காமெடி என்ற பெயரில் படம் முழுக்க வந்து அடுத்தவர்களுக்கு அட்வைஸ் பண்ணி கழுத்தறுக்காமல், ஒரே காட்சி என்றாலும் திரையில் தோன்றிய உடனே கிச்சுகிச்சு மூட்டுபவர் மயில்சாமி. மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் மயில்சாமியின் நகைச்சுவை கலந்த குணச்சித்திர நடிப்பு அவரது திறமைக்கு ஒரு சாம்பிள்.தான் காமெடியன் என்றாலும் தன் மகனை ஹீரோவாக்கி அழகு பார்க்கும் ஆசை மயிலுக்கு ரொம்பவே அதிகம். தனக்குத் தெரிந்த இயக்குநர்களுக்கு மகனை அறிமுகம் செய்து வைக்க, ஆரம்பத்தில் அசிரத்தையாகப் பார்த்தைவர்கள், பையனின் துடிப்பு, அழகிய தோற்றம் கண்டு கட்டாயம் ஹீரோவா நடிக்க வைக்கலாம் மயில் என்று உற்சாகப்படுத்தினார்களாம்.மயில்சாமி மகனுக்கு வீட்டில் வைத்த பெயர் நந்து. ஆனால் கலைஞானி கமல்ஹாசன் மூலம் முறைப்படி வைக்கப்பட்ட பெயர் அருமைநாயகம். நந்து என்கிற அருமைநாயகம் என நாமகரணத்தோடு நடிக்க தயாராகிவிட்டார்.சரி... நடிப்புக்கு பிள்ளையார் சுழி போடும் முன் ஒரு முக்கியமானவரைச் சந்தித்துவிட்டு வரலாம், வா கண்ணா என்று மகனை அழைத்துக் கொண்டு கிளம்பினாராம் மயில்சாமி. அவர் போனது சூப்பர் ரஜினியின் அலுவலகத்துக்கு. மயில்சாமி மகனை வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்த ரஜினி, "மயில், உங்க பிள்ளைக்கு என்னோட ஆசிர்வாதம் எப்பவும் உண்டு..." என்றவர், நந்துவைப் பார்த்து, "கண்ணா... ஜாக்கிரதையா இருக்கணும். நல்ல பெயரெடுக்கணும்.." என்றாராம்!
No comments:
Post a Comment