Friday, June 4, 2010

'கெளரி கல்யாண' கொடூரம்--வீறிட வைக்கும் வில்லங்க காமுகன்


shockan.blogspot.com

தன்னைக் காதலிக்க மறுத்த இளம் பெண்ணைக் கடத்தி, காரிலேயே கெடுத்த ஒருவன், அதனை தன் நண்பர்கள் மூலமாகவே செல் போனில் வீடியோ பதிவும் செய்யவைத்து, 'எனக்கே அவளைக் கல்யாணம் பண்ணி வைங்க' என பிளாக்மெயிலின் சிகரத்துக்கே போயிருக்கிறான்!

இந்தக் கொடூரம் அரங்கேறியது புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மட்டங்காடு கிராமத்தில். இங்கு வசிக்கும் பழனிவேல்-பாப்பாத்தி தம்பதிக்கு மூன்றாவது பெண் கௌரி. தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி படித்து வரும் இவர், பகுதி நேர நூலகராகவும் பணியாற்றி வருகிறார். செந்தில் என்பவன் கௌரியை ஒருதலையாய் காதலிக்க, கௌரி அதற்குச் சம்மதிக்கவில்லை. அதன் பிறகுதான் அந்த விபரீதம்!

போலீஸில் புகார் கொடுத்துவிட்டு தன் சகோதரியின் வீட்டில் தங்கி இருக்கும் கௌரியைச் சந்தித்தோம். முதலில் பேசத் தயங்கியவர், ஒருகட்டத்தில் கண்ணீருடன் கதறத் தொடங்கினார். 'காலேஜ்ல இளமதின்னு எனக்கு ஒரு தோழி இருக்கா. அவளிடம் ரொம்பப் பாசமாப் பழகுவேன். இளமதியோட மாமாதான் செந்தில். சென்னையில் கார் டிரைவர். அவனோட பேசுறதுக்காக, ஒரு தடவை என் செல் போனை இளமதி கேட்டாள். நானும் கொடுத்தேன். அப்புறம், அடிக்கடி என் செல்போனில் இருந்தே அவள் செந்தில்கிட்ட பேச ஆரம்பிச்சா... இதுக்கிடையில், இளமதி இல்லாத நேரத்தில் செந்தில் என்கூட பேச ஆரம்பிச்சான். 'இளமதி இல்லை'ன்னு சொன்னாலும் தொடர்ந்து என்கிட்ட பேசுவான். அதனால், அவன் போன் வந்தாலே அதை ஆஃப் பண்ணிடுவேன்.

அவனை இரண்டே தடவை தான் நேரில் பார்த்திருக்கேன். ஒருகட்டத்தில் எனக்கு போன் பண்ணி லவ் பண்றதாச் சொன்னான். நான் பதிலே சொல்லாம போனைக் கட் பண்ணிட்டேன். அன்னிக்கே அந்த செல் நம்பரையும் மாத்திட்டேன். இருந்தும், எப்படியோ என் புது நம்பரைக் கண்டுபிடிச்சு, தொடர்ந்து பேசி டார்ச்சர் செய்தான். அதுக்கப்புறம் தெரியாத நம்பர் வந்தால், நான் போனை எடுக்கறதில்லை. திடீர்னு ஒருநாள் தஞ்சாவூருக்கே கிளம்பி வந்துட்டான். 'நான் உன்னை உயிருக்கு உயிரா விரும்புறேன்'னு சொன்னான். அடுத்து, கிஃப்ட்டா சில பொருட்களைக் கொடுத்து அனுப்பினான். அதையெல்லாம் செந்தில் வீட்டிலேயே வீசிட்டு வந்தேன். இதில்தான் அவன் ரொம்பக் கோபமாகிட்டான்.'' என்றவர் நிகழ்ந்தவற்றின் நிழலோட்டத்தில் நடுங்கியவராகத் தொடர்ந்தார் -

''வழக்கம்போல ஒருநாள் பஸ்ஸில் காலேஜுக்குப் போனேன். காலேஜ் ஸ்டாப் பக்கத்தில் நான் இறங்கினதுமே, டாடா சுமோ காரைப் பக்கத்தில கொண்டுவந்து நிறுத்திய செந்தில், என் கையைப் பிடிச்சு இழுத்து உள்ளே தூக்கிப் போட்டுட்டான். எவ்வளவு திமிறியும் என்னால் தப்பிக்க முடியலை. காருக்குள் செந்திலோட ஆட்கள் என்னை ஸீட்டுக்கு அடியில் தள்ளிட்டு, காரை திருச்சி ரோட்டில் ஓட்டினாங்க. ஒரு இடத்தில காரை நிப்பாட்டி, கதவுகளை மூடிட்டு, பாட்டுச் சத்தத்தை வேகமா வெச்சாங்க. அதற்கப்புறம் காருக்குள்ளேயே செந்தில், என்னை ஈவு இரக்கமில்லாம நாசம் பண் ணினான். அவனோட பிடியில் இருந்து தப்பிக்கவே என்னால் முடியலை. அவன் என்னை நாசம் பண்ணியதை முன் ஸீட்டில் இருந்த ஒருத்தன் செல்போன்ல படம் பிடிச்சான்.

நாலு மணி நேரத்துக்கு அப்புறம் என்னை செங்கிப்பட்டியில் இறக்கி விட்டுட்டு, 'இனி என்னைத் தவிர வேறு யாரை நீ கல்யாணம் பண்ணிக்க முடியும்?'னு கேட்டுட்டுப் போயிட்டான். அந்தப் பாவியைச் சும்மா விடாதீங்க சார்... நான் எந்தத் தப்புமே பண்ணலை. அவனைக் கல்யாணம் பண்ணிக்கவும் விரும்பலை. அவனுக்காக யாராச்சும் பேச வந்தா... அதுக்கப்புறம் நான் உயிரோ டவே இருக்க மாட்டேன்' என்றார் தேம்பியபடி.

கௌரியின் அக்கா கணவர் ராஜேந் திரன், 'அந்த அயோக்கியன் கௌரியை கார்ல கடத்துறப்ப காலேஜ் வாசலில் நிறைய பேர் இருந்திருக்காங்க. ஆனா, யாருமே அவனை தட்டிக்கேட்கலை. கலெக்டர் தொடங்கி எல்லா அதிகாரிகளிடமும் இந்தக் கொடூரத்தைச் சொல்லி, புகார் கொடுத்திருக்கோம். அந்த அயோக்கியனுக்குத் தண்டனை கிடைக்கணும்!'' என்றார் கோபத் துடன்.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் 'எவிடென்ஸ்' அமைப்பின் செயல் இயக்குநர் கதிர், 'கௌரியைக் கடுமையாகத் தாக்கி, கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள் ளாக்கி இருக்கிறான் செந்தில். பின்னாளில் மிரட்டலுக்குப் பயன்படும் என நினைத்து அந்தக் கொடூரச் சம்பவத்தை செல்போனில் படம் பிடிக்கவைத்திருக்கிறான். இதுபற்றி போலீஸில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, 'திருமணம் ஆகாமல் இருக்கும் கௌரியின் இரு தங்கைகளையும் இதேபோல் நாசாமாக்குவோம்' என செந்திலும் அவன் நண்பர்களும் மிரட்டி இருக்கிறார்கள். சட்டம் - போலீஸ் பற்றியெல்லாம் துளிகூடக் கவலைப்படுபவர்களாகவே தெரியவில்லை. இத்தகைய கொடூரர்களை அரசு தண்டிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட கௌரிக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்!'' என்றார்.

வழக்கை விசாரிக்கும் தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், 'செந்தில், கோர்ட்டில் சரண்டர் ஆகிவிட்டான். அவனைச் சீக்கிரமே கஸ்டடிக்கு எடுத்து விசாரிக்க இருக்கிறோம். கௌரிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. செந்திலின் இரண்டு நண்பர்களையும் தேடி வருகிறோம்!' என்றார்.

நீண்ட முயற்சிக்குப் பிறகு செந்திலிடம் பேசி னோம். 'நான் கௌரியை லவ் பண்ணியது உண்மை. இப்பவும் நானாகத்தான் சரண்டர் ஆகியிருக்கேன். வீணா கேஸ் போட்டு, என்னை மிரட்டி யாரும் பணம் வாங்க முடியாது. நான் கெடுத்துட்டேன். அவங்க சொல்றதை நான் மறுக்கலை. அப்படி இருக்க, கௌரியைஎனக்கே கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டியதுதானே? ஊர் உலகத்தில் இந்த மாதிரிதானே நடக்குது. இப்பவும் சொல்றேன்... நான் கௌரியை கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருக்கேன்!'' என்று தெனாவெட்டாக அவன் சொல்ல... நரகலை மிதித்த உணர்வு நமக்கு!

No comments:

Post a Comment