Sunday, June 6, 2010
ராமதாஸின் லேட்டஸ்ட் பேரம் ஆரம்பம்!
shockan.blogspot.com
""ஹலோ தலைவரே... .... அ.தி.மு.கவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜ்யசபா வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டிருப்பதா ர.ர.க்கள் மத்தியில் பேச்சு இருக்குது.''
""ர.ர.க்கள் அப்படி நினைக்கலாம். நாம்தான் ஏற்கனவே கவுண்டர் சமுதா யத்தினருக்கு ஜெ சீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்ங்கிறதை சொல்லியிருந் தோமே...''
""ஆமாங்க தலைவரே.. ஆனா அ.தி.மு.க தரப்பில் சசிகலா சொந்தக் காரரான டாக்டர் வெங்கடேஷ் பெயர் பலமா அடிபட்டது. அதோடு, சசிகலா சிபாரிசில் கோவில்பட்டிக்காரரான நம்பிராஜன், வடசென்னையை சேர்ந்த சீனியர் கட்சிக்காரரும் கிரானைட் தொழிலதிபருமான வ.நீலகண்டன் இவங்க பெயரெல்லாம் கூட பரிசீல னைப் பட்டியலில் இருப்பதா நியூஸ் வந்தது. பதவியிழக்கும் அ.தி.மு.க எம்.பி.க்களில் ஒருவரான நாமக்கல் அன்பழகன் தலித்துங்கிறதால அந்த இடத்தை ஈடு செய்ய வ.நீலகண்டனைப் போடலாம்னும் சொல்லப்பட்டது.''
""டி.டி.வி.தினகரனுக்குகூட கிடைக் கும்னு பேச்சு இருந்ததே?''
""அவர் பெயர் மட்டுமில்லை, எம்.நடராஜனுக்கு எம்.பி. பதவி கொடுக்கலாம்னுகூட மன்னார்குடி குடும் பத்தினர் சிபாரிசு செய்தாங்களாம். டெல்லி அரசிய லையும் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைப்பையும் அவர் சரியா செய்வார்னு சொல்லியிருக்காங்க. இதை சசிகலா மூலம் ஜெ.வின் காதுக்கு கொண்டு போனப்ப, சட் டென நிராகரிச்சிட்டாராம் ஜெ. இதையடுத்து டாக்டர் வெங்கடேஷ் அல்லது டி.டி.வி. தினகரனுக்கு சீட் கொடுக்கணும்னு சசிகலா தரப்பில் வலியுறுத்தப்பட, மன்னார்குடி குடும்ப ஆதிக்கமே கட்சியில் தொடர்வதா விமர்சனம் நீடிக்கும்னு சொல்லியிருக்கிறார் ஜெ. இதையடுத்து ஒரு கட்டத்தில் சசிகலா, அவங்களுக்குத் தரலைன்னா எனக்கு ராஜ்யசபா சீட் கொடுங்கக்கா.. நான் டெல்லிக்குப் போறேன். என்னைவிட வேற யார் உங்களுக்கு விசுவாசமா இருப்பாங்கன்னு ஓப்ப னாகவே கேட்டதா கார் டன் தரப்பு சொல்லுது.''
""அப்படி போடு!''
""சசிகலா தரப்பின் சிபாரிசுகளை மொத்தமா நிராகரித்த ஜெ, தன்னோட சாய்ஸா பி.ஹெச்.பாண்டி யன் மகன் மனோஜ்பாண்டியனையும், ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கத்தையும் வேட்பாளராக் கிட்டார். நாம ஏற்கனவே சொன்னது போல, மாஜி முத்துசாமி தி.மு.கவுக்கு கிளம்பிட்டதால, அந்த ஏரியாவில் கவுண்டர் வாக்குகளை தக்கவைத்துக் கொள்ள அந்த சமுதாயத்தைச் சேர்ந்த வருக்கு வாய்ப்பு தரணும்ங்கிற முடிவோடு ராமலிங்கத்துக்கு சீட் கொடுத்திருக்கிறார்.''
""மனோஜ்பாண்டியனுக்கு?''
""ஜோதி தி.மு.கவுக்குப் போன பிறகு, ஜெ சம்பந்தப்பட்ட வழக்குகளை சின்சியரா கவனிப்பவர்கள் மனோஜ் பாண்டியனும் நவநீதகிருஷ்ணனும்தான். சொத்துக்குவிப்பு வழக்கை சமாளிக்க இவர்களோட உதவி ஜெ.வுக்கு தேவைப்படுது. இதில் மனோஜ்பாண்டியன் சரளமா ஆங்கிலத்தில் பேசுவதோடு, சுப்ரீம் கோர்ட் வட்டாரத்தில் நிறைய பேரை தெரிந்துவைத்திருக்கிறாராம். அதோடு, அனிதாராதாகிருஷ்ணன் தி.மு.கவுக்குபோனதையடுத்து, நாடார் பெல்ட்டில் அ.தி.மு.க வீக்குங்கிற இமேஜை சரிபண்ணுவதற்காகவும் மனோஜூக்கு சான்ஸ் தரப்பட்டி ருக்குது.''
""ஆனா, சசிகலா தரப்பில் யாருக்கும் சான்ஸ் இல்லையே!''
""தன்னோட சிபாரிசு எதையும் ஜெ மதிக்கலைங்கிறதில் சசிகலா ரொம்ப அப்செட்டா இருப்பதா கார்டன் தரப்பு சொல்லுது.நிச்சயமா சீட் கிடைக் கும்ங்கிற எதிர்பார்ப்பில் இருந்த டாக் டர் வெங்கடேஷிடம் ஜெ.வே, இந்த முறை ஏன் சீட் தரமுடியாதுங்கிறதை விளக்கிச் சொன்னதோடு, வெங்கடேஷ் தலைமையில் செயல்படும் பாசறைக் கூட்டத்தில் கலந்துக்கிறதாகவும் சொல்லி சமாதானப்படுத்தியிருக் காராம்.''
""முத்துசாமி ஏரியாவில் கே.வி. ராமலிங்கத்துக்கு சீட் கொடுத்ததும்கூட கவுண்டர்கள் சமுதாயத்தை சமாதானப் படுத்தியிருக்குமே?''
""கே.வி.ராமலிங்கம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர். அவரை ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளரா நியமித்ததில் லோக்கல் கவுண்டர்களும் ர.ர.க்களும் அதிருப்தியில்தான் இருந்தாங்க. இப்ப அவருக்கு எம்.பி. சீட்டும் கொடுக்கப்பட்டிருப்பதால், அ.தி.மு.கவில் ஈரோடு கவுண்டர்கள் யாரும் எம்.பி.யாக லாயக் கில்லையான்னு நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்துகிட்டிருக்குதாம்.''
""பா.ம.க தரப்பில் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வாங்கிடணும்ங்கிற முயற்சி கடைசி வரைக்கும் நடந்ததே?''
""ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் வேலு தலைமையில் பா.ம.க எம்.எல்.ஏக்கள் போன செவ்வாய்க் கிழமையன்னைக்கு கலைஞரை சந்திச்சதைத்தானே சொல்றீங்க.. எதிர்பார்ப் போடு அவங்க போனா லும் கோபாலபுரத்தில் அந்தளவுக்கு ரெஸ் பான்ஸ் இல்லை. கோபாலபுரம் வீட்டு மாடி அறை சின்னதுங்கிறதால வேலுவுக்கும் மணிக்கும்தான் உட்கார சீட் இருந்தது. எம்.எல்.ஏக்கள் எல்லோரும் நின்னுக்கிட்டிருந்தாங்க. அரை மணிநேரத்துக்கு மேலே பேச்சுவார்த்தை நடந்தாலும் , பா.ம.கவுக்கு ராஜ்யசபா சீட் இல்லைங்கிறதில் கலைஞர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாகவே இருந்திருக்கிறார். அன்புமணியை பாராட்டி கலைஞர் சொல்லியிருந்ததையெல்லாம் பா.ம.க தரப்பு பத்திரமா எடுத்துட்டுப்போக, தன்னையும் தி.மு.கவினரையும் பா.ம.க தலைமையும் மற்றவர்களும் கடுமையா விமர்சித்ததையெல்லாம் கலைஞரும் பட்டியல் போட்டு கையிலே வைத்திருந்திருக்கிறார். அதெல்லாம் எதுக்குங்க தலைவரேன்னு ஜி.கே.மணி பேச்சைத் திசை திருப்ப முயன்றபோதும் நடக்கலையாம்.''
""ம்..''
""சீட்டுக்கு உத்தரவாதம் வாங்கமுடியாமல் திரும்பிய பா.ம.க எம்.எல்.ஏக்கள், ராமதாஸை சந்தித்தபிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்னு சொன்னாங்க. நடந்த சந்திப்பு பற்றி மணிகிட்டேயும் வேலுகிட்டேயும் கேட்டுக்கிட்ட அன்புமணி, அவங்க ரெண்டு பேரை யும் மட்டும் ராமதாஸ்கிட்டே அழைச்சிட்டுப் போயிருக்கிறார். விவரங்களைக் கேட்ட ராமதாஸ் டென்ஷனாக, பக்கத்திலிருந்த குரு.. அ.தி.மு.க பக்கம் போயிடலாம்னு உசுப்பேத்தியிருக்கிறார். ராமதாஸ் ஒரு பிரஸ் மீட் கொடுப்பதற்கு ரெடியாக, உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம்னு அன்புமணி தடுத்துட்டாராம்.''
""அன்புமணியோட வியூகம் என்ன வாம்?''
""எம்.பி. விஷயத்தை விட்டுவிட்டு, 2011 தேர்தலில் நம்ம கட்சிக்கு எத்தனை சீட் வாங்குவதுங்கிற திட்டத்தோடு கட்சியை வளர்ப்போம். நமக்கு அதிக சீட்டை உறுதிப் படுத்தித் தரும் கட்சியோடு கூட்டணி சேருவோம்னு சொல்லியிருக்கிறார். இதற்கிடையில் அ.தி.மு.க. சைடிலிருந்து வெங்க டேஷ், செங்கோட்டையன் இவங்களெல்லாம் பா.ம.க பக்கம் காண்டாக்ட் பண்ணி, என்ன நிலைமைன்னு விசாரிச்சிக்கிட்டே இருந்திருக்காங்க. இதுபற்றியும் தைலா புரத்தில் ஆலோசனை நடந்திருக்குது. இப்போதைக்கு யாருடனும் கூட்டணி கமிட்மெண்ட் வேண்டாம்னும், வன்னியருக்கு தனி இடஒதுக்கீடும் பா.ம.கவுக்கு 40 சீட்டும் அ.தி.மு.க தருவதா ஜெ அறிக்கை தந்தால் பார்ப்போம்னு புதிய பேரத்தை ஆரம்பிச் சிருக்காங்க. மீண்டும் கலைஞரை சந்திப்போம்னு ஜி.கே.மணி சொல்லியிருந்தாலும் அதற்கான மூவ் எதுவும் இல்லை. கூட்டணியையும் உறுதி செய்யலை. கலைஞர் பிறந்தநாளுக்குக்கூட ராமதாஸ் வாழ்த்து சொல்லலை.''
""தி.மு.கவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் நாமினேஷன் செய்ததற்குகூட பா.ம.கவினர் யாரும் வரலையே?''
""நாமினேஷனை லேட் பண்ணிக் கிட்டே இருந்தா, பா.ம.க தரப்பிலிருந்து சீட் கேட்டுடுவாங்கன்னுதான் தி.மு.க தரப்பில் வேக வேகமா மனுதாக்கல் செய்துட்டாங்க தலைவரே.. காங்கிரசுக்கு ஒரு எம்.பி. சீட் உறுதின்னாலும் இன்னொரு சீட்டை தி.மு.க கோட்டாவில் கேட்கலாமான்னு ஆலோசனை நடந்திருக்குது. ஆனா, இப்ப ஒரு சீட் வாங்கு வதைவிட சட்டமன்றத் தேர்தலில் அதிக சீட் வாங்குவதுதான் சரியா இருக்கும்னு முடிவு செய்யப்பட்டதாம். எம்.ஜி.ஆரோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்த போதெல்லாம் பார்லிமெண்ட் எலக்ஷன்னா, காங்கிரசுக்கு 3-ல் 2 பங்கு, அ.தி.மு.கவுக்கு1 பங்குன்னு சீட் பிரிச்சுக்குவாங்க. சட்டமன்றத் தேர்தல்னா அ.தி.மு.க.வுக்கு 3-ல் 2பங்கு காங்கிரசுக்கு 1பங்குன்னு ஒதுக்கப்படும். அந்த அடிப்படையில் இப்ப தி.மு.க.வோடு கூட்டணி அமைத்து மூன்றில் ஒரு பங்கு சீட்டுகளான 78 சீட்டுகளைக் கேட்பதுன்னு காங்கிரஸ் தரப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்குதாம்.''
""2-ந் தேதியன்னைக்கு சென்னைக்குப் பக்கத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாமுக்கு ராகுல்காந்தி திடீர் விசிட் அடித்தது பரபரப்பை உண்டாக்கியிருக்குதே!''
""ராகுல் வர்றார்ங்கிறதை தமிழக போலீஸ் எதிர்பார்த்துதான் இருந்தது. ரோகுல்ங்கிற பேரில் ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணிட்டு வந்த ராகுல், பயிற்சி முகாமில் இருந்தவங்ககிட்டே, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா, அதற்கான வலிமை இருக் கான்னு கேட்டிருக்காரு.''
""இளைஞர் காங்கிரசார் என்ன சொன்னாங்களாம்?''
""அதை நான் சொல்றேன்... வலிமை இல்லை, ஆனா தகுதி இருக்கு. கோஷ்டிகள் இல்லேன்னா கட்சிக்குத் தடையே இல்லைன்னு சொல்லியிருக்காங்க. அதற்கு ராகுல், அதுதான் தடைன்னா நாங்க பார்த்துக்குறோம். நீங்க புது கோஷ்டியை உருவாக்க வேண்டாம். இளைஞர் காங்கிரசுக்காக உழைத்தால் எதிர்காலம் உண்டுன்னு உத்தரவாதம் தர்றேன்னு சொல்லியிருக்கிறார். நாங்க உழைப்பது எப்படி உங்களுக்குத் தெரியும்னு இளைஞர் காங்கிரசார் கேட்க... எல்லா மாநிலத்திலும் இதை நான் கண்காணிச்சிக்கிட்டிருக்கேன்னு சொன்னாராம். ஈரோட்டில் இம்மாத இரண்டாம் வாரத்தில் நடக்கும் பயிற்சி முகாமுக்கும் ராகுல் வருவார்னு எதிர் பார்க்கப்படுது. 2-ந் தேதி சென்னை வந்த ராகுல், 3-ந் தேதி 87-வது பிறந்தநாள் கொண்டாடிய கலைஞரை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்காதது தி.மு.க.-காங்கிரஸ் உறவில் அக்கறை உள்ளவங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கி யிருக்குது.''
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment