Wednesday, June 9, 2010
கலைஞரை பாராட்டிய ஜெ.! தி.மு.க.விடம் 45 சீட் கேட்ட பா.ம.க.!
shockan.blogspot.com
""ஹலோ தலைவரே... .... தே.மு. தி.கவை அ.தி.மு.க. கூட்டணிக்குள்ளே கொண்டு வர்றதுக்கு சி.பி.எம். எடுக்கும் ரகசிய முயற்சிகள் பற்றி நம்ம நக்கீரன்தான் முதலில் சொன்னது. இப்ப அந்த விவரத்தை கட்சியின் மாநிலச் செயலாளரே வெளிப் படையா சொல்லியிருக்காரே!''
""மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து போராட்டம் நடத்துறதுக்காகத்தான் தே.மு.தி.க.வோடு கைகோர்ப்பதாகவும், தேர்தல் கூட்டணி பற்றி இப்ப எதுவும் பேசலைன்னும் சி.பி.எம். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சொல்றாரே?''
""தே.மு.தி.க.வை நம்மோடு சேர்த்துக்கலாம்னு விலைவாசி உயர்வுக்கு எதிரான பாரத் பந்த்தின்போது தோழர்கள் சொன்னப்ப, ண் ஹம் ய்ர்ற் ச்ர்ழ் ண்ற்னு மறுத்தவர் ஜெ. இப்ப என்ன மாற்றம் ஏற்பட்டிருக்குதுன்னு தோழர்கள் தரப்பிலும் தே.மு.தி.க. தரப்பிலும் விசாரித்தேன். பண்ருட்டிராமச்சந்திரன், ஆஸ்டின் போன்ற பழைய அ.தி.மு.க.வினரோடு தே.மு.தி.க.வுடனான கூட்டணி பற்றி பேசுறதை ஜெ. விரும்பலை. தோழர்கள் மூலம் இதை தெரிஞ்சுக்கிட்ட விஜயகாந்த் தன் சார்பில் தன் மச்சான் சுதீஷ், சகலை ராமச்சந்திரன், தொழிலதிபர் மாஃபா பாண்டியராஜன் மூணுபேரையும் கூட்டணி பற்றி பேச நியமிச்சார். இவங்க மூணு பேரும் வைகோ, தா.பா, ஜி.ராம கிருஷ்ணன் இந்த மூணுபேர்கிட் டேயும் தொ டர்ந்து பேசிக் கிட்டிருக்காங்க.''
""பேச்சு வார்த்தையில் என்ன முன்னேற்றம்?''
""தென்மாவட்டத்தில் நடந்த ஒரு திருமணத்தின்போது, பந்தி நேரத்தில் தோழர்களும் விஜயகாந்த் தரப்பும் பேசியதில் முன்னேற்றம் தெரிந்திருக்குதாம். அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்களோடும் தே.மு.தி.க.வினர் பேசியிருக்காங்க. போன சட்டமன்றத் தேர்தலின் போதே, அ.தி.மு.க. தரப்பிலிருந்து தே.மு.தி.கவுக்கு 35 டூ 45 சீட்டுன்னு பேச்சு வார்த்தை நடந்த தையும் அதை சசிகலாவும் சுதீஷுமே நடத்தி, கனியாமல் போனதையும் சொல்லியிருக்காங்க. எம்.பி. எலக்ஷனின்போதும் 9 சீட் வரை பேசியும் முடியலை. கூட்டணின்னு கூப்பிட்டு இழுத் தடித்து, சீட் தராமல் கழட்டிவிட்டு, எந்தப் பக்கமும் தே.மு.தி.க. போகமுடியாத நிலைமையை அ.தி.மு.க. தலைமை உருவாக்குவதா கேப்டன் தரப்புக்கு சந்தேகம். இதை தோழர்கள்கிட்டேயும் சொல்லியிருக்காங்க. இப்ப 70, 80 சீட்டுகளுக்கு குறையக்கூடாதுங்கிறதுதான் தே.மு.தி.கவின் நிலை.''
""அ.தி.மு.க. தரப்பு என்ன சொல்லுது?''
""அ.தி.மு.க. தனி மெஜா ரிட்டியோடு ஜெயிக்கணும்னா 140 இடங்களிலாவது போட்டி போடணும். அதனால தே.மு. தி.க. கேட்கிற அளவுக்கு சீட் தரமுடியாதுன்னும் 50 சீட்டுக்கு கம்மியா கரைச்சுக் கொண்டு வாங்கன்னும் தோழர்கள்கிட்டே சொல்லியிருக்காங்க. போராட்டத்துக்கு அழைப்புங்கிற பேரில், விஜய காந்த்தை கூட்டணிக்குள் கொண்டு வர நினைக்கும் சி.பி.எம். தரப்பும் ஜெ. கொஞ்சம் இறங்கிவரட்டும், விஜயகாந்த் கொஞ்சம் விட்டுக் கொடுக்கட்டும்னு சி.பி.எம். தோழர்கள் முயற்சி பண்ணிக்கிட்டிருக்காங்க.''
""கூட்டணி சம்பந்தமா பா.ம.க. வட்டாரத்திலும் ஆலோசனை நடந்திருக்குதே? கோ.க.மணி, வேலு, வேல்முருகன் ஆகியோர் மறுபடியும் கலைஞரை சந்தித்தாங்களே...?''
""ராஜ்யசபா சீட்டுக்காக கடைசி நேரம் வரை பா.ம.க ட்ரை பண்ணியது. கோ.க.மணியை கலைஞரிடம் அனுப்பி, தி.மு.க. வேட்பாளர்களில் ஒருவரை வித்ட்ரா செய்யவைத்து, அதை அன்புமணிக்கு கொடுக்கச் சொல்லணும்னு முயற்சி நடந்தது. நாமினேஷன் செய்த பிறகு வித்ட்ரா செய்வது கஷ்டம்னு தி.மு.க. தரப்பில் தெளிவா சொல்லிட்டதால, ஜெ.வை மூவ் பண்ணி ராஜ்யசபா சீட் வாங்கும் முயற்சிகளும் நடந்தது. பா.ம.கவுக்காக ஜெ.விடம் பேசியவர் சோ. தங்களுக்கு 1 சீட் தரமுடியுமான்னு கேட்டு சொல்லும்படி பா.ம.க.வினர் சொன்னாங்க. அதைத்தான் பேச வந்தேன்னு சோ சொல்ல, ஜெ. இறுக்கமான குரலில் பேசினாராம். போன எம்.பி தேர்தலில் அவங்க கேட்ட 7 சீட் தந்தோம். எதிலேயாவது ஜெயிச்சாங்களா? பெரியளவில் அவங்களுக்கு செல்வாக்கு இல்லை. பென்னாகரம் இடைத்தேர்தல் விவகாரம் தனி. அது ஜாதிரீதியானது. அதுவே தமிழகம் முழுக்க இருக்கும்னு கணக்கு போட்டா அது தப்புன்னு ஜெ. சொல்லி யிருக்கிறார். அதற்கப்புறம்தான், திங்கட்கிழமையன் னைக்கு கலைஞரிடம் போராடி அப்பாயிண்ட்மென்ட் வாங்கியது பா.ம.க தரப்பு.''
""என்ன பேசப்பட்டதாம்?''
""ஏற்கனவே அ.தி.மு.க.கிட்டே 40 சீட்டு, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடுன்னு பேரத்தை நடத்துவதுன்னு பா.ம.க தீர்மானித்திருப்பதைப் பற்றி பேசினோம். இப்ப தி.மு.க. தலைவரை சந்தித்தப்ப, பா.ம.க.வின் பழைய வாக்கு கணக்குகளோடு போன இரண்டாம் கட்டத்தலைவர்கள், 80 தொகுதியில் பா.ம.க. ஆதரவில்தான் வெற்றி பெறமுடியும். அதனால் எங்களுக்கு 45 சீட் வேணும்னு சொல்லியிருக்காங்க. இது சம்பந்தமா கட்சியினரோடு கலந்துபேசி சொல்றேன்னு கலைஞர் சொல்லிட்டாரு. இதையடுத்து நிர்வாகிகளுடன் ஆலோசித்த ராமதாஸ், யாரோடு கூட்டணின்னு இப்ப எதுவும் வெளிப்படையா முடிவெடுக்க வேண்டாம். நமக்கு செல்வாக்குள்ள தொகுதி களை ஸ்ட்ராங் பண்ணுவோம். தேர்தல் நேரத்தில் கூட்டணியை முடிவு பண்ணிக்கு வோம்னு சொல்லியிருக்கிறார்.''
""ம்...''
""கட்சிக்காரங்கிட்டே ஜெ. பேசுறப்ப, நம்மோடு பா.ம.க. சேரக்கூடாதுன்னு நினைச்சி, பா.ம.கவுக்கு கருணாநிதி ராஜ்யசபா சீட் கொடுத்திடுவார்னு நினைச்சேன். 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் தருவேன்னு அவர் அறிவித்தது அரசியலைப் பொறுத்தவரைக்கும் நல்ல முடிவுதான்னு சொன்னாராம்.''
""அ.தி.மு.க.வின் ராஜ்யசபா வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலுக்கு ஜெ.வே நேரில் வந்ததும் நல்ல மாற்றம்தானே?''
""வேட்பாளர் பட்டியல் இப்படி மாறிவிட்டதேங்கிற அதிர்ச்சியிலிருந்து டாக்டர் வெங்கடேஷ் இன்னும் மீளலையாம். எல்லாத்துக்கும் காரணம், எம்.நடராஜன் தம்பி ராமச்சந்திரனோட மகன் திருமண வர வேற்புதான்னு மன்னார்குடி தரப்பில் சொல்றாங்க. சென்னையில் நடந்த திருமண வரவேற்புக்கு ஜெ. வந்தார். அங்கே கட்சி நிர்வாகிகள், முன்னாள் மந்திரிகள், இந்நாள் எம்.எல்.ஏ.க்களெல்லாம் இருப்பதை பார்த்ததும் அவரோட முகம் மாறிடிச்சி. வரவேற்பு முடிந்து வெளியே வந்தப்ப சசிகலாகிட்டே, உங்க சொந்தக்காரங்களை வச்சுதான் ஃபங்ஷன் நடத்துறதா சொல்லியிருந்தாங்க. கட்சிக்காரங்க எல்லோரையும் வரவச்சிருக் கீங்களேன்னு கேட்டிருக்கிறார். யாருக்கும் பத்திரிகை கொடுக்கலை. நீங்க வர்றது தெரிஞ்சதால வந்திருக்காங்க அக்கான்னு சசிகலா சொல்லியிருக்கிறார். இருந்தாலும் ஜெ.வுக்கு சந்தேகம் தீரலை. மறுபடியும் மன்னார்குடி டீம் ஏதாவது ப்ளான் பண்ணு தோங்கிற டவுட்டில்தான் வெங்கடேசுக்கு ஜெ. சீட் தரலையாம். கல்யாணத்தை ஆடம்பரமா நடத்தவேணாம்னு சொன்னேனே கேட்டீங்களான்னு தன் சொந்தங்களை சசிகலா சத்தம் போட்டாராம்.''
""அ.தி.மு.க. சார்பில் இரண்டு பேருக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்குதே... அதுக்கு என்ன காரணம்?''
""முத்துசாமி தி.மு.க. பக்கம் வந்ததால, கவுண்டர் சமுதாயத்தினரை சரிப்படுத்த கே.வி.ராமலிங்கத்துக்கு சீட் கொடுக்கப் பட்டிருக்குது. இவர் ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு எதிரா அரசியல் செய்பவர். முத்துசாமி இல்லாத நிலையில், செங்கோட்டையன் கை ரொம்பவும் ஓங்கிடக்கூடாதுன்னு சசிகலாதான் ராமலிங்கத்துக்கு சிபாரிசு செய்து சீட் வாங்கித் தந்திருக்கிறார்.''
""மனோஜ்பாண்டியன்?''
""தி.மு.க. மந்திரிகள் மேலே 2001-ல் ஜெ ஆட்சியில் போட்ட சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து எல்லோருமே விடுதலையாயிட்டாங்க. இதை எதிர்த்து அ.தி.மு.க. வக்கீல்கள் ஹைகோர்ட்டில் மேல்முறையீட்டுக்குப் போனப்ப, நீதிபதி எலீப் தர்மராவ் கொடுத்த ஒரு தீர்ப்பை மேற்கோள்காட்டி, வக்கீல்கள் அப்பீல் பெட்டிஷன் போடமுடியாதுன்னு டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. எலீப் தர்மராவ் தீர்ப்புங்கிறது, ஆளைக் காண வில்லைங்கிற ஹேபியஸ் கார்பஸ் மனு சம்பந்த மானதுதான்னும், சொத்துக் குவிப்பு வழக்கிற்கு இது பொருந்தாதுன்னும் சுப்ரீம்கோர்ட்டில் மனோஜ்பாண்டியன் வாதாடியதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்பா தி.மு.க. மந்திரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி யிருக்குது. இதுதான் மனோஜ்பாண்டியனுக்கு சீட் கிடைத்ததோட பின்னணி.''
""காங்கிரசில் சுதர்சன நாச்சியப்பனுக்கு சீட் கிடைத்த பின்னணி?''
""ஒற்றை சீட்டுக்கு காங்கிரசுக்குள் ஏகப்பட்ட போட்டிகள், பலத்த சிபாரிசுகள். அதனால காங்கிரஸ் தலைமை, இந்தியா முழுவதும் காலியாகும் காங் கிரசுக்கு சாதகமான ராஜ்யசபா இடங்களுக்கு பழைய ஆட்களையே நிறுத்துவதுன்னு முடிவு செய்தது. தமிழ்நாட்டில் உள்ள சீட், சுதர்சன நாச்சியப்பனுக்கு கிடைத்திருக்குது. தலைவர் பதவி கூட வேணாம், எம்.பி. பதவி வேணும்னு காய் நகர்த்திய தங்கபாலு, தனக்கு 35 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்குதுன்னு எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்தோடு மேலிடத் திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் சட்ட மன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கையெழுத்தும் இருப்பதைப் பார்த்த அகமது பட்டேல், இவர் வாசனோட ஆதரவாளராச்சே.. தங்கபாலுவுக்கு சப்போர்ட் பண்ணி கையெ ழுத்து போட்டிருக்காரேன்னு யோசிச்சிருக் கிறார்.''
""அதானே?''
""இதை வாசனின் கவனத்திற்குக் கொண்டுபோக, இந்த கடிதத்தை பரிசீலிக்க வேணாம்னு வாசன் சொல்லிட்டாராம். நான் எந்தக் கையெழுத்தும் போடலைன்னு சுதர்சனம் சொல்லியிருக்கிறார். எப்படி அவர் கையெழுத்து இந்தக் கடிதத்தில் வந்தது, என்ன பின்னணின்னு காங்கிரஸ் ஏரியாவில் ஆராய்ச்சி நடக்குது. அதில், ஒரு மெடிக்கல் கல்லூரி விவகாரம் சம் பந்தப்பட்டிருப்பது தெரிய ஆரம்பித் திருக்குதாம்.''
""ஓ...''
""ஈரோடு முத்துசாமி தி.மு.க.வில் சேர்ந்த தையடுத்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி 10-ந் தேதி தி.மு.க.வில் சேர முடிவெடுத்துவிட்டார். தன்னோடு ஒரு படையையும் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதற்காக மாவட்டம் முழுக்க ஆள் சேர்த்துக்கிட்டிருக்காராம். சின்னசாமியின் மகன் ஒரு டாக்டர். ரியல் எஸ்டேட் பிசினசிலும் கிங். தி.மு.க. முன்னாள் மா.செ. வாசுகிமுருகேசனோடு சேர்ந்து பிசினஸ் செய்தவர், இப்போதும் தி.மு.க. புள்ளி களோடு பிசினஸ் தொடர்பு வச்சிருக் கிறார். அந்த லிங்க்கில்தான், ஸ்டாலின் மகன் உதயநிதி மூலம் தி.மு.க.வுக்கு வர்றாராம் சின்னசாமி.''
""தி.மு.க.விலிருந்து கட்டம் கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் என்.கே. கே.பி.ராஜா மீண்டும் கட்சியில் சேர்த் துக்கொள்ளப் பட்டிருக்கிறாரே?''
""ராஜாவுக்காக மத்திய இணை யமைச்சர் காந்திசெல்வன் தொடர்ச் சியா ஸ்டாலின்கிட்டே சிபாரிசு செய்திருக்கிறார். கலைஞர் பிறந்த நாளுக்காக சென்னை வந்த பவானி சாகர் தி.மு.க எம்.எல்.ஏ. ஜீவா ஓ.சுப்ரமணியத்தை தனியே கூப் பிட்ட ஸ்டாலின், உங்களை மிரட் டியதாலதான் ராஜாவை நீக்கினோம். இனி எந்தத் தவறும் செய்யமாட்டேன்னு ராஜா மன்னிப்பு கேட்கிறார். அவரை மீண்டும் சேர்ப்பதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்குதான்னு கேட்க, தலைமை எடுக்கும் முடிவுதான்னு எம்.எல்.ஏ. சொல்லிட்டாரு. ஈரோடு மாவட்ட தி.மு.க.வினரும் இதே பதிலைச் சொல்ல, இதையடுத்து ராஜாவிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியிருக்கிறார் ஸ்டாலின். இது தான் உனக்கு கடைசி வாய்ப்பு. இனிமேலும் உன் மேலே புகார் வந்தால் அவ்வளவுதான். இப்பவும் தி.மு.க.வில் உறுப்பினர் மட்டும்தான். எந்தப் பொறுப்பும் இப்போதைக்கு கிடையாதுன்னு சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க.விலிருந்து முத்துசாமி தி.மு.க.வுக்கு வந்துள்ள நிலையில், தி.மு.க.விலிருந்த ராஜா, வேறுகட்சிக்குப் போயிடக்கூடாதுன்னு தான் அவரை மறுபடியும் கட்சியில் சேர்த் திருக்காங்களாம்.''
""தி.மு.க.வின் ஊழல் பற்றி பிரச்சாரம் செய்யுங்கன்னு அ.தி.மு.க.வினருக்கு ஜெ. கட்டளையிட, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிலிருந்து சேலம்-நாமக்கல் மாவட்டக்காரர்கள் தி.மு.க.வில் சேர்ந்த விழாவில் பேசிய கலைஞர், ஊழல்னு சொன்னாலே ஒட்டியாணம் அணிந்த உடல்தான் ஞாபகத்துக்கு வரும்னு பதிலடி கொடுத்தார். இரு தரப்பிலும் ஊழல் தாக்குதல்கள் தொடரும்போல இருக்குதே?''
""ஜெ.வின் சிறுதாவூர் நில ஊழல் சம்பந்தமா தி.மு.க. போராட்டம் நடத்தும் தேதி பற்றி ஆலோசிப்பதா கலைஞர் ஏற்கனவே சொல்லியிருந்தார். தி.மு.க. ஊழல் பற்றி, தன்னோட தலைமையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த ஜெ. திட்டமிட்டிருக் கிறார். கொடநாடுக்கு போய்த் திரும்பியபிறகு இந்தப் போராட் டம் நடக்குமாம்.''
நன்றியை சொல்ல வந்த ராஜபக்சே!
ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றுகுவித்த புதிய ஹிட்லர் ராஜ பக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழுணர்வு அமைப்புகள் கடந்த 8-ந்தேதி தமிழகம் முழுவதும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை எழுச்சி யோடு நடத்தின.
வெளிப்படையாக கறுப்புக்கொடி காட்ட முடியாத தமிழர்கள் மனதுக்குள் கொடுங்கோலன் ராஜபக்சேவை சபித்தார்கள். யுத்தம் முடிந்தபிறகு அண்டை நாடுகளுக்கு செல்லாமல் இருந்த ராஜபக்சே, முதன் முதலாக இந்தியாவுக்கு வருவது ஏன் என வெளியுறவுத்துறையின் டெல்லி அதி காரிகளிடம் கேட்டபோது, இறுதி யுத்தத்தின்போது இந்தியா செய்த உதவிகளுக்காக நன்றி சொல்ல வந்தார் ராஜபக்சே. இந்தியத் தரப்பிடம் அவர் பேசும்போது, நான் தமிழர்களுக்கு எதுவும் செய்யமாட்டேன் என்று முன்கூட்டியே முடிவுக்கு வந்துவிடாதீர்கள். இலங்கை யில் உள்ள தமிழர்களுக்கு பொருளாதார வசதி செய்து, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவேன்.
அதற்கு எனக்கு காலஅவகாசம் வேண்டும். அடுத்ததாக, இலங்கையின் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப் போகிறோம். அதில் தமிழர்களுக்கான உரிமைகள் கிடைக்கும் என வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். போர் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் இனஒடுக்கலை தொடர்ந்து கொண்டி ருக்கும் ராஜபக்சேவின் தேன் தடவிய வார்த்தைகளால் இந்தியா மீண்டும் ஏமாறப்போகிறது என்கின்றன உலக ளாவிய மனிதஉரிமை அமைப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment