
shockan.blogspot.com
சென்னை: தமிழையும், தமிழர்களையும் உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், இன்னாள் முதல்வர் கருணாநிதியும் எதுவும் செய்யவில்லை என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களை நேற்று சீமான் பார்த்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த போராட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். நாம் தமிழர் கட்சி சார்பில் ஆதரவு தெரிவிக்கவில்லை. தமிழன் என்ற முறையில் ஆதரவு தெரிவிக்கிறேன்.
இந்த போராட்டம் வழக்கறிஞர்கள் போராட்டமாக அல்லாமல் மக்கள் போராட்டமாக மாற வேண்டும்.
2006 ம் ஆண்டிலேயே மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்ற உத்தரவு வழங்கிவிட்டது. அந்த உத்தரவு தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னமும் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது வேதனை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இன்னாள் முதல்வர் கருணாநிதியும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, தமிழையும், தமிழக மக்களையும் உயர்த்த இவர்கள் இருவரும் எதுவும் செய்யவில்லை.பெயர்ப் பலைகைகளை தமிழில் மாற்ற எடுத்து வரும் நடவடிக்கை எல்லாம் வெறும் கண் துடைப்புதான்.
செம்மொழி மாநாட்டிற்கு இந்தியாவின் முதல் குடிமகள் வருகிறார். அவர் மூலமாக மாநாட்டிலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாநாட்டிலேயே உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி அளிக்கப்பட வேண்டும். அதற்காக தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment