு வந்து கோலிவுட்டில் ஆஜராகியிருக்கிறார். தனுஷுடன் "மாப்பிள்ளை', விஜய்யுடன் "வேலாயுதம்' என எடுத்த எடுப்பிலேயே ஹன்ஸிகா மார்க்கெட் களைகட்டவே... வழக்கம் போலவே விளம்பர ஆஃபர்கள் குவிந்தன. தி.நகர். துணிக்கடை விளம்பரங்களில் நடிக்கக் கேட்டு அம்மணியின் மம்மியை மொய்ச் செடுக்க... ‘"அரக்கோடி சம்பளம், நகைக் கடை விளம்பரம்... அப்பத்தான் என் பொண்ணு ஆக்ட் கொடுக்கும். துணிக் கடை வௌம்பரத்துலயல்லாம் பொண்ணு நடிக்காது' எனச் சொல்லி விட்டாராம் மம்மி.


சிங்கம் சர்ச்சையின் உண்மை!


ஈரோட்டில் "சிங்கம்' படம் ஓடும் ஆனூர் மற்றும் அபிராமி தியேட்டர் ஊழியர்களை டிக்கெட்டை அதிக விலைக்கு விற்கச் சொல்லி மர்ம கும்பல் தாக்கியதாகவும், இதனால் ஒரு நாள் ஈரோடு நகர தியேட்டர்கள் மூடப்பட்ட தாகவும் செய்தி வந்தது. என்னோட சோர்ஸின் வாயைக் கிளறினபோது வேறு மாதிரி இருந்தது உண்மை நில வரம். நெல்லை விநியோகஸ்தர் சங்க செயலாளர் மணிகண்டன், கோவை நகைக்கடை அதிபர் ஒருவரின் மகன், நாமக்கல் கோழிப்பண்ணை பார்ட்டி ஒருவர் ஆகியோர் சேர்ந்து மோனிகா ஃபிலிம்ஸ் சார்பில் "சிங்கம்' படத்தை அங்கே வெளியிட்டிருக்கிறார்கள். தியேட்டர் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு கள்ள மார்க்கெட்டில் டிக்கெட்டை விற்றதோடு டி.சி.ஆர். எனப்படும் டெய்லி கலெக்ஷன் ரிப்போர்ட்டில் குறைந்த வசூலைக் காட்ட... இதனால் மணி கண்டன் டீம் மப்போடு போய் தியேட் டர்காரர்களிடம் நியாயம் கேட்க... மப் பில் இருந்த ஊழியர்கள், மனிகண்டன் டீமை தாக்கியதோடு தங்களை தவறு செய்யச் சொல்லி தாக்கியதாக பீலா விட்டு தியேட்டர் அடைப்பு செய்து விட்டனர். அதன் பிறகு திருப்பூர் சுப்ர மணியம் உட்பட பலரும் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். சென்னையிலிருந்து சன் டி.வி. சக்ஸேனாவும் தியேட்டர் காரர்களுக்கு போன் போட்டு "நடந்த சம்பவத்தில் தப்பு யார் பக்கம் இருந் தாலும் நான் வருத்தம் தெரிவிச்சுக் கிறேன்' எனச் சொன்ன பிறகு தியேட் டரை திறந்திருக்கிறார்கள்.



சந்தியா கொடுத்த ஷாக்!


"காதல்' சந்தியா வடபழநி விஜயசாந்தி டவர்ஸில் குடியிருக் கார். சில தினங்களுக்கு முன் பல மாடிகளை கடந்து மொட் டை மாடிக் குப் போனவர் மொட்டை மாடி யையும் கடந்து ஏணி வழியாக ஏறி தண்ணீர் தொட்டியின் உச்சியில் போய் உட்கார்ந்து விட்டார். மிக சோகமான முகபாவனை யோடு அந்த ரிஸ்க்கான உச்சியில் சந்தியா உட்கார்ந்திருந்ததால் திடுக் கிட்டுப் போன மற்ற குடியிருப்புவாசிகள் "என்னவோ... ஏதோ...' என திகி லாகி சந்தியாவை தாஜா பண்ணி கீழே இறக்கினார்களாம்.

அப்படியா?



கொய்ர நடிகை பெரிய இடத்து மாப்பிள்ளைக்கு மாமியா ராக நடித்து வருகிறார். சந்திரோ தயத்தில் தொடங்கி சூரியோதயம்வரை குவாட்டர் குவாட்டராக கொய்வதால் படப்பிடிப்புக்கு நண்பகலில்தான் வர்றாராம். சரக்கு பில்லே ஜாஸ்தியாகுதாம்.

No comments:

Post a Comment