
shockan.blogspot.com
"ஆம்பள வேட்டை ஆடுவேன் நானும்
ஆயத்தமாக இருந்துக்கடா...
ஆசைகள் இருந்தா அனுமதி வேண்டாம்
ஓடி நீ வந்து சேர்ந்துக்கடா...'
-என ஹைவே குயினாக சுஜிபாலா ஓடும் லாரியில் ஆடிப்பாடும் பாடல் காட்சி, "கோணங்கி கள்' படத்திற்காக சென்னை தாம்பரத்தில் இருந்து திண்டி வனம் வரை தேசிய நெடுஞ்சாலையில் நடு இரவில் நான்கு நாட்கள் படமாக்கப் பட்டது. இந்தப் பாடலை சிநேகன் எழுதியுள்ளார். பத்மலதா பாடியுள்ளார்.
உலகமயமாக்கப்பட்ட நிலையில், தங்களின் அதிகப் படியான தேவைகளுக்காக இளைஞர்கள் செல்லும் தவறான பாதைகள் சுட்டிக் காட்டப் படுவதோடு, அவர்களின் அவசரப் போக்கால் ஏற்படும் விளைவு களையும் படமாக்கி வருகிறார்கள்.
ரஞ்சித், லோகேஷ், சுரேஷ், சுர்ஜித் என நான்கு புதியவர்கள் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகியாக கேரள மாடல் ஜில்லு நடிக்கிறார்.
கதை- திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார் காந்தி மார்க்ஸ். எஸ்.பி. கண்ணன் வித்தியாசமான கோணத்தில் "கோணங்கிகள்' படத்தைத் தயாரித்து வருகிறார்.
No comments:
Post a Comment