
shockan.blogspot.com
நடிகை மனிஷா கொய்ராலாவின் திருமணம் ஜூன் 18ம் தேதி நடைபெறவுள்ளது.
காத்மாண்டுவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்ராட் தஹாலை மணக்கவுள்ளார் மனிஷா. தஹால், மனிஷாவை விட 7 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு காத்மாண்டுவில் உள்ள கோகர்னா வன ஓய்வில்லத்தில் சுயம்ப்வர் நடைபெறவுள்ளது. இதில நேபாளம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனராம்.
40 வயதாகும் மனிஷா, நேபாள நாட்டின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரான பி.பி.கொய்ராலாவின் பேத்தி ஆவார். மறைந்த கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் உறவினர் ஆவார். கிரிஜா பிரசாத் கொய்ராலாவும் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்தை முடித்துக் கொண்ட பின்னர் 2 நாட்கள் கழித்து ஹோட்டல் சோலட்டீ கிரவுன் பிளாசாவில் வரவேற்புடன் கூடிய விருந்து நிகழ்ச்சிக்கு மனிஷா ஏற்பாடு செய்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக மனிஷாவும், சாம்ராட் தஹாலும் பழகி வருகின்றனர். இதையடுத்து இரு வீட்டாரும் சேர்ந்து பேசி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்தனர். இதைத் தொடர்ந்து தற்போது திருமணம் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment