Thursday, June 3, 2010
யார் யாரோடு?
shockan.blogspot.com
""ஹலோ தலைவரே... .... பா.ம.க.வின் டெல்லி அரசியலைத் தீர்மானிக்கப்போவது தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் எடுக்கப்போகும் முடிவுதான்ங்கிறதால 30-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சாயங் காலத்தை தமிழக அரசியல் களம் ரொம்பவே எதிர்பார்த் திருந்தது.''
""அன்புமணி மீண்டும் ராஜ்யசபா எம்.பியாவதற்கு தி.மு.க.வின் தயவு தேவை என்பதால், தி.மு.க பற்றிய தன்னோட நிலைப்பாட்டையே ராமதாஸ் மாற்றிக்கிட்டாரே!''
பா.ம.க.வின் பகீரத முயற்சி
""ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே மறுபடியும் எம்.பியாகணும்ங்கிறது அன்புமணியோட ஆசை. கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் இது பற்றி சொல்லிக் கிட்டிருந்தார். ராமதாசுக்கும் தன் மகனை மீண்டும் டெல்லியில் உலவவிடவேண்டும்ங்கிற ஆசை இருந்தது. அதனால, தி.மு.க தலைமைக்கு 4 லெட்டர் எழுதினார். இந்த லெட்டர்களோடு கலைஞரை சந்திக்கும் தூதுவர்களாக ஜி.கே.மணியும் வேல் முருகனும் நியமிக்கப்பட்டாங்க. துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகளையும் இவங்க சந்திச்சாங்க.''
""லெட்டரில் எழுதப்பட்ட விஷயங்கள்கூட தி.மு.கவின் உயர்மட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டிருக்குதே?''
""தி.மு.க.வோடு இணக்கமாக செல்ல விரும்புகிறோம்னு ராமதாஸ் எழுதியிருந்தார். தமிழின் ஒவ்வொரு சொல்லுக்கும் நுணுக்கமான அர்த்தத்தை உணர்ந்தவராச்சே கலைஞர்! இது என்ன இணக்கம்? கூட்டணி சம்பந்தமா உறுதியான வார்த்தைகள் இல்லையேன்னு சொல்லி கரெக்ஷன் போட்டுக் கொண்டு வரச் சொல்லிட்டார். அதன்படியே அடுத்த கடிதங்களில் திருத்தங்களும் செய்யப்பட்டி ருந்தது. லெட்டரை நிராகரிக்காமல், கரெக்ஷன் போடச் சொல்லி கலைஞர் சொன்னதால, நிச்சயமாக சீட் கிடைக்கும்னு பா.ம.க தரப்பு எதிர்பார்த்தது.''
""தி.மு.க.வுக்கு வாய்ப்புள்ள 3 ராஜ்யசபா சீட்டு களிலும் அந்தக் கட்சியே போட்டி போடப்போகுதுன்னு நாம முன் கூட்டியே சொல்லியிருந்தோமே!''
""உயர்மட்டக்குழு கூட்டத் திற்கு 2 நாள் முன்னாடியே தங்க ளுக்கு சீட் இல்லைங்கிற தகவல் பா.ம.க தரப்புக்கும் கிடைத்திருக் குது. அன்புமணியே இது சம்பந் தமா கட்சி நிர்வாகிகள்கிட்டே வருத்தமான தொனியில் பேசியிருக் கிறார். இருந்தாலும், கலைஞர் மனது வைப்பாருங்கிற நம்பிக்கை யோடு எம்.எல்.ஏ வேல்முருகனை தி.மு.க தரப்பிடம் மீண்டும் அனுப்பி பேசச் சொன்னாங்க. பா.ம.க.வுக்கு சீட் தர தி.மு.க.வில் யார் யார் எதிர்ப்பதாக தகவல் கசிந்ததோ அவங்களையெல்லாம் வேல்முருகன் சந்தித்தார்.''
""துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சால்வை போடும் படம்கூட பத்திரிகைகளில் வந்ததே!''
""அப்ப வேல்முருகன்கிட்டே ஸ்டாலின், எனக்கே இதெல்லாம் ரொம்ப வெட்கமா இருக்குது. பென்னாகரம் இடைத்தேர்தலில் எங்களைப் பற்றி எவ்வ ளவோ பேசிட்டு, இப்ப வந்து ராஜ்யசபா சீட் கேட்பதில் என்ன நியா யம் இருக்குது?ன்னு கேட்டிருக்காரு. வேல்முருகனால் எதுவும் சொல்ல முடியலை. அமைச்சர் வீரபாண்டி ஆறு முகத்தையும் அவர் சந்தித்தார். வீர பாண்டியாரும், உயர்நிலைக்குழு கூட் டத்தில் தலைவர்தான் முடிவெடுப்பார். என்னால் என்ன பண்ணமுடியும்னு பார்க்கிறேன்னு பிடிகொடுக்காம இருந்திருக்கிறார். அடுத்ததா, கனிமொழி எம்.பியை வேல்முருகன் சந்திக்க அவரும், எல்லாம் உயர்நிலைக் குழுவில் எடுக்கும் முடிவுதான்னு சொல்லி ஒதுங்கிட்டார்.''
பா.ம.க.வின் கடைசி நம்பிக்கை
""தி.மு.க.வின் முடிவு என்னன்னு வேல்முருகனுக்குப் புரிஞ்சிருக்குமே?''
""எல்லாக் கதவுகளும் மூடப்படுவதை அவர் உணர்ந் தாலும், கலைஞரை ஏற்கனவே அவர்கள் சந்திச்சப்ப, நல்ல பதிலா சொல்றேன்னு சொல்லியிருந்தார். அது ராஜ்யசபா சீட் கிடைக்கும்ங்கிற பதிலா இருக்கும்னு பா.ம.க தரப்பிடம் கடைசி நம்பிக்கை இருந்தது. உயர்நிலைக்குழுக் கூட்டம் அறிவாலயத்தில் நடந்துக்கிட்டிருந்தப்ப, சென்னையில் உள்ள அன்புமணி வீட்டில் ஜி.கே.மணி, வேல்முருகன் உள்ளிட்ட பா.ம.க நிர்வாகிகள் எதிர் பார்ப்போடு காத்துக்கிட்டிருந்தாங்க.''
தி.மு.க. முடிவின் பின்னணி
""உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் என்ன நடந்தது?''
""அதற்கு முன்னாடி ஒரு செய்தியை சொல்லிடுறேங்க தலைவரே... தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்துவிட்டு, "பெண் சிங்கம்' படத்தின் ப்ரி-வியூ பார்ப் பதற்காக கலைஞர் புறப்பட்டப்ப, அவருக்கு சோனியாவிடமிருந்து போன் வந்திருக்குது. நாம ஏற்கனவே சொன்ன விஷயம் பற்றித்தான் பேசப்பட்டிருக்குது. அதாவது, பா.ம.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருவது பற்றி சோனியாவின் கருத்தை கேட்பதற்காக தி.மு.க தலைமையின் பிரதிநிதியாக டி.ஆர்.பாலு செயல் பட்டதையும், இதையடுத்து டெல்லியில் கூடிய காங்கிரசின் கோர் கமிட்டி , 2009 எம்.பி. தேர்தலின்போது, கடைசி வரை மந்திரிசபையில் இருந்துவிட்டு பா.ம.க. எடுத்த கூட்டணி மாற்ற நிலைப்பாட்டைப் பற்றியும், காங்கிரஸ் சீட்டிலிருந்து ஒரு சீட்டைத் தர முன்வந்தும் ராமதாஸ் வேற கூட்டணிக்குப் போனதைப் பற்றியும் விவாதித்து, அதனால பா.ம.க.வுக்கு ராஜ்யசபா சீட் தரவேண்டியதில்லைன்னு சொல்லியிருந்ததையும் பற்றி பேசியிருந்தோம். இதைத்தான் சுருக்கமாக கலைஞரிடம் விவரித்த சோனியா, பா.ம.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருவதில் தனக்கு விருப்பமில்லைங் கிறதையும் சொல்லியிருக்கிறார்.''
அறிவாலய விவாதம்
""ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கூடிய தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு 2 மணி நேரம் நடந்ததே.. என்ன டிஸ்கஷன் நடந்ததாம்?''
""உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் 21 பேரில் 18 பேர் வந்திருந்தாங்க. முதல் 10 நிமிடம் வழக்கமான பேச்சுகளில் கரைய, அதையடுத்து யார் யாருக்கு எம்.பி. பதவிங்கிற பேச்சு ஆரம்பித்தது. அப்பவே, பா.ம.க.வுக்கு சீட் தருவது பற்றி உயர்நிலைக்குழு உறுப் பினர்கள் ஒவ்வொருத்தரும் கருத்து சொல்லணும்னு கலைஞர் சொல்லியிருக்கிறார். பேசியவர்கள் எல்லோருமே, பா.ம.க.வுக்கு இப்ப ராஜ்யசபா சீட் தரவேண்டியதில்லைன்னுதான் சொல்லியிருக்காங்க. பொதுவா, கலைஞர் எடுக்கும் முடிவையொட்டியே பேசும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்கூட இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, பென்னாகரத்தில் தி.மு.க.தான் முதல் எதிரின்னு ராமதாஸ் சொன்னதி லிருந்து, ஆ.ராசாவுக்கு பா.ம.க. கொலை மிரட்டல் விடுத்தது வரை பலவற்றையும் குறிப்பிட்டு, ராஜ்யசபா சீட் தருவதற்கு எதிர்ப்பு காட்டினாராம். வீரபாண்டி ஆறுமுகம், பா.ம.க.வுக்கு ராஜ்யசபா சீட் இல்லைங் கிறதை முடிவு பண்ணிட்டு, அதற்கப்புறம் அவங்களை கூட்டணியில் வச்சிக்கிறது பற்றி முடிவு பண்ணுவோம்னு சொல்லியிருக்காரு.''
""மற்றவங்களெல்லாம் என்ன சொன்னாங்களாம்?''
""கனிமொழி, ஆ.ராசா இவங்களெல்லாம் இப்ப ராஜ்யசபா சீட் தரவேண்டியதில்லைன்னும், அதே நேரத்தில் பா.ம.க.வை மொத்தமா ஒதுக்கிட வேண்டாம்னும் சொல்லியிருக்காங்க. எம்.பி. தேர்தலில் பா.ம.கவை 7 தொகுதிகளிலும் தோற்கடிச்சாலும், அந்த 7 தொகுதிகளுக்குள் அடங்கிய 42 சட்டமன்றத் தொகுதிகளில் சில வற்றில் பா.ம.க நம்மை விட கூடுதல் ஓட்டு வாங்கியிருப்பதையும் கவனிக்கணும். அது சட்டமன்றத் தேர்த லில் நமக்கு சாத கமா இருக்கும். அதனால சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க நம்மோடு இருப்பது நல்லது. ஆனா, அதற்கான காலம் இருக்குது. இப்பவே ராஜ்யசபா சீட் தரணும்ங்கிற அவசியமில் லைங்கிறதுதான் அவங்க நிலை. 2011-ல் தி.மு.க கூட்டணியில் இருப்பதற்கு பா.ம.க. உறுதி கொடுத்தால் அதன்பிறகு வரும் ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.வுக்கு சீட் தரலாம்ங்கிறதுதான் இந்த ஆலோசனை யிலிருந்து எடுக்கப்பட்ட முடிவு. அதையே தீர்மானமாகவும் நிறைவேற்றிவிட்டது தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக் குழு.''
""இந்தத் தீர்மானத்திற்கு பா.ம.க. வின் உடனடி ரியாக்ஷன் என்ன?''
அதிர்ந்த பா.ம.க.
""இப்படியொரு தீர்மானம் நிறைவேறியதை அறிந்ததும் அன்புமணி வீட்டி லிருந்த எல்லோரும் ஷாக் ஆயிட்டாங்க. முதலில் ராஜ்யசபா சீட், அப்புறம்தான் கூட்டணிங்கிறது ராமதாசின் நிலை. அதற்கு நேர்மாறா தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியதால் திண்டிவனத்திலிருந்த ராமதாஸ் படுடென்ஷனா யிட்டார். என்ன அசிங்கப்படுத்துறாங்க ளான்னு கட்சி நிர்வாகிகள் கிட்டே கோபத்தை வெளிப் படுத்திய ராமதாஸ், எலக்ஷனுக்கு ஒரு வருடம் இருக்கிற நிலையில், இப்பவே துண்டு போட்டு உட்கார்ந் திருக்கணுமா?ன்னு சத்தம் போட்டுவிட்டு, அதே வேகத்தில் ஒரு அறிக்கையை யும் ரெடி பண்ணியிருக்காரு. தி.மு.க நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதுங்கிற வார்த் தையெல்லாம் அந்த அறிக் கையில் இருந்திருக்குது.''
""ஞாயிற்றுக்கிழமை யன்னைக்கு அப்படி எந்த அறிக்கையும் வெளி யாகலையே?''
""ராமதாஸ் இப்படியொரு அறிக்கை தயார் பண்ணிட்ட விஷயம் அறிந்த அன்பு மணி உடனடியா தொடர்புகொண்டு, அவசரப்பட்டு அறிக்கை விடவேண்டாம்னு சொல்லி யிருக்கிறார். அ.தி.மு.க கூட்டணி முறிவு விஷயத் திலும் இப்படித்தான் நைட் டோடு நைட்டா அறிக்கை விட்டு சிக்கலாக்கிட்டோம். தி.மு.க. விஷயத்திலும் அதே மாதிரி செயல்பட்டால் பா.ம.கவுக்குத்தான் சிக்கலா யிடும்னு சொல்லிட்டாராம்.''
""பா.ம.க.வின் மற்ற நிர்வாகிகள் என்ன சொல் றாங்க?''
""தி.மு.க.விடம் இறங்கிப்போவதை பா.ம.கவில் உள்ள ஒரு குரூப் ஏற்கனவே விரும்பலை. இவ்வளவு தூரம் எதிர்த்துவிட்டு இப்ப ஏன் இறங்கிப்போகணும்னு ராஜ்யசபா சீட் விவகாரம் ஆரம்பித்ததிலிருந்தே அவங்க தங்களுக்குள்ளே பேசிக்கிட்டிருந்தாங்க. இப்ப, ராஜ்யசபா சீட் தரலைன்னதும், இதைத்தான் ஆரம்பத்திலிருந்து சொல்லிக்கிட்டி ருக்கோம். நாம அ.தி.மு.க பக்கம் போகலாம்னு தலைமையை வலியுறுத்துறாங்க. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, ராஜ்யசபா தேர்தல் தொடர்பா கூட்டணி கட்சிகளை ஜெ அழைத்து ஆலோசனை நடத்துவதற்கு முன்னாடியே, அன்புமணியை வெங்கடேஷ் தொடர்பு கொண்டு பேசினார். தி.மு.க இழுத்தடித்துக்கொண்டே இருக்கிற நிலையில் ஏன் அவங்களை எதிர்பார்த்துக்கிட்டிருக்கீங்க. அ.தி.மு.க பக்கம் வாங்க.. 1 ராஜ்யசபா சீட்டும் 40-க்கும் அதிகமான எம்.எல்.ஏ. சீட்டும் தர்றோம்னு பேசப்பட்ட தாம். தனக்கான ராஜ்யசபா சீட்டுக்காக இப்படி மாறி மாறி தாவினால் ரொம்ப அசிங்கமா இருக்கும்னு அன்புமணி யோசித் திருக்கிறார்.''
""திங்கட்கிழமை நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் என்ன பேசினாங்களாம்?''
பா.ம.க. தலைமையின் முடிவு
""பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக்குழு 7 மணியளவில் கூடியது. அதற்கு முன்பு ராமதாஸ், அன்புமணி, கோ.க.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, காடு வெட்டி குரு, தனராஜ் உள்ளிட் டோர்கள் கூடி, அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசித்தனர். மீண்டும் மீண்டும் ஏன் இப்படி ஆனது? என்றே விவாதம் போயி ருக்கிறது. மீண்டும் கலைஞரிடம் மறுபரிசீலனை செய்யச் சொல்ல லாம் என்று முடிவு செய்து, காத்திருந்த நிர்வாகக் குழு உறுப் பினர்களிடம் வந்தனர். கோ.க. மணியும், வேல்முருகனும் அன்பு மணியின் ராஜ்யசபா சீட்டுக்காக யார் யாரை எல்லாம் சந்தித்தோம்... அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை விவரித்தனர். மீண்டும் கூட்டத்தில்... நாளை முதல்வரை சந்தித்து ராஜ்யசபா சீட்டுக்கு வலியுறுத்துவது என்று முடிவெடுத்தனர். அதோடு அன்புமணியை பாராட்டி கலைஞர் சொன்ன முரசொலியின் குறிப்புகளை எல்லாம் சேர்த்து ஒரு ஃபைல் தயார் செய்து அதை கலைஞரிடம் கொடுப்பது என முடிவு எடுத்தனர். ஆனால், கடைசியில் இதெல்லாம் தரவேண்டாம் என்று முடிவை மாற்றிக் கொண் டனர். தி.மு.க. கூட்டணியில் இடம்பெற வேண் டும் என்ற கருத்து தான் பெரும்பாலான வர்களிடமும் இருந்திருக்கிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க. சார்பாக செங்கோட்டையன் தொடர்ந்து ராமதாஸிடம் தொலை பேசியில் பேசிக் கொண்டே இருந்தார்.''
அ.தி.மு.க. ஆலோசனை
""தி.மு.க.வின் உயர்நிலைக்குழு எடுத்த முடிவும் அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகளையும் அ.தி.மு.க எப்படி பார்க்குது?''
""அ.தி.மு.க.வின் இரண்டாம்நிலைத் தலைவர்களைப் பொறுத்தவரை, தி.மு.க.வில் இப்படி முடிவெடுப்பாங்கங் கிறதாலதான் நம்ம பக்கம் வரச்சொல்லி கூப்பிட்டோம். இப்ப, நாமாகப் போய் பா.ம.க.வுக்கு எதுவும் செய்யத்தேவையில்லை. இப்ப அவங்களுக்கு ஏதாவது ஒரு கூட்டணி தேவை. அவங்களாக வந்தால் பார்த்துக்கலாம்ங்கிற நிலைமையில் இருக்காங்க. அதே நேரத்தில், அ.தி.மு.க கூட்டணிக்குள் தே.மு.தி.கவை கொண்டுவரணும்ங்கிற முயற்சியில் சி.பி.எம். தோழர்கள் ரொம்ப மும்முரமா இருக்காங்க.''
""2009 எம்.பி. தேர்தலின்போதே நைட்டோடு நைட்டா விஜயகாந்த் வீட்டுக்குப் போய் கூட்டணி பற்றி பேசியவங் களாச்சே!''
""இப்ப என்ன பேசிக்கிட்டிருக்காங்கன்னு நான் சொல்றேன்... அ.தி.மு.க கூட்டணிக்குத் தே.மு.தி.க வரணும்ங் கிறது பற்றி சமீபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன்கிட்டே பேசியிருக்காங்க. பண்ருட்டியோ, முதலில் அந்தம்மா பேசட்டும். 80 சீட் இல்லாம எங்க கேப்டன், கூட்டணிக்கு ஒத்துக்க மாட்டாருன்னு சொல்லியிருக்காராம். ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதற்காக கார்டனில் ஜெ.வை சி.பி.எம் தலைவர்கள் சந்தித்தப்ப, தே.மு.தி.க பற்றி பேசிப் பார்த் திருக்காங்க. இப்ப அதைப் பற்றி பேசத் தேவையில்லைன்னு ஜெ சொல்லிட்டாராம். தோழர்களும் 80 சீட்டுங்கிறதில் இருந்து விஜயகாந்த் தரப்பு இறங்கிவரட்டும், பேசலாம்ங்கிற முடிவில் இருக்காங்க.''
தி.மு.கவின் ராஜ்யசபா வேட்பாளர்களாக கே.பி.ராமலிங்கம், சங்கரன்கோவில் தங்கவேல், டி.எம்.செல்வகணபதி ஆகிய மூவரும் எதிர்பார்க்கப்பட்டது போலவே அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். டி.எம்.செல்வகணபதி, மு.க.ஸ்டாலினின் சிபாரிசுக்குரியவர். கே.பி.ராம லிங்கம், மு.க.அழகிரியின் சிபாரிசு. ராமலிங்கம் பெயரை தலைமை அறிவிப்பது இழுபறியாகிறது எனத் தெரிந்ததும், உடல்நிலை சரியில்லை யென மதுரையிலிருந்த மு.க.அழகிரி அவசரமாக சென்னைக்கு வந்து கலைஞரை சந்தித்தார். மூன்றாவது வேட்பாளராக காஞ்சனா கமல நாதன் பெயர் முதலில் பரிசீலிக்கப்பட்டது. மூவருமே மேற்கு மண்ட லத்தினர் என்பதாலும், தி.மு.க.வில் தென்மாவட்ட பி.எல். சமுதாயத் துக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதாலும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப் பட்டன. நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி பெயர் முதலில் அடிபட்டது. பிறகு, ஸ்டாலின் சிபாரிசில் தங்கவேல் பெயர் பரிசீலிக்கப் பட்டு ஓ.கே.வானது. மூவரில் ராமலிங்கமும் செல்வகணபதியும் அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்கள். தங்கவேல் ம.தி.மு.க.வுக்குச் சென்று திரும்பியவர். தி.மு.க.வைவிட்டு வேறெந்த கட்சிக்கும் செல்லாமல், ராஜ்யசபா சீட் எதிர்பார்த்திருந்த சீனியர் உ.பி.க்களுக்கு இந்த வேட்பாளர் பட்டியல் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸில் தனக்கு தலைவர் பதவி கூட தேவையில்லை ராஜ்ய சபா எம்.பி. சீட்தான் வேண்டும் என கேட்டிருக்கிறாராம் தங்க பாலு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனோ, தனக்கு தமிழ்நாடு கோட்டா இல்லா விட்டாலும் வேறு மாநிலத்தில் சீட் தரப்படும் என நம்புகிறார். காங்கி ரஸ் மேலிடத்தின் தற்போதைய சாய்ஸாக இருப்பவர் சுதர்சன நாச்சியப்பன்.
அ.தி.மு.கவிலிருந்து முத்துசாமியையும் அவரது ஆதரவாளர்களான கரூர் சின்னசாமி, வி.கே.சின்னசாமி, ஈரோடு மாணிக்கம் ஆகியோரையும் ஜெ நீக்கியதைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து ஈரோட்டிற்கு 200 கார்களில் தன் ஆதரவாளர்கள் புடைசூழச் சென்றார் முத்துசாமி. ஈரோட்டில் 1995-ல் ஜெ திறந்துவைத்த எம்.ஜி.ஆர். சிலைக்கு முத்துசாமி மாலை அணிவித்த போது அவர் கண்கள் கலங்கின. தன் ஆதரவாளர்களிடம், நீங்கள் கூறும் முடிவுக்கு கட்டுப்படுவேன். எல்லா மாவட்டங்களிலிருந்தும் என்னிடம் பேசியிருக் கிறார்கள். என் முடிவு எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்குப் பாதுகாப்பான முடிவாக இருக்கும் என்றார் முத்துசாமி. தி.மு.க தலைமையிடம் நேரில் அவர் பேசிவிட்டதைத் தொடர்ந்து வருகின்ற 7-ந் தேதி தி.மு.க.வில் நேரம் பார்த்து சேருகிறார் முத்துசாமி. கரூர் சின்னசாமி 9-ந் தேதி இணைகிறார்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளாவுக்கு பாடம் புகட்டும் வகையில் கேரளாவுக்கு செல்லும் தமிழக சாலைகளில் மே 28-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தியது ம.தி.மு.க. பெரியார் தி.க., தமிழர் பாதுகாப்பு இயக்கம், இந்துமக்கள் கட்சி உள்ளிட்டவை இதில் கைகோர்த்துக் கொள்ள, கேரளா செல்லும் 12 சாலைகள் மறிக்கப்பட்டன. வைகோ தலைமையில் கோவை மாவட்டம் கந்தேககவுண்டன் சாவடியிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் வேலந்தாவளையம் சாலைப்பிரிவில் 5000-த்துக்கும் அதிகமானோர் திரண்டு மறியல் செய்தனர். மறியலில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்தியபின், உங்கள் மாநிலத்திலிருந்து வாகனங்களை அனுப்புங்கள் என தமிழக காவல்துறை முன்கூட்டியே கேரள அரசுக்குத் தெரிவித்திருந்ததால் அரசு வாகனங்கள் அதிகமாக காணப்படவில்லை. முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் வயிற்றில் அடித்தால் தமிழக மக்களே போராட் டத்தை தலைமையேற்று நடத்துவார்கள் என முழங்கிய வைகோவை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது, 'don't block water, don't break india' என குரல் எழுப்பியபடியே தொண்டர்களுடன் கைதானார் வைகோ. இதுபோலவே, தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதியில் பழ.நெடுமாறன் தலைமையில் தமிழுணர்வாளர்கள் சாலை மறியல் செய்து கைதாயினர்.
மிஸ்டுகால்!
தி.மு.க.வில் கவுண்டர், வன்னியர், தேவேந்திரகுலம் என 3 பெரும் சமுதாயத்தினருக்கு ராஜ்யசபா சீட் தரப்பட்டிருப்பது அ.தி.மு.க நிர்வாகிகளிடையே விவாதத்தை உண்டாக்கியுள்ளது. நம் கட்சிக்கு கிடைக்கும் 2 எம்.பி. சீட்டுகளையும் முக்கிய சமுதாயத்தினருக்கு தரவேண்டும். கண்டிப்பாக ஒரு சீட்டை தேவேந்திர குல இனத்துக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என அ.தி.மு.க.வில் பேச்சு எழுந்துள்ளது.
அ.தி.மு.க.வில் ராஜ்யசபா சீட் ஒன்று டாக்டர் வெங்கடேஷுக்கும்... இன்னொரு சீட்டுக்கான பெயரில்... ஊட்டியில் எஸ்டேட் வைத்திருக்கும் கோவில்பட்டிக்காரரான நம்பிராஜன் என்பவரின் பெயர் பரிசீலனையில் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment