Friday, June 4, 2010
காதலிக்க நேரமுண்டு
திருமணமாகி ஆறு வருஷமாச்சு.ரெண்டு பேரிடமும் எந்தக் குறையும் இல்லை. ஆனால், குழந்தை பிறக்கவில்லை' என்கிற பிரச்னையோடு வந்தனர் அந்தத் தம்பதி.
எடுத்த எடுப்பிலேயே நான் அவர்களிடம்கேட்ட கேள்வி, 'எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உறவு கொள்கிறீர்கள்' என்பதுதான்.
'எங்களுக்கு நேரமே இல்லை. நான் காலையில் வேலைக்குப் போய் ராத்திரிதான் திரும்புவேன். என் மனைவிக்கு சாஃப்ட்வேர் கம்பெனியில் ராத்திரி வேலை. ரெண்டு பேருக்குமே வொர்க் பிரஷர். ஞாயிற்றுக்கிழமைஒருநாள்தான் லீவு. அன்னிக்குத் தான் வீட்டு வேலைமொத்தத்தையும் செய்யணும்' என்றார் கணவர். அதை மனைவியின் தலையும் அசைந்து ஆமோதித்தது.
இன்றைய நாட்களில் உலகமயமாக் கல், தாராளமயமாக்கல் என்று பொரு ளாதார ஜிகினாக்களைத் தூவுகிறோம். உண்மையில், தனி மனித நலன் அந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறதா என்பது சந்தேகமே.1950-களில் மக்களுக்கு வேலை நேரம் போக, நிறைய நேரம் மிச்சம் இருந்தது. 2000-க்குப் பிறகு, மிச்ச நேரம் என்பதே இல்லாமல் போனது.
பெரும்பான்மையான நமது பணிகள் இலக்கை (goal oriented) எட்டிப்பிடிக்கும்போராட்டமாகவே இருக்கிறது. முன்பு ஒரு வேலையில் சேருபவர்கள் கடைசி வரையில் அதே நிறுவனம் (அ) அதே வேலையில்தான் சுற்றிச் சுழல்வார்கள். இன்றைய நிலை வேறு. 'இது இல்லையா... அது' என்று மாறிக்கொண்டே இருக்கிறார்கள். தவிர, மனித மதிப்பீடுகள் மாறி, முற்றிலும் நுகர் கலாசாரம் ஆகி விட்டது மனித வாழ்க்கை. எனவே, தேவைகளைப் பூர்த்திசெய்யும் மராத்தான் ஓட்டமாகவே நிறையப் பேரின் வாழ்க்கை உள்ளது. இதில் ஆற அமர, நின்று நிதானித்து, புணர்ந்து மகிழ எங்கே நேரம்?
இன்று ஒரு மனிதன், வேலை - வீடு - செக்ஸ் மூன்றையும் பேலன்ஸ் பண்ண முடியாத நிலை யில் இருக்கிறான். இதில் வேலைக்குத்தான்பலரும் முன்னுரிமை தருகிறார்கள். அதற்கடுத்துதான் வீடும் செக்ஸ் வாழ்க்கையும். மூன்றாவது விருப்பத்தை நிறைவேற்ற வரும்போது ரொம்பவும் அயர்ச்சி (Exhaustion) அடைகிறார்கள். இந்த அயர்ச்சி உற் சாக பலூனின் காற்றைப் பிடுங்கிவிடுகிறது. மூளைச் சுமைகூட (Mental stress) செக்ஸ் செயல்பாடுகளுக்கு வில்லன்தான்.
இன்றைய மனிதர்கள் தங்கள் வாழ்வில் எதற்கு, எவ்வளவு முன்னுரிமை தர வேண்டும் என்பதில் குழப்பம் அடைந்துள்ளனர். வேலை - வீடு - செக்ஸ் என்கிற நிலையை மாற்றி அமைக்க வேண்டும். லைஃப் பேலன்ஸ் என் பார்கள் அல்லவா, இதனை எந்தக் கல்விக் கூடங்களும் சொல்லித்தருவது இல்லை.
You work to live; don't live to work- என்பது என்னைத் தேடி வந்த தம்பதிக்கு மட்டுமல்ல; எல்லா மனிதர்களும் மனதில்வைக்க வேண்டிய செய்தி!
எந்த ரகசியமும்
பெண்களிடம்
தங்காது என்பதைப்
பொய்யாக்கிவிட்டது
உன் அழகின் ரகசியம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment