shockan.blogspot.com
தொழிலாளர் நல சட்டத்திற்குப் புறம்பாக... எங்களை கொத்தடிமைகளாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்’’ என புகார்க்குரல் எழுப்புகிறார்கள் அவர்கள்.
அவர்கள்?
போக்குவரத்துக் கழக சேமநலத் தொழிலாளர்கள். இவர்களின் ஆதங்கம்தான் என்ன?
“""எங்க பெயர்களைப் போட்றாதீங்க. இருக்கும் இந்த வேலைக்கு ஆபத்தாயிடும். 2008-ல் தமிழகம் முழுதும் ஓட்டுநர், நடத்துனர் பணிக்குத் தேர்வு நடந்தது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த சீனியாரிட்டிப் படிதான் எங்களை செலக்ட் செய்து பணிநியமனமும் செஞ்சாங்க. முதல்ல 240 நாட்களுக்கு தினக்கூலிப் பணியாளரா இருங்க. இதன்பிறகு நிரந்தர ஊழியராக ஆக்கிடுவோம்'னு அப்ப உறுதிகொடுத்திருந்தாங்க. நிரந்தர ஊழியர்களுக்கு தினசரி 450 ரூபா சம்பளம்னா எங்களுக்கு வெறும் 200 ரூபாதான். இதில் லீவுக்கு சம்பளம் கிடையாது. ஓவர்டைம் வேலை யை கட்டாயம் பார்த்தாகணும். இதுக்கு 150 ரூபாதான் கொடுப்பாங்க. அதிகாலை 4 மணிக்கே டெப்போவுக்கு வந்துடணும். மணிக்கு 20 கி.மீ. வேகம்கூட போகாத தகர டப்பா வண்டிகளைத்தான் எங்களுக்கு ஒதுக்குவாங்க. வண்டி பெரும்பாலும் செல்ஃப் எடுக்காது. இருந்தும் பணி நிரந்தர ஆசையில் சலிக்காம ஓட்டுவோம். இந்த லட்சணத்தில் டெப்போவில் இருக்கும் மேனேஜர் போன்றவங்களுக்கு வாராவாரம் பார்ட்டி கொடுத்தாகணும். அதையும் செய்துக் கிட்டுதான் இருக்கோம். இப்படியெல்லாம் வேலை பார்த்தும் எங்க ளை பணி நிரந்தரம் செய்ய மறுக்குறாங்க. கேட்டா... கும்பகோணம் கோட் டம் காரைக்குடி மண்டலத்தில் இருக்கும் 11 கிளைகள்ல வேலை செய்யும் 600-க்கும் மேற்பட்ட எங்களுக்கு... அங்க வேலை செய்யறதுக்கான எந்த ரிக்கார்டும் இல் லைன்னு சொல்றாங்க. எங்களுக்கு அட்டண்டன்ஸும் இல்லை. சம்பளப் பட்டுவாடாவுக்கு வவுச்சரும் கிடையாது. செங்கல் சூளையில் வேலைசெய்யும் கூலித்தொழிலாளிகளைவிட எங்க நிலைமை மோசமா இருக்கு. எங்க எதிர்காலம் என்ன ஆகும்னு தெரியலைங்க. வேலை செய்யறதுக்கான ஆதாரமே இல்லாததால் நாங்க நீதி கேட்டு கோர்ட்டுக்குக்கூட போகமுடியாது'' என்றார்கள் கவலையாக.
சி.ஐ.டி.யூ.வின் மா.செ.வான தோழர் சிவாஜியும் மாவட்ட நிர்வாகி தோழர் பாஸ்கரும் ""240 நாட்கள் வேலை செய்தவங்களை நிரந்தரமாக்கணும் என்பதுதான் விதி. இதை நடைமுறைப் படுத்தாததோடு, ஊழியர்களுக்கான எந்த சலுகைகளும் வழங்காமல் வைத்திருக்கிறார்கள். இது சட்டவிரோதம். இந்த தொழிலாளிகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அவர்களுக்காகப் போராட்டக் களத்தில் நாங்கள் குதிக்க நேரிடும்''’என்கிறார்கள் காட்டமாய்.
மண்டல போக்குவரத்துத்துறை ஜி.எம். பசுபதியோ ""சில டெக்னிக்கல் பிரச்சினைகள் இருக்கு. அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சரிபண்ணி... அவங்களை எல்லாம் நிரந்தரப்படுத்திடுவோம்''’என்று முடித்துக்கொண்டார்.
சேமநலத் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்க்கப்படுமா?
No comments:
Post a Comment