ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியனும், கே.வி.ராமலிங்கமும் போட்டியிடுவார்கள் என்று அக் கட்சியின் பொதுச் செயாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூடி முடிவு செய்வது தான் இது நாள் வரை வழக்கத்தில் இருந்து வந்தது. அதன்படி ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் இரண்டு அதிமுக வேட்பாளர்களை முடிவு செய்ய அக் கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அதில் ராமலிங்கமும், பாண்டியனும் இறுதி செய்யப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் முத்துசாமி திமுகவில் சேர முடிவெடுத்துள்ளதால், ஈரோடு பகுதியில் அதிமுகவின் செல்வாக்கை நிலைநிறுத்த அப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு அதிமுக சீட் தரலாம், அந்த வகையில் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் ராமலிங்கத்துக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று நேற்றே நாம் தெவித்திருந்தோம் என்து குறிப்பிடத்தக்கது.
அதே போல மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டதையும் தெரிவித்திருந்தோம்.
ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, கே.பி.ராமலிங்கம், ச.தங்கவேலு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஆனால், காங்கிரஸ் கட்சி இன்று வரை தனது வேட்பாளரை அறிவிக்காமல் மெளனம் காத்து வருகிறது. இப்போதே அறிவித்தால் கோஷ்டிகளுக்குள் அடிதடியாகிவிடும் என்பதால், வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளில் தான் வேட்பாளரை அந்தக் கட்சி அறிவிக்கும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment