Saturday, June 5, 2010

ஸ்ரீரவிசங்கர் ஆசிரமத்தில் காதல் கலாட்டா!


shockan.blogspot.com

ஒரு புல்லட்; பல கதைகள் என்று சொல்லும் அளவிற்கு... ரவிசங்கர் குருஜி ஆசிரம துப்பாக்கிச் சூடு விவகாரத்தைத் தோண்டத் தோண்ட பல தில்லாலங்கடி விவகாரங்கள் வெளியே வந்தபடியே இருக்கிறது.

"ஆசிரமத்தில் யார் தான் சுட்டிருப்பார் கள்?' என நாம் ராம்நகர் டி.எஸ்.பி. தேவராஜிடம் கேட்ட போது ""அந்த ஆசி ரமத்தில் வெளிநபர்கள் யாரும் அனுமதி இல்லாமல் நுழையவே முடியாது. எனவே வெளி நபர்களின் அச்சுறுத்தல் ரவிசங்கருக்கு இருப்பதாகக் கருத முடியாது. உள்ளேதான் ஏதோ கோளாறு'' என்றபடி புன்னகைத்தார்.

மத்திய அமைச்சர் ப.சி.யும் "துப்பாக்கிச் சூடு நடந்தபோது ரவிசங்கர் அங்கே இல்லை. அதனால் அவரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படவும் இல்லை. ஆசிரமத்தில் ஏதோ பிரச்சினை என்பதாகத் தகவல். விசாரணை நடந்துகொண்டிருக்கிறது' என்று சொல்ல... இதைக்கண்டு எரிச்சலான ரவிசங்கர்...

’""போலீஸ் சொல்வதையே ப.சி. சொல்லிக்கொண்டிருக்கிறார். சம்பவம் நடந்தபோது ஸ்பாட்டில் போலீஸ் இல்லை. நாங்கள்தான் இருந்தோம். எங்களுக்குத் தெரியாதா? சுட்டவனை நான் மன்னித்துவிட்டேன்'' என்று... தனக்குத்தான் குறிவைக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முயல்கிறார்.

விசாரணைத் தரப்பு சொல்வதுபோல்... ஆசிரமத்திற்குள் தான் பிரச்சினையா என பெங்களூரில் லேண்ட் ஆகி... துருவ ஆரம்பித்த நமக்கு... தலை கிறுகிறுக்கும் அளவிற்கு அதிரடித் தகவல்கள் நிறையவே கிடைத்தன. கனகபுரா பகுதியில் இருக் கும் ரவிசங்கரின் மிக பிரம்மாண்டமான ஆசிரமத்திற்குள்... முக்கியமான ஆசிரம நிர்வாகிகள் உதவியோடு நுழைந்தோம். 3 கி.மீ. சுற்றளவுக்கு ஆசிரம வளாகத்திற்குள் சாலைகள் நீண்டு ஓடியது. ரவிசங்கரின் அறைக்கும் பிரார்த்தனை கூடத்திற்கும் இடையே இத்தனை தூரமா என மனதில் வியப்பு மண்டியது.

லிவ்விங் ஆர்ட்ஸ் அமைப்பின் நிர்வாக அதிகாரியான நரேந்திர லம்பாவை முதலில் சந்தித்தோம். ஒரு கணம் கண்களை மூடித்திறந்து பேச ஆரம்பித்த அவர் “""ஆந்திராவில் இருக்கும் நக்ஸல்கள் பகுதிக்கெல்லாம் குருஜி போய்.. அங்கு புனரமைப்பிற்கான முயற்சிகளில் இறங்கினார். அதனால் அவர் மீது அவர்களுக்குக் கோபம். அவர்களுக்கு சுவாமியைக் கொல்வது திட்டமில்லை என்றாலும்... பயத்தை ஏற்படுத்த... அல்லது மிரட்டிவைக்க... அல்லது இந்த ஆசி ரமத்தில் பிரச்சினைகள் இருக்கிறது என்ற தோற்றத்தை உண்டாக்க... அவர்கள் இப்படி சுட்டிருக்கலாம்''’ என்றார் மெதுவான குரலில். இதை அவருடன் இருந்த சீடர்கள் சிலரும் வழிமொழிந் தனர்.

நாம் அதே ஆசிரமத்தின் நடுநிலையான சீடர்களை சந்தித்துப் பேசியபோது.... அங்கு நடக்கும் அதிகாரப் போட்டிகள் குறித்த தகவல்களைக் கொட்டினர். ""வடநாட்டுக் காரரான நரேந்திர லம்பாதான்... ஆசி ரமத்தின் அதிகார மையம். கோடிக்கணக்கில் குவிந்துகொண்டிருக்கும் ஆசிரம நிதியை... வடமாநிலங்களில் இருக்கும் மீடியாக்களிலும் தொழில் நிறுவனங்களிலும் முதலீடாக்கி இருக்கிறார். இவரை "சுவாமிஜியை இயக்கும் ரிமோட்' என்று கூட சொல்லலாம். அதேபோல் சுவாமிஜியின் செகரட்டரி முதல் டிரைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் வரை கேரளர்களே இருக்கிறார்கள். இவர்களில் செல்வாக்கு மிகுந்த புள்ளியாக இருப்பவர் கிரின் கோவிந்த். இவரது தலைமையிலான டீம்... சுவாமிஜியை தங்கள் கைக்குக் கொண்டுவந்து விடவேண்டும் என துடிக் கிறது.

அதனால் எப்போதும் இந்த டீம்களுக்கிடையே மோதல் உண்டு. இதையெல்லாம் தெரிந்து வைத் துக்கொண்டிருக்கும் நித்யானந்தா... பழிக்குப் பழி வாங்குவதாக எண்ணி, தனது ஆட்கள் மூலம் அங்கு நடக்கும் பிரச்சினைகளைத் தீவிரமாகத் தூண்டிவிட்டிருக்கலாம். இந்த லம்பா... கோவிந்த் டீம்களுக்கிடையிலான பவர் யுத்தத்தின் அடிப் படையில் கூட இந்த துப்பாக்கிச் சூடு நடந் திருக்கலாம் நடுவில் வினய் மீது புல்லட் விழுந் திருக்கலாம் என்றவர்கள் ஒரு காதல் தொடர்பான மோதல் குறித்தும் விறுவிறு தகவலைத் தந்தார்கள்.

இந்த ஆசிரமத்தில் மில்லினர்கள் பலர் எப்போதும் தங்கி இருப்பார்கள். பல நாட்டுக் கலாச்சாரமும் அங்கு கோலோச்சும். ஆசிரமத்தில் தங்கி இருக்கும் பணக்காரர்களில் ஒருவர் சித்து. விவாகரத்தான வடநாட்டுத் தொழிலதிபர். வயது 45. கரன்ஸி கட்டுகளால் பாதை போட்டு நடக்கலாம் என்கிற அளவிற்கு அவர் பலே பசைப்பார்ட்டி. வாழும் கலை பயிற்சி வகுப்பிற்காகத்தான் அவரும் ஆசி ரமத்தில் மாதக்கணக்கில் தங்கி இருந்தார்.

அவரை ரொம்பவே வசீகரித்தாள் 22 வயது இளம் பெண்ணான பூஜா. சித்துவின் காதல் பார்வையும் அவரது கரன்ஸி சொகுசும் பூஜாவை நெகிழ வைக்க... இருவரும் காதல் நதியில் நீச்சலடிக்க ஆரம்பித்தனர். இந்தக் காதலுக்கு வில்லனாக வந்தார் ஆசிரம தலைமைச் செயலராக இருந்த தீரஜ் கௌசிக். காரணம் பூஜா இவரது கேர்ள் பிரண்ட். தன்னிடம் மட்டுமே அன்பு செலுத்திவந்த பூஜாவை இழக்க விரும்பாத தீரஜ்... சித்துவையும் பூஜாவையும் பிரிக்கப் படாதபாடு பட்டார். எனினும் காதல் ஜோடிகள் சீக்ரெட்டாக மேரேஜை முடித்துக் கொண்டு தேன்நிலவு கொண்டாடிவிட்டது. அதோடு தனது காதல் பரிசாக 1.3 கோடிக்கு "ஆடி' காரையும்.... வைர நகைகளையும் பூஜா விற்கு பரிசாக வாங்கிக் கொடுத்து தீரஜைக் கடுப்பேற்றினார் சித்து. இதனால் சித்து-தீரஜ் இடையே பலமான பகைமை வந்து உட் கார்ந்துகொண்டது.

எங்க சந்தேகமெல்லாம்... இவங்க ரெண்டுபேர்ல ஒருத்தர்தான் இன்னொருத்தர் மேல் இப்படி கோபத்தை வெளிக்காட்டி குறி தப்பியிருக்கலாம். இதேபோல் ஆசிரமத்தில் பல பிரச்சினைகள் இருக்கு. இவர்களில் துப்பாக்கி வில்லன் யார்னுதான் சரியாச் சொல்ல முடியலை. ஆனா போலீஸ்.. கண்டுபிடிச்சே தீருவோம்னு தீவிரமா இருக்கு'' என்கிறார்கள் அந்த சீடர்கள்.

ஒரு ஆசிரம துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் இத்தனை விவகாரங்களா? என்ற திகைப்போடு அங்கிருந்து எஸ்கேப் ஆனோம்.

No comments:

Post a Comment