shockan.blogspot.com
சென்னை பண்ணை வீட்டில் தெலுங்கு நடிகை தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியி்ல் காதல் விவகாரம் இருப்பதாகத் தெரிகிறது.
இந்த சாவைத் தொடர்ந்து தலைமறைவான நடன நடிகர் ஷான் மற்றும் பானு ஆகியோர் இன்று நீலாங்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் அருகே அரிச்சந்திரா காலனியில் மருவூர் அரசி கார்டன் என்ற பண்ணை வீட்டில் நடன நடிகர் ஷான் (28) என்பவரும் தெலுங்கு டிவி நடிகை சசிரேகாவும் (20) அறை எடுத்து தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் மதியம் இந்த அறையில் சசிரேகா தூக்கில் பிணமாக தொங்கினார். ஷான் அப்போது அறையில் இல்லை.
பிரேதப் பரிசோதனையில் சசிரேகா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
ஷான் தலைமறைவானார். கீழ்க்கட்டளையில் நடனப் பள்ளி நடத்தி வரும் ஷான், துணை நடிகைளுக்கு சினிமா சான்ஸ் வாங்கித் தரும் வேலையும் செய்து வருகிறார். சிரேகாவுக்கும் சான்ஸ் வாங்கித் தருவதாகக் கூறி அவ்வப்போது வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.
ஷானும் சசிரேகாவும் தங்கியிருந்த அறையில் பீர் பாட்டில்களும், ஆணுறைகளும் இருந்தன. இவர்கள் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் ஷானின் நண்பர்கள் 4 பேரும் பானு என்ற பெண்ணும் தங்கியிருந்தனர்.
சசிரேகா தூக்கில் தொங்கிய விவரம் வெளியே வந்தவுடன் இவர்களும் தலைமறைவாகிவிட்டனர். இதனால் இவர்களுக்கும் இந்த சாவுக்கும் தொடர்பிருக்கலாம் என்று கருதப்பட்டது.
சசிரேகாவை தனது நண்பர்களுடனும் உல்லாசமாக இருக்குமாறு ஷான் வற்புறுத்தியிருக்கலாம் என்றும் இதனால் ஏற்பட்ட தகராறில் சசிரேகா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
கீழ்க்கட்டளையில் உள்ள ஷானின் வீட்டை போலீசார் உடைத்து சோதனையிட்டபோது அங்கும் ஏராளமான ஆணுறை பொட்டலங்களும் மதுபான பாட்டில்களும் சிக்கின.
தினமும் இந்த வீட்டுக்கு பல பெண்கள் வந்து செல்வார்கள் என்று அண்டை வீட்டினர் தெரிவித்துள்ளனர்.
ஷானையும் தலைமறைவாக உள்ள பானு உள்ளிட்ட ஷானின் நண்பர்களையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந் நிலையில் ஷானும் பானுவும் இன்று இன்று நீலாங்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
பானு கூறுகையில், ஷானை சசிரேகா காதலித்து வந்ததாகவும், நடனம் கற்ற ஷானும் தான் பழங்கியதை தவறாக நினைத்த சசிரேகா, தனக்கும் ஷானுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதி தன்னுடன் சண்டை போட்டதாகவும்,
இந் நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment