Monday, June 7, 2010

இலங்கையை புறக்கணித்த இந்திய நடிகர்கள்!




shockan.blogspot.com

தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு மற்றும் தமிழர் அமைப்புகளின் தொடர் எதிர்ப்பினால் இலங் கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது கள் வழங்கும் விழா வை பாலிவுட்டின் (ஹிந்தி திரைப்பட உலகம்) சூப்பர் நட்சத்திரங்கள் பலரும் புறக்கணித்ததில் அதிர்ச்சியாகிவிட்டது இலங்கை அரசு.

உலக அளவில் போற்றப்படும் ஆஸ்கர், கேன்ஸ் திரைப்பட விருதுகள் விழாவிற்கு அடுத்தபடியாக புகழ்பெற்றது ஐஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா. 2000-ல் லண்டனில் துவங்கி கடந்த 10 வருடங்களாக ஒவ் வொரு வருடமும் உலகத்தின் ஏதேனும் ஒரு நாட்டில் பிரம்மாண்டமாக நடத்தப்படும் திருவிழா இது. இந்த வருடம் இந்த வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்க, ஜூன் 3,4,5 ஆகிய 3 நாட்கள் இந்த விழாவை நடத்துகிறார் ராஜபக்சே.

இந்தியத் திரைத்துறை சூப்பர் ஸ்டார்கள் பலரும் விழாவில் கலந்துகொள்கிறார்கள் என அறிவித்தனர் விழாக்குழுவினர்.

ஆனால் இலங்கையில் நடக்கும் இந்த விழா வில் இந்திய திரைப்பட கலைஞர்கள் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் இயக் கம், மே 17 இயக்கம், பெரியார் தி.க., இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பைக் காட்டி முற்றுகை போராட்டங்களையும் நடத்தின. சம்பந்தப்பட்ட திரைக்கலைஞர்களுக்கு மின் அஞ்சல் மூலம் கடும் கண்டனத்தை தெரிவித்தன புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகள். மேலும் தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், ஃபெப்ஸி அமைப்பு, நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அடங்கிய தென்னிந்திய திரைப்பட கூட்டமைப் பினரும் அவசர ஆலோசனை நடத்தி, ""இலங்கை யில் நடக்கும் விழாவில் திரைத்துறையினர் யாரும் கலந்துகொள்ளக்கூடாது, மீறினால் அவர்களுக்கு தமிழ்த்திரையுலகம் எந்த ஒத்துழைப்பையும் தராது. ஹிந்தி திரைப்படத்துறை யினரும் இதனை புரிந்து கொள்ளவேண்டும். மீறினால் அவர் களின் படங்களை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம்'' என்று தங்களின் எதிர்ப்புகளை எச்சரிக்கையாக வெளிப்படுத்தினர்.

இப்படி கடந்த 1 மாதமாக இன உணர்வாளர்கள் நடத்திய தொடர்ச்சி யான போராட்டங்களுக்கும் எச்சரிக் கைகளுக்கும் செவிசாய்த்து தமிழக நடிகர்கள், நடிகைகள் அனைவரும் விழாவில் கலந்துகொள்ள மறுத்து விட்டனர். தமிழர்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து மலையாள, தெலுங்கு, கன்னட சூப்பர் ஸ்டார்களும், நடிகைகளும் விழாவைப் புறக்கணித்தனர்.

""இதனால் மூட்-அவுட்டான விழா குழுவினரும் இலங்கை அரசும் பாலிவுட் நட்சத்திரங்களை மட்டும் வைத்து விழாவை பிரம்மாண்டப் படுத்த முடிவு செய்திருந்தது. ஆனால் என்ன முடிவெடுப் பது என்று மதில்மேல் பூனைகளாக தவித்தனர் அமிதாப்பச்சன், அபிசேக்பச்சன், அமீர்கான், அனில்கபூர், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட ஹிந்தி பிரபலங்கள் பலரும். ஆனால் தமிழர்களின் எச்சரிக்கையை மீறமுடியாமல் கடைசி நேரத்தில் விழாவை புறக்கணித்திருப்பதுதான் ராஜபக்சேவை ஏகத்துக்கும் அதிர்ச்சியடைய வைத்து விட்டது'' என்றார் விழாக்குழுவினரோடு தொடர்பில் இருக்கும் தமிழக திரைத்துறையை சேர்ந்த முக்கியஸ்தர்.

இப்பிரச்சினையை துவக்கத்திலிருந்தே கையில் எடுத்த நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர்,’’""ஈழத் தமிழ் மக்கள் மீது ராஜபக்சே அரசு நடத்தி முடித்திட்ட இனப் படுகொலைப் போரின் இறுதி நாட்களில் மட்டும் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ராஜபக்சேவின் இந்த போர்குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனால் இலங்கைக்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் அதிகரித் துள்ளன. இப்படி இக்கட்டான நிலையில் உள்ள ராஜபக்சே தனது போர்க்குற்றங்களை மூடி மறைக்க வும் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தவும் திட்டமிட்டதுதான் இந்த விழா. ஆக ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு எவ்வித தண்டனையும் கிடைக்காத சூழலில், இந்திய திரைப் படத் துறையினர் அந்த விழாவில் கலந்துகொள்வது ஜீரணிக்க முடியாத விஷயம் என்பதால்தான்... விழாவில் கலந்துகொள்பவர்களை தடுக்க... எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினோம்''’என்கின்றனர்.

இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன்,’""விழா நடக்கும் நாட்டை உலகின் பார்வைக்கு கொண்டு செல்கிறது இந்த ஐஃபா விழா. சுமார் 110 நாடுகள் மூலம் 80 கோடி மக்கள் விழாவை கண்டு ரசிப்பதாக மதிப்பிடப் படுகிறது. விழாவையொட்டி பல மில்லியன் டாலர்கள் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் விழா நடக்கும் நாட்டோடு போட்டுக் கொள் ளப்படுகின்றன. இதன் மூலம் அந்த நாட்டின் பொருளா தாரமும் நிதி நிலை மையும் உச்சத்திற்கு போகிறது. இதற்காக வே விழாவை நடத்த உலக நாடுகள் போட்டி போடு கிறது.

இந்த சூழ லில்தான் ஐஃபா விருதுகள் வழங்கும் விழாவை இலங்கையில் நடத்தி ’ இலங்கை ஒரு அற்புதமான அழகான சுதந்திரமான நாடு’என்றும் சுற்றுலாவிற்கு உகந்த நாடு என்றும் நிரூபிக்கவும் பொருளாதார வீழ்ச்சியி லிருந்து மீளவும் ராஜபக்சே திட்டமிட்டார். ஆனால் இந்த விழா தென்கொரியாவிற்கு முடி வாகியிருக்கிறதை அறிந்து பதட்ட மானார். உடனே இந்தியாவின் உதவியை நாடினார் ராஜபக்சே.

இலங்கையின் போர்க்குற்றங் களில் தமக்கும் பங்குண்டு என்பதால் தென்கொரியாவிடமிருந்து விழாவை பறித்து இலங்கைக்கு தாரை வார்த்தது இந்தியா. தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட துயரம் இன்னும் தமிழகம் முழுவதும் வியாபித் திருக்கிறது. தமிழர்களின் சோகம் இந்தியாவின் துயரமாக இருக்க வேண்டும்.

ஆனால் அந்த துயரம் சிறிது மில்லாமல் ராஜபக்சேவின் போர் குற்றங்களை மூடி மறைக்கவே நடக்கும் இந்த விழாவை வடநாட்டு திரைத் துறையினரும் புறக்கணிக்கவேண்டு மென்றுதான் எச்சரிக்கை போராட் டத்தில் குதிக்க வேண்டியதிருந் தது''’’என்கிறார்.

தமிழ் உணர்வாளர்களின் போராட்டத்தினால் இந்திய திரைத் துறையின் சூப்பர் ஸ்டார்கள் பலரும் விழாவை புறக்கணித்துவிட்ட நிலை யில் விருதுகள் விழா பிசுபிசுத்திருக் கிறது.

ஆனாலும் ராஜபக்சே எதிர்பார்த்த வர்த்தக ஒப்பந் தங்கள் நிறையவே கையெ ழுத்தாகியிருக்கின்றன என் கிறது இலங்கையில் இருந்து கிடைக்கும் தகவல்கள்.

No comments:

Post a Comment