Monday, June 7, 2010

சிங்கம் சூர்யாவுக்கு சிங்கக் குட்டி!


shockan.blogspot.com

சூர்யா - ஜோதிகா காதல் திருமணம் கடந்த 2006ல் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா, இல்லற வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புவதாக கூறிவிட்டு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இல்லதரசியாக இருந்து வருகிறார். இவர்களுக்கு 2007 ஆகஸ்டு 10 ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தியா என பெயரிட்டனர்.

தற்போது மீண்டும் அவர் கர்ப்பமாக இருந்தார். கடந்த ஜூன் 6ஆம் தேதி, திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஜூன் 7ஆம் தேதி அதிகாலை 4.04 மணிக்கு ஜோதிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போது கணவர் சூர்யாவும், குடும்பத்தினரும் மருத்துவமனையில் இருந்தனர்.



சூர்யாவுக்கு, அப்பா சிவக்குமார், தம்பி கார்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


குழந்தை பிறந்ததும் சூர்யா மகிழ்ச்சியானார். மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார். சக நடிகர் நடிகைகள்மற்றும் உறவினர்கள் செல்போனில் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சூர்யா ஜோதிகா தம்பதிக்கு குழந்தை பிறந்ததையொட்டி சூர்யா ரசிகர் மன்றத்தினர் இன்று திருவான்மியூரில் பட்டாசு வெடித்தனர். இனிப்புகளும் வழங்கினார்கள். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சூர்யா ரசிகர் மன்றத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சூர்யா தற்போது நடித்து வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் சிங்கம் படம் வெற்றியடைந்து உள்ளது. இந்நிலையில் சூர்யாவுக்கு சிங்கக்குட்டி (ஆண் குழந்தை) பிறந்துள்ளதால், இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளார்.

No comments:

Post a Comment