
shockan.blogspot.com
கன்னட திரையுலகில் 14 வயதிலேயே கதாநாயகியாகி, பிரபலமானவர் நடிகை அமுல்யா. தமிழில் வெளியான காதல் படத்தின் கன்னட ரீ-மேக்கில் சந்தியாவின் வேடத்தில் நடித்தவர்.
அந்தப் படம் மெகா ஹிட் ஆனதையடுத்த தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இதற்காக பள்ளிப் படிப்பை நிறுத்தினார் அமுல்யா.
சமீபத்தில்இயக்குனர் ரத்னஜா இயக்கிய 'பிரேமிசம்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது அமுல்யாவும், ரத்னஜாவும் வரம்பு மீறி நெருக்கம் காட்டி வந்தனர்.
இந் நிலையில் இருவரும் லிப்-டு-லிப் முத்தம் கொடுத்துக் கொள்ளும் காட்சி அடங்கிய புகைப்படம் பெங்களூரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தை ரத்னஜாவே தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததாகவும், செல்போன் பழுதானதால் அதை சர்வீசுக்குக் கொடுத்தபோது, அதை செல்போன் சர்வீஸ் ஆசாமி டெளன்லோட் செய்து 'லீக்' செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக இந்தப் படத்தை வெளியிடாமல் இருக்க ரூ. 1 கோடி கேட்டு ஒருவர் ரத்னஜாவை மிரட்டியுள்ளார். மேலும் ரத்னஜாவும் அமுல்யாவும் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் வீடியோவும் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், ரத்னஜா பணம் தராததால் முத்தக்காட்சி புகைப்படத்தை அந்த ஆசாமி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ரத்னஜா கூறுகையில், முத்தக்காட்சி புகைப்படம் உண்மையானதல்ல. மார்பிங் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிடாமல் இருக்க என்னிடம் ரூ.1 கோடி கேட்டு பிளாக்மெயில் செய்தனர் என்றார்.
இது குறித்து நடிகை அமுல்யா கூறுகையில்,
இயக்குனர் ரத்னஜாவையும், என்னையும் சம்பந்தப்படுத்தி யாரோ வேண்டுமென்றே இப்படி ஒரு சதியை செய்துள்ளனர். எனது புகழை கண்டு பொறுக்க முடியாமல் சினிமா துறையை சேர்ந்த யாரோ தான் இப்படி ஒரு கீழ்த்தரமான படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தை தொலைக்காட்சியில் பார்த்தவுடன் எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் அது போன்று கீழ்த்தரமாக நடந்து கொள்பவள் அல்ல என்பது சினிமா உலகை சார்ந்த குறிப்பாக என்னை நன்றாக தெரிந்தவர்களுக்கு தெரியும்.
நான் நடித்து வெளியான எல்லா படங்களும் நன்றாக ஓடுவதால் பொறாமைப்பட்ட சிலர் வேண்டும் என்றே காட்சிகளை சித்தரித்து ஆபாச படத்தை வெளியிட்டு உள்ளனர். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதை அந்தப் படத்தை உன்னிப்பாக கவனித்தாலே நன்கு தெரியும்.
அந்த படத்தில் இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் பெண் நான் அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சதியை நான் சட்டரீதியாக சந்திப்பேன் என்றார் அழுதபடியே.
அருமை
ReplyDelete