Tuesday, August 10, 2010

Monday, August 9, 2010

நான் உள்ளே நுழைந்தவுடன் பாதுகாப்புச் செயலாளர் எழுந்து கைகுலுக்கினார்: குமரன் பத்மநாதன் விசேட செவ்வி part 2


கே: நீங்கள் கொழும்புக்கு வந்தவுடன் என்ன நடந்தது? பாதுகாப்புச் செயலருடன் முதல் சந்திப்பிலேலேயே சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக நான் சில கதைகள் கேள்விப்பட்டேன்.


ப: கொழும்பு நோக்கிய விமான பயணத்தின்போது இலங்கை அதிகாரியுடன் நான் நீண்ட நேரம் கதைத்தேன். அவர் மிக சினேகபூர்வமானவர். இலங்கை அதிகாரிகளால் நான் நாகரிகமாக நடத்தப்பட்டேன். அது எனக்கு ஆறுதல் அளித்தது. ஆனாலும் இலங்கை அடைந்தபின் என்ன நடக்குமோ என அப்போதும் இதயத்தில் கவலை இருந்தது. பாதுகாப்புச் செயலாளர் குறித்து மிக கவலை கொண்டிருந்தேன். அவர் கடுமையாகப் பேசும் சிங்கள கடும்போக்குவாதி என்ற அபிப்பிராயத்தையே நான் கொண்டிருந்தேன். அதனால் அவருடனான சந்திப்பு குறித்து உண்மையில் அச்சம் கொண்டிருந்தேன்.


ஆனால், பாதுகாப்புச் செயலரின் இல்லத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டபோது சில விடயங்கள் நடந்தன. பின்னணியில் ஒளி பளிச்சிட புத்தர் சிலையொன்று அங்கு இருந்தது. நான் சில நிமிடங்கள் நின்று புத்தர் சிலையை நோக்கிவிட்டுச் சென்றேன். அதனால் எனது மனம் ஆறுதலடைந்தது. தாய்லாந்தில் நான் எனது மனைவியுடன் அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்குச் செல்வேன். எனது வீட்டில் புத்தர் படம் உட்பட அனைத்து மத கடவுள்களின் படங்களும் உள்ளன. அதனால் எனக்கு பேராபத்து எதுவும் வராது என நான் நினைத்தேன்.


பாதுகாப்புச் செயலாளர் ஏனைய அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்தவுடன் அவர் எழுந்து என்னுடன் கைகுலுக்கிவிட்டு 'பிளீஸ் சிட் டவுண்' என்றார். ஏனைய அதிகாரிகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். திரு. கோட்டாபய மிக கண்ணியமானவராக இருந்தார். எதற்காகவும் கவலைப்பட வேண்டாம் என்றார். நான் அப்போது சரியாக என்ன சொன்னேன் என்று நினைவில்லை. ஆனால் "நுழைவாயிலில் நான் புத்தர் சிலையை கண்டேன், பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர்கிறேன்" என்பதுபோல் ஏதோ கூறினேன்.


கே: நீங்கள் குறிப்பிடும் புத்தர் சிலை சம்பவமானது புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள உங்களை விமர்சிப்பவர்கள், புத்தரை புகழும் துரோகியென உங்களை சித்தரிப்பதற்கு ஏதுவாகலாம்?


ப: எனக்குத் தெரியும். நீங்கள் கூறுவது சரி. ஆனால் நான் உண்மையில் என்ன நடந்து என்பதையே சொல்கிறேன். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. கடந்த ஜுன் மாதம் இலங்கைக்கு வந்த 9 பேர் கொண்ட புலம்பெயர் தமிழர் தூதுக்குழுவொன்றிடமும் நான் இந்த புத்தர் சிலை பற்றி சொன்னேன்.


எனது வீட்டு சூழல் காரணமாகவும் எனது மனைவியின் மத நம்பிக்கை காரணமாகவும் எனக்கு புத்த வழிபாடு, ஆலயங்கள் பரீட்சியமானவை. எனவே புத்தர் சிலையை கண்டமை உணர்வு ரீதியில் எனக்கு உதவியது. இது தான் உண்மை. அதற்காக அவர்கள் என்னை தாக்க விரும்பினால் அதை செய்யட்டும். நான் புத்தருக்கோ பௌத்தத்திற்கோ எதிரானவன் அல்லன்.


கே: உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன். பாதுகாப்புச் செயலாளருடனான உங்கள் சந்திப்பு எவ்வாறு தொடர்ந்தது?


ப: கேக், தேநீர் பரிமாறப்பட்டன. பிரச்சினையை அமைதியான வழியில் அவர்கள் தீர்க்க முயற்சித்ததாகவும் ஆனால் முழுமையான யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலர் கூறினார். அவர் சில கேள்விகளை கேட்டார். நான் உண்மையாக பதிலளித்தேன். எனக்குத் தெரியாத விடயங்களை கேட்டபோது அது பற்றி சொன்னேன். எனது பதில்களில் அவர் திருப்தியடைந்தவராகக் காணப்பட்டார். அதேவேளை, என்னைப் பொறுத்தவரை யுத்தம் நீண்டகாலத்திற்கு முன்பே முடிந்துவிட்டது எனவும் இப்போது எனது ஒரே குறிக்கோள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கை வாழ உதவுவதே எனவும் கூறினேன்.


பாதுகாப்புச் செயலரின் நடத்தைகள் எனக்கு உண்மையில் வியப்பாக இருந்தன. தொலைக்காட்சி நேர்காணல்களைப் பார்த்து அவர் ஒரு சிங்கள கடும்போக்குவாதி என்ற விம்பமே என் மனதில் இருந்தது, என்பதையும் அவரின் நடத்தை எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்பதையும் ஒரு கட்டத்தில் நான் அவரிடம் சொன்னேன். அவர் சிரித்துவிட்டு "நான் எப்போதும் இப்படித்தான். சில ஊடகவியலாளர்கள் என்னை எரிச்சல்படுத்துகின்றனர். அதனால்தான் நான் அப்படி கோபமடைகிறேன் " என்றார்.


நீண்ட உரையாடலின் பின்னர் அவர் ஒரு குறித்த அதிகாரியை எனக்கு அறிமுகப்படுத்தியதுடன், அவர் தான் எனக்குப் பொறுப்பாக இருப்பார் என்றார். சகல விடயங்கள் குறித்தும் அந்த அதிகாரியுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் தேவையானால் அவரூடாக தனக்கு எழுத்து மூலம் எதுவும் தெரிவிக்கலாம் எனவும் கூறினார். அவர் மீண்டும் என்னுடன் கை குலுக்கினார். நான் கொழும்பிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டேன். எனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியது.


கே: அதன்பின் என்ன நடந்தது? நீங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் பற்றி அரசாங்கத்துக்கு தகவல் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகளும் தகவல்களும் வெளியாகின?


ப: இது பற்றி என்னை தெளிவாகச் சொல்ல விடுங்கள். இலங்கை புலனாய்வு அதிகாரிகள் என்னுடன் பேச ஆரம்பித்த போது எனக்கு இரு தெரிவுகள் இருந்தன. ஒன்று எதிர்ப்பது, இரண்டாவது ஒத்துழைப்பது. நான் மோதினால் நான் நீண்டகால சிறையை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். அதனால் யாருக்கும் பலன் இருக்காது. ஆனால் நான் ஒத்துழைத்தால் நான் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கலாம். இது எமது மக்களுக்கு சில சேவைகளையாற்றுவதற்கு வாய்ப்பை வழங்கலாம்.


போராட்டம் இப்போதும் தொடர்ந்து அத்துடன் எனது தலைவரும் உயிருடன் இருந்திருந்தால் நான் அரசாங்கத்தை எதிர்த்து ஒத்துழைக்காமல் இருந்திருக்கலாம். நான் எத்தகைய பின்விளைவையும் சந்தித்திருப்பேன். ஆனால் நிலைமை அப்படியில்லை. எல்லாமே முடிந்துவிட்டது. எனவே எதிர்ப்பதில் அர்த்தமில்லை. எனவே நான் ஒத்துழைப்பதை தெரிவு செய்தேன்.


இன்னொரு விடயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டும். நான் 2003 ஜனவரியிலிருந்து 2008 டிசெம்பர் வரை நான் இயக்கத்திற்கு வெளியே இருந்தேன். எனக்கு 2003 ஆம் ஆண்டிற்கு முந்தைய விசயங்கள் மட்டுமே தெரிந்திருந்தது. அக்காலப் பகுதியில் கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட நபர்களிலும் எனக்குப் பின்னால் வந்தவர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதைத் தெளிவாக புலனாய்வு அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினேன். அவர்கள் எனது நிலையை புரிந்துகொண்டனர்.


நாங்கள் பேசும்போது வேடிக்கையான விடயமொன்று நடந்தது. ஒரு கட்டத்தில் அதிகாரிகள் என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினர். "உங்களுக்கு தற்போதைய எல்.ரி.ரி.ஈ. பற்றி எதுவும் தெரியாது" என பகிடியாக கூறினர். அவர்கள் சொன்னது சரிதான். பல வருடங்களுக்கு முந்தைய கட்டமைப்புகள் பற்றி மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. 2002 ஆம்ஆண்டுக்கு பின்னரான சூழல் குறித்து எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதை அவர்கள் உணர்ந்துகொண்டு என்னை பார்த்து சிரித்தனர்.


இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. அதேவேளை ஏனைய நாடுகளின் புலனாய்வுத் துறையுடனும் அதிக பரிமாற்றங்கள் மேற்;கொள்ளப்படுகின்றன.


கே: ஆனால் புலம்பெயர்ந்தோர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை நீங்கள் அரசாங்கத்திற்கு வழங்குவதாக, நெடியவன் தலைமையிலான காஸ்ட்ரோ சார்பு குழுவும் சில ஊடகங்களும் உங்களுக்கு எதிராக பிரசாரம் செய்கின்றன?


ப: அது எனக்குத் தெரியும். ஆனால், உண்மை சற்று வித்தியாசமானது. புலனாய்வு ஆட்களால் பல்வேறு வட்டாரங்களிலிருந்து தகவல்கள் பெறப்படும் அதேவேளை, அவர்களுக்கு காஸ்ட்ரோவின் ஆட்களாலும் அதிக தகவல்கள் கிடைத்துள்ளன.


கே: அது எப்படி?


ப: எனக்கு சொல்வதற்கு சற்று தயக்கமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இராணுவம் விசுவமடுவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது காஸ்ட்ரோவும் அவரின் பிரிவினரும் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். எனவே புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் குறித்து இலங்கை அதிகாரிகளிடம் இப்போது அதிக தகவல்கள் உள்ளன. அவர்களிடம் கணினிகள், தகவல் திரட்டுகள் உள்ளன. புலிகளுக்குப் பணம் கொடுத்தவர்களின் பட்டியல்கள், திகதிகள், தொகைகள் என்பன உள்ளன. அவர்களிடம் வரி பற்றுச்சீட்டுகளின் பிரதிகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் யார் நிதி சேகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். புலிகளினால் முதலீடு செய்யப்பட்ட வர்த்தகங்கள், சொத்துக்களை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். சுமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வன்னிக்குச் சென்ற அனைவரின் விசிட்டிங் கார்ட்டுகள்கூட அவர்களிடம் உள்ளன. ஆனால், தகவல் கொடுப்பவன் என மக்கள் என்னை தூற்றிக்கொண்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்?

கே: காஸ்ட்ரோவின் பிரத்தியேக டயரிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அது உண்மையா?


ப: நான் எந்த டயரியையும் பார்க்கவில்லை. ஆனால் புலனாய்வு ஆட்கள் உத்தியோகபூர்வமற்ற விதமாக நட்பு ரீதியில் என்னுடன் உரையாடிய போது காஸ்ட்ரோவின் 20 வருடகால டயரிகள் தம்மிடம் இருப்பதாகக் கூறினர். அவர் (காஸ்ட்ரோ) வெளிப்படையாக பல விடயங்களை அந்த டயரிகளில் எழுதியுள்ளார். ஒரு தடவை அதிகாரியொருவர் என்னிடம் சிரித்துக் கொண்டே காஸ்ட்ரோவுக்கு காதல் தொடர்பொன்று இருந்ததா எனக் கேட்டார். எனக்கு அது பற்றி தெரியாது என்றேன். அவர் சிரித்துக்கொண்டு முழுக்கதையையும் சொன்னார். காஸ்ட்ரோ அது பற்றிகூட எழுதியுள்ளார்.

கே: தமிழிழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பில் நீங்கள் மிக சக்தி வாய்ந்த நபராக விளங்கிய காலமொன்று இருந்தது. ஆயுதக்கொள்வனவு, புலிகளின் கிளைகள் நிர்வாகம், நிதி சேகரிப்பு, மூன்று முக்கிய பிரிவுகளுக்கு நீங்கள் பொறுப்பாக இருந்தீர்கள். 2003 ஆம் ஆண்டில் நீங்கள் இந்த இயக்கத்திலிருந்து விலகியபின் நீங்கள் உங்கள் செல்வாக்கை இழந்துவிட்டதைப் போன்றும், 2009 ஆம் ஆண்டு மீண்டும் அதில் இணைந்தபோது உங்களை மீள நிலைநிறுத்திக்கொள்வதற்கு சிரமப்பட்டதைப் போன்றும் தோன்றியது. அப்போது என்ன நடந்தது? ஏன் விலகினீர்கள்? நீங்கள் திருமணம் செய்ததுதான் காரணமா?

ப: இல்லை இல்லை. எனது திருமணம் காரணமல்ல. நான் கடந்த நூற்றாண்டின் 90களின் முற்பகுதியில் திருமணம் செய்தேன். இந்த நூற்றாண்டில் அல்ல. எனது மகள் இப்போது தனது பதின்மர் பருவத்தின் கடைசியில் இருக்கிறாள்.

எனவே, நடந்தவை வேறு. 2002 ஆம் ஆண்டு சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு போர் நிறுத்தம் பிரகடணப்படுத்தப்பட்ட பின்னர், தலைவர் பிரபாகரன் புலிகள் அமைப்பை புதிய வழியில் மீளமைக்க முயன்றார். இவ்விடயங்கள் குறித்து நான் வன்னிக்கு வந்து அவரை சந்திக்க வேண்டும் என அவர் விரும்பினார்.


ஆனால், அப்போது பல நாடுகளின் புலனாய்வு வலைப் பின்னல்களால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நான் முன்னிலையில் இருந்தேன். 2001 ஆம் ஆண்டின் செப்டெம்பர் 11 தாக்குதல் உலகின் உலகின் பாதுகாப்பு நிலைவரத்தை மாற்றியிருந்தது. நான் அப்போது இலங்கைக்கு பயணம் செய்யும்' ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. நான் பல நாடுகளின் புலனாய்வு முகவரகங்களால் குறிவைக்கப்பட்டுள்ளேன் என்பதை எனது சொந்த தகவல் வட்டாரங்களின் மூலம் அறிந்திருந்தேன். எனவே நான் தயங்கினேன். இது எனது தலைவருக்கு சினமூட்டியது.


மற்றொரு விடயம் எனக்கும் இயக்கத்திற்கும் தலைவருக்கும் இடையிலான இணைப்பில் (லிங்க்) மாற்றம் ஏற்பட்டது. 15 வருடகாலமாக வேலு என்பவர் எனக்கும் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான தொடர்பாடல் இணைப்பாக அவர் செயற்பட்டார். திடீரென அவர் மாற்றப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டார். நான் வேலுவுக்கு பழக்கப்பட்டிருந்ததால் புதிய நபருடன் அஜஸ்ட் செய்துகொள்ள எனக்கு கடினமாக இருந்தது. ஒரு வழியில் தொடர்பாடல்கள் பாதிக்கப்பட்டன.


அதேவேளை, புலிகளின் பல சிரேஷ்ட தலைவர்கள் போர் நிறுத்தத்தை தமது அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துவதில் அக்கறையாக இருந்தனர்.


புலிகளின் கப்பல்களை கடற்புலிகளின் கட்டுப்படுத்த வேண்டுமென கடற்புலிகளின் தளபதி சூசை விரும்பினார். அதுவரை அக்கப்பல்களுக்கு நான் பொறுப்பாக இருந்தேன். அரசியல் பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் புலம்பெயர்ந்த மக்களின் அரசியல் செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினார். காஸ்ட்ரோ வெளிநாட்டு நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருந்தார். அவர் அனைத்து வெளிநாட்டுக் கிளைகளினதும் முழுக்கட்டுப்பாட்டை பெற விரும்பினார். நிதிக்குப் பொறுப்பாக இருந்த தமிழேந்தி நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் அதிக பங்கு வகிக்க விரும்பினார்.


எனவே அவர்கள் அனைவரும் பிரபாகரன் எனது அதிகாரத்தை குறைத்து அவற்றை தமக்கு வழங்க வேண்டும் என விரும்பினர். போர்நிறுத்தம் காணமாக புலம்பெயர்ந்த மக்கள் பலர் வன்னிக்கு அடிக்கடி வன்னிக்குப் பயணம் செய்தனர். எனவே தம்மால் சகல விடயங்களையும் தொலைபேசி, பெக்ஸ், மின்னஞ்சல் மூலம் நேரடியாகக் கையாள முடியும் என பிரபாகரனுக்கு புலிகளின் ஏனைய சிரேஷ்ட தலைவர்கள் அறிவுறுத்தினர்.

பின்னர் எனக்கு அதிக பொறுப்புகள் காரணமாக பளுமிகுந்துள்ளதாகவும் எனவே சில நடவடிக்கைகளிலிருந்து நான் ஓய்வுவெடுக்க வேண்டும் எனவும் அவர் பிரபாகரன் தெரிவித்தார். நான் என்ன செய்ய முடியும்? அதனால் நான் ஓய்வு பெற்றேன்.

கே: உங்களுக்கும் வெளிநாடுகளிலுள்ள உங்கள் நெருங்கிய சகாக்களுக்கும் எதிராக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லையா?

ப: ஆம். சில குற்றச்சாட்டுகள் இருந்தன. சில பெண்களை வன்னிக்கு அனுப்பி எனக்கும் பாரிஸிலுள்ள மனோ, ஒஸ்லோவிலுள்ள சர்வே ஆகியோருக்கும் எதிராக புகாரிடச் செய்யும் அளவுக்கு அவர்கள் சென்றனர். சில பெண்கள் பிரபாகரனுக்கு முன்னால் சத்தமிட்டு அழுததாகவும் நான் கேள்விப்பட்டேன்.


கே: இதன் பின்னால் யார் இருந்தார்கள்?


ப: அது ஒரு சதி. காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் ஆகியோர் அதன் பின்னால் இருந்தனர். கவலையளிக்கும் விதமாக தலைவர் அதில் ஏமாற்றப்பட்டார். நாம் எம்மை நேரடியாக தற்காத்துக்கொள்ள முடியவில்லை.


கே: அதன்பின் என்ன நடந்தது?


ப: நான் முன்பு கூறியதைப் போல தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். எனது விசுவாசிகள் என அவர் கருதிய அனைவரையும் அவர் நீக்கினார். சில மாதங்களுக்குள் ஏறத்தாழ அனைத்தும் மாறின. புலிகளின் விசுவாசமான செயற்பாட்டாளர்கள் பலர் அவர்களின் பதவிகளிலிருந்து முறையற்ற விதமாக நீக்கப்பட்டனர்.


கே: ஆனால் அப்போதும் நீங்கள் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்தீர்கள். ஏன் அது மாறியது? எப்படி ஆனந்தராஜா அல்லது ஐயா உங்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்?


ப: அது இன்னொரு கதை. ஐயா மிக விவேகமான மனிதர். அவரிடம் சிறந்த பயண ஆவணங்கள் இருந்தன. சுதந்திரமாகப் பயணிப்பார். அத்துடன் அவர் தகுதிபெற்ற கணக்காளர். எனவே எனது அறிவுறுத்தலின்படி அவர் எமது கணக்குகளை தணிக்கை செய்வதற்காக அவர் சகல நாடுகளுக்கும் செல்வார்.


பின்னர் நான் அதிகமாக அறியப்பட்டு பல புலனாய்வு முகவரகங்களால் தேடப்பட்ட போது எனது பயணங்களையும் நடமாட்டங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டேன். எனவே நான் அவரை ஆயுதச் சந்தையில் ஆயுதங்களை வாங்கக்கூடிய இடங்களுக்கும் அனுப்பத் தொடங்கினேன். ஆந்த இடங்களுடன் அவர் பரிட்சியமானார்.


பின்னர் பிரபாகரனிடமும் எனது பிரதிநிதியாக அவரை நான் அனுப்பினேன். அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அவர் எனக்கு விசுவாசமாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் வன்னியிலுள்ள எனது நண்பர் ஒருவர் 'இவர் உண்மையாகவே உங்களுடைய ஆளா? அவர் உங்களுக்கு எதிராக தலைவரின் மனதில் நஞ்சூட்டிக்கொண்டிருக்கிறார்' என்று கூறியபோது அதிர்ச்சியடைந்தேன். ஐயா தானே சகல ஆயுதக்கொள்வனவுகளையும் மேற்கொள்வது போலவும் அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என்பதுபோலவும் காட்டிக்கொண்டதாக அறிந்தேன்.

அதன்பின் ஐயா பற்றி பாலா அண்ணை சொன்னது சரி என்று உணர்ந்தேன்.


கே: பாலா அண்னை (அன்ரன் பாலசிங்கம்) ஐயா பற்றி உங்களிடம் என்ன சொன்னார்?


ப: பாலா அண்ணையும் அடேல் அன்ரியும் 1999 ஆம் ஆண்டில் வன்னியிலிருந்து கடல் வழியாக வெளியேறியபோது அவர்கள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தங்குவதற்கும் லண்டனுக்குச் செல்வதற்கு முன்னர் மருத்துவ சிகிச்சை பெறவும் நான் ஏற்பாடு செய்தேன். நான் அப்போது இந்தோனேஷியாவில் இருந்ததால் அவர்களின் நலன்களைக் கவனிக்கும் பொறுப்பை நான் ஐயாவிடம் கொடுத்திருந்தேன். ஆனால் மனிதர்களை மிகச்சரியாக எடைபோடும் பாலா அண்ணை பின்னர் என்னிடம்"'நீ இந்த ஆளை நம்புகிறாய். ஆனால் இருந்துபார் ஒருநாள் உனது இடத்தை அவர் பிடித்துக்கொள்வார்" எனக் கூறினார்.
பாலா அண்ணையின் மதிநுட்பத்தை நான் உணர்ந்தபோது கால தாமதமாகியிருந்தது.


கே: ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் கே.பி. டிபார்ட்மென்ட் என அறியப்பட்ட, வெளிநாட்டுக் கொள்;வனவுப் பிரிவிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். அதற்கு என்ன காரணம் சொல்லப்பட்டது?

ப: நான் முன்பே சொன்னதைப்போல் தலைவரை சந்திப்பதற்காக நான் இலங்கைக்குச் செல்லவில்லை. பல புலனாய்வு நிறுவனங்களின் பட்டியலில் மேல் இடத்தில் நான் இருந்ததால் பயணம் செய்வது ஆபத்தானது என உணர்ந்தேன். இந்நிலையில் நான் ஆயுதம் வாங்குவதற்காக பயணம் செய்து ஆபத்துக்குள்ளாவதை தான் விரும்பவில்லை என பிரபாகரன் கூறினார். சில காலத்திற்கு ஓய்வெடுக்குமாறும் அங்கு வருவதற்கும் தன்னை சந்திப்பதற்கும் முயற்சிக்குமாறும் அவர் கூறினார்.
இதன்பின் நான் எனது கடமைகளை விடுவிப்பதைத் தவிர எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எனக்குப் பதிலாக நியமிக்கப்படுபவர்கள் தொடர்ந்தும் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள் எனவும் பிரபாகரன் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை.

கே: இது எப்போது நடந்தது. உங்களுக்கும் பிரபாரகரனுக்கும் இடையில் பிரிவொன்று ஏற்பட்டதா? அதன்பின் என்ன நடந்தது?


ப: இது 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து நான் இயக்கத்தின் அன்றாட செயற்பாடுகளிலிருந்து நான் விலகியிருந்தேன். ஆனால் நான் ஒருபோதும் முறையாக இயக்கத்திலிருந்து விலகவில்லை. அது பென்ஷன் இல்லாமல் ஓய்வெடுப்பது போலத்தான்.


அவருக்கும் எனக்கும் இடையிலான நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. அவரிடமிருந்து பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர் நண்பர் அத்துடன் எனக்கு ஓர் மூத்த சகோதரன் போல. ஆனால் நடந்த விசயங்களால் நான் வருத்தமடைந்தேன். முன்புபோல் நான் அவரை அடிக்கடி தொடர்புகொள்ளவில்லை. நான் அதைச் செய்யவேண்டுமென அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. நாம் இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் திசைத்திரும்பியிருந்தோம். ஆனால் ஆனால், ஒரு போதும் பிளவு ஏற்படவில்லை. எமக்கிடையிலான பரஸ்பர அன்புணர்வு நீடித்தது.


கே: அப்போது உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களில் ஒரு பகுதியாக, பிரபாகரனுக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது எனவும் நீங்கள் துரோகி என அவரால் கருதப்பட்டதாகவும் கூறப்பட்டது.


ப: அது எனக்குத் தெரியும். நான் 2003 ஆம் ஆண்டு புலிகளின் அமைப்பின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருந்த பின்னர் வெளிநாடுகளிலிருந்து புலிகளின் புதிய தொகுதி செயற்பாட்டாளர்களுக்கு என்னைப் பற்றியயோ கடந்த காலத்தைப் பற்றியோ தெரிந்திருக்கவில்லை. எனவே எனக்கெதிராக எதுவும் சொல்லப்பட்டிருக்கலாம்.


உண்மை என்னவென்றால், நாம் விலகியிருந்தாலும் எம் இருவருக்கிடையிலும் மிகுந்த அன்பும் பாசமும் இருந்தது. ஒரு சம்பவம் காரணமாக பிரபாகரன் எழுத்து மூலம் என் மீதான அன்பை வெளிப்படுத்தியிருந்தார். வெளிநாட்டிலிருந்த புலிகளின் வான்படைப் பிரிவு செயற்பாட்டாளர் ஒருவருக்கு சில விடயங்களுக்காக என்னுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டியிருந்தது. அதற்கு தலைவர் அனுமதியளிப்பாரா என்று அவருக்குத் தெரியாமலிருந்தது. எனவே அவரின் முன்னாள் நண்பர் கே.பியுடன் தொடர்புகொள்ளலாமா என்று கேட்டு அவருக்கு ஒரே மெசேஜ் அனுப்பினார். பிரபாகரன் தனது எழுத்து மூல பதிலில,; அதை செய்யலாம் என்று கூறியதுடன் கே.பி. தனது முன்னாள் நண்பன் அல்லவெனவும் 'இன்றும் என்றும் நல்ல விசுவாசமான நண்பன'; எனவும் வலியுறுத்தியிருந்தார்.


கே: எனவே நீங்கள் புலிகள் அமைப்பிலிருந்து ஓய்வுபெற்றீர்கள். அப்போது உங்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான எல்லா விசயங்களும் முடிந்துவிட்டது என எண்ணினீர்களா?


ப: அவ்வேளையில் நான் அப்படித்தான் நினைத்தேன். நான் புலிகள் அமைப்பிலிருந்து விலகியிருப்பதைப் பற்றி எனது மனைவியிடம் சொன்னது நினைவிலுள்ளது. இப்போது அவளுடனும் எமது மகளுடனும் அதிக காலத்தைச் செலவிட முடியும் என்று கூறினேன். ஆனால் அவள் "உங்களால் உண்மையாக அப்படி செய்ய முடியுமா? மீண்டும் வி.பி. (வேலுப்பிள்ளை பிரபாகரன்) உங்களை அழைத்தால் மீண்டும் திரும்பிச் செல்லாமல் இருக்க முடியுமா?" என்று கேட்டாள்.


எனக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான பிணைப்பை எனது மனைவி உணர்ந்திருந்தாள். ஆவள் பிரபாகரனின் மனைவி மதிவதனியுடன் தொலைபேசியில் பேசுவாள். ஆவர்கள் இருவருக்கும் தமது கணவர்களுக்கிடையிலான நெருங்கிய நட்பு தெரிந்திருந்தது.


கே: நீங்கள் மீண்டும் திரும்பிய விடயம் எப்படி நடந்தது? எப்படி ஏன் இந்த இயக்கத்தில் நீங்கள் மீண்டும் இணைந்தீர்கள்? யுத்தத்தின் கடைசி நாட்களில் உங்கள் பாத்திரம் என்ன?


ப: அது மற்றொரு நீண்ட கதை.

(அடுத்த வாரம் தொடரும்)

Sunday, August 8, 2010

ஒரு பிரபலத்தை துரத்தும் சி.டி.! பர... பர... சேஸிங்!


""யோவ் டாக்டர் நாங்க சொல்றதை பதட்டப்படாம கேளு. உன் சம்பந்தப் பட்ட சி.டி.யும், ஃபோட்டோக்களும் எங்ககிட்ட சிக்கியிருக்கு. பத்திரிகை, டி.வி.காரங்ககிட்ட கொடுத்தோம்... அவ்ளோதான் உன் கதி... என்ன சொல்ற?''

மிரண்டு போன அந்த பிரபல இதயநல மருத்துவர் ""அய்யோ... ப்ளீஸ் சார்... தயவு செஞ்சு அப்படி பண்ணிடாதீங்க. எவ்ளோ... எவ்ளோ பணம் வேணாலும் தர்றேன். ப்ளீஸ் அந்த சி.டி.யை கொடுத்துடுங்க'' -வியர்த்து விறுவிறுக்க கெஞ்சுகிறார்.

""போலீசுக்குப் போன... அவ்வளவுதான். சரி... சரி... தெப்பக்குளம் ஏரியாவுல மருது பாண்டி சிலை பக்கத்துல வா'' -கெத்தாக சொல்லிவிட்டு கட் ஆனது ஃபோன்.

ஜூலை 2. ""சார்... நீங்க சொன்ன இடத் துக்கு வந்துட் டேன். ஆனா நீங்க எங்கே இருக்கீங்க?'' -பவ்யமாகக் கேட்டார் டாக்டர்.

""டேய்... டேய்... நடிகர் திலகம் ரேஞ்ச்சுக்கு நடிக்காதடா. நீ ஹார்ட் ஸ்பெ ஷலிஸ்ட்டுன்னா... நாங்க மைண்ட் ஸ்பெஷலிஸ்ட். பொட்டியோட வாடான்னா... போலீ ஸோடவா வர்ற?ம்... உன்னை?'' -எஸ்கேப் ஆன மிரட்டல் கும்ப லின் தலைவன் உறும...

""அய்யோ.... தெரி யாம பண்ணிட்டேன் சார்... இனிமே போலீஸ்கிட்ட போகமாட்டேன் சார்... ப்ளீஸ் சார்.... நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக் கிறேன். அந்த சி.டி.யை கொடுத்து டுங்க'' கதறினார் டாக்டர்.

""ம்... அப்படி வா வழிக்கு. நாம எங்க மீட் பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணிட்டுச் சொல்றேன்'' -கட்டானது ஃபோன்.

""என்ன தைரியம் இருந்தா எனக்கே அல்வா கொடுத்துட்டு எஸ்கேப் ஆகியிருப்பானுங்க. அவனுங் களை...'' -பற்களை நரநரவென்று கடித்துக்கொண்ட எஸ்.ஐ., மிரட்டல் கும்பலைப் பிடிக்க இன்ஸ்பெக்டரிடம் டிஸ்கஸ் பண்ணினார்.

மறுநாளே... செல்ஃபோன் நம்பரின் மூலம் மிரட்டல் கும்பலின் முகவரியை ட்ரேஸ் செய்து அந்தக் கும்பலை அலேக்காக ஸ்டேஷ னுக்கு தூக்கி வந்தது மதுரை அண்ணாநகர் காக்கி டீம்.

""சார்... சார்... எங்களை விட்டுடுங்க. இந்த டாக்டரோட ஹாஸ் பிட்டலில் வேலை பார்க்கிற நர்ஸ் தான் செல்ஃபோன் மூலமா கொடுத்தது'' என்று பிளாக்மெயில் கும்பல் உண்மையைக் கக்க... அடுத்த நிமிடமே அந்த இளம் நர்ஸும் ஸ்டேஷனுக்கு கொண்டுவரப்பட்டார். எல்லோரையும் அடித்து மிரட்டிய காக்கி டீம்... அவர்களிடமிருந்து டாக்டர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடங்கிய செல்ஃபோன், மெமரிகார்டு, சில ஃபோட்டோக்களையும் அடித்துப் பிடுங்கிக்கொண்டது.

எஸ்.ஐ.யும், இன்ஸ்பெக்ட ரும் அந்தக் காட்சியைப் பார்க்க... இன்ப அதிர்ச்சி யானார்கள். அடுத்த நிமிட மே... ""டோண்ட் ஒர்ரி டாக்டர்... உங்க சம்பந்தப் பட்ட சி.டி. காட்சிகள், ஃபோட்டோக்கள் எல்லாத்தையும் கைப்பற்றிவிட்டோம். மிரட்டல் கும்பலோட தலைவன் அரசு வக்கீலோட டிரைவர். அதனால அவனையும் அந்தக் கும்பலையும் மறைமுகமாகத்தான் "கவனி'க்கணும்.

அந்த நர்ஸ் பொண்ணு "சீனியர் நர்ஸ் சர்ட்டிஃபிகேட் வேணும்'னு கேட்டு கூலிப்படையை வெச்சு உங்களை மிரட்டினதா அவகிட்ட எழுதி வாங்கிடுறோம். நீங்களும் அந்த மிரட்டல் கும்பலை மன்னிச்சு சமரசமா போயிடுறதா எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுங்க. மத்ததை நாங்க பார்த்துக்கு றோம்.... ஆனா'' என்று இழுத்தனர்.

""தயங்காமச் சொல்லுங்க சார்''.

""அதில்ல டாக்டர். உங்க மேட்டர் சிட்டியில பெரிய அதிகாரி வரை போயிடுச்சு. அதையெல்லாம் சரிபண்ணணும்னா...'' என அசடு வழிந்தனர்.

""என்ன சார் இதெல்லாம்? எவ்வளவு பெரிய பிரச்சினையிலிருந்து என்னைக் காப்பாத்தியிருக்கீங்க? வாங்க சார் என்னோட பங்களாவுக்கு'' -பிரச்சினையிலிருந்து மீண்ட மகிழ்ச்சியில் வரவேற்றார் டாக்டர்.

""அடேங்கப்பா வீடா இது? எவ்வளவு பெரிய சொகுசு பங்களா? தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் அதிகமாவே கேட்டிருக்கலாமே ப்ச் சே...'' -என்று திருப்தியடையாத காக்கிகள் அரை மனதோடு வாங்கிக்கொண்டு கிளம்பினர்.

"ஹப்பாடா...' என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ரிலாக்ஸ் ஆனார் டாக்டர். அந்த நிம்மதி பெருமூச்சு நிலைக்கவில்லை. அடுத்த ஒரு வாரத்திற் குள்ளேயே... ""யோவ் டாக்டர்... நாங்க என்ன இளிச்சவாயன்களா? ஆங்... அந்த சி.டி.யும், ஃபோட் டோ ஒரிஜினலும் எங்ககிட்டதான் இருக்கு. இந்தத் தடவையாவது போலீஸ்காரனுங்கள்கிட்ட போகாம... நாங்க சொல்ற பணத்தை எடுத்துக்கிட்டு வா... ஹா...ஹ்ஹா... ஹா...ஹ்ஹா...'' -சினிமா வில்லனைப்போல இளித்தான் அதே பிளாக்மெயில் கும்பலின் தலைவன்.

அதே அண்ணாநகர் இன்ஸ் பெக்டரும், எஸ்.ஐ.யும் அந்த அரசு வழக்கறிஞரிடம் முறையிட... தனது டிரைவரான பிளாக் மெயில் கும்பலின் தலைவனை அழைத்து அந்த சி.டி. காட்சி களையும், ஃபோட்டோக்களை யும் வாங்கிக் கொடுத்தார் அரசு வக்கீல்.

ஆனால் இப்போதும் ஒப்படைக்கப்பட்டது பிரதி என்பதும், அந்தக் காட்சிகள் வேறு சி.டி.க்களில் பதிவு செய்து வைத்திருப்பதும் தெரிய வர அதிர்ச்சியில் உறைந்து போனது டாக்டர் அண்ட் காக்கி டீம்.

""இவனுங்களை விட்டா பிரச்சினை பெரிசாயிடும். எப்பாடுபட்டாவது... இவனுங்களை புடிச்சிடணும்'' -டென்ஷனான இன்ஸ்பெக்டரும், எஸ்.ஐ.யும் தனிப்படை அமைத்துத் தேட... பிளாக்மெயில் கும்பல் குற்றாலத் துக்கு எஸ்கேப்.

""அவனுங்களை புடிக்க ணும்னா மேலும் கொடுங்க டாக்டர்.'' -போலீசுக்கு பெட்டி கை மாறியது.

""யோவ் டாக்டர்... நாங்க என்னய்யா கேட்டோம்? எவ்வளவு பெரிய விஷயத்துல சிக்கியிருக்க. எங்க ஊரு கோயி லுக்கு(!) எதாவது நிதி குடுய்யா, சி.டி.யை கொடுத்திடுறோம்னு தானே கேட்டோம். இப்போ லட்சம் லட்சமா போலீசுக்கு கொட்டிக் கொடுத்துக்கிட்டி ருக்க. இப்போ இல்ல எப்பவு மே... அந்த சி.டி. காட்சிகளோட ஒரிஜினல் உனக்குக் கிடைக் காது'' -கொக்கரித்தது பிளாக் மெயில் கும்பல்.

அப்படி என்னதான் இருக் கிறது அந்த சி.டி.காட்சியில். தோண்டித் துருவியபோதுதான் அந்த சி.டி. காட்சி நமக்கும் கிடைத்தது.

காலையில் அரசு மருத்துவமனையில் இருக்கும் அந்த பிரபல டாக்டர், மாலையில் தனது சொந்த மருத்துவமனைக்கு வருவார். அப்படித்தான் கடந்த ஜூன் 25-ந் தேதி மாலை... நோயாளிக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுவதாக தனது அறையின் கதவை சாத்திக்கொண்டார். உள்ளே... மதுரை வண்டியூரைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க குடும்பப்பெண்(?). ஆனால்... அந்தப் பெண்ணுக்கு ட்ரீட்மெண்ட் அளிக்க வில்லை டாக்டர். பதிலாக இருவரும் கொஞ்சிக் கொள்வதும், பிறகு சல்லாபத்திலும் மிதக்கிறார்கள். இதைத்தான் "ச்சே... ட்ரீட்மெண்ட்டுக்கு வந்த பேஷன்ட்டு கிட்ட இப்படியா நடந்துப்பாரு' என்று முகம் சுளித்த இளம் நர்ஸ் அதை செல்ஃபோனில் பாத்ரூம் ஜன்னல் வழியாக படம் பிடித்துவிட்டார். இதை வைத்துத்தான் சி.டி.க்களாக தயாரித்து பிளாக்மெயில் கும்பல் ஒருபக்கம் மிரட்ட... இதை சாதகமாக்கிக்கொண்டு காக்கிகளும் லட்சம் லட்சமாக டாக்டரிடம் பேரம் பேசி கறந்து கொண்டிருக்கிறார்கள்.

மதுரையில் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு பிரபல இதய நல மருத்துவர் என்று பெயரெடுத்த டாக்டரோ ""54 வயசாகுது எனக்கு. அழகான மனைவி இருந்தும் ட்ரீட்மெண்டுக்கு வந்த பேஷன்ட்டுகிட்ட சபலப்பட்டு நடந்துக்கிட்ட தால இப்படி இதய வலியை உண்டாக்குற பிரச்சினையில மாட்டிக்கிட் டேன்'' என்று புலம்பிக்கொண் டிருக்கிறார்.

தற்போது... இவரின் சபல சி.டி.யால் பேரம் பேசி பணம் அள் ளிக் கொண்டி ருப்பது ஸ்டேஷன் காக்கிகளே. ஆனால்... சி.டி. காட்சி நித்யா னந்தாவின் சி.டி. போல் பரவிக் கொண்டிருக் கிறது மதுரை முழுக்க!

சபல ஆண்களே உடம்பு பத்திரம்!


கேரளாவில் "திருப்பி அடிப்போம்' என்ற டைட்டிலோடு நூற்றுக்கணக்கான பெண்களை உறுப்பினராகக் கொண்டு கலக்கிவரும் ஷெரினாவும் பள்ளி மாணவி அபிராமியும் தலைமையேற்றுள்ள அந்த இயக்கத்தைக் கண்டாலே ஆண்கள் ஓட்டம் பிடிக்கி றார்கள்.

அங்கு சமீபத்தில் தெருக்கோடி முதல் கோட்டை வரை பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அந்த இயக்கத்தைக் கேள்விப்பட்டு வியந்துபோன நாம் ஷெரினாவையும், அபிராமியையும் சந்திக்க கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள கொடுங்க லூர் சென்றோம்.

முதலில் ஷெரினாவை சந்தித்தோம். நாம் கேள்விப்பட்ட இயக்கத்துக்கும் அந்த பொண்ணுக்கும் கடுகளவுகூட பொருத்தம் இருக்காதோ... என நமக்குள்ளே எழும்பிய கேள்வி யை அடக்கிவிட்டுப் பேசினோம்.

""பிறப்பு விகிதத்தில் ஒரு ஆணுக்கு மூணு பெண்கள் என்ற விகிதத்தில் உயர்ந்துகொண்டே போகும் இந்த கேரளத்தில் பெண் களின் பாதுகாப்புக்காக அரசு என்னதான் வேலி போட்டாலும் அதையும் தாண்டி முக்கால்வாசி ஆண்கள் தங்களின் வக்கிர புத்தியை எங்களிடம் காட்டத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில் பலமுறை நான் பாதிக்கப் பட்டிருக்கிறேன். என் கண் முன்னே பல பெண்கள் மானத்தை இழந்திருக்கிறார்கள். கடைசியாக எனக்கு நடந்த சம்பவம்தான் பல பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கும் நான் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் எர்ணாகுளம் ஐகோர்ட் ஜங்ஷனில் நடந்து சென்றுகொண்டிருந்த போது... ஒருத்தன் என்னுடைய பின்பக்கத்தைத் தட்டி னான். அவனை மோசமாகத் திட்டிய நான், கொஞ்சதூரம் வந்ததும் ஓடிவந்து என் தொடையைப் பிடித்து நசுக்கினான். வலியால் துடித்த நான், ஆவேசத்தில் அவனின் சட்டையைப் பிடித்து இழுத்து அடித்தேன். இதை அந்தப் பகுதியில் நின்ற எல்லா ஆண்களும் வேடிக்கையாகத்தான் பார்த்தார்கள்.

அவனை அடித்ததும் எனக்குள் ஒரு தைரியம் வந்தது. அவனை பிடிச்ச பிடியில் இருந்து நழுவ விடாமல் போலீசில் ஒப்ப டைக்க, வேடிக்கைப் பார்த்த ஆண்களை உதவிக்குக் கூப்பிட்டேன். ஒருத்தர்கூட வரவில் லை. இதைப் பார்த்த கல்லூரி மாணவிகள் 7 பேர் ஓடிவந்து என்னிடம் "நீங்கள் போய் போலீசை கூப்பிட்டு வாருங்கள். நாங்கள் இவனை தப்பவிடாமல் பார்த்துக்குறோம்' என வளைத்து நின்றார்கள். அதன்பிறகு நான் ஓடிப்போய் போலீசை கூப்பிட்டு வந்து அவனை ஒப்படைத்தேன்.

அவனைத் தாக்கும்போது வேடிக்கை பார்த்த ஆண்கள் ஏன் வர வில்லையென்றால்... அவன் அந்தப் பகுதியில் உள்ள ரவுடியாம். இப்படி ஆண் களைக் கண்டு பயந்து ஓடுவதால்தான் கடை களிலும் தனியார் மற் றும் அரசு நிறுவனங் களில் வேலை பார்க் கும் பெண்களும், சாலைகளில் நடந்து போகும் பெண்களும் தினம், தினம் உடல் ரீதியாக பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்.

இதைத் தடுக்க வேண்டுமென்றால் பெண்களுக்குள் தைரியத்தை ஏற்படுத்த வேண் டும். அதற்கு ஒரு வகுப்பு நடத்தத் தேவை யில்லை. தொந்தரவு செய்யும் ஆண்களை ஒருமுறை திருப்பி அடித்தால் போதும், அதன்பிறகு தைரியம் வந்துவிடும். அதற்காக கொடியின்றி, தோரணமின்றி எங்களுக்குள் ஒரு இயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.

தற்போது "தொடரது ஞங்ஙள் திரிச்ச டிக்கும்' (தொட்டால் நாங்கள் திருப்பி அடிப்போம்) என ஏராளமான பெண்களும், மாணவிகளும் எங்கள் இயக்கத்தை ஆதரித்து, அவர்களும் களத்தில் தைரியத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார்கள். இப்படி ஊருக்கு ஒரு பெண் வெகுண்டெழுந்தால் போதும், எந்த ஆணும் ஒரு பெண்ணை தவறான கண் ணோட்டத்துடன் பார்க்கமாட்டார்கள். கிட்ட நெருங்கவும்மாட்டார்கள்'' என்ற ஷெரினாவிடம், ""பொது இடங்களில் இது ஓ.கே. வீட்டுக்குள்ளே தாலி கட்டிய கணவ னுக்கு விதிவிலக்கு உண்டா'' என்றோம். "தவறு செய்தால் கணவனையும் திருப்பி அடிப்போம்' என்றார் அருகிலிருந்த கணவர் சலிலும்மை பார்த்துச் சிரித்தபடியே.

மாணவி அபிராமியை சந்தித்துப் பேசியபோது... ""குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா விலாசம் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் நான் பள்ளிக்குப் போகும்போதே திருடன் ஒருத்தன் என் கழுத்தில் கிடந்த செயினை அறுத்துக்கொண்டு ஓடினான். நான் சைக்கிளில் துரத்திச் சென்று நடுரோட் டில் அவனைப் பிடித்து கீழே தள்ளி அடிக் கொடுத்து செயினைப் பறித்தேன்.

இதை நான் புலியுடன் சண்டை போடுவது போல் பலர் வேடிக்கை பார்த்திட்டுதான் நின்றார்கள். எனக்கு யாரும் உதவி செய்ய வரலை. பின்னர் என் கூடப் படிக்கும் தோழிகள் உதவியுடன் அந்தத் திருடனை போலீஸில் ஒப்படைத்தேன். எனக்குள் ஏற்பட்ட வெறித்தனமான தைரியத்தை சக மாணவிகளுக்கும் ஊட்டினேன்.

தற்போது பள்ளிக்குப் போகும் மாணவி களுக்கு ஆண்களால் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அந்த இடத்தில் ஒவ்வொரு மாணவியும் அந்நியனாக மாறிவிடுகிறாள். இந்த மாற்றத்தை ஏற்படுத் தியது ஷெரினா அக்கா தான். இதை நாங்கள் ஒரு இயக்கமாக நடத்து றோம். தற்போது எந்த மாணவிகளும் தொந்தரவு இல்லாமல் போக முடிகிறது'' என்றாள். அழகுக்கு அச்சாரமாக வலம் வரும் கேரளா பெண்களைக் கண்டாலே ஆண்கள் தலையைத் தொங்கவிடும் நிலையில்... எந்த பெண் எப்போது அடிப்பாள் என்ற பயத்தில் நடமாடுகிறார்கள்.

அடிக்கடி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, ஈவ்-டீசிங் என மலையாள பத்திரிகைகளில் அதிக மாகப் பார்த்த நாம்... சமீபகாலமாக பெண்ணை சில்மிஷம் செய்த ஆணை அடித்த பெண்ணைப் பற்றிய செய்திதான் அதிகம் காண முடிகிறது.

கேரளாவில் மட்டுமல்ல... நம்மூர் பெண்கள் மத்தியிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மாதர் சங்க தக்கலை ஒன்றியத் தலைவி சந்திரகலா கூறும்போது... ""இந்த தைரியம் கேரளப் பெண்களுக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் வரவேண்டும். வீட்டில் இருந்து வெளியே வரும் எல்லா பெண்களுக்கும் இது மாதிரி தைரியத்தை உருவாக்கிட வேண்டும். இனிவரும் காலங்களில் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை யும் காட்டுபவர்களாக பெண்கள் இருக்கக்கூடாது'' என்றார்.

சபல ஆண்களே! உடம்பு பத்திரம்!

கள ஆய்வில் இம்முறை இடம்பெறுவது.... நெல்லை மண்டலம்.


சபாஷ் சரியான போட்டி... என்ற பிரபல சினிமா வசனத்தைத்தான் நினைவுபடுத்துகிறது தமிழக அரசியல் களம். எதிர்க்கட்சித் தலைவர் எந்த இடத்தில் கூட்டம் திரட்டி கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினாரோ அதே இடத்தில் அதற்குப் பதில் தரும் வகையில் கூட்டம் திரட்டி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் ஆளுங் கட்சியின் தலைவர். நாளொரு போராட்டத்தை எதிர்க்கட்சி நடத்த, எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டித்து ஆளுங்கட்சியின் இளைஞரணி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தியிருக்கிறது. இந்தப் போட்டா போட்டிக்கு என்ன காரணம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இன்னும் ஒரேயொரு சட்டமன்றக் கூட்டத் தொடர் மட்டும்தான் மிச்சமிருக்கிறது. அதன்பின், அடுத்த ஐந்தாண்டுகள் சட்ட மன்றமும் ஆட்சி நிர்வாகமும் யார் கையில் என்பதை நிர்ணயம் செய்யும் பொதுத்தேர்தல் வந்துவிடும். அதற்காகத்தான் இருபெரும் கட்சிகளும் வரிந்து கட்டுகின்றன. இரண்டு கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தேர்தல் கணக்குகளில் தீவிரமாக இருக்கின்றன. கட்சிகள் வேகம் காட்டி வரும் நிலையில், மக்களிடம் அவற்றிற்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதை உங்கள் நக்கீரன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்தக் கள ஆய்வில் இம்முறை இடம்பெறுவது.... நெல்லை மண்டலம்.

மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் தாமிரபரணியின் பாசனப் பகுதிகளை உள்ளடக்கிய திருநெல்வேலி மாவட்டமும், கரிசல் பூமியான விருதுநகர் மாவட்டத்துடன், மதுரையின் எல்லையில் உள்ள சிலபகுதிகளுமே நமது கள ஆய்வில் நெல்லை மண்டலம் என வரையறுக்கப்பட்டுள்ளது. திரு நெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட இம்மண்டலத்தில் ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பா சமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் என 18 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

வேளாண்மை, தீப்பெட்டி-பட்டாசு தொழில், பீடி உற்பத்தி, சிறு வணிகம் உள்ளிட்டவையே மக்களின் வாழ்வாதாரமாக உள்ள இந்த மண்டலத்தில் திருநெல்வேலி-தென்காசி நாடாளு மன்றத் தொகுதிகள் ஒரு மாவட்டத்திலும், விருது நகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்ட மன்றத் தொகுதிகள் விருதுநகர்-மதுரை மாவட் டங்களுக்குள்ளும் அடங்கியிருப்பதால் அரசியல் ரீதியான மக்களின் மனநிலையில் பல வித மாற்றங்களைக் காண முடிகிறது. நமது நேரடி கள ஆய்வில் இதனை வெளிப்படுத்திய இந்த மண்ட லத்து மக்கள், தேர்தலில் எடுக்கவிருக்கும் முடிவு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கட்சிரீதியாக யாருக்கு எவ்வளவு செல்வாக்கு என்பது வரைபடம் மூலம் காட்டப்பட்டுள்ளது.


திருநெல்வேலி-தென்காசி



நிரந்தரத் தொழிற் சாலை, தொலை நோக்குத் திட்டங்கள் எதுவுமின்றி விவசாய மண்ணையே நம்பி நிற்கும் விவசாயத் தொழிலாளர்கள் 8 லட்சம் பேர் இந்த இரண்டு எம்.பி. தொகுதிக்குட்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கிறார்கள். அதுபோல, பீடித் தொழிலாளர்கள் 5 லட்சம் பேர் உள்ளனர். மற்ற அமைப்புசாரா தொழிலாளர்களை யும் கணக்கிட்டால் உழைப்பை நம்பி அன்றாடம் பிழைப்பு நடத்தும் தொழிலாளர் வர்க்கத்தைக் கொண்ட பகுதியாக இது இருக்கிறது.

ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இரண்டிலுமே தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட பிரமுகர் களைவிட, கட்சியின் செல்வாக்கே இங்கு வாக்கு பலமாக இருக்கிறது. 2006 சட்டமன்றத் தேர்தலில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகள் அனைத்தும் தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. 2009 எம்.பி. தேர்தலில், தென் மண்டலத்தில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்ற ஒரே தொகுதி, இம்மண்டலத்திலுள்ள தென்காசி தொகுதிதான்.

நெல்லை மாவட்டத்தில் ஜாதிரீதியான பலத்தைக் கணக்கிட்டால் முக்குலத்தோர், தலித், நாடார், பிள்ளை, முதலியார், முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற வரிசைப்படி செல்வாக்கு அமைந்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் இந்த 3 கட்சிகளும் ஜாதி வாக்குகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதில் போட்டி போடுகின்றன. தற்போது தே.மு.தி.க.வும் இந்த வரிசையில் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

கொடியங்குளம் கலவரமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழல்களும் தலித் மக்களான தேவேந்திரகுல வேளாளர் சமுதா யத்தினரை அ.தி.மு.க.விடமிருந்து வெகு தொலைவுக்கு கொண்டு செல்ல, முக்குலத்தோர் சமுதாயத்தினர் அ.தி.மு.க.வை தங்களுக்கான கட்சியாகக் கருதி வாக்களித்தனர். இம் மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்து அ.தி.மு.க. பிரமுகர்கள் அண்மைக்காலமாக மாற்று முகாம்களுக்கு தாவுவதும், கட்சிப் பணிகளில் பழைய சுறுசுறுப்பைக் காட்டாமல் ஒதுங்கியிருப்பதும் அ.தி.மு.க.வின் பழைய செல்வாக்கு நீடிக்கிறதா என்ற கேள்வியை எழுப்புவதாக இருக்கிறது. இது ஆளுந்தரப்புக்கு சாதகமாக உள்ளது.

அதேநேரத்தில், இரண்டாவது பெரிய சமுதாயமான தலித் மக்களில் பெரும்பான் மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குவங்கி புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பக்கம் இருக்கிறது. அ.தி.மு.க.வும் புதிய தமிழகமும் அமைத்திருக்கும் கூட்டணி, எதிர்க்கட்சி அணிக்கு புதிய பலத்தைக் கொடுத்துள்ளது. இந்த புதிய உறவு, முக்குலத்தோரிடம் அதிருப்தியையும், கட்சிசாராத தலித் மக்களிடம் வரவேற்பு பெறாத நிலைமையையும் உருவாக்கியிருப்பதை கவனிக்க வேண்டியுள்ளது. தலித் மக்களில் மற்ற இரண்டு பிரிவினரான ஆதி திராவிடர்களும் அருந்ததியர்களும் தி.மு.க. அணிக்கு சாதகமாக இருக்கிறார்கள்.


நாடார் சமுதாயத்தினரின் வாக்குகளை தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பெருமளவில் கொண்டிருந் தாலும், கள் இறக்க இதுவரை அனுமதி வழங்கப் படாததால் ஏற்பட்டுள்ள அதிருப்தியை தனக்கு சாதகமாக்குவதில் அ.தி.மு.க. தீவிரமாக இருக்கிறது. முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை சமுதாய ரீதியாக ஒருங்கிணைக்கும் முயற்சியில் த.மு.மு.க.வின் மனிதநேய மக்கள் கட்சி தீவிரமாக உள்ள அதே நேரத்தில், தி.மு.க. அரசுதான் தங்களுக்கு சாதகமானது என்ற எண்ணம் முஸ்லிம் மக்களிடம் இருப்பது ஆளுங்கட்சிக்கு பலம். பாளையங்கோட்டை உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் நிறைந்துள்ள பகுதிகளில் பெரும்பாலான வாக்குகள் தி.மு.க. பக்கமே இருக்கிறது. விவசாயத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனி செல்வாக்குடன் திகழ்கின்றன.

ம.தி.மு.கவின் வாக்குவங்கி முக்கியத் துவம் பெறும் மண்டலமாக இது இருக்கிறது. வைகோவின் சொந்த மாவட்டம் என்பதும் இதற்கு முக்கிய காரணம். இரண்டு கழகங் களையும் அதனுடன் கூட்டணியில் இருப்பவர் களையும் விரும்பாதவர்களின் வாக்குகளை அறுவடை செய்யும் கட்சியாக தே.மு.தி.க. இருக்கிறது. காங்கிரசின் பாரம் பரியமான வாக்குகள் தி.மு.க அணிக்கு பலம்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பொதுவான பிரச்சினைகளுடன், கோம்பை ஆறு, வாழமலை ஆறு, உள்ளாறு ஆகியவற்றில் தடுப்பணை கட்டி, பாசனப் பகுதிகளை மேம்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை கவனிக்கப்படாமல் இருக்கிறது. தி.மு.க. அரசு வாக்களித்த, பூக்களிலிருந்து சென்ட் எடுக்கும் தொழிற்சாலை இது வரை அமைக்கப்படவில்லை. நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா திட்டமும் நிறைவடையவில்லை. இவையெல்லாம் ஆளுங்கட்சிக்கு பாதகமான அம்சங்கள்.

அரசின் இலவச திட்டங்கள், கட்சிக்கு அப்பாற்பட்டு கலைஞருக்கு உள்ள செல்வாக்கு இவையெல்லாம் ஆளுந்தரப்புக்கு சாதகமாக இருப்பதால் தேர்தல் ரேஸில் லேசாக மூக்கை முன் நீட்டுகிறது தி.மு.க.

விருதுநகர்

தீப்பெட்டித் தொழிலும் பட்டாசுத் தொழிலும் நிறைந்துள்ள கரிசல் பூமி. தொகுதி சீரமைப்பின்படி விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் சமுதாய ரீதியாக மெஜாரிட்டி பலம் கொண்டவர்கள் முக்குலத்தோர். இரண் டாமிடத்தில் நாயக்கர் சமுதாய வாக்குகளும், அதையடுத்து நாடார் வாக்குகளும், பின்னர் தலித் வாக்குகளும் வரிசை கட்டி நிற்கின்றன. உரசினால் பற்றிக்கொள்ளும் என்கிற அளவில் சாதிக்கலவர அபாயம் நிறைந்த பகுதி என்பதால், அரசியல் கட்சிகள் மிக ஜாக்கிரதையாகவே இந்த வாக்குகளை அறுவடை செய்வதில் கவனம் செலுத்துகின்றன.

எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அ.தி.மு.க. கோட்டை என பெயர் பெற்ற விருதுநகர் ஏரியாவில் மெல்ல மெல்ல ஓட்டை போட்டு வருகிறது தி.மு.க. அரசியல் கட்சி பிரமுகர்களின் தனிப்பட்ட செல்வாக்கு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாக்கூர், தே.மு.தி.க.வின் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் ஜாதி பலத்தாலும் பணபலத்தாலும் தேர்தலுக்கான காய்களை நகர்த்தி வருகிறார்கள். இதுபோல அ.தி.மு.க.வுக்கு பெயர் சொல்லும் வகையில் லோக்கல் பிரபலங்கள் யாருமில்லாதது மைனஸ் பாயிண்ட் என்றாலும், எம்.ஜி.ஆருக்காகவும் இரட்டை இலைச் சின்னத்துக்காகவுமே இன்றளவும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்போர் நிறைந்திருப்பது அக்கட்சியின் பலமா, அதிர்ஷ்டமா என்று அந்தக் கட்சிக்காரர்களே விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் அதிக வாக்குபலத்தைக் கொண்ட கட்சியாக அ.தி.மு.க.வே இங்கு விளங்குகிறது. எனினும், 6 சட்டமன்றத் தொகுதிகளில் திருமங்கலம், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 3 தொகுதிகள் தி.மு.க. வசமும், விருதுநகர், சிவகாசி இரண்டும் ம.தி.மு.கவிடமும், திருப்பரங்குன்றம் மட்டும் அ.தி.மு.க. வசமிருப்பது, அக்கட்சிக்கு உள்ளூர் பிரபலங்கள் இல்லாததன் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலித் வாக்குகளில் பெரும்பாலானவை தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினருடையது. புதிய தமிழகத்துடனான கூட்டணியால் அவை தங்களுக்குச் சாதகமாக திரும்பும் என நம்புகிறது அ.தி.மு.க. அதே நேரத்தில், அ.தி.மு.க.வை தங்கள் சமுதாய கட்சியாக கருதிவரும் முக்குலத்தோரிடம் இதற்கு பரவலான ஆதரவை காணமுடியவில்லை. டாக்டருக்கு ஜெ தரும் மரியாதையை, அ.தி.மு.கவில் உள்ள முக்குலத்தோர் எங்களுக்குத் தருவார்களா என்ற சந்தேகம் புதிய தமிழகத்தின் தொண்டர்களுக்கும் இருக்கிறது. சாத்தூரில் போட்டியிட்டு ஜெயித்து முதல்வரானவர் காமராஜர் என்பதால் அந்த சென்ட்டிமென்ட்டில் இம்முறை சாத்தூரில் வைகோ போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ம.தி.மு.க.வினரிடம் உள்ளது. தேர்தல் களத்தில் வியூகம் வகுத்து செயல்படுவதில் வல்லவரான தி.மு.க. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். என் னென்ன அஸ்திரங்களை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஆளுந்தரப்பிடம் உள்ளது.

காமராஜர் பிறந்த மண் என்பதால் காங்கிரசுக்கு இருக்கும் நிலையான செல்வாக்கும், ம.தி.மு.க.வின் வாக்குவங்கியும், தே.மு.தி.க.வின் சீரான வளர்ச்சியும் தேர் தல் களத்தில் முக்கிய சக்திகளாக இருக்கும். மாநிலம் தழுவிய பிரச்சினைகளான விலைவாசி, மின்வெட்டு ஆகியவற்றுடன் சாத்தூரில் சிறப்புபொருளாதார மண்டலம் அமையாதது, சிப்காட் தொழிற்சாலைகளைக் கொண்டுவராதது, சிவகாசியில் நலிந்துவரும் தீப்பெட்டி-பட்டாசு-அச்சுத் தொழில் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு கவனம் செலுத்தாதது, அருப்புக்கோட்டை விசைத் தறி நெசவுத் தொழில் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்க்காதது உள்ளிட்டவையும் குடிநீர் பிரச்சினை யும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை உண்டாக்கியிருக்கும் நிலையில், மக்கள் நலத் திட்டங்களால் பலன் பெற்றவர்களின் ஆதரவு ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளது.

நெல்லை மண்டலத்தில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் இரு அணிகளுமே வரிந்து கட்டுகின்றன. கூட்டணி மாற்றங்கள், சமுதாய ரீதியான வாக்குகளின் ஒருங்கிணைப்பு, உள்ளூர் பிரச்சினைகளின் தாக்கம் இவற்றைப் பொறுத்தே முடிவுகள் அமையும் என்பது நமது நேரடி கள ஆய்வு வெளிப்படுத்தும் யதார்த்த நிலவரம்.

(வரும் இதழில் குமரி மண்டலம்)

ராகுல் வியூகம்! தமிழக காங்கிரசை கரையேற்றுமா?



காமராஜருக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரசை சொந்தக்காலில் நிற்கவைக்கும் ஆற்றல் மிக்க தலைவர் யாரு மில்லை என்பதை அரசியல் பார்வையாளர்கள் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்கள். காங் கிரசுக்கான பாரம்பரிய செல் வாக்கைக் காப்பாற்றும் விதத்தில் செயல்பட்ட தலைவர் ஜி.கே. மூப்பனார். அவரைப்போலவே வாழப்பாடி ராமமூர்த்திக்கும் இதில் பங்கு உண்டு. தமிழக காங்கிரஸ் தலைவர்களாக மேலிடத்தால் நியமிக்கப்பட்ட மற்ற அனைவருமே தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்காகப் போராடவேண்டியிருந்ததால் காங்கிரசின் செல்வாக்கை வளர்க்க முடியவில்லை.


இந்திய அளவில் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடம் நிரம்புவதற்கு சில ஆண்டுகள் ஆனது. சோனியாவின் அரசியல் வருகைக்குப்பிறகே காங்கிரசுக்கு புத்துயிர் கிடைத்தது. தற்போது , ராகுல் மேற்கொள்ளும் சீர்திருத்தங்களும் புதிய வியூகங்களும் காங்கிரசை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு அகில இந்திய அளவில் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் மீது அவர் செலுத்தும் கவனமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது



காமராஜர் காலத்திலிருந்து ராகுல்காந்தி காலம்வரை தமிழகத் தில் காங்கிரசின் செல்வாக்கு என்ன என்பதை வரைபடம் காட்டுகிறது.

காமராஜர் ஆட்சிக்காலத் திற்குப்பிறகு காங்கிரசின் செல்வாக்கு மெல்ல மெல்லத் தேய்ந்து வந்திருப்பதையே வரைபடம் சுட்டிக்காட்டுகிறது. திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி இதற்கொரு முக்கிய காரணம் என்றாலும், காங்கிரசில் ஆளுமைமிக்க தலை வர்கள் இல்லாமையும் அதற் கான அடிப்படைக் கார ணங்களில் ஒன்றாகும். மேலிடத்தால் நியமிக்கப்படும் நிர்வாகிகளின் பதவிக்காலம் குறித்த அச்சமும், கட்சிக்குள் தலைமை அங்கீகரிக்காத தலைவர்கள் பலர் உருவாகி கோஷ்டிகளை உருவாக்கியதும் காங்கிரஸை தொடர்ந்து பலவீனப்படுத்தி வந்திருக்கிறது.



இரு கழகங்களை காங் கிரஸ் நம்புவதும், காங்கிரஸை இரு கழகங்களும் நம்புவதும் இன்றளவில் தமிழகத்தின் தேர்தல் சூத்திரமாக இருக் கிறது. எனினும், காங்கிரசால் தனித்து நிற்கமுடியாமல் மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டே செயல்படவேண்டியுள்ளது. 1996 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் மேலிடத்தின் கூட்டணி முடிவுக்கு எதிராக வெளிப்பட்ட உணர்வே மூப்பனார் தலைமையிலான த.மா.காவை உருவாக்கியது. காங்கிரசின் பெரும்பாலான தொண்டர்கள் மூப்பனார் பக்கம் நின்றனர். காங்கிரஸ் வாக்குவங்கியும் அவர் பக்கம் இருந்தது. எனினும், அவராலும் அத்தேர்தலில் தனித்து நிற்க முடியவில்லை. தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தார். 1999 எம்.பி. தேர்தலில் தனித்து நின்று வெற்றிபெற முடியாததால், 2001-ல் அ.தி.மு.கவுடன் கூட்டணி சேரவேண்டிய நிலைமை ஏற்பட்டது. மூப்பனார்-வாழப்பாடி ஆகியோரின் மறைவுக்குப்பின் காங்கிரஸ் ஆட்சி என்ற கடைசி நம்பிக்கையும் பொய்த்துவிட்டதாலும், புதிய கட்சிகளின் வளர்ச்சியாலும் காங்கிரசின் பாரம்பரிய வாக்குவங்கியில் சரிவு ஏற்பட்டு தற்போது 12% என்ற அளவில் உள்ளது.


இந்த நிலையில், தமிழகத்தில் காங்கிரசின் செல்வாக்கை வளர்த்து, அதன் தலைமையிலான அணி மூலம் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்கிற நீண்டநாள் கனவை ராகுலின் வியூகங் கள் செயல்படுத்தும் என காங்கிரசின் புதிய தலைமுறை எதிர்பார்க்கிறது. 2009 நாடாளுமன்றத் தேர்தல் வெற் றிக்குப்பிறகு, காங்கிரஸ் கட்சி யை முழுமையாக தன் கையில் எடுத்துக் கொண்ட ராகுல், கட்சியை கீழ்மட் டத்திலிருந்து வளர்க்கும் பொறுப் பை மேற்கொண்டி ருக்கிறார். கட்சியின் நிலவரத்தை தொ டர்ந்து கண்காணித் தும் வருகிறார். அதன் அதிர்வுகள் தமிழகத் திலும் தென்பட ஆரம்பித்துள்ளது.



இளைஞர் காங்கிரசுக்கு புதிதாக உறுப் பினர்களைச் சேர்த்து, அதன் நிர்வாகிகளுக்கான தேர்தலையும் நடத்தி முடித்திருப்பது ராகுலின் ஆளுமையை வெளிப்படுத்து கிறது.


அவர்களுக்கான பயிற்சி முகாம்களை தொ டர்ந்து நடத்திவருவதும் புதிய அணுகுமுறையாக இருக்கிறது. அதே நேரத்தில், காங்கிரசின் மாநில-மாவட்ட நிர்வாகிகளுக்கானத் தேர்தலை நடத்த முடியாமல் திணறுவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய தாகும்.


கட்சியின் மாநிலத் தலைவ ராக தங்கபாலு இருந்தாலும் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் என பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கி றார்கள். இந்தக் கோஷ்டிகளை ஒருங்கிணைத்து, காங்கிரஸ் தலைமையில் புதிய அணியை உருவாக்கி, மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்பது என்ற கனவை நிறைவேற்றுவது அத்தனை எளிதல்ல என்கிறார்கள் அரசியல் ஆய் வாளர்கள். நமது கள ஆய்விலும் அதனை அறிய முடிந்தது.


தமிழக காங்கிரசில் தொண் டர்களின் செல்வாக்கைப் பெற்றவராக ஜி.கே.வாசனும் மதிப்பிற்குரியவ ராக ப.சிதம்பரமும் இருக்கின்றனர். மற்ற கோஷ்டிகளின் தலைவர் களுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு ஏதுமில்லை. வாசன் இளையவர் என்பதாலும் கட்சித் தொண்டர் களைக் கடந்து அவர் பொது மக்களை ஈர்க்கவில்லை என்ப தாலும் காங்கிரஸ் மேலிடம் அத்தனை சுலபமாக அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடாது.


அனுபவமிக்கவரான ப.சி.யோ இந்தியாவின் நிதி யமைச்சர், உள்துறைஅமைச்சர் என முக்கிய பொறுப்புகளை வகித்து சிறந்த நிர்வாகி எனப் பெயர் எடுத்திருக்கிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் அரசியல்-பொருளாதாரம் பற் றித் தெளிவாகப் பேசி எக்கட்சியையும் சாராத படித்த- நடுத்தர இளைஞர்களை கவர்ந்துள்ளார். ஆனால், மக்களிடமும் கட்சித் தொண் டர்களிடமும் அவரால் தலைவர் என்ற பெயரை எடுக்கமுடிய வில்லை. கடந்த எம்.பி. தேர்தலில் 2000 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று கடைசி ரவுண்டில் கரை யேறினார் ப.சிதம்பரம். எம்.பி. தொகுதிக்குட்பட்ட 6 சட்ட மன்றத் தொகுதிகளில் நான்கில் அவருக்குப் பின்னடைவே ஏற்பட்டது.



மூப்பனாரை முன்னி றுத்தி தமிழகத்தில் காங் கிரஸ் ஆட்சி என 1989-ல் ராஜீவ்காந்தி மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. தற்போது, காங்கிரசில் செல்வாக்குமிக்க தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆட்சி என்ற ராகுலின் திட்டம் நிறை வேறுவது கடினமானது. இரண்டு திராவிட கட்சி களைத் தாண்டி வேறெதை யும் ஆட்சியில் அமர்த்தும் மனநிலை தமிழக வாக் காளர்களிடம் இன்னும் வளரவில்லை. மூன்றாவது கட்சியைத் தேடும் மனநிலையில் உள்ளவர்களிடம் தே.மு.தி.க.வுக்கு உள்ள செல்வாக்குகூட காங்கிரசுக்கு இல்லை. இந்தநிலையில், காங்கிரசின் பாரம்பரிய வாக்குகளைக் காப்பாற்றி, புதிய வாக்காளர்களைக் கவர்ந்து, கீழ்மட்டத்திலிருந்து கட்சிக்குப் புத்துயிர் அளிக்கும் ராகுல் ஃபார்முலா முழுமையாக வெற்றிபெற்று, கட்சி பலமடைந்து ஆட்சியைப் பிடிப்பதென்பது பகீரத முயற்சியாகும். திராவிட கட்சிகளைக் கடந்து காங்கிரசை வளர்த்து, ஆட்சியில் அமர்த்துவதென்பது அடுத்த 5 ஆண்டுகளில் நடைபெறுவதற் கான நடைமுறை சாத்தியம் இல்லை. அதன் பிறகு, தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தும், அவற்றை காங்கிரஸ் எப்படி கையாளப் போ கிறது என்பதைப் பொறுத்துமே சாத்திய மாகும்

யுத்தம் 77 - நக்கீரன் கோபால்


சிவாவை எல்லா வழக்குகளிலிருந்தும் பெயிலில் எடுக்கவேண்டிய அவசியம். ஆனால், அவர் மீது முதன்முதலில் போடப்பட்ட வழக்கு (100/2001) கொள்ளேகால் கோர்ட்டில் நடந்துகொண்டிருந்தது. ஜாமீனில் வரக்கூடிய செக்ஷன்களில்தான் முதலில் அந்த வழக்குப் போடப்பட்டிருந்தது. தம்பி சிவாவுக்கும் ஜாமீன் எடுத்துவிட்டோம். அதன்பிறகு, தமிழக-கர்நாடக அதிரடிப்படையின் கூட்டு முயற்சியால் ஜாமீன் கிடைக்காத செக்ஷன்களுக்கு வழக்கு மாற்றப்பட்டுவிட்டது. இருந்தாலும், தம்பி சிவாவுக்கு முதலில் கொடுக்கப்பட்ட பெயில், இந்த வழக்கில் தொடர்ந்து கொண்டிருந்தது.

கோவை சிறையில் சிவா இருக்கிறார். வழக்கோ கர்நாடக மாநிலத்தில் உள்ள கொள்ளேகால் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. விசாரணைக்கு சிவா சார்பில் வக்கீல் ஆஜராகாவிட்டால் பெயிலை கேன்சல் செய்துவிடுவோம் என்று நீதிபதி கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். பெயிலபிள் வழக்கை, நான்-பெயிலபிளாக மாற்றியதற்கு நம் தரப்பில் கவுண்ட்டர் பெட்டிஷனும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனால் இந்த வழக்கு, நமக்கு முக்கியமான வழக்காகிவிட்டது.

கர்நாடகாவில் நம் வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர் அட்வகேட் ஈஸ்வர சந்திரா. அவரை அழைத்துக்கொண்டு கொள்ளேகாலுக்குப் போனால் பெயில் கேன்சலாகாமல் இருக்கும். இன்னும் இரண்டு வழக்குகளில் தம்பி சிவாவுக்கு பெயில் எடுக்க வேண்டிய நிலையில், ஏற்கனவே எடுத்த பெயில் கேன்சலாகி போச்சுன்னா அதுவேற வம்பா போயிடக்கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருந்தோம்.

நமது பெங்களூரு நிருபர் தம்பி ஜெ.பி.யைத் தொடர்புகொண்டேன்.

""தம்பி.. .. நீங்க ஈஸ்வரசந்திராகிட்டே பேசிடுங்க. கொள்ளேகால் கோர்ட் கொடுத்த பெயில் கேன்சலாயிடக் கூடாது. பிரச்சினையில்லாம பார்த்துக்கச் சொல்லுங்க.''

""சொல்லுறேங்கண்ணே... இன்னொரு தகவல். கொள்ளேகால் கோர்ட்டில் கேஸ் வர்ற அதே 30-ந் தேதிதான் மைசூர் தடா கோர்ட்டிலும் சிவாவோட வழக்கு வருது.''

""அதுவும் முக்கியமான வழக்கு தம்பி.. நாங்க இங்கே அவருக்கு மற்ற வழக்குகளில் பெயில் எடுப்பதில் வேகமா இருக்கோம். அதனால நீங்க அந்த இரண்டு வழக்கு விவரங்களையும் பார்த்துக்குங்க.''

மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ்நகர், பெங்களூரு என்று கர்நாடகாவில் போடப்பட்ட பொய் வழக்குகள் சம்பந்தப்பட்ட விவரங்களையெல்லாம் தொடர்ந்து கவனித்துக்கொண்டவர் ஜெ.பிதான். ஆனால், கர்நாடகத்தில் ஏற்பட்ட ஒரு திடீர் பதட்டம், நமக்கு பெரும்சோதனையாக அமைந்துவிட்டது.

கர்நாடகாவில் ஹெக்டே அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் நாகப்பா. அவரை வீரப்பனும் அவரது ஆட்களும் கடத்திவிட்டார்கள். ராஜ்குமார் கடத்தலுக்குப்பிறகு நடந்த மிக முக்கியமான கடத்தல் சம்பவம் இது. தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி. கடத்தப்பட்ட மாஜி மந்திரியை மீட்க தமிழக அரசு எந்தளவில் ஒத்துழைக்கும் என்பது கர்நாடக அரசுக்குத் தெரியும். அதனால், முந்தைய மீட்பு முயற்சிகள்போல பெரியளவில் எதுவும் நடக்கவில்லை. தமிழக-கர்நாடக அதிரடிப்படைகள் கூட்டு நடவடிக்கையின் மூலம் நாகப்பா வை மீட்டு விடலாம் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

நாகப்பா கடத்தல், கர்நாடகாவில் அரசியல்ரீதியாக பதட்டத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தது. கடத்தப்பட்ட மாஜி மந்திரியின் கட்சி வேறு, கர்நாடகத்தை ஆள்கின்ற கட்சி வேறு. அதனால், இந்த கடத்தல் விவகாரம் வேறு வேறு கோணங்களில் அரசியலாக்கப்பட்டு வந்தது. போதாக்குறைக்கு, நாகப்பாவைக் கடத்திய வீரப்பன் வைத்த கோரிக்கை இன்னும் பதட்டத்தை உண்டாக்கி விட்டது. காவிரியில் தமிழகத்திற்குள்ள தண்ணீரைத் திறந்து விடவேண்டும் என்று நாகப்பாவைப் பணயக்கைதியாக்கி நிபந்தனை விதித்தான் வீரப்பன். அதனால், கர்நாடகாவின் பல பகுதிகளிலும் கலவரம் வெடித்தது. தமிழர்கள் மீண்டும் குறிவைக்கப்பட்டார்கள். ரயில் பெட்டிகள் கொளுத்தப்பட்ட தால், கர்நாடகத்தில் ரயில் போக்குவரத்தை மத்திய அரசு உடனடியாக நிறுத்திவிட்டது. சாலைகளின் குறுக்கே மரங்களை வெட்டிப்போட்டும், டயர்களைக் கொளுத்தியும் பஸ் போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கிவிட்டார்கள் .

ஜெ.பி. போன் செய்தார்.

""அண்ணே... பஸ், ட்ரெயின் எதுவும் கிடையாது. எல்லா இடமும் கலவரமா இருக்குது.''

மைசூர் தடா கோர்ட்டிலும், கொள்ளேகால் கோர்ட்டிலும் முக்கியமான வழக்குகள் இருக்கிற நிலையில், எந்தப் போக்குவரத்தும் இல்லாமல் தம்பி ஜெ.பி.யால் எப்படி போக முடியும் என்று நான் யோசித்தேன்.

ஜெ.பி.யோ, ""அண்ணே.... நான் டூவீலர் எடுத்துக்கிட்டுப் போயிடுறேன்.''

""எவ்வளவு தூரம் தம்பி?''

""இரண்டு இடத்துக்கும் போயிட்டு திரும்பி வரணும்னா 600 கி.மீ. ஆகும்ணே...''


என்னுடைய மனசு கேட்கலை. 600 கி.மீ. டூவீலரில் போவதென்பது சாதாரணமான காரியமல்ல. அதுவும் கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இரண்டு கோர்ட்டுகளுக்குப் போகவேண்டும். தமிழர்கள் என்றால் குறிவைத்து தாக்கப்படுகிற நேரம். ஒரு தமிழ்ப் பத்திரிகையின் நிருபர், அதுவும் வீரப்பனை பேட்டிகண்டும்- அவனிடம் சிக்கியவர்களை மீட்டுவந்தும் பெயர் வாங்கிய பத்திரிகையின் நிருபர் கன்னட வெறியர்களிடம் சிக்கினால் என்ன ஆகும் என்று யோசிக்கும் போதே அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும், பழி வாங்கும் வேகத்துடன் செயல்படும் அதிரடிப் படையிடமிருந்து அவரைக் காப்பாற்றக் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிட்டுவிடக்கூடாது என்பதால் ரொம்பவும் ஜாக்கிரதையாக செயல்படவேண்டியிருந்தது. அதனால், தம்பி ஜெ.பி. எப்படியாவது கோர்ட்டுக்குப் போனால்தான், சிவாவுக்கு சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.

""தம்பி ஜெ.பி.. நீங்க டூவீலரில் கிளம்புங்க. சிவாவைப் பார்த்து அவங்கப்பா உடல்நிலை சரியில்லைங்கிறதை சொல்லணும். நான் போய் அவங்கப்பாவை பார்த்த விவரத்தையும் இன்னும் இரண்டு நாட்களில் எல்லா கேசிலும் பெயில் எடுத்திடலாம்ங்கிறதையும் சொல்லணும். அதற்கு முன்னாடி கோவை ஜெயிலிலிருந்து தம்பி சிவாவை எப்ப அழைச்சிட்டுப் போறாங்கங்கிற தகவலை தெரிஞ்சுக்கிட்டு உங்ககிட்டே சொல்றேன்.. அப்புறம் கிளம்பலாம்.''

""சரிங்கண்ணே...''

கோவை நிருபர் தம்பி மகரன் மூலம் தகவல் கேட்டுச் சொல்லலாம் என பல முறை முயற்சித்தும், மகரன் லைனில் கிடைக்கவில்லை. நேரம் கடந்துகொண்டே இருக்கிறது. ஜெ.பி. பல மைல்கள் பயணிக்கவேண்டும். தாமதமானால் பயணம் செய்தும் பலன் இருக்காது. அதனால், அவரைப் புறப்படச் சொல்லிவிட்டேன்.

மனசு கேட்கவில்லை.. திக்..திக்.. என்றிருந்தது. தம்பி ஜெ.பி டூவீலரில் புறப்பட்டுவிட்டார். பதட்டமான பயணம். மாண்டியா வழியாக கொள்ளேகால் போகவேண்டும். மாண்டியாவிலிருந்து 20 கி.மீ. தூரத் தில் ஒரு ஜீப் எரிக்கப்பட்டது. அதையடுத்து, பஸ் களுக்கு தீவைக்கப்பட்டன. ரோட்டில் மரங்கள், டயர்கள் எல்லாம் எரிந்துகொண்டே இருந்தன. அந்த சமயத்தில்தான், தம்பி ஜெ.பி. டூவீலரில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்.

மாண்டியாவை அடுத்து மலுவல்லி, சென்னபட்னா என கொள்ளேகால் ஏரியாக்களில் 100 கி.மீ. சுற்றுவட்டாரம் முழுவதும் கலவர பூமியாக மாறியிருந்தது. எல்லா இடங்களையும் கடந்து, கொள்ளேகால் நீதிமன்றத்திற்குப் போய்ச் சேர்ந்தார் ஜெ.பி. அட்வகேட் ஈஸ்வரசந்திராவின் ஜூனியரை கொள்ளேகாலில் அழைத்துக்கொண்டு கோர்ட்டுக்குப் போயிருந்தார். ஆனால், தம்பி சிவாவை போலீசார் அழைத்து வரவில்லை. வக்கீல் ஆஜரானதால், சிவாவின் பெயிலுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

கொள்ளேகால் கோர்ட்டிலிருந்து வெளியே வந்ததும் தம்பி ஜெ.பி. எனக்கு போன் செய்து விவரம் தெரிவித்தார். அடுத்ததாக, மைசூர் தடாகோர்ட்டுக்குப் போகவேண்டும். சிவா வருவாரா, மாட்டாரா என்பது உறுதியில்லாத நிலையில், அங்கே போகாமல் இருந்தால் 250 கி.மீ. பயணம் மிச்சமாகும். ஆனால், அவரிடம் தகவலை சொல்லவும், கோர்ட் நடவடிக்கைகளை கவனிக்கவும் வேண்டியிருந்த தால், தம்பி ஜெ.பி. டூவீலரிலேயே மைசூருக்குப் பயணம் செய்தார். ஆனால், அங்கும் சிவாவை ஆஜர்படுத்தவில்லை. என்ன ஆனார் என்ற பதட்டம் அதிகரித்தது.

கலவரச் சூழலில் 600 கி.மீ. டூவீலரில் பயணம் செய்த களைப்புடன் திரும்பினார் ஜெ.பி. அதன்பிறகு தான் நிருபர் மகரனிடமிருந்து எனக்கு போன். சிவாவை கோவை சிறையிலிருந்து அழைத்துச் செல்லவில்லை என்ற தகவலைச் சொன்னார். அவர் மேல் எனக்கு வருத்தம். மறுநாள் காலையில், வக்கீல் அபுபக்கர் மூலமாக சிவாவுக்கு எல்லா விவரங்களும் பாஸ் செய்யப்பட்டது.
அப்பாவின் உடல்நிலையை நினைத்து கவலைப்பட்ட சிவா, தனக்கு பெயில் உத்தரவுகள் வரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். அந்த சமயத்தில்தான், நாம் கொஞ்சமும் எதிர்பாராத அந்த அதிர்ச்சித் தகவல் வந்தது.

போலீசின் பொய்வழக்கால் தம்பி சுப்பு தலைமறைவாக இருந்த நிலையில், அவரது குடும்பத்தினரைக் குறிவைத்தது போலீஸ். மேட்டூரையடுத்த நாய்க்கன் தண்டாவில் சுப்புவின் அக்கா லட்சுமி அவரது கணவர் முருகேசனோடு வசித்து வந்தார். அவர்களின் வீட்டுக்கு அதிரடிப்படை வீரர் கோபி வந்தார்.

""முருகேசன்... இருக்காரா?''

-வீட்டில் சுப்புவின் அக்காதான் இருந்தார்.

""அவர் இல்லீங்க.''

""அவர்கிட்டே சில விவரங்கள் கேட்கணும். வந்தா கேம்ப்புக்கு வரச் சொல்லுங்க'' என்றார் கோபி. சுப்புவின் அக்காவுக்கு சந்தேகம்.

""என்ன விவரமோ இங்கேயே விசாரிச்சிடுங்க சார். அவர் வந்ததும் சொல்றேன்.''

""ஒண்ணும் பயப்படவேண்டாம். எங்க கேம்ப்புக்கு அழைச்சிட்டுப் போய் சில விவரங்களை கேட்டுட்டு விட்டுடுறோம். வரச்சொல்லுங்க'' என்று அதிரடிப்படை வீரர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

தன் கணவர் முருகேசன் வீட்டிற்கு வரும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் சுப்புவின் அக்கா.
முருகேசன் வீடு திரும்பவேயில்லை.

-யுத்தம் தொடரும்