""சேலம்தான் சொந்த ஊர். அப்பா மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆனவர். நான் எஞ்ஜினியரிங் முடிச்சிட்டு ஜாப் தேடிட்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நித்யானந்தரோட பிடதி ஆசிரமத்தில் தியானம் மற்றும் ஆன்மிக சேவை குறித்து மூணு மாச ட்ரெய்னிங் கோர்ஸ் நடப்பதை கேள்விப்பட்டேன்.
"தியானம் மனசையும், உடலையும் ஆரோக்கியமா வச்சுக்கிற உதவியா இருக்கும்' என்பதால் அப்பா சம்மதிச்சு அனுப்பி வச்சார்.
மைசூர் சாலையில் இருக்கிற அந்த நித்யானந்தபுரி ஆசிரமத்திற்குள் நான் அடியெடுத்து வச்சப்போ கடவுளோட சொர்க்க பூமிக்குள் நுழையுறதாத்தான் ஃபீல் பண்ணினேன். ஆனா அது ஒரு நரகம்ங்கிறது அப்போது என் புத்திக்கி எட்டாமப் போச்சு.
பயிற்சியில் சேர்ந்த சில நாட்கள்லயே ஆசிரமத்துக்குள் பல வேலைகளை ஈடுபாட்டோட செஞ்சிட்டு வந்தேன். ஆசிரமத்தை பெரிய கார்ப்பரேட் நிறுவனம்போல் மிகச்சிறப்பா நடத்திட்டு வந்தார். ஆசிரம வரவேற்பறையை ஒட்டி "மிஷன் ஆபீஸ்' இருக்கு. பர்ச்சேஸ் செக்ஷன், கன்ஸ்ட்ரக்ஷன் செக்ஷன், ஃபைனான்ஸ் செக்ஷன், பப்ளிகேஷன்ஸ் செக்ஷன்... இப்படி 50 டிபார்ட்மெண்ட்களோட ஒரு அரசாங்கம் போலவே ஆசிரமத்தை நிர்வகிச்சு வர்றார் நித்யானந்தா. எல்லா டிபார்ட்மெண்ட்டோட சீஃப்பும் மிஷன் ஆபீஸ்லதான் இருப்பாங்க. எல்லார் டேபிள்லயும் கம்ப்யூட்டர் இருக்கும். மிஷன் ஆபீஸிற்குள் சாமியாருக்கும் ஒரு அறை இருக்கு. மேற்கு மூலையில் இருக்கும் அந்த அறையில் கிழக்கு பார்த்து உட்கார்ந்து நிர்வாக பணிகளை கவனிப்பார். எந்த சம்பளமும் வாங்காம காலைல நாலு மணியிலிருந்து நைட் 12 மணிவரைக்கும் எல்லாரும் ஒரு அர்ப்பணிப்போட வேலை செய்வாங்க. அந்த வேலைகளைச் செய்ற ஒவ்வொருத்தருமே பெரிய பெரிய நிறுவனங்களில் லட்சக்கணக்கில் மாசச் சம்பளம் வாங்கியவங்க. சாமியார் மேல ஏற்பட்ட பக்தியால் வேலையை விட்டுட்டு இப்படி தொண்டு செய்யுறாங்க. அதை பார்த்து பிரமிச் சுத்தான் நானும் ஆசிரம வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன்.
மிஷன் ஆபீசுக்கு அடிக்கடி வரும் சாமி யாரிடம் நடந்த வற்றை எல்லோரும் சொல்வார்கள். அப்போது சாமி யார் சொன்ன வேலையை... அதாவது டார்கெட்டை எட்டியதாகச் சொன்னவருக்கு தன் மேஜை மீதிருக் கும் உயர்ரக சாக்லெட்டுகளை அள்ளிக் கொடுப்பார். டார்க்கெட்டை எட் டாதவர்களை... "நாயே! சோத்த திங்கிறியா?... இல்ல... முட்டாப்பயலே' எனத் திட்டுவார். பெண்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்தால் உடனே இறுக கட்டிப்பிடிப்பார்.
என்னையும் ஒரு நாள் அப்படி சாமியார் கட்டிப்பிடித்தபோது... சாமியார் என்பதையும் மீறி ஒரு ஆணின் முதல் ஸ்பரிச அணைப்பு என்பதாலும், பலபேர் முன்னிலையில் கட்டிப் பிடித்ததாலும் கூச்சமும், சங்கடமுமாக இருந்தது.
நான் வெளியே வந்தபோது.. ஆண்கள் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்கள். பெண்கள் எனக்கு கை கொடுத்தார்கள். நான் ஒருவித அதிர்ச்சியோடு இருந்தபோது ஒரு ஊழியை சொன்னாள்... "நீ அதிர்ஷ்டக்காரி... சீக்கிரமே சாமியோட அரவணைப்பை வாங்கிட்ட. எனக்கெல்லாம் அந்த கொடுப்பினை இன்னும் கிடைக்கலை. சாமியோட அரவணைப்பு தொடர்ந்து கிடைச்சா சீக்கிரமே நீயும் சக்தி வாய்ந்தவளா ஆகிடுவ' எனச் சொன்னாள்.
சாமியார் கட்டிப்பிடிப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா? என அதிசயித்த நான் அடுத்தடுத்து சாமியின் கட்டிப்பிடி ஆசீர் வாதத்தை பெற ஆசைப்பட்டேன். கடுமையாக ஆசிரம வேலைகளை செஞ்சேன்.
"சாமியாரின் அன்பை சீக்கிரமே பெற்றுவிட்டேன்' என என் அப்பாவுக்கு போன் செய்து சொன்னபோது அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.
சாமியார் யாரையாவது குறி வைத்துவிட்டால் ‘"கண்ணு... கண்ணு... போடி கண்ணு, வாடி கண்ணு' என கூப்பிடுவாராம் ஆனால் எனக்கு அவர் குறி வைத்திருக்கிறார்னு தெரியாம ‘"கண்ணு, வாடி'னு அவர் என்னை கூப்பிட்டபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டு விட்டேன்.
தினமும் பயிற்சி வகுப்பு முடிந்ததும் சாமியாரின் அறைக்குப் போய் தேவையான உதவிகளை செய்வேன். இதனால் சாமிக்கு என்னை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. கோபிகா அம்மாவை கூப்பிட்ட சாமியார் ‘"கண்ணு ரொம்ப பிரிலியண்ட்டா இருக்கா. ஒரு ஸ்டேட்டுக்கே தலைவியா ஆகுற தகுதி அவளுக்கு இருக்கு. அடுத்த டூர் புரோக்ராமில் இவளும் கட்டாயம் இடம் பெறணும்' எனச் சொன்னார்.
தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரு மாத டூர் ஃபிக்ஸ் ஆச்சு.
முதல்ல என் சொந்த ஊர் சேலத்தில் நிகழ்ச்சி. நான் என் வீட்டுக்குக் கூட போகாம... நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டேன். இரவு நிகழ்ச்சி முடிஞ்சு சாமியார் ஒரு காரில் கிளம்ப... நானும் கோபிகாம்மாவும் இன்னொரு காரில் கிளம்பினோம். சேலத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவரின் வீட்டில் தங்கினோம்.
சாமியார் எங்கே தங்கினாலும் சாமியாரின் அறைக்குப் பக்கத்து அறையை கோபிகாம்மாவுக்கு ஒதுக்கச் சொல்லுவார். இது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டம். அதன்படி அறை ஒதுக்கப்பட்டது. நான் மற்றவர்களோடு தங்குவதற்காகப் போனபோது.... ‘"நீ கோபிகாவுக்கு உதவியா அவங்க கூடவே தங்கிக்க' என சாமியார் சொன்னார். நானும் தங்கினேன்.
சிறிது நேரத்தில் சாமியார் என்னை அழைப்பதாக சொன்ன கோபிகாம்மா "சாமிக்கு உணவு பரிமாறிட்டு வா' என்றார்.
நானும் சாமியார் அறைக்குப் போனேன்.
"வாவா..கண்ணு! கால் ரொம்ப வலிக்குது! பிடிச்சிவிடுறியா?' என்றார் சாமியார்!
"சாமியான உங்களுக்கும் மனுஷங்க மாதிரி கால், கை வலிக்குமா சாமி?'
"நல்ல கேள்வி கேட்டடி. கூடுவிட்டு கூடு பாஞ்சு திரும்ப வந்தனா. கால் மரத்துப் போச்சு. அதாண்டி வலிக்குது!' என்றார்.
நான் கால்களை பிடிச்சிவிட்டேன். சாமியாரின் கைகள் என் மேல் ஊற ஆரம்பிச்சது. நெஞ்சுப்பகுதியில் கை பட்டபோது அதிர்ச்சியிலும், பயத்திலும், பிரஷரிலும் எனக்கு மென்ஸஸ் ஆகிவிட்டது.
"அய்யய்யோ... சாமி முன்னாடி தூரமாயிட்டமே'ன்னு பதறி கதவை திறக்க வந்தேன். "கதவை திறக்காதே'னு சாமியார் சொன்னார். ஆனா... நான் அழுதபடி கதவை திறந்துக் கிட்டு வெளியே வந்தேன். அந்த அறைக்கு எதிரே நின்றிருந்த அந்த வீட்டின் உரிமை யாளர் நான் ஓடி வந்து கோபிகாம்மா அறைக்குள் நுழைவதைப் பார்த்தார்.
"சாமி முன்னாடி மாதவிடாய் ஆயிட்டேன். தீட்டு சாமியை பாதிக்குமா?'னு கேட்டு அழுதேன். "பரவால்ல... சாமிக்கு எதுவும் ஆகாது'னு ஆறுதல் சொன்ன கோபிகா... சாமியாரின் அறைக்குப் போனார். இரவு முழுக்க சாமியார் அறையில்தான் இருந்தார் கோபிகாம்மா!
எனக்கு இரவு முழுக்க தூக்கமில்லை. "சாமியாரின் கை தெரியாம பட்டதா? தப்பான நோக்கத்தில தொட்டாரா?'னு குழப்பம். ஆனாலும் இந்த பாழாப்போன மனசு சாமியார் தெரியாமத்தான் பண்ணீருப்பார்னு முடிவு பண்ணுச்சு. அப்படியே அசந்து தூங்கிட்டேன். டூர் முடிந்து பிடதி ஆசிரமத் திற்கு திரும்பினோம்.
தியான வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. சாமியார் என்னை அழைப்பதாகச் சொல்லவும் அறைக்குள் பரபரப்பாகப் போனேன்.
‘காலை அமுக்கச் சொன்னார் சாமி. அமுக்கினேன். இயல்பிலேயே எனக்கு பெரிய மார்புகள்.. அதனால் எப்போதுமே துப்பட்டா வை முழுக்க போர்த்தி மறைத்தே இருப்பேன்.
சாமியார் என் துப்பட்டாவை உருவி என் மார்புகளை தன் கைகளால் தட்டி விட்டார். நான் படார்னு எழுந்து நின்னேன்.
‘நான் ஒரு மகா வாக்கியம் சொல்றேன். அது வேத மகா வாக்கியம்! கேட்டுக் கொள்... ‘"தத்வமசி'.
"தத்வமசி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?' என கேட்டபடியே என்னை மெஸ்மரிஸம் செய்ய ஆரம் பித்தார்.
‘"தெரியாது சாமி.'
"தத்வமசி- நீ அதுவாக இருக்கிறாய்! எதுவாக? பிரம்மமாக! அதாவது கடவுளாக! நீ எப்படி கடவுளாக முடியும்? அயம் ஆத்மம் பிரம்மன். அப்படியென்றால்... என் ஆன்மா எதுவோ... அதுவே பிரம்மம். அயமாத்மா என்றால் ‘என் ஆத்மா. ஆத்மா என்று எதை நாம் உணர் கிறோமோ அந்த உயிரே பிரம்மம்தான். என் ஆத்மா இப்போது உணர்வது உன்னை. உன்னில் நான் கலக்கிற போது நீயும் என் போல் பிரம்ம மாகிறாய்' என சொன்னபடி என் ஆடைகளைக் கூட முழுதாக அகற்றாமல் தேவைப்பட்ட இடங்களில் அகற்றி அவசரமாக செக்ஸ் வைத்துக் கொண்டார்.
முடிந்ததும் சொன்னார்: "இதுதான் அமெரிக்காவில் இப்போது இளம் தலைமுறையினரிடம் இருக்கும் குக்கீஸ் வகை செக்ஸ். ரெண்டே நிமிஷத்தில், கிடைக்கிற இடத்தில் உடலுறவு கொள்வது. நம்மூரில் கூட சந்துல சிந்து பாடுறதுனு சொல்வாங்களே.. அதேதான். இனிமே நான் குக்கீஸுக்கு அழைக்கிற போதெல்லாம் வரவேண்டும்' என்றார் சாமியார்.
அதிர்ச்சி விலகாத என்னிடம் அடுத்தடுத்த சில நாட்களில் மூன்று தடவைக்கு மேல் குக்கீஸ் செய்துள்ளார்.
"கண்ணு.. உனக்கு மட்டும்தான் இந்த குக்கீஸ் பாக்கியத்தை தந்திருக்கேன்' என்றும் சொன்னார் சாமியார். அப்புறம்தான் தெரிந்தது.... சாமியாரின் குக்கீஸுக்கு பலியான பெண்கள் பலர் என்பது.''
-இப்படியாக அந்த நரக நாட்களை விவரித்தார் அந்த சேலத்துப் பெண்.
இன்னொரு பெண்ணின் கண்ணீர் கதை இது!
""குரு பூஜை செய்றப்போ சாமியாருக்கு தீபாராதனை காட்டப்படும். அப்போது 21 நிமிஷங்கள் ஓடக்கூடிய ஒரு தெய்வீகப் பாடலை ஒலிபரப்புவாங்க. அந்த பாடலை கேட்கிற போது மெய்மறந்து, கண்கசிய தெய்வங்களை வேண்டுவோம். அப்படிப்பட்ட புனிதமான பாடலை இந்த நித்யானந்தா எங்க யூஸ் பண்ணினார் தெரியுமா?''