திருவண்ணாமலை காக்கிகள் டீம்... இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் அண்ணா மலையார் கோயில் இருக்கும் மலை மீது பரபரப்பாக சென்றது. அவர்களின் வாகனம்... சிவானந்த யோகி ஆசிரமத்தின் முன் சடன் பிரேக் போட்டு நின்றது. உள்ளே திபுதிபுவென இறங்கிச்சென்ற காக்கிகள்... ஆசிரமத்தில் இருந்த முருகன் சாமியாரைக் கைதுசெய்து ஜீப்பில் ஏற்ற... பரபரப்பானது திருவண்ணாமலை.திரண்ட அக்கம்பக்கவாசிகளிடமும் பக்தர்களிடமும் இன்ஸ்பெக்டர் ரமேஷ்... ""சாமியார் குடிலில் கஞ்சா இருப்பதா தகவல் வந்துச்சு. அதான் சோதனை செய்தோம். 400 கிராம் கஞ்சாவைக் கைப்பற் றிட்டோம். இதைத் தொடர்ந்துதான் இந்தக் கைது''’-என விளக்கம் தந்த காக்கிகள்... முருகன் சாமியாரைக் கொண்டுபோய் ரிமாண்ட் செய்தனர்.தகவல் அறிந்த நாம் சிவானந்த யோகியின் ஆசிரமத்திற்கு விரைந் தோம்.அங்கிருந்த பக்தர்கள்... ""பெரிய சாமிகள்தான் இருக்கார்'' என்றபடி சிவா னந்த குருவின் முன் நம்மைக் கொண்டுபோய் நிறுத்தினர். நெற்றியில் திருநீற்றுப்பட்டை.. கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை சகிதம்... தளர் வாய்ப் படுத்திருந்த 95 வயது முதியவரான சிவானந்தரிடம் முருகன் சாமியாரின் கைது குறித்துக் கேட்டபோது... கவலையாய்ப் பேச ஆரம்பித்தார்.""எனக்கு சொந்த ஊர் சேலம் பக்கத்தில் இருக்கும் அங்கனூர். நான் ஊர்த் தலைவரா 15 வருசம் இருந்தவன். 35 வருசத்துக்கு முன்ன திடீர்னு ஆன்மீக நாட்டம் வந்து... சொத்து பத்து சொந்த பந்தங்களைத் துறந்து திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தேன். இங்க சிவானந்த குருவா ஞானம் பெற்று இந்த ஆசிரமத்தையும் தொடங் கினேன். முதல் முதலா ஒரு வெள்ளைக்காரர் என்னை குருவா ஏத்துக்கிட்டு... எனக்கு சிஷ்யனா இருந்தார். அன்பான மனுசன். ஆனா அவருக்கும் இங்க இருந்த ஒரு பொண்ணுக்கும் தவறான உறவு ஏற்பட... அவரை யாரோ அடிச்சிக் கொன்னுட்டாங்க.அடுத்ததா காசியில் வேதம் கத்துக்கிட்ட கவுதமர் என்னிடம் சிஷ்யனா இருந்தார். வேதம் படிச்ச அவரும் பெண் சபலத்தில் சிக்கினார். டீக்கடை வைத்திருந்த ஒரு பொண்ணோட அவருக்கு தொடர்பு உண்டாக... அந்தப் பிரச்சினையில் அவரும் கொல்லப் பட்டுட்டார். கவுதமருக்குப் பின் 6 வருசமா இங்க வந்து போய்க் கிட்டிருந்த முருகன்... எனக்கு சிஷ்யனா வந்து சேர்ந்தார். எனது வெளிநாட்டு பக்தர்கள் அனுப்பற பணம் காசையெல்லாம் நான் முருகன் சாமிகிட்ட கொடுத்துடுவேன். அதை அவர் வங்கியில போட்டு வச்சிருக்கார். அதே போல் என் இறுதிச் சடங்குகளுக்காகவும் 24 ஆயிரம் ரூபாயை அவர்ட்ட கொடுத்து வச்சிருக் கேன். எனக்கு பணத்தேவைகளே இல்லை. நான் நம்பிய இந்த முருகனும் இப்ப பெண் சபலத்தில் சிக்கி... அசிங்கப்பட ஆரம்பிச்சிருக்கார். மூணு நாளைக்கு முன்னதான் அவரைக் கூப்பிட்டு... ஏதோ பொம்பளைப் பிரச்சினையில் சிக்கியிருக் கியாமேன்னு கேட்டேன். அதுக்கு ஆமாம் சாமின்னு சொன்னார். சாமியாரா மாறியபின்... இப்படிப்பட்ட சுகங்களைத் தேடலாமா? உடம்பின் இச்சைகளுக்கு நாம அடிமையாகலாமான்னு கேட்டேன். பதில் சொல்லாம இருந்தார். துறவு வாழ்க்கையில் உறவு வாழ்க்கை கூடாது. பெண் சபலமும் மண் சபலமும் பொன் சபலமும் மனிதனைக் கேவலப்படுத்திடும். என்ன நடந்துச்சின்னு தெரியலை... திடீர்னு போலீஸ் வந்து முருகன் கஞ்சா வச்சிருந்ததா கைது பண்ணிட்டு போயிருக்கு. இந்த ஆசிரமத்தை புனிதமா வச்சிருந்தேன். இப்ப என்னென்னவோ நடக்குது. என் கடைசிக் காலத்தில் இப்படிப்பட்ட சங்கடங்களையா நான் சந்திக்கணும்? ஈஸ்வரா...''’என்றார் உருக்கமாய்.அருகில் இருந்த சிவானந்தரின் பக்தர்கள் ""இங்கே கஞ்சா வர்றதுக்கு வாய்ப்பே இல்லை. முருகன் சாமிக்கும் கஞ்சாப் பழக்கமெல்லாம் கிடையாது. இந்த வழக்கின் பின்னணியில் ஏதோ வில்லங்க விவகாரம் இருக்கு''’என்றனர் உறுதியான குரலில். நாம் மீண்டும் காவல் நிலையம் வந்து காக்கிகள் சிலரிடம் விசாரித்த போது முருகன் சாமியாரின் ஏடாகூட விவகாரத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்கள். ’""அந்த சாமியார் சாதாரண ஆள் இல்லை. பொம்பளைகளை வசியம் பண்றதில் கில்லாடி. மலைமேல் பூஜை பண்ணும் ஒரு குருக்களின் மனைவியை எப்படியோ வசியம் பண்ணிட்டான். அந்த லேடிக்கு நான்கு பிள்ளைகள் இருந்தும்... எல்லாவற்றையும் மறந்து சாமியாரே கதின்னு இருந்திருக்கா. கணவன்காரன் வெளியே போனதும் சாமியார் அவங்க வீட்டுக்கு வந்துடுவான். ஒருநாள் திடீர்னு வீட்டுக்கு வந்த குருக்கள்... சாமியாரையும் தன் மனைவியையும் பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த் திருக்கார். திகைச்சுப்போனவர் மனைவியை அடிச்சிருக்கார். இருந் தும் அந்த லேடி.. சாமியாரோடதான் வாழ்வேன்னு அடம்பிடிச்சிருக்கா. இந்த விவகாரம் எங்க கவனத்துக்கு வந்ததும், ரெண்டுபேரையும் கூப்பிட்டுக் கண்டிச்சோம். ஆனா அந்த லேடியும் சாமியாரும்... ""நாங்க சேர்ந்துதான் இருப்போம்''னு பிடிவாதம் பிடிச்சாங்க. அப்புறம் வேறவழி இல்லாம சாமியாரைக் கஞ்சா கேஸ் போட்டு அரஸ்ட் பண்ணிட்டோம். அந்த சாமியாரை தீவிரமா விசாரிச்சப்ப... கிறுகிறுக்க வைக்கும் வாக்குமூலத்தைக் கொடுத்திருக் கான்'' என்றார்கள் ஆச்சரியம் விலகாமல்.காக்கிகளிடம் அவன் கொடுத்த வாக்குமூலத் தில்...“""எனக்கு பெண்ணாசை அதிகம். என்னிடம் ஆசி வாங்க வரும் பெண் பக்தைகளை தனியா உட்காரவச்சி... "உனக்கு இவ்வளவு அழகு இருந்தும்... உன் வீட்டுக்காரன் ஒண்ணும் இல்லாத பயலா இருக்கானே. அவனால் உனக்கு பூரண திருப்தியைக் கொடுக்க முடியாதே'ன்னு சொல் வேன். பெரும்பாலான பொண்ணுங்க "ஆமாம்'னு சொல்லும். உடனே...ஒரு லேகியத்தைக் கொடுத்து... இதை படுக்கைக் குப் போகும்போது நீ சாப்பிட்டா... உச்ச இன்பத்தில் திளைக் கலாம்னு சொல்லி அனுப்புவேன். அடுத்ததடவை வரும் போது அதுபத்தி விசாரிக்கும்போதே... கதை வேறமாதிரி ஆரம்பிச்சிடும். எங்க பகுதியிலேயே 5 பெண்களோட எனக்கு தொடர்பு உண்டு. அவங்க அத்தனை பேரும்... எனக்காக புருஷன்மாரைக்கூட தூக்கி எறிய ரெடியா இருப்பாங்க'' என் றெல்லாம் கண்றாவி சமாச்சாரங்களை குஷியாகச் சொன்ன வன்... அவனது பூர்வீகம், குடும்பம், சொந்த ஊர் பற்றியெல் லாம் கேட்டால் மட்டும் வாயைத் திறக்க மறுக்கிறானாம்.இந்த கிளுகிளு சாமியாரின் கைரேகைகளை சேகரித்து... இவன் வேறு ஏதாவது குற்றப் பின்னணியில் சம்பந்தப்பட்டவனா? என்றும் போலீஸ் அலசி ஆராய்ந்துகொண்டிருக்கிறது.சாமியார்... ஆசிரமம் என்றாலே... பெண் விவகாரங் களுக்கு பஞ்சம் இருக்காது போலிருக்கிறது.
No comments:
Post a Comment