தீபாவளி தினமன்று வெளியெங்கும் பட்டாசுப் புகை மண்டலமாகிக் கிடந்ததால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். சித்தர் பாடல் சொல்வதுபோல சில நேரங்களில் சும்மா இருத்தலே சுகமாகத்தான் இருக்கிறது. மதியம் உறங்கித் தீர்த்த பின் தொலைக் காட்சியைத் தட்டினால் ஸ்டார் அலைவரிசையில் "பேர்ள் ஹார்பர்' (Pearl Harbour) -தமிழில் சொன்னால் "முத்துத் துறைமுகம்' ஆங்கிலத் திரைப்படம் தொடங்கியிருந்தது.இப்போதெல்லாம் தனிப்பட்ட விருப்பங்களுக்கு நேரம் ஒதுக்குகிற வசதிகளை வாழ்க்கை அபகரித்துக்கொண்டுவிட்டது. பழைய நாட்களில் வரலாறு தொடர்பான திரைப்படங்க ளென்றால் ஒன்றுக்குப் பலமுறை பார்த்து உரையாடல்களை மனப்பாடம் செய்யும் பழக்கம் இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற "கிளாடி யேட்டர் (Gladiator) படத்தை இருபது முறையாவது பார்த்திருப்பேன். படத்தின் பாதி உரையாடல்களை இப்போதுகூட வாய்ப்பாடுபோல் சொல்ல முடியும்."பேர்ள் ஹார்பர்' -"முத்துத் துறைமுகம்' வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஓர் நிகழ்வைச் சுற்றி பின்னப்பட்ட காதல் கதை. இரண்டாம் உலகப்போரின் போக்கினையும், முடிவினையும் தீர்மானித்து அதன் தொடர்ச்சியாக இன்றைய உலகில் நாம் காணும் அரசியல் ஏற்பாடுகளுக் கெல்லாம் காரணமான நிகழ்வு அது. குறுக்கக் கூறினால் அமெரிக்காவை இரண்டாம் உலகப்போரில் இணையச் செய்த நிகழ்வு.பசிபிக் பெருங்கடல் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ஓகூ தீவில் அமைந்த திருகோணமலை போன்ற இயற்கையான ஆழ்கடல் துறைமுகம் பேர்ள் ஹார்பர். அமெரிக்காவின் பசிபிக் கடற்படை முற்றாக இங்குதான் நிலைகொண்டு நின்றது.பேரரசுப் பெரும்பசியில் நின்ற ஜப்பான், ஆசியா முழுவதையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டுமென 1940-வாக்கில் முடிவெடுக்கிறது. மஞ்சூரியா, சீனாவின் எஞ்சிய பகுதிகள், இன்றைய இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பின்ஸ் ஆகியவைதான் முதற்கட்ட இலக்கு. ஆனால் இவற்றை ஆக்கிரமிக்கும் பட்சத்தில் பேர்ள் ஹார் பரில் நின்றிருக்கும் அமெரிக்க கடற்படை மேற் சொன்ன நாடுகளில் நின்றிருந்த பிரித்தானிய - பிரெஞ்சு - டச்சு படைகளுக்கு உதவியாக விரைந்து வரக்கூடிய வாய்ப்பு தான் ஜப்பானை தயங்க வைத்தது. எனவே வியப்பூட்டும் தாக்குதல் ஒன்றின் மூலம் அமெரிக்காவின் பசிபிக் கடற்பிரிவினை முற்றாக அழிக்கும் முடிவினை 1941-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜப்பான் எடுத்தது.அதே ஆண்டு டிசம்பர் 7 ஞாயிறு காலை, ஆறு விமானம் தாங்கிக் கப்பல்கள், நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள், 408 விமானங்கள் காட்டுப்புலிகள்போல் பின்னிரவு இருளினூடே நகர்ந்து பேர்ள் ஹார்பர் மீது "வான் அலை' தாக்குதல் தொடங்கின. இரண்டு சுற்றுத் தாக்குதல்கள் முடிவுற்றபோது அமெரிக்காவின் பசிபிக் கடற்படை ஏறக்குறைய எல்லா கப்பல்களையும், 188 விமானங்களையும் இழந்திருந்தது. 2402 அமெரிக்க கடற்படையினர் கொல்லப்பட்டனர், 1282 பேர் படுகாயமுற்றனர்.காதல் கதையொன்றை வனைந்து வரலாற்றை அற்புதமாகத் திரைப்படத்தில் வடித்திருந்தார் புகழ்பெற்ற இயக்குநர் மைக்கேல் பே. சில இடங்களில் அழுத்தமாகப் பதிந்து செல்லும் சில உரையாடல்கள் மறக்க முடியா தன்மை கொண்டிருந்தன. கேட்டதுமே தமிழ்ஈழ விடுதலைப் போராட்டக் களத்திற்கும் ஏதோ ஒரு தொடர்புகொண்டிருப்பது போலவும் அவை உணர்வு தூவின.முதல் இரண்டு சுற்று, ""அலை அலையான'' தாக்குதல்களில் கப்பல்கள், விமானங்கள் அழிந்துபோக பேர்ள் ஹார்பரில் மிச்சமிருந்தது துறைமுகமும், தரைமைய ஆயுதங்களும், சில சிறு கப்பல்களும். அவற்றையும் தாக்கி அழிக்க மூன்றாம் சுற்றுத் தாக்குதலுக்கான விவாதத்தில் ஜப்பானிய தலைமைத் தளபதி கூறுவார் : ""முதல் இரு சுற்றிலும் "வியப்பூட்டும் தன்மை' நமக்கு தனித்துவமான சாதக நிலையை தந்தது. மூன்றாம் சுற்றில் அது இருக்காது. நமக்காக அவர்கள் காத்திருப்பார்கள். இருக்கிற வளங்களைக் கொண்டு திறமையாகத் திருப்பித் தாக்குவார்கள். நமது ராணுவக் கொள்கையின் ஆதார நாதமே "எதிரி யின் வளங்களை அழிப்பதைவிட நமது வளங்களை பாதுகாப்பதுதான்' என்று.தொலைக்காட்சி உரையாடல் நடக்கையிலே மனத்திரையில் தமிழ் ஈழக் களம் விரிந்தது. ஒரு கொரில்லா இயக்கமாய் இருந்தவரை விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய ராணுவ குணாம்சமாய் உலகத்தால் பாராட்டப்பட்டது. அவர்களின் ""வியப்பூட்டும் தன்மை'', ""ஆச்சரியப் படுத்தும்'' அற்புத அழகு. எங்கு, எப்போது, எப்படி புலிப்படை பாயும் என்று எவருக்கும் தெரியாது. ஆனையிறவை வென்று வெற்றிக்கொடி ஏற்றியது வரை அந்த வித்தகம் அவர்களிடம் இருந்தது. பேச்சு வார்த்தைகள் தொடங்கி புலிகள் மரபுரீதியான ராணுவ மனநிலைக்கு மாறியபின் "வியப்பூட்டும் தன்மை' அணி மாறியது. அதன்பின்னர் முள்ளிவாய்க்கால்வரை சிங்களப்படைகளே ஆச்சரியப்படுத்தின. பின்னோக் கிப் பார்க்கையில் யாழ்ப்பாண முற்றுகையைத் தொடர்ந்துகொண்டே பேச்சுவார்த்தைகளையும் செய்திருந்தால் சரியாயிருந்திருக்குமோ... என்றெல்லாம் எண்ணி மனம் கனத்தது.பிறிதொரு உரையாடலில், பேர்ள் ஹார்பர் இரண்டு சுற்றுத் தாக்குதல்களுக்குப் பின் நடக்கும் ராணுவ உயர்மட்டக் கூட்டத்தில் மாற்றுக் கருத் துடைய மூத்த தளபதி ஒருவர் கூறுவதாக இப்படி வரும் : ""பேர்ள் ஹார்பரில் அமெரிக்காவின் பசிபிக் கடற்பிரிவை நிர்மூலமாக்கிவிட்டதாக இப்போதைக்கு நாம் பெருமிதம் கொள்ளலாம். ஆனால் உண்மையில் நீண்ட உறக்கத்திலிருந்த ஒரு மலையாற்றல் கொண்ட விலங்கின் தன்மானத்தைச் சீண்டி உசுப்பி விட்டிருக்கிறோம். அதன் எதிர்விளைவுகளிலிருந்து நாம் தப்பிக்க முடியாது'' என்பார் அந்த மூத்த தளபதி. அவர் சொன்னதுதான் பின்னர் வரலாறா கியது. பேர்ள் ஹார்பர் தாக்குதல் நடக்கும்வரை அமெரிக்கா உலகப்போரில் இணையாமல் விலகியே நின்றது. பேர்ள் ஹார்பர் அமெரிக்காவை நேச அணியில் இணைத்து ஹிட்லர்-முசோலினி-ஜப்பான் அடங்கிய "அக்சிஸ்' அணியின் படுதோல்விக்கு வழி சமைத்தது.ராஜபக்சே கூட்டத்தின் முள்ளிவாய்க்கால் கொடூரங்களும் அப்படித்தான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வதம் செய்து நிர்மூலமாக்கிவிட்ட தாய் சிங்களம் கொக்கரித்துக் கொண்டாடுகிறது. ஆனால் மறுபுறம் உலகின் கண்களுக்குத் தெரியாமல் கோடானு கோடி தமிழ் உள்ளங்களில் நீதியுணர்வு தமிழின உணர்வாய் உருவெடுத்துக் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது பூமித்தாயின் அடி மடியில் ஆர்ப்பரிக்கும் எரிமலைக் குழம்பு போல. எரிமலைகள் உறங்குவதுமில்லை, சீறி வெடிக்காமல் நீர்த்துப்போவதுமில்லை. தோல்வியின் கணத்தில் பிறக்கிற தோழமை தமிழீழ விடுதலை மட்டுமல்லாது பரந்துபட்ட தமிழ் இன, மொழி, கலை, பண்பாட்டு மறுமலர்ச்சிக்கும் புதிய வழித்தடங்களை அமைக்கப் போகிறதென்பதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது. "பேர்ள் ஹார்பர்' திரைப்படத்தில் மனம் சிலிர்க்க வைத்த, மறக்க முடியாத பல உரையாடல் களில் முதன்மையானதாக என் மனதிற்குப் பட்டது இது. பயிற்சித் தளபதி சொல்வதாய் வரும். முன் னணி வீரர்கள் ஜப்பானிய குண்டுவீச்சில் கொல்லப் பட்ட நிலையில் தன்னார்வ தொண்டர்களுக்கு அவசர களப்பயிற்சி கொடுக்கையில் கூறுவதாக அமையும் வரி இது : ""உணர்வெழுச்சி பெறும் தன்னார்வத் தொண்டர் ஒருவரது பலத்திற்கு இணையாக உலகில் எந்த மரபு ரீதியான வீரனும் போர் செய்ய முடியாது.''இன்று உலகெங்கும் தமிழ் இளைஞர்களிடையே, கல்லூரி மாணவர்களிடையே நடந்துவரும் அமைதியான அதிசயமும் இதுதான். ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் குறிப்பாக இளைய தமிழர்களும், இதுவரை விளிம்பில் ஒதுங்கிநின்ற தமிழர்களும் உணர்வெழுச்சி பெற்ற தன்னார்வத் தமிழ் வீரர்களாய் தாங்களே களங்களை உருவாக்கி இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள். வியப்பான தோர் ஜனநாயகத் தன்மை தமிழ்த்தளத்தில் விடியலாவதை கண்ணுற முடிகிறது. கடந்த பத்து நாட்களில் நடந்த இரு பெரும் முன்நோக்கிய மாற்றங்களுக்கு இத்தகையோரது ஆரவாரமில்லா இடைவிடா உழைப்பே காரணம்.முதல் மாற்றம் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் நிகழ்ந்துள்ளது. சித்ரவதைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம், குழந்தைகளது உரிமைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம், அரசியல், குடியுரிமைகள் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தம் மூன்றையும் இலங்கை அரசு மீறியுள்ளது என குற்றம்சாட்டி யுள்ளது ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆய்வறிக்கை. இது வரை இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு வர்த்தகச் சலுகைகளை ரத்துசெய்ய பரிந்துரை முன்வைத்துள்ளது. இதனால் ஆண்டுக்கு 1000 லட்சம் டாலருக்கு மேல் இலங்கைக்கு வர்த்தக இழப்பு ஏற்படும். பலமுறை நாம் குறிப்பிட்டுள்ளதுபோல் அரசியல் அழுத்தங்களைவிட பொருளாதார அழுத்தங்கள்தான் பேரினவாதச் சிங்கள அரசை அடிபணிய வைக்கும்.இரண்டாவது மாற்றம் அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த வியாழனன்று அமெரிக்க காங்கிரஸ் அவைக்கு சமர்ப்பித்துள்ள 70 பக்க அறிக்கை. விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவம் இருதரப்பினர் மீதும் அந்த அறிக்கை குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறதென்றாலும் ""யுத்த குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணை அவ சியம்'' என்ற தமிழர்களின் கோரிக்கையை அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் வெளிப்படையான இந்த நிலைப்பாட்டினை முக்கியமான தாகவே நாம் கருதவேண்டியுள்ளது. இந்த மாற்றமும் அங்கு ஆர்ப்பாட்டங்களின்றி உறுதியாக இயங்கிவரும் தனி நபர்களாலும் தரம் நிறைந்த சிறு அமைப்புகளாலேயுமே நடந்திருக்கிறது.மேற்குலக நாடுகள் ராஜபக்சே கும்பலைச் சுற்றி படிப்படியாக நகர்த்திவரும் முற்றுகையிலிருந்து தப்பிக்க மீண்டும் இந்தியாவைப் பயன்படுத்தும் தந்திரோபாயத்தை இலங்கை கடை விரிக்கிறது. இலங்கைக்கு கடனுதவி வழங்க வேண்டுமென்று பன்னாட்டு நிதி நிறுவனத்திற்கு இந்தியா கொடுத்துள்ள அதிகாரபூர்வ அழுத்தம் ஒழுக்கக் கேடானதாகவே கண்டிக்கப்படவேண்டும். இன்றைய சூழலில் இந்தியா எடுக்கவேண்டிய குறைந்தபட்ச நிலைப்பாடுகள் எளிதானவை, தெளிவானவை, குழப்பமற்றவை.1. வதை முகாம்களில் மக்களை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது. அனைத்து மக்களும் விடுவிக்கப்பட வேண்டும்.2. ராஜபக்சே, கோத்தபய்யா, பொன்சேகா மூவரும் தமிழருக்கெதிராய் யுத்தக் குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள்.3. தமிழ் மக்களின் நீண்ட அரசியற் சிக்கலுக்கான நிரந்தர அரசியற் தீர்வுத் திட்டம் என்ன என்பதை பகிரங்கமாக முன்வைப்பது. இம்மூன்று விஷயங்களிலும் குறைந்தபட்ச கருத்தொருமை உருவாக்குவதே தமிழகத்தில் உணர்வாளர்களின் பணி. அதற்கும் மேலாய் தமிழரை அழித்து, சீனாவின் ஆதிக்கத்தை இலங்கைக்குள் வளர்த்து இந்தியாவின் பாதுகாப்பையே விலைபேசியுள்ள சிறு கும்பலையும் நாம் எதிர்கொள்ள வேண்டிய தேவையும் கடமையும் உள்ளது.அது...
No comments:
Post a Comment