Friday, January 8, 2010

ஜக்குபாயை கொன்னுட்டாங்க...!'' -நடிகை கதறல்!



""மாப்ளே... ஜக்குபாய் எப்படி இருந்துச்சு?

''""ஜக்குபாய் வெரி பிக் பாய்.''""


இது அந்தப் படத்துல கவுண்டமணி பேசுற டயலாக்ல...'


'-"ஹேப்பி நியூ இயர்' நள்ளிரவில் பீரை நுரை தள்ளிக்கொண்டாடிய நண்பர்கள் மறுநாள் "பார்த்த சங்கதி'யை ஒருவருக் கொருவர் பகிர்ந்துகொள்ள... அந்த டீமில் ஒருவருக்கு ஒன்றும் புரியவில்லை. நண்பர்கள் விளக்கினார் கள்.


""அதான் நெட்ல 30-ந் தேதியே ஜக்கு பாய் ரிலீசாயிருச்சுல்ல. டி.வி.டி.கூட மார்க் கெட்டுக்கு வந்துருச்சுல்ல...'' என்று சிரித்தார் கள்.


நண்பர்கள் நம்பவில்லை.""அய்யய்ய... நம்பமாட்டியாடா நீ? கதையைச் சொல்றேன் கேட்டுக்க.


சரத் ஒரு ஐ.பி.எஸ். ஆபீஸர். இந்தியாவுல அவரு பேரு ஜெகன்னாதன். ஆஸ்திரேலியாவுல ஜக்குபாய். சரத்துக்கு மகளா வர்றாங்க ஸ்ரேயா. படம் முழுக்க கத்திக் கத்திப் பேசுற பழைய கவுண்டமணி வர்றாரு. அவரு மேக்கப்பும் ஹேர் ஸ்டைலும் சகிக்கல.


அவருகூட பெரிய போலீஸ் ஆபீசருதான். ஜோக்கா இருக்குல்ல. கவுண்டமணி அடிக்குற லூட்டியப் பார்த்துட்டு அந்தப் படத்துல வர்ற ஒரு கேரக்டர் "இவன் திருந்தவே மாட்டானா? ட்ரண்ட மாத்திக்கவே மாட்டானா?'ன்னு கலாய்க்குற மாதிரி ஸீனெல்லாம் இருக்கு. முறைப்படி ரிலீசாகுறதுக்கு முன்னாலயே எவனோ ஜக்குபாய் முழுப்படத்தையும் லேப்லயிருந்து சுட்டிருக்கான். அத யாரோ ஒருத்தன் நெட்ல ஏத்திவிட்டிருக்கான். இதுக்கும் காரணம் இல்லாமலா இருக்கும்?'' என கவுண்டமணி பாணியிலேயே அவர்களும் சத்தமாகப் பேசினர்.
2010 பிறக்கும்போதே தமிழ் டொரண்ட் . நெட் நேயர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அவ்வலைத் தளத்தில் விரிந்தது ஜக்குபாய். இச்சேவையைச் செய்த அந்தப் "புண்ணியவான்' தன் பெயரை த்லோகா என்று பதிவு செய்திருந்தான். இதை டொரண்ட் ஃபைலாகவும், அதை உபயோகிக்கத் தெரியாதவர்களும் ஆன்லைனிலேயே ஸ்ட்ரீமிங் வீடியோவாகவே பார்க்கவும் வசதியாக ஏற்பாடு செய்திருந்தான்.
சுமார் இரண்டரை மணி நேரம் ஓடும் ஜக்குபாயின் கதைக்களம் ஆஸ்திரேலியா. போலீஸ் அதிகாரியான சரத்குமார் கடமைக்காக தன் காதல் மனைவியையே இழக்கிறார். பிறகு தன்னை அப்பா என்றறியாத மகள் ஸ்ரேயாவோடு பாசப் போராட்டம் நடத்துகிறார்.
கடத்தல்காரனாக சித்தரிக்கப்பட்டிருக்கும் வில்லனை க்ளைமாக்ஸில் ஹெலிகாப்டரில் பறந்து கொன்றுவிடுகிறார் சரத்குமார். நிஜத்திலோ... ரிலீஸ் தேதி அறிவிக்கும் முன்பே, ஆதாயத்துக்காக ஜக்கு பாயை வலைத்தளம் வரை கடத்திய நிஜ வில்லனால் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது அந்த சினிமா டீம்.ரிலீசுக்கு மறுநாள் தியேட்டர் பிரிண்ட்டாக திருட்டு வி.சி.டி. வருவதெல்லாம் வழக்கத்தில் உள்ளதுதான். ரிலீசுக்கு முதல்நாள் கள்ளச்சந்தையில் "ஜீன்ஸ்' வெளியானபோது அப்போது திரையுலகமே கொந் தளித்தது. ஜக்குபாய் விவகாரம் அப்படியல்ல. டப்பிங், எடிட்டிங்கெல்லாம் முடிந்து ரீ-ரிக்கார்டிங்கில் பண்ணாத இ.எப்.எக்ஸ். பிரதியை கொஞ்சம் கொஞ்சமாக எட்டு பாகமாகத் திருடி, முன்கூட்டியே வெளியிட்டுவிட்டார்கள். ஜக்குபாய் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் பேசினோம்.""எடிட்டிங்கே முடியாத, முழுமை யில்லாத வெர்ஷன் அது. ரிலீஸ் தேதிகூட இன்னும் ஃபிக்ஸ் பண்ணல.
அதுக்குள்ள வெளியேத்திட்டாங்க. இது புகாராகி, சி.எம். உத்தரவு போட்டு பெரிய அளவுல இன்வெஸ்டிகேஷன் நடந்துகிட்டிருக்கு. யாரு இத பண்ணுனாங்கன்னு ராதிகாவுக்கும் சரத்குமாருக்கும் தெரியும். ஒரு வருஷம் ஒர்க் பண்ணுன படம். என்னோட ஜக்குபாய அநியாயமா கொன்னுட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. டப்பிங், எடிட்டிங், ரீ-ரிக்கார்டிங்ன்னு ஒவ்வொரு இடமா தூக்கிட்டுப் போற தொழில் இது. இப்ப யாரை நம்புறதுன்னு தெரியல.'' -ரொம்பவும் நொந்துபோய் சொன்னார்.
இன்னொருபுறம் ""முதல்ல 5 கோடி ரூபாய ஜீ.டி.வி.காரங்ககிட்ட வாங்கித்தான் இந்தப் படத்த தயாரிக்க ஆரம்பிச்சாங்க ராதிகா. அப்புறம் படத்த முடிச்சிட்டு செலவானது 17 கோடி... இன்னும் 12 கோடிய செட்டில் பண்ணுங்கன்னு கேட்டிருக் காங்க. ஜீ.டி.வி. தரப்பிலோ "சரத்குமார் பட மெல்லாம் 17 கோடி ரூபாய்க்கு எப்படி போணி ஆகும்? 5கோடி போனாலும் போகட் டும் ஆள விடு'ன்னு ராதிகாவ நோஸ்கட் பண்ணிட்டாங்க. இந்த சண்டையாலதான் அதுவரைக்கும் பேப்பர்ல வந்துக்கிட்டிருந்த ஜக்குபாய் விளம்பரம்கூட நின்னுபோச்சு.
இதுல ஏதாச்சும் ஒரு பின்னணிலகூட இந்த குற்றம் நடந்திருக்கலாம்'' என்று சந்தேகம் கிளப்புகிறார்கள். ஜக்குபாய் தயாரிப்பாளர் ராதிகாவை தொடர்புகொண்டோம்.""ஜீ.டி.வி.காரங்க பிரச்சினை, அது தனியா போய்க்கிட்டிருக்கு. மியூசிக் இல்லாம, சரியா டப்பிங் இல்லாம ஜக்குபாயை திருட்டுத்தனமா வெளியேத்தி சினிமா தொழிலுக்கே பெரிய துரோகம் பண்ணிட்டாங்க. தவறு எங்கே நடந்துச்சுன்னு இப்ப கண்டுபிடிச்சாச்சு'' என்றார் கொதிப்புடன்.விதவிதமான திருட்டுக்களால் திணறிக்கொண் டிருக்கிறது திரையுலகம்.

No comments:

Post a Comment