



shockan.blogspot.com
நடிகை மனிஷா கொய்ராலாவுக்கும், நேபாளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்ராட்டுக்கும் இன்று (ஜூன் 19) நேபாளத்தில் உள்ள காத்மாண்டு நகரில் திருமணம் நடைபெற்றது.
திருமண விழா நேபாள இந்து வழக்கப்படி மூன்று நாட்கள் நடக்கும். திருமண வரவேற்பு ஒரு வாரத்தில் நடக்கிறது. இதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னைவிட 7 வயது குறைவான இளைஞரை மனீஷா திருமணம் செய்து குறித்து அவரிடம் கருத்து கேட்டபோது, இதுபற்றி எதுவும் கூற முடியாது என்றும், அதற்கு அவசியமும் இல்லை என்றும் இறுக்கமான பதிலைத் தந்துள்ளார்.
மணமகன் சாம்ராட் தகாலோ மனீஷாவை அடைவது என் பாக்கியம் என கூறியுள்ளார். மனீஷா திருமணத்திற்கு யாருக்கும் அழைப்பு அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment