Sunday, June 13, 2010
கல்லூரி மாணவிகளின் ஆபாச சி.டி.!
பூமிகாவின் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பகீர் கதையைக் கேட்டு ஆடிப்போயிருக்கிறார்கள் மதுரைக் காரர்கள். மதுரையின் பிரபல கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படிக்கிறாள் பூமிகா. வீட்டின் செல்ல மகளாய் துருதுருவென வளைய வந்துகொண்டிருந்த அவளுக்கு காதல் வடிவில் விபரீதம் வந்தது. அந்த விபரீதம் வெளிப்பட்ட இடம் ஜெய்ஹிந்த்புரத்தில் இருக்கும் அந்த புரோட்டாக் கடை.
ராஜா ஷெரிப் என்கிற பப்லு, தன் நண்பர் களான மணிகண்டன், ஜெகதீசனுடன் டாஸ்மாக் பாருக்குப் போய்விட்டு... தள்ளாட்டமாய் அந்த புரோட்டா கடைக்கு வந்து சாப்பிட உட்கார்ந் தான். ""புரோட்டா இல்லைண்ணே தோசை போடவா?''’’ என சப்ளையர் கேட்க.... ’""டேய் என்னங்கடா புரோட்டா இல்லைங்கிறீங்க?''’என நண்பர்களுடன் பப்லு தகராறு பண்ண ... பக்கத்தில் இருக்கும் "டைபி' அலுவலகத்தில் இருந்த நாகராஜன் போன்ற தோழர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்த னர்.’’எதுக்குப்பா தகராறு?’’ என பப்லு டீமை விலக்கி விட்டனர். அப்போது பப்லுவுக்குத் தெரியவில்லை தன் செல்ஃபோன் கீழே விழுந்தது. செல்ஃபோன் ஒருவர் கண்ணில் பட... யாருடையதாக இருக்கும் என அலுவலகத்தில் வைத்து சோதித்தார். அப்போது... செல்ஃபோனில் பூமிகாவின் அப்பட்டமான நிர்வாணப் படம் மானிட்டரில் ஓட.... ’அய்யோ... இது நம்ம நண்பரின் காலேஜ் படிக்கும் தங்கச்சியாச்சே...’’என்று பதற, அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அதிர்ச்சி விலகாமல் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்துக்கு ஓடினார்கள்.
அங்கிருந்த காக்கிகள் அந்த போனை மேலும் சோதித்துத் திகைத்ததோடு ... செல்ஃபோனுக்குச் சொந்தக்காரனான பப்லுவை மடக்கினர். “""ஐயோ அடிக்காதீங்க. நானும் மணிகண்டனும் ஜெகதீசனும் சேர்ந்துதான் இப்படிப் பண்ணினோம்''’என்று பப்லு அலற... அவர்களையும் அள்ளிவந்தனர். மணிகண்டனும் ஜெகதீசனும், ""’பப்லுவின் அண்ணன் கார்த்திக்தான் இந்த விசயத்தில் குருநாதர். அவன் எடுத்த படங்களைப் பார்த்துதான் நாங்களும் பல மாணவிகளை வளைச்சி.. ஆசை தீர அனுபவிச்சி... படம் எடுத்தோம்''’என்று தங்களிடம் சிக்கிய பெண்களின் பட்டியலை ஒப்பித்தார்கள்.
இந்த தகவல் பப்லு வீட்டுக்குப்போக... பதறிப்போனார் பப்லுவின் அப்பா நாசர். தனது ஆளும்கட்சி நண்பர்கள் மூலம் காக்கிகளை அணுக... இதன்பின் ஜெய்ஹிந்த்புர காக்கிகளின் போக்கு அப்படியே மாறியது. இங்கு நீதி கிடைக்காது என தெரிந்து கொண்ட தோழர்கள்... ஏ.சி. வெள்ளதுரையிடம் ஓடினார்கள். தகவல் அறிந்து திடுக்கிட்ட பூமிகா... தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றாள். காப்பாற்றப்பட்டாள்.
"கல்லூரி மாணவியை இப்படிப் படம் பிடிச்சிருக்கானுங்களா?'’என பற்களைக் கடித்த ஏ.சி.வெள்ளதுரை... பூமிகா இருக்கும் இடத்துக்கே விரைந்தார்.’ ""பயப்படாம நடந்ததை எல்லாம் அப்படியே சொல்லும்மா?'' என அவர் கேட்க... கண்ணீரும் கம்பலையுமாக... தான் ஏமாந்த கதையை விவரிக்க ஆரம்பித்தாள் பூமிகா.
""முதல்ல பப்லுவின் அண்ணன் கார்த்திக் தான் என்னைக் காதலிப்பதா சொல்லித் துரத்தி னான். ஒரு கட்டத்தில் அவன் மீது இரக்கப்பட்டு நான் சம்மதித்தேன். சினிமா, பார்க்குன்னு என் னோடு சுத்தியவன்... ஒருநாள் தன் நண்பன் மணி கண்டனின் அறைக்கு அழைச்சிக்கிட்டுப் போனான். அங்க அவன் கூல்டிரிங்ஸ் கொடுத்தான். அதில் தூக்க மாத்திரை கலந்தது எனக்குத் தெரியாது. அதைக் குடிச்சிட்டு மயங்கிய என்னை.... சூறை யாடிட்டான். அப்ப எனக்குத் தெரியாமலே என்னை அப்பட்டமா அவன் படம்பிடிச்சிருக்கான். அந்த சம்ப வத்துக்குப் பின் சென்னைல வேலை கிடைச்சிருக் குன்னு போனவன்... என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் அவன் கொடுத்துட்டுப்போன செல்ஃபோனில் என் படத் தைப் பார்த்த அவன் தம்பி பப்லு... ஒரு நாள் என் னைத் தேடி காலேஜுக்கு வந்தான். "எங்க அண்ண னோட நீ இருக்கும் படம் செல்ஃபோன்ல இருக்கு. நான் கூப்பிடும் இடத்துக்கு நீ வரலைன்னா இதை உன் பிரண்டுக்கெல்லாம் அனுப்பி வச்சிடுவேன்'னு மிரட்டி... என்னை அதே மணிகண்டன் அறைக்கு அழைச்சிக்கிட்டுப் போனான். "எங்க அண்ணன் கைவிட்ட உன்னை... நான் கைவிட மாட்டேன். காரணம் உன்னை காதலிக்கிறேன்'னு சத்தியம் பண்ணினான். தயங்கிய என்னை பப்லு பலவந்தமா கற்பழிச்சான். அப்புறம் என் கண் எதிரில்.. அவன் அண்ணன் எடுத்த படத்தை பப்லு அழிச்சான். ஆனால் அவனும் படம் எடுத்து விட்டான். பிறகு, தன்னோட நண்பர்களும் என் படத்தைப் பார்த்துட்டதாச் சொல்லி... அவங்க அதை வெளியே சொல்லாம இருக்க... அவங்களுக்கும் நான் விருந்தாகணும்னு மிரட்டி... மணிகண்டனையும் ஜெகதீசனையும் என்னை வேட்டையாட வச்சான். அதோட இப்படி பல பெண்களை ஏமாத்தி எடுத்த படங் களையும் என்னிடம் பப்லு காட்டினான். அதில் எங்க தெரு பிள்ளைகளும் இருந்தாங்க. இப்படிப்பட்ட பாவிகளை சும்மா விடாதீங்க சார்''’என கதறினாள்.
பூமிகாவுக்கு தைரியம் சொல்லிவிட்டு வெள்ளதுரை புறப்பட... அதற்குள் ஜெய்ஹிந்த்புரம் காக்கிகள் பல சித்துவேலைகளை நடத்திவிட்டார்கள். அது என்ன?
சி.பி.எம்., மா.செ. அண்ணாதுரையே சொல்கிறார் “""நிறைய பள்ளிக்கூடப் பிள்ளைகளையும் கல்லூரி மாணவி களையும் இந்தப் பயல்கள் காதலில் வீழ்த்தி... அசிங்கமா படம் எடுத்திருக்கானுங்க. அந்தப் படங்களை ஆபாச இணையதளங் களுக்கு அவனுங்க வித்திருக்கலாம்ங்கிறது எங்க யூகம். காரணம் பப்லுவின் அண்ணன் சென்னைல ஒரு இணையதள அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறான். இந்த விவகாரத்தை போலீஸ் தீவிரமா விசாரிப்பதை பார்த்த பப்லுவின் அப்பா நாசர், தன் நண்பரான தி.மு.க. கவுன்சிலர் கேபிள் கண்ணன் மூலம் இன்ஸ்பெக்டர் ஜெயமுரளியை சரிபண்ணிட்டார். உடனே ஆபாசப்படங்கள் இருந்த பப்லுவின் செல்ஃபோன் மெமரி கார்டையே மாத்திட்டாங்க. இப்ப ஆபாச படமே எடுக்கலைன்னு சொல்லி... அவனுங்க மேல் ஈவ் டீஸிங் கேஸை மட்டும் போட்டு... சப் ஜெயிலுக்கு அனுப்பிவச்சிட்டாங்க. பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியா ஆக்கியிருக்கும் இந்த ஆபாசப் படக் கும்பலை தி.மு.க. ஆட்கள் காப்பாத்தறது மகா கொடுமை. இதை நாங்க சும்மாவிடமாட்டோம். அந்தப் பயல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காட்டி.... போலீஸைக் கண்டித்து... எங்க மாதர் சங்கம் பொது மக்களைத் திரட்டி... பெரிய போராட்டத்தை நடத்தும்'' என்றார் கொந்தளிப்பாய்.
மதுரை போலீஸ் கடு மையான நடவடிக்கையில் இறங்குமா?
Labels:
shockan
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment