Sunday, June 6, 2010

பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா- நயன்தாரா


shockan.blogspot.com



சென்னை: நடிகை நயன்தாராவும் பிரபுதேவாவும் நேற்று வீட்டில் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களுக்கு பிரபுதேவாவின் பெற்றோர் அட்சதை தூவி ஆசீர்வதித்தார்கள். இதனால் அவர்களுடைய திருமணத்தை பிரபுதேவாவின் பெற்றோரே நடத்தி வைத்து விட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிரபுதேவா டைரக்டு செய்த 'வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் 'கள்ளக் காதலாக' மாறியது. இருவரும் கணவன்-மனைவியாக ஒரே அறையில் தங்குகிறார்கள். ஜோடியாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.

நயன்தாரா, திருமணம் ஆகாதவர். ஆனால் பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா-பிரபுதேவா காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். என் கணவருடன் உள்ள உறவை துண்டித்துக் கொள்ளாவிட்டால், நயன்தாராவை பார்க்கிற இடத்தில் அடிப்பேன் என்று ரமலத் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் திரையுலகப் புள்ளிகளை வைத்து பஞ்சாயத்து கூட்டினார். அதில் நயன்தாராவை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகக் கூறி, தன்னைப் பிரிந்தால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்றார் பிரபுதேவா.

இன்னொரு பக்கம் இவர்களின் காதலுக்கு, பிரபுதேவாவின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், தாயார் மகாதேவம்மா ஆகிய இருவரும் ஆதரவாக இருக்கிறார்கள்.

இவர்களின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில், நாரதகான சபாவுக்கு எதிரில் உள்ளது. அந்த வீட்டில் டான்ஸ்மாஸ்டர் சுந்தரம், அவருடைய மனைவி மகாதேவம்மா, கடைசி மகன் நாகேந்திரபாபு ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

அந்த வீட்டில், ஒரு விசேஷ பூஜை நடந்தது. 4 புரோகிதர்கள் சேர்ந்து யாகம் வளர்த்து, பூஜை நடத்தினார்கள். காலை 10-30 மணிக்கு தொடங்கிய பூஜை, பிற்பகல் 2 மணிவரை நடைபெற்றது.

அதில் நயன்தாராவும், பிரபு தேவாவும் கலந்துகொண்டார்கள். இருவரும் மணமக்களைப்போல் கழுத்தில் மாலை அணிந்திருந்தார்கள். புரோகிதர்கள் மந்திரம் சொன்னதும், இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள். அப்போது இரண்டு பேர் தலையிலும் புரோகிதர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், டான்ஸ்மாஸ்டர் சுந்தரத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள்.

இது வெறும் யாகமா அல்லது ரகசியக் கல்யாணமா என்று திரையுலகில் பரபரப்பு நிலவுகிறது.

No comments:

Post a Comment