Friday, October 30, 2009

Tigers bought 42% of Telecom shares – KP reveals

It has been revealed that tiger organization has invested money to buy 42% shares from Sri Lanka Telecom through Maxis in Malaysia. Kumaran Pathmanathan (KP) has admitted that the investment to buy shares from Telecom was done with the intention of taking the national communication network under the tiger organization.
51.23% shares of Sri Lanka Telecom are with the government. On 1st April, 2008 Maxis bought 42% of the shares of Sri Lanka Telecom spending Rs.320 billion. A head of a telecommunication sector and his brother had mediated in the deal. Maxis had agreed to pay them Rs.1 billion for their mediation. However, when two journalists from a national newspaper joined in that agreement had fallen apart. As we have mentioned earlier the chief executive officer of Sri Lanka Telecom who draws a salary of Rs.13 million has been appointed by Maxis. According to internal sources in Sri Lanka Telecom this person who doesn’t have any qualifications is carrying out a maneuver to grab the powers of the present Chairman of Sri Lanka Telecom as well.

Gotabhaya Rajapaksa speaks out on Fonseka issue



Responding to criticism of an alleged attempt to sideline Chief of Defence Staff General Sarath Fonseka and to deny the war veteran the credit he deserves for spearheading the war against the LTTE, Defence Secretary Gotabhaya Rajapaksa says a group of bankrupt politicians are now working overtime to destabilise the country.
"This is nothing but a despicable plot being hatched at the expense of the entire country," Rajapaksa says.
Unlike the previous moves by the Opposition to weaken an elected government, this is an attempt to sow dissension among the country’s battle-hardened armed forces, the Defence Secretary alleges. Those who play politics with national security in a post-LTTE era will incur the wrath of Gods and voters at the forthcoming elections, he says.
In an exclusive interview with The Island, Defence Secretary Rajapaksa, who played a pivotal role in destroying the LTTE, said that they (the Rajapaksas) had been accused of clipping General’s Fonseka’s wings by appointing him as the CDS. Dismissing that allegation as a canard, he said, whoever held that post had enormous
powers and influence over the entire security establishment. In fact, the CDS chaired a powerful committee comprising the three service chiefs and other officials, who handled the country’s defence, he said.
With the consent of the President, the Chief of Defence Staff may hold the post for two years and be given extensions in service biannually.
The CDS is tasked with issuing orders regarding strategies of the armed forces, assisting the Defence Minister, developing a strategy for overall work of the armed forces, coordinating intelligence activities among the armed forces, assessing the strength of potential enemies, preparation and evaluation of plans related to the armed forces, preparation of policies for the training of joint armed forces and preparation of policy for the UN peacekeeping operations etc.
An irate Defence Secretary rejected the Opposition allegation that the former Army Commander had been ill-treated by the government: "Let me tell you that General Fonseka was appointed as CDS with his consent. Although, I haven’t discussed this issue publicly before, I have no option but to reveal what really transpired."
Rajapaksa said: "Once the army had wiped out Velupillai Prabhakaran on the banks of the Nanthikadal lagoon on May 18, we focussed on the proposed changes at the top command and the control structure of the armed forces. The President had to promote Navy Chief of Staff Rear Admiral Thisara Samarasinghe as the Commander before June 16, when he was due to retire. There were not many options. One of them was to appoint the then Navy Commander Admiral Wasantha Karannagoda as the CDS, thereby making the senior most serving navy officer Chairman of the apex defence committee."
Defence Secretary Rajapaksa said that after taking General Fonseka’s opinion into consideration, the President had appointed the former army Chief as the CDS. General Fonseka succeeded Air Chief Marshal Donald Perera, who received top diplomatic posting to Tel Aviv.
The President had had no alternative but to move Admiral Karannagoda to a civilian post though the government very much wanted to retain him in the defence field, Rajapaksa said. There had been absolutely no effort, he said, to sideline any army officer. But unfortunately, the Opposition and a section of the media had gone to the extent of blaming the government for offering plum diplomatic posts to serving officers.
Responding to our queries, the Defence Secretary said that an influential section of the international community, too, had thrown its weight behind the Opposition campaign. Although the media had a right to criticise the government and support any political party, attempts to propagate lies could not be allowed.
The Defence Secretary said that then President J. R. Jayewardene had brought back Cyril Ranatunga from retirement to lead counter-terrorism operations. Gen. Ranatunga had executed the famous Operation Liberation in the Jaffna peninsula. Gotabhaya Rajapaksa, who commanded Gajaba troops in that operation, recalled the then Army Commander Lt. General Nalin Seneviratne telling troops that he only provided officers and men needed for the offensive. Successive governments had similar positions but none had gone so far as to institutionalise the post of the CDS through a parliamentary Act, Rajapaksa said.
"Don’t forget that I made critical changes. The Army Act and the Pension Code, too, were changed," Rajapaksa said. But, perhaps the most important change was to enable a serving officer to take over the CDS post, whereas all previous appointees had been retired officers, he said.
Dismissing allegations the CDS appointment had been an ad-hoc, the Defence Secretary said that a committee headed by veteran civil servant M. D. D. Peiris had taken over two years to finalise the proposal. "The committee interviewed all service commanders and many other senior military officials and also researched similar structures in other parts of the world before making submissions to the Attorney General’s Department as well as the Legal Draftsman," he said. According to him, the final report had been reviewed by the defence top brass again before approval was granted.
The Defence Secretary said that process had been parallel to the war against terror.
He said anyone who had doubts was free to make inquiries from the committee. Nothing could be as bad as an attempt to claim that his appointment as CDS was a comedown for the General, Rajapaksa said adding that if one cared to go through the list of serving officers assigned to CDS, one would see that the argument being peddled by the detractors of the government did not hold water.
The Defence Secretary revealed that a section of the officialdom, too, had been uneasy about the creation of such a post. "In fact, some questioned the need for such a powerful institution," he said. "But I was confident that there would be no trouble and that the government had utmost faith in the armed forces."
While declining to comment on security provided to senior military leaders in keeping with the government policy, the Defence Secretary said that no one should take the Opposition’s claim of lack of security for military leaders, seriously. "We have adopted unprecedented measures to protect the military leadership. They are given the best of security," he said.
Rajapaksa said there was nothing wrong in military personnel entering politics but definitely not in uniform. He said that their triumph over the LTTE had been the result of a joint effort spearheaded by the army. He said one of the most important decisions taken by the government had been to double the strength of the army while bolstering the the ranks of navy, air force, police, STF and Civil Defence Force.
Defence Secretary Rajapaksa, who survived an LTTE suicide attack within months of General Fonseka escaping death in a suicide strike, said the Opposition seemed to be making a desperate bid to challenge the President whose popularity was at its zenith. He said that the government was fully confident of meeting the threat and taking whatever action necessary to ensure peace and stability in the country.
Rajapaksa emphasised that the country’s triumph over the LTTE was evidence that it was capable of facing any other threat successfully

Thursday, October 29, 2009

சன் டிவி லாபம் 20% அதிகரிப்பு

சென்னை: 2009 செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் சன் டிவி குழுமத்தின் லாபம் ரூ. 130.36 கோடியைத் தொட்டுள்ளது.இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட லாபத்தை விட 20 சதவீதம் அதிகமாகும்.ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சன் டிவி குழுமத்தின் மொத்த வருவாய் ரூ. 320.39 கோடியாகும். இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைவிட 34.69 சதவீதம் அதிகமாகும்.சன் டிவி குழுமத்திடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்கள், 42 எப்எம் ரேடியா நிலையங்கள், தினகரன், தமிழ் முரசு ஆகிய செய்தித் தாள்கள், 4 வார இதழ்கள், டிடிஎச் தொலைக்காட்சி சேவை ஆகியவ உள்ளன.

மயில்சாமி மகன் நந்து ஹீரோவாகிறார்!


காமெடி என்ற பெயரில் படம் முழுக்க வந்து அடுத்தவர்களுக்கு அட்வைஸ் பண்ணி கழுத்தறுக்காமல், ஒரே காட்சி என்றாலும் திரையில் தோன்றிய உடனே கிச்சுகிச்சு மூட்டுபவர் மயில்சாமி. மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் மயில்சாமியின் நகைச்சுவை கலந்த குணச்சித்திர நடிப்பு அவரது திறமைக்கு ஒரு சாம்பிள்.தான் காமெடியன் என்றாலும் தன் மகனை ஹீரோவாக்கி அழகு பார்க்கும் ஆசை மயிலுக்கு ரொம்பவே அதிகம். தனக்குத் தெரிந்த இயக்குநர்களுக்கு மகனை அறிமுகம் செய்து வைக்க, ஆரம்பத்தில் அசிரத்தையாகப் பார்த்தைவர்கள், பையனின் துடிப்பு, அழகிய தோற்றம் கண்டு கட்டாயம் ஹீரோவா நடிக்க வைக்கலாம் மயில் என்று உற்சாகப்படுத்தினார்களாம்.மயில்சாமி மகனுக்கு வீட்டில் வைத்த பெயர் நந்து. ஆனால் கலைஞானி கமல்ஹாசன் மூலம் முறைப்படி வைக்கப்பட்ட பெயர் அருமைநாயகம். நந்து என்கிற அருமைநாயகம் என நாமகரணத்தோடு நடிக்க தயாராகிவிட்டார்.சரி... நடிப்புக்கு பிள்ளையார் சுழி போடும் முன் ஒரு முக்கியமானவரைச் சந்தித்துவிட்டு வரலாம், வா கண்ணா என்று மகனை அழைத்துக் கொண்டு கிளம்பினாராம் மயில்சாமி. அவர் போனது சூப்பர் ரஜினியின் அலுவலகத்துக்கு. மயில்சாமி மகனை வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்த ரஜினி, "மயில், உங்க பிள்ளைக்கு என்னோட ஆசிர்வாதம் எப்பவும் உண்டு..." என்றவர், நந்துவைப் பார்த்து, "கண்ணா... ஜாக்கிரதையா இருக்கணும். நல்ல பெயரெடுக்கணும்.." என்றாராம்!

அம்பானி சகோதரர்களின் உள்விவகாரம்

மித்தலின் கோபம் ஒருபுறமென் றால், முகேஷ் அம்பானியின் கோபம் மற்றொரு புறத்திலிருந்து ஆ.ராசாவை நோக்கி வந்துகொண்டிருந்தது. 1980-களில் இந்திராகாந்தி பிரதம ராகவும் பிரணாப் முகர்ஜி நிதியமைச்ச ராகவும் இருந்தபோதுதான் திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விறுவிறு வளர்ச்சியைப் பெறத்தொடங்கியது. ராஜீவ் ஆட்சியில் அது இந்தியாவின் புதிய பிரம்மாண்டமாக உருவெடுத்தது. வி.பி.சிங் ஆட்சிக் காலமான 11 மாதங்கள் மட்டும்தான் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சோதனையான காலகட்டம். அதன்பிறகு, நரசிம்மராவ் ஆட்சி வந்ததும் மீண்டும் பெருவளர்ச்சி பெற்றது ரிலையன்ஸ்.திருபாய் அம்பானியின் மரணத்திற்குப்பிறகு, அவரது மகன்களிடையே ஏற்பட்ட சொத்து மோதல்களால் பங்கு பிரிக்கப்பட்டன. முகேஷ் அம்பானிக்கு ரிலையன்ஸ் பெட்ரோலியத்துறையும் அவரது இளையசகோதரரான அனில் அம்பானிக்கு ரிலையன்ஸ் எனர்ஜி என பிரிக்கப்பட்டதுடன், ரிலையன்ஸ் டெலிகம்யூனிகேஷனும் அனிலுக்கே கிடைத்தது. முகேஷின் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம், அனிலின் ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனத்திற்கு குறைந்த விலையில் இயற்கை எரிவாயு தரவேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. ஆனால், ஒப்பந்தப்படி முகேஷ் நடந்துகொள்ளவில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, முகேஷுக்கு ஆதரவாகவே இருக்கிறார். தம்பியின் நிறுவனம் வளர்ந்துவிடக்கூடாது என்பதுதான் முகேஷின் பிசினஸ் மந்திரம்.அனிலைவிட தொழிலிலும் சொத்து மதிப்பிலும் முகேஷ் முன்னணியில் இருந்தாலும், அனிலிடமிருந்த ரிலையன்ஸ் டெலி கம்யூனிகேஷன் உடனடி பணப்புழக்கத்திற்கான வணிக நிறுவனமாக இருந்தது. மற்ற துறைகளில் முதலீடு செய்து காத்திருந்தால் தான், பண வரவு இருக்கும். தொலைத்தொடர்புத்துறை என்பது நடுத்தர மக்கள்-அடித்தட்டு மக்கள் எனப் பலரையும் வாடிக்கை யாளராகக் கொண்டிருப்பதால் மாதாமாதம் பில் தொகை கட்டப் படுவதன் மூலம் பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. அனில் நிறு வனத்தின் பணப்புழக்கம் முகேஷுக்கு எரிச்சலைத் தந்தது. இதற்கு காரணம், தொலைத்தொடர்புத்துறையில் அமைச்சர் ஆ.ராசா உருவாக்கிய பாதைதான் என அவர் மீது முகேஷுக்கு கோபம் உண்டானது. செல்போன் கம்யூனிகேஷனில் புதிய நிறுவனங்கள் நுழைந்ததால் கோபத்திலிருந்த மித்தலும், தம்பியின் பணப்புழக்கத்தால் எரிச்சலடைந்த முகேஷும் கைகோர்த்தனர்.


பிசினஸ்-அரசியல் கூட்டணி
உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு மீண்டும் பழைய செல்வாக்கு கிடைத்து, தனித்து ஆட்சி அமைக்கவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் ராகுல்காந்தி. அதனால்தான், 123 ஒப்பந்தம் காரணமாக மன்மோகன்சிங் அரசுக்கு நெருக்கடி வந்தபோது, முழுமையான ஆதரவு தந்த சமாஜ்வாடி கட்சியுடன்கூட எம்.பி தேர்தலில் கை கோர்க்காமல் சமாஜ்வாடியையும் பகுஜன் சமாஜ் கட்சியையும் எதிர்த்துக் களமிறங்கி, காங்கிரசுக்கு நம்பிக்கை தரும் வெற்றியை பெற்றுத்தருவதில் முனைப்பாக செயல்பட்டார் ராகுல்காந்தி. சமாஜ் வாடி கட்சிக்கு எதிராக ராகுல் செயல்படும் நிலையில், அனில் அம்பானியோ சமாஜ்வாடி கட்சியின் ஆதரவாளராக இருக்கிறார்.அரசியல் பகையுடன் பிசினஸ் பகையை முடிச்சுப் போட்டது முகேஷ்-மித்தல் கூட்டணி. ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சி.பி.ஐ. எஃப்.ஐ.ஆர். போடுவதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லியில் உள்ள சோனியா இல்லமான 10, ஜன்பத் சாலை வீட்டில் ராகுல்காந்தியை முகேஷும் மித்தலும் சந்தித்தனர் என்கிற டெல்லி பொலிட்டிக்கல் உயர் மட்டத்தினர், இந்த சந்திப்பின்போது ரிலையன்ஸ், ஸ்வான், யுனிடெக் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது பற்றிப் பேசப்பட்டுள்ளது என்கின்ற னர். உ.பி.யை போலவே மற்ற மாநிலங்களி லும் காங்கிரசை வளர்க்கத் திட்டமிட்டுள்ள ராகுலிடம், ஸ்பெக்ட்ரம் விவகாரம் மூலமாக ஆ.ராசாவுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடியால் தி.மு.க.வுக்கும் நெருக்கடி ஏற்படும். இதை வைத்து, 2011 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுக்கு அதிக சீட் கேட்கலாம் என்றும் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.


தி.மு.க.வை குறிவைக்கும் செயல்பாடுகள்


ராசாவை வேறு துறைக்கு மாற்றவேண்டும் என்கிற தன் சபதத்தை நிறைவேற்ற மித்தலும், தம்பியின் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த முகேஷும் தீவிரமாக இருக்கின்றனர். இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க.வுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் இல்லை எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் தொழில்துறையுடன் தொடர் புடைய தகவல்தொடர்பு-ஜவுளி-கெமிக்கல்ஸ் ஆகிய மூன்றும் தி.மு.க வசம்தான் உள்ளன. இதனை காங்கிரசின் வடஇந்தியத் தலைவர்களாலும், வடஇந்தியத் தொழிலதிபர்களாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதில் மாற்றத்தை எதிர்பார்த்திருந்தவர்கள், ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஒரு நல்லவாய்ப்பு எனக் கருதுகின்றனர். இதனடிப்படையில் ஆ.ராசா மாற்றப்படுவார் என்ற தகவல்களை அவர்களே மீடியாக்களிடம் தெரிவித்து வருகின்றனர்.வியாழக்கிழமையன்று சி.பி.ஐ. ரெய்டு தொடங்கியபின், பிரதமரிடம் அமைச்சர் ஆ.ராசாவும், மறுநாள் டி.ஆர்.பாலுவும் இதுபற்றி கேட்டபோது, தனக்குத் தெரியாமல் இது நடந்திருப்பதாகப் பிரதமர் தெரிவித்திருந்தார். அதிகாரிகளிடம் இதுபற்றி பிரதமர் விவரம் கேட்டபிறகும், சி.பி.ஐ. தொடர்ந்து தனியார் நிறுவனங் களில் ரெய்டு நடத்தியுள்ளது. இதன்பின்னணி குறித்து சி.பி.ஐ அதிகாரிகளிடம் கேட்டபோது, நாங்கள் ஒரு ரெய்டு நடவடிக்கை யைத் தொடங்கினால் "ஒரு சர்க்கிள் முடித்துவிட்டுத்தான் நிறுத்துவோம். இது வழக்கமானதுதான்' என்கின்றனர். பிரதமர் அலுவலக வட்டாரத்தில் வேறொரு சந்தேகம் நிலவுவதாகத் தகவல்.பிரதமரின் கண்ட்ரோலில் சி.பி.ஐ. இருந்தாலும் பிரதமர் அலுவலகப் பொறுப்புகளுக்கு இணையமைச்சராக இருப்பவர் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பிரிதிவிராஜ் சவாண். இவருக்கும் சரத்பவாருக்கும் மாநில அரசியலில் ஒத்துவராது. அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ஸ்வான், பவாருக்குச் சொந்தமானது என்பதால் சோனியா, ராகுல் ஆகி யோரின் உத்தரவுப்படி இணையமைச்சர் சவாண், சி.பி.ஐ.யை இயக்கியிருப்பார் என பிரதமரே சந்தேகப்படுவதாக அவரது அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது.
சி.பி.ஐ. இயக்குநர் வருகை

இதனிடையே, சி.பி.ஐ. இயக்குநராக அஸ்வின்குமார் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சென்னைக்கு விசிட் அடிக்க, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான ஆவணங்களுக் காகத்தான் வந்திருக்கிறார் என செய்திகள் கிளம்பின. இது குறித்தும் சி.பி.ஐ. வட்டாரங்களில் கேட்டபோது, எல்லாமே காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான். தென் மாநிலங்களில் சி.பி.ஐ.யின் செயல்பாடுகள் பற்றி ஆலோ சிப்பதற்காக ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட மீட்டிங் இது. முதல் விசிட் என்பதால் முதல்வரையும் கவர்னரையும் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என எங்கள் டைரக்டர் விரும்பினார். கவர்னர் டெல்லியில் இருக்கிறார்.தமிழக முதல்வரை சி.பி.ஐ. இயக்குநர் சந்திப்பதற்காக 5 நாள் முன்னாடியே அப்பாயிண்ட்மென்ட்டும் கேட்டிருந்தோம். தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழல்களால், முதல்வரை எங்கள் டைரக்டர் சந்தித்தால் அதுவும்கூட விசா ரணை என்ற பெயரில் திசை திருப்பப்படும் என்பதால் அப்பாயிண்ட்மென்ட் தரப்பட லை என்றனர் தெளிவாக. உயர்நீதிமன்ற நீதிபதிகளை சந்தித்த சி.பி.ஐ. இயக்குநர், ஸ்பெஷல் கோர்ட்டுகள் பற்றி விசாரித் துள்ளார். தலைமைச் செயலாளருடனான சந்திப்பின்போது, பாதுகாப்புக்காக என்று மாநில உள்துறையினர் நிறைய பணம் எங்களிடமிருந்து வாங்குகிறார்கள். அதை குறைக்கணும். சி.பி.ஐ.க்கு சென்னையில் புது பில்டிங் கட்டணும் எனத் தெரிவித் திருக்கிறார் அஸ்வின்குமார்.
முகேஷ்-மித்தல் இருவரும் ஆ.ராசா மீதான கோபத்தை ராகுலுடனான சந்திப் பின்போது வெளிப்படுத்த, ராகுலின் பார்வை மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மீதும் அம்மாநிலத்தின் சக்திமிக்க அரசியல்வாதி யான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீதும் திரும்பியுள்ளது. காங் கிரசும் தேசியவாத காங்கிரசும் ஒரே கூட் டணியில் இருந்தாலும் தேசியவாத காங் கிரசின் செல்வாக்கை ராகுல் விரும்ப வில்லை. அதனால், தேர்தல் களத்தில் பல உள்குத்துகள் நடந்துள்ளன.கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 71 இடங் களிலும் காங்கிரஸ் 69 இடங்களிலும் வென்றது. தற்போது, காங்கிரஸ் 82 இடங்களில் வென்றுள்ளது. தேசியவாத காங்கிரசுக்கு 62 இடங்கள்தான். அதன் எண்ணிக்கை குறைந்ததற்கு காங்சிரசின் திருப்பணிகள் நிறைய இருப்பதாக மும்பை அரசியல் வல்லுநர் கள் தெரிவிக்கிறார்கள். கடந்தமுறை தேசியவாத காங்கிரசுக்கு 24 அமைச் சர்களும் துணை முதல்வர் பதவியும் காங்கிரசுக்கு 19 அமைச்சர்களும் இருந்தனர். நிதி, உள்துறை,மின்சாரம், பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம், சுங்கவரி, உயர்கல்வி, வீட்டு வாரியம் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் தேசியவாத காங்கிரஸ் வசமே இருந்தன.இந்தமுறை முக்கிய துறைகளை காங்கிரஸ் வைத்துக்கொள்ளத் தீர்மானித்திருப்பதுடன், அமைச்சரவை யில் தேசியவாத காங்கிரசுக்கான பிரதிநிதித்துவத்தையும் குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சி.பி.ஐ. மூலம் சரத்பவாரை மிரட்டுகிறது.
அமைச்சர் ஆ.ராசா மாற்றமா?மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையடுத்து, அங்கு ஆட்சியில் பங்குபெற முடியா மல் போனவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர் களுக்கும் மத்திய அமைச்சரவையில் பங்கு தரும் நோக்கத்துடன் அமைச்ச ரவை மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது காங்கிரஸ் மேலிடம். ஆந்திர முதல்வர் பதவியை எதிர்பார்த்திருந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவி தரப்படும் என சோனியா வாக்களித்துள்ளார். ஆ.ராசா மாற்றப்படுவாரா என பிரதமரிடம் மீடியாக்கள் கேட்டபோது, இது செய்தியாளர்களுடன் விவாதிக்க வேண் டிய பிரச்சினையில்லை எனப் பதிலளித் தார்.ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மீடியாக்கள் கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் ஆ.ராசா, ""தனிநபர்களின் ஆதிக்கத்திலிருந்த தொலைத்தொடர்புத் துறையை மீட்டு, பல நிறுவனங்களும் பங்குபெற்று, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் செல்போன் சேவை கிடைக்கச் செய்தேன்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதமர், நிதியமைச்சர், சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோரிடம் உரிய அனுமதி பெற்றே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன'' என உறுதியான குரலில் தெரிவிக்கிறார்.ஆ.ராசா தானாக முன்வந்து ராஜினாமா செய்யவேண்டும் என காங் கிரஸ் எதிர்பார்ப்பதாக ஊடகங்கள் பரப்பிக்கொண்டிருந்த நிலையில், தமிழகத்தின் ரியாக்ஷன் எப்படியிருக்கும் என்பது பற்றி ஐ.பி.யிடமிருந்து மேலிடத் திற்கு குறிப்பு அனுப்பப்பட்டது. அதுபற்றி நம்மிடம் பேசிய உயர்மட்டத்தினர், பெருந்தொழிலதிபர் களுக்கு ஆதரவாகவும் அரசியல் காரணங்களுக்காகவும் ஆ.ராசாவை குறிவைத்து நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டாலோ, சி.பி.ஐ.யின் நடவடிக்கை தொடர்ந்தாலோ மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க விலகும் என்ற முடிவை தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது என ஐ.பி அனுப்பிய குறிப்பில் உள்ளது என்றனர். தமிழக முதல்வரின் மனநிலை பற்றிய ஐ.பியின் குறிப்பு, டெல்லியை யோசிக்க வைத்துள்ளது என்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம்

Wednesday, October 28, 2009

இந்திய-சீன எல்லைப்பிரச்சினையைவிடவும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஊடகங்கள் எதிர்பார்ப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றிய பதில்களைத்தான் என்பது தாய்லாந்தில் ஏசியான் மாநாட்டில் அவர் கலந்துகொண்டபோது இந்திய செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளிலிருந்தே வெளிப்பட்டது. தேசிய சேனல்கள் தரும் இந்த முக்கியத்துவத்தின் பின்னணியில் அரசியல் அதிகாரப் போட்டியும், பெரும் பிசினஸ் போட்டியும் இருப்பதை டெல்லி வட்டாரங்கள் மிகத் தெளிவாக விவரிக்கின்றன.


ஸ்பெக்ட்ரம் ஏகபோகம்

தொலைத்தொடர்புக்கு அத்தியாவசியமான ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகள் வான்வெளி முழுவதும் நிரம்பியிருக்கின்றன. இவற்றை யார் பயன்படுத்துவது என்ற உரிமத்தை வழங்கும் அதிகாரம் கொண்டது மத்திய தொலைத்தொடர்புத்துறை. ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி, இந்தியாவில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பித்துக் காத்திருந்தன. ஆனால், யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை. தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக 2007-ல் பொறுப்பேற்ற ஆ.ராசா இப்பிரச்சினையின் மீது கவனம் செலுத்தினார்.நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தின் கட்டுப் பாட்டில் பெருமளவு ஸ்பெக்ட்ரம் இருப்பதையும் அதிலிருந்து செல் வாக்கு மிக்க ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெற்றிருப்ப தையும் மற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதும் ஆ.ராசாவுக்குத் தெரிய வந்தது.


மக்கள் நலனை யோசித்த மந்திரி


ஏகபோகமாக ஒரு சிலருக்கு மட்டும் ஒதுக்கப் பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் போக, மிகுதியாக உள்ள ஸ்பெக்ட்ரமை, விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தால், இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகும். இதனால் வியாபார போட்டி உருவாகும். இந்தப் போட்டியினால், செல்போன் அழைப்புகளுக் கான கட்டணங்களை ஒன்றுக்கொன்று குறைத்து அறிவிக்கும். இது செல்போனை அதிகளவில் பயன் படுத்தும் இந்திய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே ஆ.ராசாவின் சிந்தனை.இதுகுறித்து தனது துறையின் அதிகாரி களிடம் ஆலோசித்தார் ஆ.ராசா. அதி காரிகளோ, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நீங்கள் இறங்கினால் உங்களுக்கு பல பிரச்சினைகள் உருவாகும். இப் போது இருப்பதுபோலவே இருந்து விட்டுப்போகட்டும் என அக்கறை யுடனும் ஒருவித எச்சரிக்கை சமிக்ஞை யுடனும் தெரிவித்தனர். பயன்படுத்தப் படாமல் இருக்கும் அலைக்கற்றைகளை முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏன் எச்சரிக்கிறார் கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார் அமைச்சர். ராட்சஸ கால்களுடன் பெரும் உருவமெடுத்து நிற்கும் பிசினஸ் பின்னணி அவருக்குத் தெரிய வந்தது.


நம்பர் ஒன் கம்பெனியின் சபதம்


இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையில் நம்பர் ஒன் இடத்தைத் தொடக்கத்திலேயே பெற்றிருந்தது ஏர்டெல் நிறுவனம். ஸ்பெக்ட்ரமை புதிய நிறுவனங்களுக்கும் ஒதுக்கினால், ஏற்கனவே போட்டா போட்டியில் உள்ள செல்போன் களத்தில் கடும் போட்டிகள் உருவாகும் என மிரண்டார் ஏர்டெல் நிறுவனத்தை நடத்தும் பாரதி டெலிகம்யூனிகேஷனின் ஓனர் சுனில் மித்தல். அதனால், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் தனது செல்வாக்கான கரங்களை நுழைத்து, புதிதாக எந்த நிறுவனமும் அலைக்கற்றைகளைப் பெற முடியாதபடி தடைகளை உருவாக்கியிருந்தார். அமைச்சகத்தின் அதிகாரிகள் முதல் உயர்மட்டம் வரை அவருக்கு ஆதரவாகவே இருந்துவந்தது.தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப் பேற்றதும் அவரிடமும் தனது செல்வாக்குக் கரத்தை நீட்டும் எண்ணத்துடன் சந்தித்தார் சுனில் மித்தல். வேறு கம்பெனிகளுக்கு ஸ்பெக்டரமை ஒதுக்காதீர்கள் என அமைச்சரிடம் நேரில் தெரிவிக்க, ஆ.ராசா கோபமாகி, சுனில் மித்தலுக்கு சூடான பதில் கொடுத்துள்ளார். தனது இத்தனைகால முயற்சிகள் முறிந்துபோகும் என்ற பதற்றத்துடன் வெளியே வந்த மித்தல், ராசாவை இந்தத் துறையிலிருந்தும் மத்திய கேபினட்டிலிருந்தும் தூக்காமல் விடமாட்டேன் என சபதம் செய்தார். அதற்கான லாபியிலும் தீவிரமானார்.





அமைச்சர் ஆ.ராசா தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. ஏர்டெல்லுக்குப் போட்டியாக பல நிறுவனங்கள் செல்போன் கம்யூனிகேஷனுக்குள் வந்தன. இதன்காரணமாக, வியாபாரப்போட்டி உருவாகி, கட்டணங்கள் குறைந்தன. போட்டிக்களத்தை விரும்பாத ஏர்டெல்லின் சுனில் மித்தல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு என இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்கினார். அமைச்சர் ஆ.ராசாவோ, பிரதமர் தலைமையிலான கேபினட் கூட்டத்தின் முடிவு, நிதியமைச்சரின் ஒப்புதல் ஆகியவற்றின் பேரிலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்றது என்பதை தெளிவாக்க, இது தொடர்பான விவாதங்களை எழுப்பின எதிர்க்கட்சிகள். எல்லாக் கேள்விகளுக்கும் ஆ.ராசா விளக்கமளித்தபடியே இருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்தன. ஆனாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. ஊடகங்கள் வாயிலாக ஆ.ராசாவுக்கெதிரானப் பிரச்சாரங்களை மித்தல் தரப்பு மேற்கொண்டபோதும், தொலைத்தொடர்புத் துறைக்கு அவரே மீண்டும் கேபினட் அமைச்சரானார்.சபதம் நிறைவேறாத நிலையில், வியாபாரத்தையாவது பெருக்கலாம் என்ற முடிவில் தென்னாப்பிரிக்காவின் எம்.டி.என் கம்பெனி பங்குகளை வாங்கி பாரதி டெலிகம்யூனிகேஷனை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டார் மித்தல். இதற்கு இந்தியாவின் மும்பை ஸ்டாக் எக்சேஞ்சிலும் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிலும் மித்தலின் நிறுவனம் இடம் பிடிக்க வேண்டும். இது இந்திய பங்கு வர்த்தக விதிகளுக்கு முரணானது என்பதால், எம்.டி.என். நிறுவனத்திற்குள் நுழைவதற்கு விதிகள் இடம் தரவில்லை. இதனால் மித்தலின் முயற்சியும் வெற்றிபெற வில்லை. தனது முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால், போட்டிக் கம்பெனிகளுக்கு இடம் கொடுத்த ஆ.ராசா மீதான கோபம் மித்தலுக்கு அதிகமானது என்கிறது பிசினஸ் வட்டாரம்

கணவனை கெடுத்த மனைவி!

எந்தப் பதவி போனாலும் ஈரோட்டுக்கு என் புருஷன்தாண்டா கிங் என்று சுட்டுவிரலை நீட்டி, போலீசாரிடமே சவால் விட்ட மனைவி உமாவோடு ஓடிக்கொண்டிருக்கிறார் ராஜா.கோர்த்துப் பிடித்து கோர்ட்டில் நிறுத்தாமல் விடமாட்டோம் என்று துரத்திக்கொண்டிருக்கிறது போலீஸ்.மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறார் கலைஞர். நில அபகரிப்பு, சிவபாலன் கடத்தல் என்றதுமே அமைச்சர் பதவியைப் பறித்தார். இப்போது மா.செ. பதவியை மட்டுமில்லாமல், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தூக்கிவிட்டார். ஆட்சியில் இருக்கும்போது ஒரு மாவட்டச் செயலாளர், கட்சியிலிருந்தே நீக்கப்பட்டது தி.மு.க. வரலாற்றில் இதுதான் முதல் தடவை. ஈரோடு மாவட்ட உடன்பிறப்புகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்.கே.கே.பி.ராஜாவின் கதி.ராஜாவை கைது செய்வதற்காக விரட்டிக் கொண்டிருக்கும் சி.பி.சி.ஐ.டி. ஸ்பெஷல் டீம் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.""ராஜா விவகாரத்தில் புதிதாக கிடைத்த தகவல்களைச் சொல்லுங்களேன்...!''""அதுதான் போன இதழில் "விடிய விடிய நிர்வாண சித்ரவதை! மாஜியின் கொலைவெறி யாட்டம்!' என்று லைவ் ரிலே செய்துவிட்டீர்களே. அப்புறம் என்ன ராஜ ரகசியம் இருக்கு. சொல்ல லாம்... சில விஷயங்களைச் சொல்லலாம். பழைய கேஸ்ல முன்ஜாமீன் கிடைத்ததும் நிரபராதின்னு நிரூபிச்சிட்டால் மீண்டும் அமைச்சர் பதவி கிடைச்சிடும்னு ராஜா நெனைச்சிருக்கார். அதனாலதான் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்துட்டான் சிவபாலன்னு தெரிஞ்சும், அவர் வீட்டுக்கே தன்னோட காரை அனுப்பி பெருந்துறை வீட்டுக்கு கூட்டிவரச் சொல்லி, கேஸை வாபஸ் வாங்கணும்னு சமாதானம் பேசியிருக்கார். அந்த ஆள் 10 கோடி கேட்டு 5 கோடிக்கு இறங்கி வந்திருக் கிறார். சரி ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்னு சொல்லி, தானே கூட்டிப்போய் சிவபாலனை அவர் வீட்டில் இறக்கிவிட்டிருக்கிறார். "சிவபாலன் சம்மதிச்சிட்டான், 5 கோடி கேக்குறான்... ரூட் க்ளியராகிவிடும். அபகரிப்பு வழக்கு தள்ளுபடி யாகிவிடும். தலைவர் கலைஞர் என்னை மீண்டும் அமைச்சராக்கிவிடுவார்னு தனது ரெண்டாவது மனைவி உமாவிடம் சொல்லியிருக்கிறார். அந்த அம்மாவுக்கு சுர்ருனு கோபம் மூக்குக்கு ஏறிருச்சாம். "நீயெல்லாம் ஆம்புளைதானா? ஒரு சப்பைப் பயகிட்ட போய் கெஞ்சினியா? அதுவும் 5 கோடி தர்றம்னு. த்தூ... பிறந்தமேனிக்கு விட்டு முட்டிக்கு முட்டி தட்டுனா துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு கேஸை வித்ட்ரா பண்ணப் போறான். நீ அவனை மிட்நைட்ல நம்ம பண்ணை வீட்டுக்கு வரவச்சிட்டு எனக்கு போன் போடு. நான் வந்து அவனுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கிறேன்'னு சுண்டி விட்ருச்சு அந்த அம்மா. நிதானம் தவறி அன்னைக்கு துப்பாக்கியை சிவபாலன் பொட்டுல வச்சு சுட்டாரு ராஜா. நல்லவேளை... துப்பாக்கியில் குண்டு இல்லை. அப்புறம் நடந்ததெல்லாம் நக்கீரன்ல வந்தவைதான்.'' விவரித்தார் அந்த அதிகாரி.மனைவி சொல்லே வேதவாக்கா? அந்த அளவுக்கு ரெண்டாவது மனைவி மீது பற்றுதலா?""ராஜாவோட முதல் மனைவி பரிமளா உயர்ந்த பெண்மணி. சாந்தமானவர். அடக்கமானவர். இந்த உமா ஏற்கனவே ஒரு காதலை முறித்து, ஒரு டாக்டருக்கு மனைவியாகி, அது கசந்து இந்த ராஜாவின் காதலியாகி, அப்புறம் திருமணமும் செய்துகொண்டவர். அதுக்கப்புறம் ராஜா ஒரு ரிமோட்தான். அதிகாரம், ஆணையெல்லாம் உமாமகேஸ்வரிதான். இப்பகூட அந்த உமாதான் ஓடவைத்துக்கொண்டிருக்கிறார்'' -சிரித்தார் அந்த அதிகாரி.என்.கே.கே.பி.ராஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவரை தொடர்புகொண்டோம்...

""அமைச்சர் பதவி பறிபோனதும் ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ.க்களை, கட்சி நிர்வாகிகள் கூட்டம் எல்லாரும் ராஜினாமா செய்யணும்னு சொன்னார். அதே மாதிரி இப்பவும் மிரட்டுகிறார். ஆனால் பயப்படலை. சரிப்பா... விடுப்பா... உங்க அப்பாவைத்தானே பொறுப்பாளரா போட்டிருக்காங்க. பொறுமையா போன்னு அட்வைஸ்பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. யாரும் சப்போர்ட் இல்லைன்னு உறுதியானதும்தான், முன்ஜாமீனுக்கு ஏற்பாடுபண்ணச் சொல்லிட்டுப் பதுங்கிட்டாரு'' என்றார் அந்த நண்பர்.ராஜாவுக்கு ஏற்பட்ட இந்த நிலை பற்றி ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என்ன நினைக்கிறார்கள்?அவர்களையே தொடர்புகொண்டு கேட்டோம்.""சேரக்கூடாத சேர்க்கை ராஜாவை தடம்புரள வைத்துவிட்டது. தி.மு.க.வில் ஒரு சிறிய பொறுப்பு கிடைத்தாலும் அது பெருமைக்குரிய விஷயம். அந்தப் பெருமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்'' என்கிறார் பவானிசாகர் எம்.எல்.எ.வும் ஒ.செ.யுமான ஜீவா ஓ.சுப்பிரமணியம்.""என்னோட அரசியல் வழிகாட்டியே ராஜாதான். கட்சிக்காக உழைச்சார். மற்றவங்களை உழைக்க வச்சார். எல்லாம் கெட்ட நேரம். பதவியெல்லாம் பறிபோயிருச்சு. ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. அதுக்காக நான் ஒ.செ.பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா பண்ணுவம்னு நினைச்சிடாதீங்க'' என்கிறார் சத்தியமங்கலம் ஒ.செ.யும் எம்.எல்.ஏ.வுமான தர்மலிங்கம்.""என்.கே.கே.பி. ராஜா பிரச்சனைகளைத் தவிர்த்திருக்க வேண்டும்'' என்கிறார் அந்தியூர் எம்.எல்.ஏ. குருசாமி.மாவட்டப் பொறுப்பாளராக தி.மு.க. தலைமை நியமித்துள்ள என்.கே.கே.பெரியசாமியை அவரது பாரதிதாசன் கல்லூரியில் சந்தித்தோம்.""என் மகன் ராஜா கட்சிக்காக பாடுபட்டான். மா.செ. ஆனான். ஆனதால் ஒண்ணரை கோடியில் கழகத்திற்கு அலுவலகம் கட்டினான். மற்றபடி என் மகனைப் பற்றியோ, சமீபத்திய நிகழ்ச்சிகள் பற்றியோ என்னிடம் கேட்காதீர்கள்.

கட்சி வேறு மகன் வேறு'' கிளிப்பிள்ளை போல இதையே சொல்லிக்கொண்டிருந்தார் புதிய பொறுப்பாளரான அவர்.சனிக்கிழமை இரவு. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ராஜா, தன் மனைவியோடு சென்னைக்கு செல்வதாகக் கூறிவிட்டு தாளவாடியில் உள்ள தனது எஸ்டேட்டுக்குத்தான் கிளம்பியுள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தன்னை தேடிக்கொண் டிருப்பது தெரிந்ததும், கர்நாடகாவுக்குள் சென்றுவிட்டார்.""விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். இதற்காக 5 ஸ்பெஷல் டீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் ராஜாவையும் அவருடைய ஆட்களையும் அரெஸ்ட் செய்துவிடுவோம்'' என்றார் டி.எஸ்.பி.சாம்பசிவம்.

பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்!


ஆங்கில நாளிதழ் ஒன்றின் மூத்த இதழியலாளர் ஒருவரை ஈழத்து மக்களின் அரசியல் பிரச்சனை குறித்து உரையாடி விவாதிக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தேன். கடந்த வார இறுதியில் அது சாத்தியமாயிற்று. பிரித்தானிய தமிழ் மன்றம் (இழ்ண்ற்ண்ள்ட் பஹம்ண்ப் எர்ழ்ன்ம்) வெளிக்கொணர்ந்த "விடுதலைப் போராட் டத்தின் சுருக்கமான வரலாறு' ஆங்கில ஆக்கத்தை அவரிடம் கொடுத்தேன். அனைத்து பக்கங்களையும் வேகமாகப் பறவைப் பார்வையில் புரட்டியவர், "மிக நன்றாகச் செய்திருக்கிறார்களே... இதுபோன்ற ஆக்கங்களை முன்பே ஏன் வெளியிடவில்லை? என் போன்ற பலருக்குப் பயன்பட்டிருக்குமே...' என்றார்.என்னைப் பேசச் சொல்லி சுமார் அரை மணி நேரம் பொறுமையாகக் கேட்டார். அடிப்படையில் சாத்வீகப் பண்புக் கூறுகளை அடிநாதமாகக் கொண்ட ஈழத்தமிழ் சமூகம் ஆயுதமேந்தும்படி உந்தித் தள்ளப்பட்ட வரலாற்றுப் பின்புலம், அன் றும் சரி இன்றும் சரி பிரச்சனையின் வேர் மூலம் பௌத்த சிங்களப் பேரினவாதம்தான் என்ற உண்மை, இந்திய அதிகார வர்க்கம் எவ்வாறெல்லாம் ஈழ மக்களின் போராட்டத்தைப் பந்தாடி இறுதியில் இன அழித்தலுக்கும், துணை நின்ற கொடுமை, விடுதலைப் போராட்டம் படைத்த சாதி ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற சாதனைகள் எனப் பலவற்றை எடுத்துச் சொன்னேன்.விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த தவறுகளாக அவர் கருதியவற்றை பட்டியலிட்டார். "இவற்றிற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?' என்றார். "பல குற்றச்சாட்டுகள் தவறான புரிந்துமையால் வருவது. அதேவேளை நீங்கள் குறிப்பிட்ட சில குறைபாடுகள் உண்மை, ஒத்துக் கொள்கிறேன், ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்' என்றேன். உடனே என்னை அவர் கேட்டார், "அப்படியென் றால் சிந்திக்கும் பக்குவம் கொண்ட நீங்கள் கூட விடுதலைப்புலிகள் விட்ட பிழைகளை வெளிப்படை யாக சுட்டிக் காட்டத் தயங்குகிறீர்களே ஏன்?' என்றார்.அவருக்கு நான் சொன்னேன், ""உலகில் எந்த ஒரு நாட்டினதும் உதவியின்றி தமது ஒப்பிலா தியாகத்தையும், தமது மக்களையும் மட்டுமே நம்பி, நாற்புறமும் கடலால் சூழப்பட்ட சிறியதோர் நிலப்பரப்பில் மகத்தானதோர் விடு தலைப் போராட்டத்தைக் கட்டி யெழுப்பியவர்கள் அவர்கள். தொடக் கத்தில் நமது (இந்திய) சுயநல பூகோள ராணுவ-அரசியல் தேவைகளுக்காக நாம் அவர்களை ஆதரித்தோம். நாம் சொல்கிறபடி யெல்லாம் கேட்கிற வீட்டு நாய் போல அடங்கி வாலாட்டி நிற்க மறுத்தபோது மனசாட்சியின்றி அவர்களை வேட்டையாடினோம், இன அழித்தலுக்கும் துணை நின்றோம். நீங்கள் ஒரு உயர்ஜாதிக்காரர். புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்பதற்காக மட்டுமே நீங்கள் ராஜபக்சே கொடுங்கோலர்களை ஆதரித்த தாக நான் கருதவில்லை. உங்களுக்குள் எங்கோ ஒரு மூலையில் தமிழன் ஜெயித்து விடக் கூடாதென்ற குரூர வைராக்கியம் இருந்ததாக நான் நம்பினேன், நம்புகிறேன். விடுதலைப்புலிகள் வெற்றி பெற்றால் அது தமிழரின் பொது வெற்றியாக அமைந்துவிடும் என நீங்கள் அஞ்சினீர்கள். அது உங்கள் உயர்ஜாதி அரசியல் பார்வையின் வெளிப்பாடு. ஆதலால்தான் பல்லாயிரம் அப்பாவி மக்களது மரணங்களைக் கூட உங்களால் மறைக்கவும் மனசாட்சியின்றி மறுக்கவும் முடிந்தது. உங்களைப் போன்று படித்தவர்களும் பொறுப் பான முக்கிய நிலையில் இருக்கிறவர்களும் உயர்ஜாதி மனோபாவத்துடன் தெளிவாக இயங்குவதாய் கருதிய காரணத்தினால்தான் விடுதலைப் புலிகளையும்- அவர்களது குறைபாடுகளுக்கும் அப்பால் என் போன்ற வர்கள் மனவெளியில் சுவீகரித்துக் கொண் டோம்'' என்றேன். ""உங்களது வெளிப்படை யாகப் பேசும் பாங்கினை, அதில் நான் உணரும் நேர்மையை மிகவும் பாராட்டுகிறேன்'' என்றார்.தொடர்ந்து அவர் கேட்ட ஒரு கேள்வி, சந்திப்பு நிறைவுற்று இல்லம் வந்து சேர்ந்தபின் நிறையவே சிந்திக்க வைத்தது. இதுதான் அவர் கேட்டது: ""கடந்த நான்கு ஆண்டுகளாய் என்னை உங்களுக்குத் தெரியும். எல்லாம் முடிந்துவிட்டபின் உரையாட வந்திருக்கிறீர்கள். முன்பேயே வந்து பேசியிருக்கக் கூடாதா? எங்கள் நிறுவனத்திற்குள் ஓரளவுக்கேனும் மாற்றுக் கருத்தை குறைந்தபட்சம் முன்வைக்க வேணும் செய்திருப்போமே...'' என்றார். குற்ற உணர்வு என்னைக் குத்தியது. ஆம், கற்றறிந்த தமிழரெல்லாம், உணர்வுடைய தமிழரெல்லாம் உரிய காலத்தில் தம்மால் முடிந்தவற்றையேனும் ஒருங்கிணைந்து செய்திருந்தால் வாராது வந்த மாமணி போல் சோழமன்னர்களுக்குப் பின், பண்டார வன்னியனுக்குப் பின் தமிழ் வரலாறு கண்ட மகத்தானதோர் விடுதலை எழுச்சியின் பேரழிவை தவிர்த்திருக்க முடியுமென்ற உண்மை கனத்தது. 2002 முதல் சிங்களப் பேரினவாதம் தனது பணிகளை சீராகவும், நேர்த்தியாகவும், மிக விரிவாகவும் அதேவேளை அமைதியாகச் செய்து கொண்டிருக்க நாமோ, "எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள்' என்ற நினைப்பில் அவர்களை பந்தயக் குதிரைகளாக்கி விட்டு வெறும் பார்வை யாளர்களாய் நின்றிருந்தோம்.மனநிறைவு தந்த, நினைவில் இருத்த விரும்பும் சந்திப்புகளில் ஒன்றாய் அந்த மூத்த இதழியலாளரோடான நீண்ட உரையாடல் அமைந்தது. அடுத்த வாரம் மேலும் சில முக்கிய பத்திரிகையாளர்களை சந்திக்க ஒழுங்கு செய்வதாய் கூறி விடைபெற்றார்.பத்திரிகை நண்பரோடான விவாதங்கள் தந்த மனநிறைவுடன் இரவு 9 மணியளவில் மருத்துவர் இளங்கோவன் அவர்களை சந்தித்தேன். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அறுபது வயது இளைஞர் அவர். தந்தை பெரியாரின் பக்தர். அமெரிக்காவில் "அனைத்துலக பெரியார் ஆய்வு மையம்' நிறுவி நடத்தி வருகிறவர். தன் முனைப்போ, சுயநலமோ எதுவுமின்றி ஈழ விடுதலை அரசியலில் மிக நீண்ட காலமாய் தன்னை ஈடுபடுத்தி வருகிறவர். எவரையும் பொதுவில் காயப்படுத்த விரும் பாதவர். இந்தியா வந்துள்ள அவர் ஆழ்வார்பேட்டை உட்லண்ட்ஸ் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, ""நீங்கள் அமைதியாக என்னென்ன பணிகள் செய்து வருகிறீர்களென்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் போய் காலணா பிரயோஜனமில்லாத இணைய தளங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருக்கிறீர்களே... பல தமிழ் இணையதளங்களில் இன்று நடந்து கொண்டிருப்பது முடை நாற்றமடிக்கும் வயிற்றுப் போக்கு. தானாகச் செத்தாலொழிய இந்த பாக்டீரியாவுக்கு இப்போது நம்மிடம் மருந்து இல்லை. அதுவும் சென்னையில் இருந்துகொண்டு பல பத்திரிகையாளர்களையும், பல முக்கியமானவர்களையும் விலைக்கு வாங்கிய இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதர் ஹம்சா இப்போது லண்டனில் இருக்கிறார். அவர் அங்கு போன பின்னர் இந்த "இணைய வயிற்றுப்போக்கு' நோய் அதிகரித்துள்ளது'' என் றார். இந்த அசிங்க விவாதங்களுக்குள் நீங்கள் வராதீர்கள் என்று சகோதர வாஞ்சையோடும், உரிமையோடும் அறிவுறுத்தினார். "நீங்கள் சொல்வது சரியே' என்றேன்.தொடர்ந்தும் அவர் சொன்னார், ""தமிழகத்தில் ஈழத்திற்காகக் குரல் கொடுத்து வரும் தலைவர்களை விமர்சிப்பதையும் நீங்கள் தவிர்ப்பது நல்லது. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம். நாம் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள வேண்டுமென்றுதான் சிங்களவன் ஆசைப்படுகிறான்'' என்றார். அவருக்கு நான் சொன்னேன், ""ஐயா, ஈழ விடுதலைப் போரின் இன்றைய பின்னடைவிற்குக் காரணம் ஒன்றிரண்டல்ல, ஒரு சிலருமல்ல. காரணங்கள் பல, காரணமானவர்களும் பலர். எல்லா கட்சிகளினதும் எளிய தொண்டர்கள் அன்றும் இன்றும் ஈழ விடுதலை ஆதரவாளர்கள்தான்.சில தலைவர்கள் ஈழ விடுதலை அரசியலில் ஈடுபட்ட காரணத்தினாலேயே பல்வேறு இன்னல்கள் அனுபவித்தார்களென்பதும் உண்மையே. ஆனால் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுத்திருந்தால் பேரழிவை தவிர்த்திருக்க முடியும். அதுவும் போராட்டம் தோல்வியின் பாதாள விளிம்பு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதென்பதை நன்றாகத் தெரிந்தும் கூட இங்கு எல்லோருமே தேர்தல் அரசியல்தான் விளையாடினோம். எனினும் எவரையுமே நாம் விமர்சிக்கவில்லை. காரணம் தமிழகத்தின் எல்லா தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் ஈழத் தமிழர்களுக்காய் குரல் கொடுத்திருக்கிறார்கள், உழைத்திருக்கிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் இப்போது என்னைக் குமுற வைத்தது இரண்டு வாரங்களுக்கு முன் வந்த ஓர் தொலைபேசி அழைப்பு.தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் தன்னை மூத்த போராளியென்றும் தமிழீழ தகவல் தொடர்பு (Communication) பிரிவுக்கு பொறுப் பாயிருந்த தளபதி அருணன் அவர்களுடன் தானும் தகவல் தொடர்பு பிரிவிலேயே கடமையாற்றியதாகவும் சொன்னார். கடந்த ஜனவரி முதல் மே 15 வரை தமிழகத்தின் சில தலைவர்களுக்கும் களத்திற்குமிடையே நடந்த உரையாடல்களை விரிவாக விவரித்த அவர் ஒரு கட்டத்தில் நா தழுதழுத்து, பின்னர் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார். கடைசியில் அவர் கூறிய வரிகள் வாழ்வில் இதுவரை சில கண்ணீர்த்துளிகளைத் தவிர அழுகை தவிர்த்து வளர்ந்த என்னை இரவு முழுவதும் கதறிக் கதறி அழ வைத்தது. நா குழறி அழுது கொண்டே அந்தப் போராளி சொன்ன கடைசி வரிகள் இவை: ""முப்பத்தேழு ஆண்டு காலம் ஒரு கணம் கூட கலங்காது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய எங்கள் தேசியத் தலைவருக்கு தவறான வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் தந்து, அந்த மாமனிதனின் கண்கள் முதன்முறையாகக் கலங்கும் படி வைத்த இந்தத் தலை வர்கள் இனி எங்களுக்குத் தேவையில்லை''. இந்தத் தலைவர்கள் அனுப்பிய சில கடிதங்களின் நகல்களையும், உரையாடல் பதிவுகளையும் விரைவில் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இத்தொலைபேசி அழைப்பு உருவாக்கிய உள்ளக் கதறல்தான் அடுத்தநாள் இணைய தள நேர்காணல் ஒன்றில் குமுறலாக வெளிப்பட்டது.கடந்த சில நாட்களில் கிடைத்துள்ள மிகவும் நம்பகமான தகவல்களின்படி சமீப நாட்களில் நமது ராமேசுவரம் மீனவ மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள கடற் படையினரோடு சீன கடற்படையினரும் இணைந்து இயங்குகிறார்கள். கச்சத்தீவு பகுதியிலேயே தனது பலத்தை நிறுவ சீனா ஏதோ திட்டங்கள் வைத்திருப்பதாகவும் அரசல் புரசலாகச் செய்திகள் வருகின்றன.இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்தியாவின் எழுச்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாய் இருக்கப் போகிற சீனாவுக்கு நமது முற்றமான இந்தியப் பெருங்கடலையே இந்திய அதிகார வர்க்கம் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது. இந்த தேசத்திற்கும் அதன் எதிர்காலத்திற்கும் துரோகம் செய்கிற இந்த பாதுகாப்பு -வெளியுறவுக் கொள்கையை உந்தித் தள்ளியது அதிகார வர்க்கத்தின் தமிழின வெறுப்பு. அத்துரோகத்திற்கு அறிவு, ஊடகப் பின்புலம் உருவாக்கியதாக சந்தேகிக்கப்படும் சிலரைப் பற்றிய அறிவு விசாரணை கூட நம்மிடையே சொல்லும்படி இல்லை. ஆனால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்ப்பு பிரமாதமாய் களை கட்டுகிறது.கூர்மைப்படப் போகும் சீன-இந்தியச் சிக்கல்தான் தமிழ் ஈழத்திற்கான சாத்தியப்பாட்டையும் முன் நகர்த்தும்.
எங்ஙனம்?

Deal or No Deal in SUN TV

Deal or No Deal என்ற பெயரில் சன் டிவியில் பிரமாண்ட கேம் ஷோ ஒளிபரப்பாகவுள்ளது. 20க்கும் மேற்பட்ட டிவி சானல்களுடன் உள்ள சன் டிவி குழுமம் இந்தியாவின் மிகப் பெரிய டிவி குழுமத்தில் முக்கியமான இடத்தில் உள்ளது.சன் டிவி யில் தற்போது டீலா நோ டீலா என்ற பெயரில் புதிய கேம் ஷோ ஒளிபரப்பாகவுள்ளது.மொத்தம் 26 எபிசோடுகளுடன் இந்த கேம் ஷோ ஒளிபரப்பாகும். அக்டோபர் 31ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை இது ஒளிபரப்பாகும்.ஒவ்வொரு போட்டியாளரும் ரூ. 50 லட்சம் வரை இதில் பரிசை வெல்ல முடியும்.உலகத் தரம் வாய்ந்த அரங்குகளில் இது நடைபெறவுள்ளது. எளிமையான போட்டி, சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் வகையிலான விறுவிறுப்பான போட்டிகள் என விருந்து படைக்கக் காத்திருக்கிறது டீலா நோ டீலா.ஒவ்வொரு எபிசோடிலும், பார்வையாளர்களுக்காக ரூ. 1 லட்சம் பரிசுத் திட்டமும் உள்ளது.ஆனந்த தாண்டவம் படத்தில் நடித்த நடிகர் ரிஷி இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.

ஜோடியாக மேடை ஏறிய நயன்தாரா பிரபுதேவா!: கோபத்தின் உச்சியில் ரமலத்!

விஜய், நயன்தாரா நடிப்பில் வில்லு படத்தை பிரபு தேவா கடந்த ஆண்டு இயக்கினார். அப்போது பிரபுதேவா, நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சென்று வந்தனர். நயன்தாராவுடனான காதல் எனது சொந்த விஷயம். அதைப்பற்றி பேச விரும்பவில்லை என பிரபுதேவா கூறி வந்தார்.
இதற்கிடையே பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சை குத்தி பரபரப்பு ஏற்படுத்தினார் நயன்தாரா. அவரை காதலிப்பதையும் அவர் மறுக்கவில்லை. சமீபத்தில் பிரபுதேவா, நயன்தாரா துபாய்க்கு சென்றனர். அங்கு பணிபுரியும் தனது சகோதரரிடம் பிரபுதேவாவை நயன் அறிமுகம் செய்து வைத்தார். போக்கிரி படத்தின் இந்தி ரீமேக்கான வான்டட் படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர்.
படம் முடிந்ததும், இருவரும் ஜோடியாக வெளியே வந்தார்கள். உடனே அவர்களை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டார்கள்.
இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா? என்றும், திருமணத்துக்குப்பின் நடிப்பீர்களா?'' என்றும் நயன்தாராவிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.
நோ கமெண்ட்ஸ் என்று நயன்தாராவும், பிரபுதேவாவும் சேர்ந்து பதில் அளித்தார்கள்.
இதைத்தொடர்ந்து மும்பை பத்திரிகைகள், நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றும், திருமணத்துக்குப்பின், நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் என்றும் செய்திகள் வெளியிட்டிருந்தன.
பிரபுதேவா நயனதாராவின் கள்ளக்காதல், திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இவர்களது காதலால் பிரபுதேவாவின் மனைவி ரமலத் தனது இரு குழந்தைகளுடன் கலங்கிப் போய் நிற்கிறார். பிரபுதேவாவை திருத்த அவரது குடும்பத்தினர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் எடுத்த முயற்சிகள் பலனற்றுப் போய் விட்டன.
முதலில் பிரபுதேவாவின் மனைவி ரமலத் நயனதாராவைக் குற்றம் சாட்டிப் பேசினார். எங்காவது பிரபுதேவாவுடன் இணைத்துப் பார்த்தால் அடிப்பேன் என்றும் ஆவேசமாக கூறினார். இதையடுத்து ரமலத் யார் என்னை அடிக்க என்று கோபப்பட்டார் நயனதாரா. இதற்குப் பதிலளித்த ரமலத், நயனதாராவின் இந்த திமிர் பேச்சுக்கு என் தமிழ்நாட்டு தாய்மார்களும், சகோதரிகளும், மாதர் சங்கங்களும் தக்க பதில் கொடுப்பார்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நயன்தாராவைக் கல்யாணம் செய்து கொள்ள தன்னிடமே அனுமதி கேட்டு நிற்பதாக பிரபுதேவா குறித்து கண்ணீர் கூறியுள்ளார் ரமலத். எனது உயிரைப் பற்றிக் கூட அவருக்கு கவலை இல்லை. நயனதாராவை மணந்து கொள்ள நான் அனுமதி தர வேண்டும் என்று என்னிடமே கேட்கிறார் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
பிரபுதேவா மனைவி ரம்லத் எங்கு பார்த்தாலும் நயன்தாராவை அடிப்பேன் என்றதால் சென்னையில் சந்திப்பதை இருவரும் தவிர்க்கின்றனர். நயன்தாரா இங்கு வந்தாலும் ஒரு நாள் மட்டுமே யாருக்கும் தெரியாமல் தங்கிவிட்டு திருவனந்தபுரம் பறந்து விடுகிறார். ஐதராபாத்தில் நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் இருவரும் தங்குவதாக திரையுலகில் கிசுகிசுக்கிறது. இந்தியில் பிரபுதேவா இயக்க உள்ள மோஸ்ட் வாண்டட் படத்தில் சல்மான்கான் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த ஸ்டைல் சினிமா விருது வழங்கும் விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்று ரசிகர்களை ஓ போட வைத்தனர். அங்குள்ள நவோட்டல் நட்சத்திர ஓட்டலில் இவ்விழா நடத்தப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு கிடைத்தது. சிவாஜி படத்தில் டான்ஸ் அமைத்ததற்காக பிரபுதேவாவுக்கு சிறந்த டான்ஸ் மாஸ்டருக்கான விருது கிடைத்தது. தமிழில் சிறந்த நடிகராக தனுஷ் (பொல்லாதவன்), சிறந்த நடிகையாக ஸ்ரேயா (சிவாஜி) ஆகியோரும் விருது பெற்றனர். விழாவுக்கு நயன்தாரா வும், பிரபுதேவாவும் ஜோடியாக வந்தனர். அருகருகே உட்கார்ந்து சிரித்து சிரித்து பேசினர். விழாவில் பங்கேற்ற இதர நடிகர் நடிகைகளும் ரசிகர்களும் இவர்களையே கவனித்தனர். நயன்தாரா அதை பொருட்படுத்தவே இல்லை. விருது அறிவிக்கப்பட்டதும் இரண்டு பேரும் ஜோடியாக மேடை ஏறி விருதுகளை வாங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். பிரபுதேவா மனைவி ரம்லத்துக்கு இவ்விஷயம் தெரிந்து அதிர்ச்சியாகியுள்ளார். எச்சரித்தும் இருவரும் சேர்ந்து சுற்றுவது ரம்லத்துக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


Monday, October 26, 2009

கார்த்திகேசு சிவத்தம்பி

கார்த்திகேசு சிவத்தம்பி (கரவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை), (பிறப்பு மே 10, 1932) ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார்.

பொருளடக்கம்
1 கல்வியும் கல்விப்பணியும்
2 கலைப் பங்களிப்பு
3 ஆக்கங்கள்
4 இவர் பற்றிய படைப்புக்கள்
4.1 இவருடைய நூல்கள்
5 உசாத்துணைகள்
6 வெளி இணைப்புக்கள்

கல்வியும் கல்விப்பணியும்
ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் கொழும்பு ஷாகிரா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்

Sunday, October 25, 2009

வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்


இளைய தளபதி விஜய் இதுவரை சினிமாவில் வேட்டையாடுவதில் வல்லவராக இருந்து வந்தார். தீபாவளியோ, பொங்கலோ குறித்த நேரத்தில் அவரது படங்கள் திரைக்கும் வரும் அளவிற்கு அவரது திட்டமிடல் இருந்தது.
ஒரு படத்தில் நடித்து முடித்ததுமே அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்து விடுவார் விஜய். முந்தைய படம் திரைக்கு வருவதற்குள் அடுத்த படம் பாதி முடிவடைந்திருக்கும். இந்த திட்டமிடல் வேட்டைக்காரன் வரை தொடர்ந்தது.
அதனால்தான் வேட்டைக்காரன் படம் முடிந்ததும் சுறா படத்தில் கவனத்தை திருப்பிவிட்டார். ஆனால் இப்போது முழுக்கவனத்தையும் சுறாவில் செலுத்தமுடியாமல் செய்கிறது வேட்டைக்காரன். இப்படம் இன்னமும் ரிலீசாகாமல் இருப்பதுதான் இதற்கு காரணம்.
சுறாவை வேக வேகமாக முடித்தாலும் வேட்டைக்காரன் படத்திற்கு பிறகுதானே ரிலீஸ் செய்ய முடியும் என்பதால் விஜய் அப்செட்.
துவண்டு போயிருந்த மார்க்கெட்டை சன் பிக்சர்ஸ் விளம்பரம் தூக்கி நிறுத்தும் என்று நம்பித்தான் வேட்டைக்காரனை வெளியிடும் உரிமையை சன் பிக்சர்ஸுக்கு கொடுக்க சம்மதித்தார் விஜய். எப்போது வெளியிடுவோம் என்ற தகவலையே சொல்லாமல் சன் பிக்சர்ஸ் தரப்பு இழுத்தடிப்பதால் நொந்து போயிருக்கிறார்.
படம் துவங்கியது முதல் அப்படம் திரைக்கு வரும் வரை விஜய் வேட்டை என்ற நிலை இப்பொது மாறிவிட்டது. இதுவரை வெளிவந்த அவரது படங்களின் சென்னை ஏரியா உரிமையை அவர்தான் வாங்குவார். அதுதான் அவரது அக்ரிமெண்ட். ஆனால் சன் பிக்சர்ஸில் அது முடியாது என்பதால் விஜய் வேட்டையாட முடியாமல் முதலில் வலுவிழந்தார்.
விஜய் மகன் இந்த படத்தில்தான் முதன் முதலாக தலை காட்டி உள்ளார். ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறார். அவர் ஆடிய ராசிதான் இப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்று பலரும் பேசுவது விஜய் காதுக்கு எட்ட ரொம்பவே அப்செட்டில் இருக்கிறார்.
வேட்டைக்காரன் இவருக்கு 49 வது படம். அடுத்து வரும் சுறா 50 வது படம். 49 முடியாமல் 50க்குள் எப்படி அடியெடுத்து வைக்க முடியும் என்ற குழப்பத்தில் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறார் விஜய். சன் தரப்பின் இழுத்தடிப்புக்கு திட்டமிட அரசியல் சதி என்கிறார்கள்.
இப்போதைக்கு அரசியல் இல்லை என்று விஜய் அறிவித்தாலும் ராகுல்காந்தியை சந்தித்ததன் விளைவுதான் இந்த அரசியல் சதி என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
வேட்டையாட முடியாத விஜய்யால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். விஜய்யோ வேட்டைக்காரனை பொறுத்தவரை வாய் திறக்க முடியாமல் அவதிப்படுபவராக இருக்கிறார்

ஆர்த்தி - கணேஷ்கருக்கு கலைஞர் வாழ்த்து (படம்)


தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று (25.10.09) திரைப்பட நட்சத்திரங்கள் ஆர்த்தி - கணேஷ்கர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்

ஆர்.கே. ஹோட்டல் திறப்பு - வடை சுட்டார் வடிவேலு!!

எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களின் ஹீரோ ஆர்கே, தி நகரில் புதிதாக ஒரு ஓட்டலைத் திறந்துள்ளார். இதற்கு 'வாங்க சாப்பிடலாம்' என பெயர் சூட்டியுள்ளார். வைகைப் புயல் வடிவேலு இந்த ஓட்டலை வடை திறந்து வைத்தார்.இந்த ஓட்டலுடன் சர்வதேச தரத்தில் அமைந்த உடற்பயிற்சி மையம், பில்லியர்ட்ஸ் மையம், நீச்சல் குளம், பொழுதுபோக்கு க்ளப் என பலவித வசதிகளும் கொண்ட விஐபி அக்சஸ் கிளப்பும் உண்டு. இந்த ஓட்டலை இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு. காலை 8 மணிக்கே ஓட்டலுக்கு வந்து விட்ட வடிவேலு, ஓட்டலின் கல்லாவி்ல் சற்று நேரம் உட்கார்ந்தார். பின்னர் உணவக சமையல்காரர்கள் அணியும் தொப்பியை அணிந்து கொண்டவர், சமையல் பகுதிக்குள் நுழைந்து வடை சுட ஆரம்பித்தார்!"நாங்கள்லாம் இதிலயும் கில்லாடிங்கய்யா..." என்று தன் பாணியில் சொன்ன வடிவேலு, பின்னர் முதல்மாடியில் உள்ள பில்லியர்ஸ் மேசைக்குச் சென்றார். 'இதை எப்படி விளையாடறதுன்னு சொல்லுப்பா' என்று கேட்டுத் தெரிந்து கொண்டு விளையாடிக் காட்டினார். பின்னர் உடற்பயிற்சி மையத்துக்குள் நுழைந்து கொஞ்ச நேரம் சைக்கிளிங் செய்தவர், அசைவ வகை உணவுகளை சுவைத்தார். "அருமையா பண்ணியிருக்கீங்கய்யா... பிரமாதமான டேஸ்ட்" என்று பாராட்டியவர், ஆர்கேயை வாழ்த்திச் சென்றார்

இந்த ஓட்டல் குறித்து ஆர்கே கூறியதாவது:

அருமையான, உயர்தர, தரமான உணவு தரவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். இந்த உணவகத்தின் சுவையும் தரமும் எல்லா வித புகழ்பெற்ற உணவகங்களுக்கு சவால் விடும் என்பது மட்டும் உறுதி.அதற்காக கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேல் மெனக்கெட்டிருக்கிறோம். கடந்த இரு மாதங்களாக மூன்று வேளையும் பல்வேறு உணவு வகைகள் செய்யப்பட்டு, அது எப்படி இருக்கிறது என்ற பரீட்சை மட்டுமே நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட 5000 நபர்களை வெவ்வேறு குழுவாக சாப்பிட வைத்து, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம். நடிப்பும் தொழிலும் எனது இரு கண்கள். உணவிடுதல் புண்ணியம் என்பார்கள். அதனால் உணவிடும் தொழில்!நடிப்பில், அடுத்து பெரிய இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் இயங்க உள்ளேன். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும்..." என்றார் ஆர்கே.உணவகம் திறப்பு விழா என்பதால் இன்று காலை சாப்பிட வந்த அனைவருக்கும் இலவசமாகவே சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.



Saturday, October 24, 2009

யுத்தப் படம் சொல்லும் பாடம்! - ஜெகத்கஸ்பர்


தீபாவளி தினமன்று வெளியெங்கும் பட்டாசுப் புகை மண்டலமாகிக் கிடந்ததால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். சித்தர் பாடல் சொல்வதுபோல சில நேரங்களில் சும்மா இருத்தலே சுகமாகத்தான் இருக்கிறது. மதியம் உறங்கித் தீர்த்த பின் தொலைக் காட்சியைத் தட்டினால் ஸ்டார் அலைவரிசையில் "பேர்ள் ஹார்பர்' (Pearl Harbour) -தமிழில் சொன்னால் "முத்துத் துறைமுகம்' ஆங்கிலத் திரைப்படம் தொடங்கியிருந்தது.இப்போதெல்லாம் தனிப்பட்ட விருப்பங்களுக்கு நேரம் ஒதுக்குகிற வசதிகளை வாழ்க்கை அபகரித்துக்கொண்டுவிட்டது. பழைய நாட்களில் வரலாறு தொடர்பான திரைப்படங்க ளென்றால் ஒன்றுக்குப் பலமுறை பார்த்து உரையாடல்களை மனப்பாடம் செய்யும் பழக்கம் இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற "கிளாடி யேட்டர் (Gladiator) படத்தை இருபது முறையாவது பார்த்திருப்பேன். படத்தின் பாதி உரையாடல்களை இப்போதுகூட வாய்ப்பாடுபோல் சொல்ல முடியும்."பேர்ள் ஹார்பர்' -"முத்துத் துறைமுகம்' வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஓர் நிகழ்வைச் சுற்றி பின்னப்பட்ட காதல் கதை. இரண்டாம் உலகப்போரின் போக்கினையும், முடிவினையும் தீர்மானித்து அதன் தொடர்ச்சியாக இன்றைய உலகில் நாம் காணும் அரசியல் ஏற்பாடுகளுக் கெல்லாம் காரணமான நிகழ்வு அது. குறுக்கக் கூறினால் அமெரிக்காவை இரண்டாம் உலகப்போரில் இணையச் செய்த நிகழ்வு.பசிபிக் பெருங்கடல் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ஓகூ தீவில் அமைந்த திருகோணமலை போன்ற இயற்கையான ஆழ்கடல் துறைமுகம் பேர்ள் ஹார்பர். அமெரிக்காவின் பசிபிக் கடற்படை முற்றாக இங்குதான் நிலைகொண்டு நின்றது.பேரரசுப் பெரும்பசியில் நின்ற ஜப்பான், ஆசியா முழுவதையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டுமென 1940-வாக்கில் முடிவெடுக்கிறது. மஞ்சூரியா, சீனாவின் எஞ்சிய பகுதிகள், இன்றைய இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பின்ஸ் ஆகியவைதான் முதற்கட்ட இலக்கு. ஆனால் இவற்றை ஆக்கிரமிக்கும் பட்சத்தில் பேர்ள் ஹார் பரில் நின்றிருக்கும் அமெரிக்க கடற்படை மேற் சொன்ன நாடுகளில் நின்றிருந்த பிரித்தானிய - பிரெஞ்சு - டச்சு படைகளுக்கு உதவியாக விரைந்து வரக்கூடிய வாய்ப்பு தான் ஜப்பானை தயங்க வைத்தது. எனவே வியப்பூட்டும் தாக்குதல் ஒன்றின் மூலம் அமெரிக்காவின் பசிபிக் கடற்பிரிவினை முற்றாக அழிக்கும் முடிவினை 1941-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜப்பான் எடுத்தது.அதே ஆண்டு டிசம்பர் 7 ஞாயிறு காலை, ஆறு விமானம் தாங்கிக் கப்பல்கள், நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள், 408 விமானங்கள் காட்டுப்புலிகள்போல் பின்னிரவு இருளினூடே நகர்ந்து பேர்ள் ஹார்பர் மீது "வான் அலை' தாக்குதல் தொடங்கின. இரண்டு சுற்றுத் தாக்குதல்கள் முடிவுற்றபோது அமெரிக்காவின் பசிபிக் கடற்படை ஏறக்குறைய எல்லா கப்பல்களையும், 188 விமானங்களையும் இழந்திருந்தது. 2402 அமெரிக்க கடற்படையினர் கொல்லப்பட்டனர், 1282 பேர் படுகாயமுற்றனர்.காதல் கதையொன்றை வனைந்து வரலாற்றை அற்புதமாகத் திரைப்படத்தில் வடித்திருந்தார் புகழ்பெற்ற இயக்குநர் மைக்கேல் பே. சில இடங்களில் அழுத்தமாகப் பதிந்து செல்லும் சில உரையாடல்கள் மறக்க முடியா தன்மை கொண்டிருந்தன. கேட்டதுமே தமிழ்ஈழ விடுதலைப் போராட்டக் களத்திற்கும் ஏதோ ஒரு தொடர்புகொண்டிருப்பது போலவும் அவை உணர்வு தூவின.முதல் இரண்டு சுற்று, ""அலை அலையான'' தாக்குதல்களில் கப்பல்கள், விமானங்கள் அழிந்துபோக பேர்ள் ஹார்பரில் மிச்சமிருந்தது துறைமுகமும், தரைமைய ஆயுதங்களும், சில சிறு கப்பல்களும். அவற்றையும் தாக்கி அழிக்க மூன்றாம் சுற்றுத் தாக்குதலுக்கான விவாதத்தில் ஜப்பானிய தலைமைத் தளபதி கூறுவார் : ""முதல் இரு சுற்றிலும் "வியப்பூட்டும் தன்மை' நமக்கு தனித்துவமான சாதக நிலையை தந்தது. மூன்றாம் சுற்றில் அது இருக்காது. நமக்காக அவர்கள் காத்திருப்பார்கள். இருக்கிற வளங்களைக் கொண்டு திறமையாகத் திருப்பித் தாக்குவார்கள். நமது ராணுவக் கொள்கையின் ஆதார நாதமே "எதிரி யின் வளங்களை அழிப்பதைவிட நமது வளங்களை பாதுகாப்பதுதான்' என்று.தொலைக்காட்சி உரையாடல் நடக்கையிலே மனத்திரையில் தமிழ் ஈழக் களம் விரிந்தது. ஒரு கொரில்லா இயக்கமாய் இருந்தவரை விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய ராணுவ குணாம்சமாய் உலகத்தால் பாராட்டப்பட்டது. அவர்களின் ""வியப்பூட்டும் தன்மை'', ""ஆச்சரியப் படுத்தும்'' அற்புத அழகு. எங்கு, எப்போது, எப்படி புலிப்படை பாயும் என்று எவருக்கும் தெரியாது. ஆனையிறவை வென்று வெற்றிக்கொடி ஏற்றியது வரை அந்த வித்தகம் அவர்களிடம் இருந்தது. பேச்சு வார்த்தைகள் தொடங்கி புலிகள் மரபுரீதியான ராணுவ மனநிலைக்கு மாறியபின் "வியப்பூட்டும் தன்மை' அணி மாறியது. அதன்பின்னர் முள்ளிவாய்க்கால்வரை சிங்களப்படைகளே ஆச்சரியப்படுத்தின. பின்னோக் கிப் பார்க்கையில் யாழ்ப்பாண முற்றுகையைத் தொடர்ந்துகொண்டே பேச்சுவார்த்தைகளையும் செய்திருந்தால் சரியாயிருந்திருக்குமோ... என்றெல்லாம் எண்ணி மனம் கனத்தது.பிறிதொரு உரையாடலில், பேர்ள் ஹார்பர் இரண்டு சுற்றுத் தாக்குதல்களுக்குப் பின் நடக்கும் ராணுவ உயர்மட்டக் கூட்டத்தில் மாற்றுக் கருத் துடைய மூத்த தளபதி ஒருவர் கூறுவதாக இப்படி வரும் : ""பேர்ள் ஹார்பரில் அமெரிக்காவின் பசிபிக் கடற்பிரிவை நிர்மூலமாக்கிவிட்டதாக இப்போதைக்கு நாம் பெருமிதம் கொள்ளலாம். ஆனால் உண்மையில் நீண்ட உறக்கத்திலிருந்த ஒரு மலையாற்றல் கொண்ட விலங்கின் தன்மானத்தைச் சீண்டி உசுப்பி விட்டிருக்கிறோம். அதன் எதிர்விளைவுகளிலிருந்து நாம் தப்பிக்க முடியாது'' என்பார் அந்த மூத்த தளபதி. அவர் சொன்னதுதான் பின்னர் வரலாறா கியது. பேர்ள் ஹார்பர் தாக்குதல் நடக்கும்வரை அமெரிக்கா உலகப்போரில் இணையாமல் விலகியே நின்றது. பேர்ள் ஹார்பர் அமெரிக்காவை நேச அணியில் இணைத்து ஹிட்லர்-முசோலினி-ஜப்பான் அடங்கிய "அக்சிஸ்' அணியின் படுதோல்விக்கு வழி சமைத்தது.ராஜபக்சே கூட்டத்தின் முள்ளிவாய்க்கால் கொடூரங்களும் அப்படித்தான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வதம் செய்து நிர்மூலமாக்கிவிட்ட தாய் சிங்களம் கொக்கரித்துக் கொண்டாடுகிறது. ஆனால் மறுபுறம் உலகின் கண்களுக்குத் தெரியாமல் கோடானு கோடி தமிழ் உள்ளங்களில் நீதியுணர்வு தமிழின உணர்வாய் உருவெடுத்துக் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது பூமித்தாயின் அடி மடியில் ஆர்ப்பரிக்கும் எரிமலைக் குழம்பு போல. எரிமலைகள் உறங்குவதுமில்லை, சீறி வெடிக்காமல் நீர்த்துப்போவதுமில்லை. தோல்வியின் கணத்தில் பிறக்கிற தோழமை தமிழீழ விடுதலை மட்டுமல்லாது பரந்துபட்ட தமிழ் இன, மொழி, கலை, பண்பாட்டு மறுமலர்ச்சிக்கும் புதிய வழித்தடங்களை அமைக்கப் போகிறதென்பதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது. "பேர்ள் ஹார்பர்' திரைப்படத்தில் மனம் சிலிர்க்க வைத்த, மறக்க முடியாத பல உரையாடல் களில் முதன்மையானதாக என் மனதிற்குப் பட்டது இது. பயிற்சித் தளபதி சொல்வதாய் வரும். முன் னணி வீரர்கள் ஜப்பானிய குண்டுவீச்சில் கொல்லப் பட்ட நிலையில் தன்னார்வ தொண்டர்களுக்கு அவசர களப்பயிற்சி கொடுக்கையில் கூறுவதாக அமையும் வரி இது : ""உணர்வெழுச்சி பெறும் தன்னார்வத் தொண்டர் ஒருவரது பலத்திற்கு இணையாக உலகில் எந்த மரபு ரீதியான வீரனும் போர் செய்ய முடியாது.''இன்று உலகெங்கும் தமிழ் இளைஞர்களிடையே, கல்லூரி மாணவர்களிடையே நடந்துவரும் அமைதியான அதிசயமும் இதுதான். ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் குறிப்பாக இளைய தமிழர்களும், இதுவரை விளிம்பில் ஒதுங்கிநின்ற தமிழர்களும் உணர்வெழுச்சி பெற்ற தன்னார்வத் தமிழ் வீரர்களாய் தாங்களே களங்களை உருவாக்கி இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள். வியப்பான தோர் ஜனநாயகத் தன்மை தமிழ்த்தளத்தில் விடியலாவதை கண்ணுற முடிகிறது. கடந்த பத்து நாட்களில் நடந்த இரு பெரும் முன்நோக்கிய மாற்றங்களுக்கு இத்தகையோரது ஆரவாரமில்லா இடைவிடா உழைப்பே காரணம்.முதல் மாற்றம் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் நிகழ்ந்துள்ளது. சித்ரவதைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம், குழந்தைகளது உரிமைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம், அரசியல், குடியுரிமைகள் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தம் மூன்றையும் இலங்கை அரசு மீறியுள்ளது என குற்றம்சாட்டி யுள்ளது ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆய்வறிக்கை. இது வரை இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு வர்த்தகச் சலுகைகளை ரத்துசெய்ய பரிந்துரை முன்வைத்துள்ளது. இதனால் ஆண்டுக்கு 1000 லட்சம் டாலருக்கு மேல் இலங்கைக்கு வர்த்தக இழப்பு ஏற்படும். பலமுறை நாம் குறிப்பிட்டுள்ளதுபோல் அரசியல் அழுத்தங்களைவிட பொருளாதார அழுத்தங்கள்தான் பேரினவாதச் சிங்கள அரசை அடிபணிய வைக்கும்.இரண்டாவது மாற்றம் அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த வியாழனன்று அமெரிக்க காங்கிரஸ் அவைக்கு சமர்ப்பித்துள்ள 70 பக்க அறிக்கை. விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவம் இருதரப்பினர் மீதும் அந்த அறிக்கை குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறதென்றாலும் ""யுத்த குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணை அவ சியம்'' என்ற தமிழர்களின் கோரிக்கையை அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் வெளிப்படையான இந்த நிலைப்பாட்டினை முக்கியமான தாகவே நாம் கருதவேண்டியுள்ளது. இந்த மாற்றமும் அங்கு ஆர்ப்பாட்டங்களின்றி உறுதியாக இயங்கிவரும் தனி நபர்களாலும் தரம் நிறைந்த சிறு அமைப்புகளாலேயுமே நடந்திருக்கிறது.மேற்குலக நாடுகள் ராஜபக்சே கும்பலைச் சுற்றி படிப்படியாக நகர்த்திவரும் முற்றுகையிலிருந்து தப்பிக்க மீண்டும் இந்தியாவைப் பயன்படுத்தும் தந்திரோபாயத்தை இலங்கை கடை விரிக்கிறது. இலங்கைக்கு கடனுதவி வழங்க வேண்டுமென்று பன்னாட்டு நிதி நிறுவனத்திற்கு இந்தியா கொடுத்துள்ள அதிகாரபூர்வ அழுத்தம் ஒழுக்கக் கேடானதாகவே கண்டிக்கப்படவேண்டும். இன்றைய சூழலில் இந்தியா எடுக்கவேண்டிய குறைந்தபட்ச நிலைப்பாடுகள் எளிதானவை, தெளிவானவை, குழப்பமற்றவை.1. வதை முகாம்களில் மக்களை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது. அனைத்து மக்களும் விடுவிக்கப்பட வேண்டும்.2. ராஜபக்சே, கோத்தபய்யா, பொன்சேகா மூவரும் தமிழருக்கெதிராய் யுத்தக் குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள்.3. தமிழ் மக்களின் நீண்ட அரசியற் சிக்கலுக்கான நிரந்தர அரசியற் தீர்வுத் திட்டம் என்ன என்பதை பகிரங்கமாக முன்வைப்பது. இம்மூன்று விஷயங்களிலும் குறைந்தபட்ச கருத்தொருமை உருவாக்குவதே தமிழகத்தில் உணர்வாளர்களின் பணி. அதற்கும் மேலாய் தமிழரை அழித்து, சீனாவின் ஆதிக்கத்தை இலங்கைக்குள் வளர்த்து இந்தியாவின் பாதுகாப்பையே விலைபேசியுள்ள சிறு கும்பலையும் நாம் எதிர்கொள்ள வேண்டிய தேவையும் கடமையும் உள்ளது.அது...

சிக்கிய லேகிய சாமியாரின் ....














திருவண்ணாமலை காக்கிகள் டீம்... இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் அண்ணா மலையார் கோயில் இருக்கும் மலை மீது பரபரப்பாக சென்றது. அவர்களின் வாகனம்... சிவானந்த யோகி ஆசிரமத்தின் முன் சடன் பிரேக் போட்டு நின்றது. உள்ளே திபுதிபுவென இறங்கிச்சென்ற காக்கிகள்... ஆசிரமத்தில் இருந்த முருகன் சாமியாரைக் கைதுசெய்து ஜீப்பில் ஏற்ற... பரபரப்பானது திருவண்ணாமலை.திரண்ட அக்கம்பக்கவாசிகளிடமும் பக்தர்களிடமும் இன்ஸ்பெக்டர் ரமேஷ்... ""சாமியார் குடிலில் கஞ்சா இருப்பதா தகவல் வந்துச்சு. அதான் சோதனை செய்தோம். 400 கிராம் கஞ்சாவைக் கைப்பற் றிட்டோம். இதைத் தொடர்ந்துதான் இந்தக் கைது''’-என விளக்கம் தந்த காக்கிகள்... முருகன் சாமியாரைக் கொண்டுபோய் ரிமாண்ட் செய்தனர்.தகவல் அறிந்த நாம் சிவானந்த யோகியின் ஆசிரமத்திற்கு விரைந் தோம்.அங்கிருந்த பக்தர்கள்... ""பெரிய சாமிகள்தான் இருக்கார்'' என்றபடி சிவா னந்த குருவின் முன் நம்மைக் கொண்டுபோய் நிறுத்தினர். நெற்றியில் திருநீற்றுப்பட்டை.. கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை சகிதம்... தளர் வாய்ப் படுத்திருந்த 95 வயது முதியவரான சிவானந்தரிடம் முருகன் சாமியாரின் கைது குறித்துக் கேட்டபோது... கவலையாய்ப் பேச ஆரம்பித்தார்.""எனக்கு சொந்த ஊர் சேலம் பக்கத்தில் இருக்கும் அங்கனூர். நான் ஊர்த் தலைவரா 15 வருசம் இருந்தவன். 35 வருசத்துக்கு முன்ன திடீர்னு ஆன்மீக நாட்டம் வந்து... சொத்து பத்து சொந்த பந்தங்களைத் துறந்து திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தேன். இங்க சிவானந்த குருவா ஞானம் பெற்று இந்த ஆசிரமத்தையும் தொடங் கினேன். முதல் முதலா ஒரு வெள்ளைக்காரர் என்னை குருவா ஏத்துக்கிட்டு... எனக்கு சிஷ்யனா இருந்தார். அன்பான மனுசன். ஆனா அவருக்கும் இங்க இருந்த ஒரு பொண்ணுக்கும் தவறான உறவு ஏற்பட... அவரை யாரோ அடிச்சிக் கொன்னுட்டாங்க.அடுத்ததா காசியில் வேதம் கத்துக்கிட்ட கவுதமர் என்னிடம் சிஷ்யனா இருந்தார். வேதம் படிச்ச அவரும் பெண் சபலத்தில் சிக்கினார். டீக்கடை வைத்திருந்த ஒரு பொண்ணோட அவருக்கு தொடர்பு உண்டாக... அந்தப் பிரச்சினையில் அவரும் கொல்லப் பட்டுட்டார். கவுதமருக்குப் பின் 6 வருசமா இங்க வந்து போய்க் கிட்டிருந்த முருகன்... எனக்கு சிஷ்யனா வந்து சேர்ந்தார். எனது வெளிநாட்டு பக்தர்கள் அனுப்பற பணம் காசையெல்லாம் நான் முருகன் சாமிகிட்ட கொடுத்துடுவேன். அதை அவர் வங்கியில போட்டு வச்சிருக்கார். அதே போல் என் இறுதிச் சடங்குகளுக்காகவும் 24 ஆயிரம் ரூபாயை அவர்ட்ட கொடுத்து வச்சிருக் கேன். எனக்கு பணத்தேவைகளே இல்லை. நான் நம்பிய இந்த முருகனும் இப்ப பெண் சபலத்தில் சிக்கி... அசிங்கப்பட ஆரம்பிச்சிருக்கார். மூணு நாளைக்கு முன்னதான் அவரைக் கூப்பிட்டு... ஏதோ பொம்பளைப் பிரச்சினையில் சிக்கியிருக் கியாமேன்னு கேட்டேன். அதுக்கு ஆமாம் சாமின்னு சொன்னார். சாமியாரா மாறியபின்... இப்படிப்பட்ட சுகங்களைத் தேடலாமா? உடம்பின் இச்சைகளுக்கு நாம அடிமையாகலாமான்னு கேட்டேன். பதில் சொல்லாம இருந்தார். துறவு வாழ்க்கையில் உறவு வாழ்க்கை கூடாது. பெண் சபலமும் மண் சபலமும் பொன் சபலமும் மனிதனைக் கேவலப்படுத்திடும். என்ன நடந்துச்சின்னு தெரியலை... திடீர்னு போலீஸ் வந்து முருகன் கஞ்சா வச்சிருந்ததா கைது பண்ணிட்டு போயிருக்கு. இந்த ஆசிரமத்தை புனிதமா வச்சிருந்தேன். இப்ப என்னென்னவோ நடக்குது. என் கடைசிக் காலத்தில் இப்படிப்பட்ட சங்கடங்களையா நான் சந்திக்கணும்? ஈஸ்வரா...''’என்றார் உருக்கமாய்.அருகில் இருந்த சிவானந்தரின் பக்தர்கள் ""இங்கே கஞ்சா வர்றதுக்கு வாய்ப்பே இல்லை. முருகன் சாமிக்கும் கஞ்சாப் பழக்கமெல்லாம் கிடையாது. இந்த வழக்கின் பின்னணியில் ஏதோ வில்லங்க விவகாரம் இருக்கு''’என்றனர் உறுதியான குரலில். நாம் மீண்டும் காவல் நிலையம் வந்து காக்கிகள் சிலரிடம் விசாரித்த போது முருகன் சாமியாரின் ஏடாகூட விவகாரத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்கள். ’""அந்த சாமியார் சாதாரண ஆள் இல்லை. பொம்பளைகளை வசியம் பண்றதில் கில்லாடி. மலைமேல் பூஜை பண்ணும் ஒரு குருக்களின் மனைவியை எப்படியோ வசியம் பண்ணிட்டான். அந்த லேடிக்கு நான்கு பிள்ளைகள் இருந்தும்... எல்லாவற்றையும் மறந்து சாமியாரே கதின்னு இருந்திருக்கா. கணவன்காரன் வெளியே போனதும் சாமியார் அவங்க வீட்டுக்கு வந்துடுவான். ஒருநாள் திடீர்னு வீட்டுக்கு வந்த குருக்கள்... சாமியாரையும் தன் மனைவியையும் பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த் திருக்கார். திகைச்சுப்போனவர் மனைவியை அடிச்சிருக்கார். இருந் தும் அந்த லேடி.. சாமியாரோடதான் வாழ்வேன்னு அடம்பிடிச்சிருக்கா. இந்த விவகாரம் எங்க கவனத்துக்கு வந்ததும், ரெண்டுபேரையும் கூப்பிட்டுக் கண்டிச்சோம். ஆனா அந்த லேடியும் சாமியாரும்... ""நாங்க சேர்ந்துதான் இருப்போம்''னு பிடிவாதம் பிடிச்சாங்க. அப்புறம் வேறவழி இல்லாம சாமியாரைக் கஞ்சா கேஸ் போட்டு அரஸ்ட் பண்ணிட்டோம். அந்த சாமியாரை தீவிரமா விசாரிச்சப்ப... கிறுகிறுக்க வைக்கும் வாக்குமூலத்தைக் கொடுத்திருக் கான்'' என்றார்கள் ஆச்சரியம் விலகாமல்.காக்கிகளிடம் அவன் கொடுத்த வாக்குமூலத் தில்...“""எனக்கு பெண்ணாசை அதிகம். என்னிடம் ஆசி வாங்க வரும் பெண் பக்தைகளை தனியா உட்காரவச்சி... "உனக்கு இவ்வளவு அழகு இருந்தும்... உன் வீட்டுக்காரன் ஒண்ணும் இல்லாத பயலா இருக்கானே. அவனால் உனக்கு பூரண திருப்தியைக் கொடுக்க முடியாதே'ன்னு சொல் வேன். பெரும்பாலான பொண்ணுங்க "ஆமாம்'னு சொல்லும். உடனே...ஒரு லேகியத்தைக் கொடுத்து... இதை படுக்கைக் குப் போகும்போது நீ சாப்பிட்டா... உச்ச இன்பத்தில் திளைக் கலாம்னு சொல்லி அனுப்புவேன். அடுத்ததடவை வரும் போது அதுபத்தி விசாரிக்கும்போதே... கதை வேறமாதிரி ஆரம்பிச்சிடும். எங்க பகுதியிலேயே 5 பெண்களோட எனக்கு தொடர்பு உண்டு. அவங்க அத்தனை பேரும்... எனக்காக புருஷன்மாரைக்கூட தூக்கி எறிய ரெடியா இருப்பாங்க'' என் றெல்லாம் கண்றாவி சமாச்சாரங்களை குஷியாகச் சொன்ன வன்... அவனது பூர்வீகம், குடும்பம், சொந்த ஊர் பற்றியெல் லாம் கேட்டால் மட்டும் வாயைத் திறக்க மறுக்கிறானாம்.இந்த கிளுகிளு சாமியாரின் கைரேகைகளை சேகரித்து... இவன் வேறு ஏதாவது குற்றப் பின்னணியில் சம்பந்தப்பட்டவனா? என்றும் போலீஸ் அலசி ஆராய்ந்துகொண்டிருக்கிறது.சாமியார்... ஆசிரமம் என்றாலே... பெண் விவகாரங் களுக்கு பஞ்சம் இருக்காது போலிருக்கிறது.

ஜெயலட்சுமியாகும் செல்வலட்சுமி!


மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு அனுப்பியிருக் கும் அந்தப் புகார் கடிதத்தில், ""என் குடும்பத்தை பழிவாங்கும் நோக்கத்தில் போலீசார் மதுகடத்தல் வழக்குப் போட்டிருப்பதுடன், விசாரணை என்ற பெயரில் என் மனைவியை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று கற்பழித்துள்ளனர்'' எனத் தெரிவித்து அதிர வைத்திருக்கிறார் அரசு விரைவு போக்குவரத்துக்கழக டிரைவராகப் பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்ட ரவிச்சந்திரன்.கடந்த 96-2001 தி.மு.க ஆட்சியின்போது அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜிடம் டிரைவராக இருந்த ரவிச் சந்திரன், 2006-ல் தி.மு.க ஆட்சி வந்தபிறகு, அமைச்சர் தமிழரசி யின் கார் டிரைவரானார். அவரது மனைவி, செல்வ லட்சுமி. கலப்புத் திருமணம். மதுரைப் பகுதியில் கட்சி நிகழ்ச்சிகளில் முன்னிலைப் படுத்திக்கொள்வார் ரவிச் சந்திரன். தன் வீட்டில் நடந்த காதணி விழாவை தடபுடலாக போஸ்டர் ஒட்டி நடத்தியவர். அமைச்சர் தமிழரசி யிடமிருந்து மது ரை மாநகராட்சி மண்டலத் தலை வர் இசக்கிமுத்து வின் டிரைவ ரானார் ரவிச் சந்திரன். ஆனால், ரெகார்டுபடி, அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் திருவனந்தபுரம் டெப்போ வில்தான் வேலை.""மூணு வருசமாவே எங்க வாழ்க்கை நிம்மதியா இல்லீங்க'' என கண்ணீரைத் துடைத்தபடி பேசத் தொடங்கினார் ரவிச்சந்திரனின் மனைவி செல்வலட்சுமி. ""என் பக்கத்துவீட்டு ஜெயஸ்ரீ காலேஜ் புரபசர். அவருக்கும் ஊமச்சிக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைக்கதிரவனுக்கும் தொடர்பிருந்தது. இதில் 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஜெயஸ்ரீயிடம் வாங்கியிருந்தார் இன்ஸ்பெக்டர். அதை திருப்பிக்கேட்டப்ப தகராறு வந்திருக்குது. என்கிட்டே ஜெயஸ்ரீ சொல்ல, என் ஆலோசனைப்படி அப்போதைய எஸ்.பி அன்புகிட்டே புகார் கொடுத்தார் ஜெயஸ்ரீ. கலைக்கதிரவனை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. நான்தான் சஸ்பெண்ட்டுக்கு காரணம்னு நினைச்சு எங்க குடும்பத்தையே பழிவாங்க ஆரம்பிச் சிட்டார் கலைக்கதிரவன். இதிலே என்ன கொடு மைன்னா, இன்ஸ்பெக்டரும் ஜெயஸ்ரீயும் மறுபடியும் நெருக்கமாயிட்டாங்க.அங்கே இங்கே ஆளைப் பிடிச்சி, மேலூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டராயிட்டாரு கலைக்கதிரவன். 2006 அக்டோபர் 3-ந் தேதி யன்னைக்கு என் புருசன் மேலே மது கடத்தல் வழக்குப்போட்டு போலீஸ்காரங்க இழுத்துட்டுப் போயிட்டாங்க. திரு வனந்தபுரத்திலே இருந்ததால, அங்கி ருந்து வரும்போது கலைக்கதிரவன் உள்ளிட்ட போ லீஸ்காரங்க கேட்குற சரக்கை வாங்கிட்டு வருவாராம். உதவியா செய்யப்போனதை வச்சே அவர் மேலே கேஸ் போட்டுட்டாங்க. அதோடு, என்னையும் நைட்டோட நைட்டா ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போயிட் டாங்க. போலீஸ்காரர் பால்ராஜ், வீரணன், பிணவேந்தன் மூணு பேரும் விசா ரணைங்கிற பேரில் எனக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தாங்க. நான் கதறியும் விடவே யில்லை. அதிகாரிகள் சொல்ற மாதிரி அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக் கலைன்னா உன் புருசனை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்னுடு வோம்னு சொல்லி மிரட்டியே அவங்க தேவையைத் தீர்த்துக்கிட்டாங்க. மது கடத்தியதா பொய் வழக்குப் போட்டு என்னை திருச்சி ஜெயிலிலும் அவரை மதுரையிலும் அடைச்சாங்க. ஆதார மில்லாததால 15 நாளில் விடுதலை ஆயிட்டோம். அரசு ஊழியரான என் புருசன் ஜெயிலுக்குப் போன செய்தி பேப்பரில் வந்ததால, அவரை டிஸ்மிஸ் பண் ணிட்டாங்க. டிரான்ஸ்போர்ட் எம்.டி, அந்த இன்ஸ்பெக்டர் பேச்சைக் கேட்டு நடந்துக்கிட்டாரு. அதுக்கப்புறமும் போலீசால் அடிக்கடி டார்ச்சர்தான். என் புருசனை கைது செய்து அழைச் சிட்டுப்போயிடுவாங்க. நடுராத்திரியில எங்க வீட்டு சுவரேறி குதிச்சு உள்ளே வந்து என்னையும் ஸ்டேஷனுக்கு தூக் கிட்டுப்போய் அவங்க இஷ்டத்துக்கு டார்ச்சர் பண்ணுவாங்க. பெரிய அதிகாரிக கூப்பிட்டா உடனே வரணும். இல்லேன்னா பொய் கேசுதான்னு ஓப்பனா மிரட்டுவாங்க.எங்க வீட்டிலே உள்ள பொருள்களையெல்லாம் அள்ளிக் கிட்டுப் போயிடுவாங்க. என் புருசன் மேலே குண்டாஸ் போட்டாங்க. என்னையும் திரும்ப ஜெயிலில் அடைச்சாங்க. இதையெல்லாம் முதல்வர் அலுவலகம் வரை புகாரா அனுப்பி னோம். மனிதஉரிமை ஆணையம், டி.ஜி.பி. அலுவலகம் எல்லா இடத்துக்கும் புகார் அனுப்பியும் போலீஸ் மேலே நடவடிக்கை இல்லை. நான் ஜெயிலில் இருந் தப்ப, சிவகாசி ஜெயலட்சுமியும் அதே ஜெயிலில் இருந்தாங்க. என்கிட்டே நல்ல தோழியா பழகினாங்க. இனி நான் நிம்மதியா வாழணும்னா ஜெயலட்சுமி மாதிரி போலீசை எதிர்த்துப் போராட ணும்னு முடிவு பண்ணிட்டேன்'' என்றார் அழுத்தமாக.அவரது கணவர் ரவிச்சந்திரன் நம்மிடம், ""நட்புக்கு சரக்கு வாங்கிக் கொடுத்ததோட வினை. எங்க குடும்ப மானமும் போய், என் மனைவியோட கற்பும் பறி போயிடிச்சி. இதை சும்மாவிடமாட் டேன். ஜெயலட்சுமி பாணியில் அம்பலப் படுத்தியே தீருவோம். முதல்வருக்கும் அழகிரி யண்ணனுக்கும் புகார் அனுப்பியிருக்கோம்'' என்றார். பகீர் குற்றச்சாட்டுகள் குறித்து இன்ஸ் பெக்டர் கலைக்கதிரவனிடம் கேட்டோம். ""ரவிச்சந்திரன் மது கடத்தியது உண்மைதான். அது சம்பந்தமா ஊமச்சிக்குளம் ஸ்டேஷனில் வழக்கு இருக்குது. மனைவியை வச்சும் மது கடத்துவதாலதான் அவங்க மேலேயும் வழக்குப் போட்டோம். எல்லாவற்றையும் ஆதாரத்தோடு நிரூபிப்போம்'' என்றார். மதுரை போலீஸ் வட்டாரமோ, ""மந்திரி டிரைவராக இருந்தப்பவே மது கடத்தியதாலதான் ரவிச்சந்திரனை மாநக ராட்சிக்குத் துரத்தினாங்க. வெளிமாநில சரக் கோடு, போலி லேபிளில் சரக்கு தயாரிச்சும் விற்கிறாங்க. இதையெல்லாம் மறைக்கத்தான் கற்பழிப்பு, செக்ஸ் கொடுமைன்னு திசை திருப்புறாங்க'' என்கிறது.சிவகாசி ஜெயலட்சுமி வழியில் செயல் படுவேன் என்கிற செல்வலட்சுமி, சிவகாசி பட்டாசா, புஸ்வாணமா? பரபரப்பாகி யிருக்கிறது மதுரை

பூவை கசக்கி எறிந்த சண்டாளர்கள்!


தீபாவளியை உச்சபட்ச சந்தோஷத்தோடு கொண்டாட விரும்பிய தங்கராசு, சூர்யா, தமிழ் ஆகிய மூவர் டீம்... தங்கள் மனையேரிப்பட்டிக்கு அருகிலேயே இருக்கும் செங்கிப்பட்டி டாஸ்மாக் கடைக்குப் போனது. மூச்சுமுட்டக் குடித்தது. புத்தியும் உடம்பும் தடுமாறிய நிலையில்... "மாப்ளே வாங்கடா போலாம்' என்றபடி சாலையைக் குறுக்கும் நெடுக்குமாய் அளந்தபடியே மனையேரிப்பட்டியை நோக்கி நடந்தார்கள்.நடக்க இருக்கும் விபரீதம் புரியாத 9 வயதுச் சிறுமி பத்மாவதி... தன் அம்மா செல்வராணியிடம் ஓடிப்போய் “""இந்த சரவெடியை வெடிக்க வாம்மா?''’என ஆசையாகக் கேட்டு அடம்பிடிக்க.....சமயபுரம் கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த செல்வராணி...’’""அதெல்லாம் வெடிக்க வேணாம். பக்கத்து வீட்டு அக்கா வெல்லாம் கிளம்பிட்டாங்க. கோயிலுக்குப் போகணும். ரெடியா இரு''’என்றர் கறாராக. வீட்டு வாசலில் வெடித்தால் அம்மா திட்டுவாரே என நினைத்த சிறுமி பத்மாவதி... வெடியை எடுத்துகொண்டு... "ஜல்ஜல்' என கொலுசு சிணுங்க... வீட்டைத் தாண்டி கொஞ்சதூரம் துள்ளலாய் நடந்தாள். அலங்காரக் கவிதையாய் எதிரில் வந்துகொண்டிருந்த சிறுமியைக் கண்ட அந்த மூன்று 18 வயது இளந்தாரிப் பயல்களும்... வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். புத்தி ஒதுங்கி நிற்க... அவர்களது உள்ளே இருந்த மிருகம் விழித்துக்கொண்டது.வெறிச்சோடிய வீதி அவர்களுக்கு தைரியத்தைக் கொடுத்தது. ""பாப்பா வெடி வெடிக்கப்போறியா?''’என அவர்களில் ஒருவன் கேட்க... ""ஆமாண்ணே...’’என்றது சூதுவாது தெரியாத அந்தக் குறும்புக் கவிதை. “""வா... அந்தப் பக்கமா போய் வெடிக்கலாம்''’என அவர் கள் சிறுமி பத்மாவதியை நெருங்கிச் சூழ்ந்துகொண்டார்கள். பிறகு?நெஞ்சுவலிக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடுவந்திருந்த அம்மா செல்வராணி... கண்ணீர் வசிய சொல்கிறார்... ""கோயிலுக்குக் கிளம்பிய நான்... எங்க பத்மாவைத் தேடிப்பார்த்துட்டு, சரி... வெடி வெடிக்கிற ஜோரில் இருக்கான்னு விட்டுட்டுப் போய்ட்டேன். பாதிவழியில் எம்பிள்ளையக் காணேம்னு தகவல்வர அடிச்சிப் பிடிச்சிக்கிட்டு ஓடிவந்தேன். எங்கெங்கேயோ தேடியும் கிடைக்கலை. அப்புறம்தான் போலீஸுக்குப் போனோம். அதுக்குள்ள எம் புள்ளையை...''’என்றவர் பேச முடியாமல் மூர்ச்சையானார். என்ன நடந்தது என்பதை தஞ்சை மாவட்ட எஸ்.பி. செந்தில்வேலனே விளக்கினார். ""அவங்க வீட்டில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஒரு கிணத்தில் சிறுமியின் சடலத்தைக் கண்டு பிடிச்சோம். சடலத்தைப் பார்க்கும் போதே... பாலியல் துன்புறுத்தலுக்கு சிறுமி ஆளாக்கப்பட்டிருக்கிறாள் என்பது தெரிந்தது. அந்த கிராமத்தில் இருக்கும் அத்தனை இளவட்டப் பசங்களையும் தூக்கிவந்து விசாரிச்சப்பதான்... தங்கராசு, சூர்யா, தமிழ் என்ற மூவர் டீம்... போதை வெறியில் சிறுமியை தூக்கிட்டுப்போய்... பலாத் காரம் பண்ணியதும்... அதில் மூச்சுத் திணறி சிறுமி இறந்ததும் தெரிய வந்தது. குற்றவாளிகளை ரிமாண்டு பண்ணிட்டோம்''’என்றார்.குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். இந்த சண்டாளர் களின் குடி... ஒரு சிறுமியின் உயிரையும் அவளது குடும்ப நிம்மதியையும் ஒருசேர குடித்திருக்கிறது.

தி.மு.க. மத்திய மந்திரி அமைச்சகத்தில் சி.பி.ஐ. பாய்ச்சல்! ஏன்? எதற்கு?


""ஹலோ தலைவரே... டெல்லியில் நடந்த சி.பி.ஐ. ரெய்டு, தமிழகத்தில் கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும்ங்கிற பரபரப்போடு அரசியல் நோக்கர்களிடம் விவாதம் நடந்துக் கிட்டிருக்குது.''""தொலைத் தொடர்புத்துறை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நடந்த ரெய்டு பற்றித்தானே சொல்றே?''""ஆமாங்க தலைவரே... மகாராஷ்ட்ரா, ஹரியானா, அருணாச்சலப் பிரதேசம் இந்த 3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மூன்றிலும் காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்ற செய்திகள் பரவிக்கிட்டிருந்த அதே நேரத் தில்தான் டெல்லியில் ரெய்டு நடந்துக் கிட்டிருந்தது. நாம ஏற்கனவே பலமுறை விளக்கமா பேசியிருக்கிற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்பந்தமான புகார்களையடுத்துதான் சி.பி.ஐ.தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சோதனை நடந்திருக்குது. 2ஜி ஸ்பெக்டரம் எனப்படும் இரண்டாம் தலை முறை அலைக்கற்றைகளை யுனிடெக், ஸ்வான் என்ற 2 கம்பெனிகளுக்கு மத்திய அமைச்சர் ஆ.ராசா பொறுப்பு வகிக்கும் தொலைத்தொடர்பு துறை குறைந்த விலையில் கொடுத்ததாகவும், அதை இந்த நிறுவனங்கள், வெளி நாட்டுக் கம்பெனிகளுக்கு அதிக விலைக்கு விற்றுவிட்டதால், இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம்ங்கிறதும்தான் குற்றச்சாட்டு.'
'""இதைத்தான் எம்.பி. எலெக்ஷன் சமயத்திலேயே எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ததே... அப்புறம் நாடாளு மன்றத்திலும் இதே பிரச்சினையைக் கிளப்பியபோதும், ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டினால் எந்த நட்டமும் இல்லைன்னு, தொடர்ந்து வருமானம் கிடைக்கிற விதத்தில்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி ஒதுக்கப்பட்டிருக்குதுன்னு எதிரிகளே பாராட்டுறவிதத்தில் பதில் கொடுத்திருந்தாரே ஆ.ராசா....''""19-ந் தேதி பிரதமர் தலைமையில் கேபினட் மீட்டிங் நடந்தது. அதில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டிருக்கு. யுனிடெக் கம்பெனி 1200கோடி ரூபாய்க்கு ஸ்பெக்ட்ரத்தை வாங்கி, டெலிநாக் என்கிற வெளிநாட்டு கம்பெனிக்கு 6000 கோடிக்கு விற்றது தொடர் பான ஆலோ சனையின்போது, வெளிநாட்டு கம்பெனி இதை வாங்கியிருப்பதால், அதன் முதலீடு நம் நாட்டில் செய்யப்படும். இது நமக்கு லாபம் தான்னு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சொல்லி யிருக்கிறார். இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பிரதமர் தலைமையில் கூடிய கேபினட்டும் க்ளியர் பண்ணிடிச்சி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வாங்கிய வெளிநாட்டு கம்பெனிக்கு பாகிஸ்தானிலும் நெட் வொர்க் இருக்குது. இதனால, நம்நாட்டு ரகசியங்கள் அங்கே போக வாய்ப் பிருக்குதாங்கிறதையும் ஆய்வு செய்துதான் இந்த முடிவை எடுத்திருக்காங்க. 19-ந் தேதியே க்ளியர் பண்ணப்பட்ட விவ காரத்திற்குத்தான், 21-ந் தேதியன்னைக்கு சி.பி.ஐ. வழக்குப் பதிவு பண்ணியிருக்குது. அதாவது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 22 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு என சொல்லப்படுகிறதுன்னு வழக்கு. இதன்பேரில்தான் 22-ந் தேதி ரெய்டு நடந்தது.''""தன் தலைமையிலான கேபினட் க்ளியர் பண்ணிய விஷயம் தொடர்பா, தன் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ. ரெய்டு நடத்தியதை பிரதமர் எப்படி அனுமதித்தார்?''""
22-ந் தேதியன்னைக்கு டெலிகாம் அலுவலகமான சஞ்சார் பவனில் சி.பி.ஐ. ரெய்டு நடத்திக்கிட்டிருந்த தகவலை, மதியநேர ஓய்வுக்குப் பிறகு கலைஞரின் கவனத்துக்கு இங்கே உள்ளவங்க கொண்டு போயிருக்காங்க. பிரதமர் அனுமதியில்லாமல் சி.பி.ஐ. எப்படி செயல்படும்னு யோசித்த கலைஞர், உடனே அமைச்சர் ஆ.ராசா விடம் பேசியிருக்கிறார். பிரதமரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்கும்படி சொல்ல... ஆ.ராசாவும் பிரதமரை சந்தித்து, கேபினட் முடிவை நினைவூட்டி, அதன்பிறகு இப்படியொரு நடவடிக்கை மேற்கொள்ள என்ன காரணம்னு நேரடியாகவே கேட்டிருக்கிறார். தனக்குத் தெரியாமலேயே இந்த ரெய்டு நடந்திருப்பதா சொன்ன பிரதமர், இதை உங்க லீடர்கிட்டேயும் சொல்லுங்க. ரெய்டு நடத்தியது எந்த அடிப்படையிலேன்னு நானும் விசாரிக்கிறேன்னு சொல்லியிருக்கிறார். மறுநாள், டி.ஆர்.பாலுவும் பிரதமரை சந்தித்து விசாரிக்க, அப்பவும் தனக்குத் தெரியாமல் இது நடந்திருப்பதைச் சொன்ன பிரதமர், தனக்குப் பக்கத்திலிருந்த அதிகாரிகள் கிட்டே, ஏன் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப் பட்டதுன்னு எனக்கு ரிப்போர்ட் கொடுங்கன்னு சொல்லியிருக்கிறார்''.""பிரதமர் கட்டுப்பாட்டில் உள்ள துறையில் அவரோட அனுமதியில்லாமல் அவருக்கே தெரி யாமல் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுதுன்னா, அதற்கு பலமான பின்னணி இருக்கணுமே?


''""நிறைய பின்னணித் தகவல்களைச் சொல் றாங்க தலைவரே.. .. காங்கிரசை சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி கொடுத்ததைக் கண்டித்து மதுரையில் கலைஞர் பங்கேற்கும் தி.மு.க பொதுக்கூட்டம் பற்றிய அறிவிப்பு வந்தது. ராகுல்காந்திக்கு நெருக்க மானவரான ஜெய்ராம்ரமேஷ், இதை ராகுல் கவனத்துக்குக் கொண்டுபோனதால, தி.மு.க.வுக்கு செக் வைக்கும் விதத்தில், ராகுல் இன்ஸ்ட்ரக் ஷன்படி சி.பி.ஐ. நடவடிக்கை தொடங்கி யிருக்குதுங்கிறது ஒரு பின்னணி.""21-ந் தேதி காலையிலேயே சி.பி.ஐ. வழக்குப் பதிவு பண்ணிடிச்சி. 21-ந் தேதி நைட்டுதான் கண்டன கூட்டம் பற்றிய அறிவிப்பு வந்தது. பின்னாடி அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு முன்னாடியே எப்படி செக் வைப் பாங்க?''""இன்னொரு தகவல் என்ன சொல்றாங்கன்னா, தமிழகத்துக்கு ராகுல் வந்தப்ப அவரை சந்திக்க நடிகர் விஜய் திட்டமிட்டிருந்தாராம். சந்திக்கக் கூடாதுன்னு ஒரு தரப்பு மிரட்டியதாகவும், அதனாலதான் சந்திப்பு நடக்கலைன்னும் ராகுல்காந்திக்கே தகவல் பாஸ் பண்ணிட்டாராம் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய் விவகாரத் துக்காக ராகுல் எடுத்த ஆக்ஷன்தான் இதுன்னும் ஒரு தகவல்.''""சீரியஸான மேட்டரை பேசிக் கிட்டிருக்கோம். சின்னபுள்ளத்தனமான காரணத்தை சொல்றியே?''""டெல்லி உயர்மட்டத்திலிருந்து கிடைச்ச 2 காரணங்களை சொல்றேங்க தலைவரே... சென்ட்ரல் விஜிலென்ஸ் பரிந்துரைப்படிதான் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்குது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பா சுப்ரீம்கோர்ட்டில் ஒரு பொதுநல மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருக்குது. இது சம்பந்தமா கோர்ட் கேள்வி கேட்டால், ஆக்ஷன் எடுத்துக்கிட்டிருக்கிறோம்னு பதில் சொல்வதற்காகத்தான் சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுன்னு ஒரு காரணம் சொல்றாங்க.''""இன்னொரு காரணம்?'' ""3 மாநில சட்டமன்றத் தேர்தல் தொடர்பா சோனியாவும் ராகுலும் எக்சிட் போல் எடுக்கச் சொல்லியிருந்திருக் காங்க. அதில், மகாராஷ்ட்ராவில் காங்கிரசும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் சம அளவிலான இடங்களில் ஜெயிக்கும்னு ரிசல்ட் கிடைத்திருந்ததாம். இப்படி ஒரு ரிசல்ட் வந்தால், இரண்டு கட்சிகளுக்கும் தலா இரண்டரை வருஷம்னு முதல்வர் பதவியை பங்குபோடும் திட்டத்தை சரத்பவார் முன்வைப்பார்னு யோசித்திருக்கு காங்கிரஸ் மேலிடம். இதற்கு ஏதாவது ஒரு வகையில் செக் வைக்கணும்னு முடிவெடுத்திருக்காங்க. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை அரசிடமிருந்து வாங்கிய கம்பெனிகளில் ஒன்றான ஸ்வான் நிறுவனம், சரத்பவாருடையது. ரியல் எஸ்டேட் நிறுவனமான ஸ்வான், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸை எப்படி வாங்கியது என் பதை கண்டுபிடிக்கப் போவ தாக எலெக்ஷன் ரிசல்ட் டுக்கு முதல்நாளான 21-ந் தேதியன்னைக்கு வழக்குப் பதிவு பண்ணி, ரிசல்ட் வந்துக்கிட்டிருந்த நாளில் ரெய்டை நடத்தி, சரத் பவாருக்கு செக் வைத்த தோடு, தி.மு.கவை மையப் படுத்தி எதிர்க்கட்சிகள் பல மாதங்களா இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைக் கிளறிக் கொண்டிருப்பதால் தி.மு.க.வுக் கும் ஒரு செக் வைப்போம்னு வெற்றிக்களிப்பில் இருக்கும் காங்கிரஸ் மேலிடம் செயல்பட்டிருக்குது.
''""ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!''""
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள பா.ம.க, சி.பி.எம், சி.பி.ஐ. கட்சிகள் முடிவு செய்திருக்குது. இந்தக் கட்சிகளெல்லாம் தி.மு.க.வுடன் நெருங்குவதைப் பார்த்தால் 2011-லும் 2006 சட்டமன்றத் தேர்தல் போலவே கூட்டணி அமையும்போலத் தெரியுது. காங்கிரஸ் சைடிலிருந்து வெளிப்படும் ராங் சிக்னல்கள்தான் புதியகுழப்பத்தை உண்டாக்குது.''""தலைவரே... ... செம்மொழி மாநாட்டில் ஏன் கலந்து கொள்ளணும்னும், ஏன் கலந்துகொள்ளக் கூடாதுன்னும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் டிஸ்கஷன் நடந்திருக்குது. இதில் சி.பி.ஐ. தரப்பில் நடந்த விவாதத்தின்போது, இப்ப உள்ள நிலைமையில் செம்மொழி மாநாடு தேவையா? தள்ளி வைக்கலாமேன்னு கருத்துகள் வந்திருக்குது. சி.பி.எம். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடிவெடுத்துவிட்ட நிலையில்... நாமும் கலந்துக்குவோம்னும், இலங்கைத் தமிழர் பிரச்சனை உள்ளிட்ட தமிழர் பிரச்சனையை வலியுறுத்துவோம்னு சி.பி.எம். தரப்பு தீர்மானித்திருக்குது. அதோடு ஜெ. தரப்பில் நம்மை விரும்பலைங்கிறது அவங்க நடவடிக்கைகளி லிருந்தே தெரியுதுன்னும், தமிழுக்காக நடக்கும் மாநாட்டில் கலந்துகொள்வது சரிதான்னும் இரு கட்சியினரும் முடிவு எடுத்திருக்காங்களாம்.அதே நேரத்தில், ரொம்ப நாளா அப்பாயிண்ட் மென்ட்டுக்காக காத்திருந்த வைகோவுக்கு கார்டனில் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தது. வியாழக்கிழமையன்னைக்கு ஜெ.வை சந்தித்த வைகோ, முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பா கூட்டுப் போராட்டம் நடத்துவது சம்பந்தமாகவும் அரசியல் சூழல்கள் பற்றியும் பேசி யிருக்கிறார். எம்.பி. யாகியிருந்தா ஈழப் பிரச்சினையில் இன் னும் வேகமா செயல் பட்டிருப்பேன்னு சொல்லியிருக்கிறார்.


''""வைகோவைப் பற்றி தகவல் சொன்ன தால நானும் ஒரு விஷயத்தை சொல்றேன். போனமுறை நம்ம நக்கீரனில், குருவிகுளம் அம்மன் கோயி லில் வைகோ மனைவி விபூதி வாங்க மறுத்ததால், தாயகம் முன்பாக விபூதி கொடுக்கும் போராட்டம் நடத்தப்போவதா இந்து மக்கள் கட்சி அறிவித் திருப்பதை வெளியிட்டிருந் தாங்க. அம்மன் கோயிலில் அந்த மாதிரி ஒரு சம்பவமே நடக்க லைன்னு வைகோ மறுப்பதோடு, எங்க மூதாதையர் வழிபட்ட கோயில்களுக்கு பாரம்பரியமா செய்ய வேண்டியதை செய்துகொண்டிருக் கிறோம். என் அம்மாவும், மருமகளும் வீட்டிலேயே சாமி கும்பிடுவார்கள். கட்சி அலுவலகமான தாயகத்துக்கு பக்கத்தில் உள்ள கோயிலுக்கும் வெள்ளை அடித்துத் தந்திருக்கிறோம்னு சொல்றார்.''""அ.தி.மு.க பொதுக்குழுவில் என்ன விசேஷம்?''""முல்லைப்பெரியாறு, இலங்கைத் தமிழர்கள் விவகாரம், செம்மொழி மாநாடு, விலைவாசி உயர்வு இது எல்லாவற்றிலும் கலைஞரை அட்டாக் பண்ணி தீர்மானம் நிறைவேற்றப்படுமாம். அதோடு கட்சி நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களும் இருக்குமாம். 8 மா.செ.க்கள் மாற்றப்படுவதோடு, பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீரையும், அவைத்தலைவர் பதவியிலிருந்து மதுசூதனனையும் தூக்குவதுன்னு ஜெ. திட்டமிட்டி ருக்கிறாராம். அ.தி.மு.கவின் 38-ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் கட்சியின் ஆண்டுமலரைப் பெற்றுக்கொண்ட அன்வர்ராஜாவை அவைத்தலைவ ராக்கலாமான்னு யோசிக்கப்பட்டதாம். எந்த இறுதி முடிவும் எடுக்காமல் மாற்றி மாற்றி பெயர்களை யோசித்துக்கொண்டிருக்கிறார் ஜெ.''""பொதுக்குழு சம்பந்தமா நானும் ஒரு தகவல் சொல்றேன்.. அ.தி.மு.க.வில் செயற் குழு, பொதுக்குழுன்னாலே மதிய சாப்பாடு ரொம்பவும் எதிர்பார்ப்போடு இருக்கும். சைவம்- அசைவம்னு வகைவகையா விருந்து பரி மாறுவாங்க. இந்த முறை நோ சாப்பாடு.''


மிஸ்டுகால்
தனது நண்பரான மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழியின் இரண்டாவது மகன் உதயநிதியின் திருமணம்- வரவேற்பு இரண்டு விழாக்களையும் முன்னின்று நடத்தி வைத்தார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். வரவேற்பு விழாவுக்கு வந்த வி.ஐ.பிக்களை பந்திக்கு அழைத்துச்சென்று சாப்பிடவைத்தவர் அமைச்சர் நேரு. திருநாவுக்கரசர் வந்தபோது முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, பொன்னு சாமி இருவரும் அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். எப்பதாண்ணே அங்கிருந்து (பா.ஜ.க.) கிளம்புவீங்கன்னு பொன்னுசாமி கேட்க, சீக்கிரம் வரேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார் திரு.
ராஜபக்சேவின் சகோதரி நிருபமாவின் கணவர் திருக்குமரன் நடேசன். ஏற்கனவே இவர், நான்காம் கட்ட போருக்கு முன் நெல்லை மாவட்டம் சிவசைலத்திற்கு வந்து எதிரிகளை அழிப்பதற்கான யாகத்தை நடத்திவிட்டுப் போயிருந்தார். இப்போது போர் முடிந்த நிலையில், திருச் செந்தூர் கோயிலிலும் பாபநாசம் கோயிலிலும் பலத்த பாதுகாப்புடன் பூஜைகள் செய்து வழிபட்டார். பாபநாசத்தில் அவர் நடத்தியது சங்கல்ப யாகம். தானும் தனது உறவுகளும் நீண்ட ஆயுளோடு வாழ் வதற் காகத்தான் இந்த யாகம்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணப் பெருமாளுக்கு ஜெயேந்திரர் 3 அடி நீளமுள்ள 288 கிராம் எடையில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கப்பூணூல் அணிவித்துள்ளார். அதுபோல கோமதி அம்மனுக்கு தங்கத்தாலி அணிவித்துள்ளார். வேண்டுதல் நிறைவேறவேண்டும் என்பதற்காகத்தான் இந்த காணிக்கை செலுத்துவார் களாம். ஜெயேந்திரர் என்ன வேண்டியிருக்கிறார் என்ற விவாதம் காஞ்சி மடத்தில் நடக்கிறது.