அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து நாட்டில் நல்லாட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அதற்காக ஒருவார கால அவகாசம் வழங்கப்படுமென அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
எதிர்க்கட்சி இதற்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் பாராளுமன்றத்தின் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று எதிர்கால நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்க மளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
வரலாற்றில் முன்னெப்போதுமில் லாதவாறு 60 வீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். இது நன்றியுணர்வுள்ள நாட்டு மக்கள் அவருக்கு வழங்கிய கெளரவ மாகும். இவ்வெற்றியையடுத்து நாட்டை சமாதானத்திலும் அபிவிருத்தியிலும் முன்னெடுப்பதே எதிர்கால நோக்கமாகும். நல்லாட்சியை ஏற்படுத்தி நாட்டைக் கட்டியெ ழுப்புவதில் எதிர்க்கட்சி எம்முடன் ஒத்துழைக்க முடியும். அரசியல மைப்பில் திருத்தம் கொண்டு வருவதில் அவர்கள் எமக்கு உதவ முடியும்.
எவ்வாறெனினும் பாராளுமன்றத் தேர்தலில் எமக்கு நாட்டு மக்கள் மூன்றி லிரண்டு பெரும்பான் மையைப் பெற்றுத்தருவர் என்பது உறுதி. நாட்டின் நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அங்கீகாரத்தை நாம் மக்களிடம் கோருவோம். மக்கள் அதற்கு பூரண ஆதரவு தருவது உறுதி.
சகல மக்களுக்கும் பொருத்த மானதான நிர்வாகத்தை ஏற்படுத்துவதே ஜனாதிபதியின் நோக்கம். எதிர்வரும் நவம்பர் மாதம் வரையிலான அவரது முதலாவது பதவிக் காலத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். அடுத்து வரும் ஆறு வருடங்களில் நாட்டில் நல்லாட்சியை அவர் ஏற்படுத்துவார்.
இதேவேளை, இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் யானையா - அன்னமா என்ற பிரச்சினையும் எதிர்க்கட்சியினருக்கு உள்ளது. சாதாரண மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டால் இன்னும் ஐந்து தேர்தல்களில் கூட ஐ. தே. க. வால் வெல்ல முடியாமற் போகும்.
இம்முறை தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஜனாதிபதிக்கு ஓரளவு ஆதரவு வழங்கியுள்ளனர். கடந்த காலங்களை நோக்குகையில் சிறுபான்மையினர் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ பெருமளவு ஆதரவு வழங்கியதில்லை. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவு வழங்கினர். இம்முறை எம்முடனிருந்த தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒப்பந்தமே திசை திருப்பியது.
வாக்களிப்பை நோக்குகையில் புலிகளின் தமிbழ எல்லைக்குள் வாழும். மக்களே எதிர்க்கட்சிக்கு வாக்களித்துள்ளமை தெரிகிறது.
அரசாங்கம் தற்போதுதான் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கிணங்கவே டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களை அரசாங்கம் நியமித்து செயற்படுகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)
No comments:
Post a Comment