shockan.blogspot.com
போர்டு மற்றும் மாஸ்டா நிறுவனங்கள் சீனாவில் கூட்டாக தயாரித்து விற்பனை செய்த 2,30,000 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்தக் கார்களின் மென்பொருளில் உள்ள சிக்கலைச் சரி செய்வதற்காகவே இந்த திரும்பப் பெறல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்டும், மாஸ்டாவும் இணைந்து சீனாவில் சாங்கன் ஆட்டோமொபைல் எனும் நிறுவனத்தை நடத்தி வருகின்றன. சாங் - கிங் எனும் நகரில் இதன் தொழிற்சாலை உள்ளது
கடந்த ஆகஸ்ட் 2008-ம் ஆண்டுதான் இந்த நிறுவனங்கள் தங்களின் 2,36,643 ஃபோகஸ் ரக கார்களை திரும்பப் பெற்றன. இந்த கார்களின் எஞ்ஜினில் ஏற்பட்டுள்ள மென்பொருள் கோளாறு காரணமாக வாடிக்கைாயாளர்கள் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
எனவே இப்போது மேலும் 230000 கார்களை திரும்பப் பெறுவதாக தங்கள் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment