Sunday, April 11, 2010

ஜூலையில் அ.தி.மு.க. மாநாடு! ஜெ. முடிவு!


""ஹலோ தலைவரே... .... தமிழக சட்டமன்றத்தில் மேலவையைத் திரும்பவும் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்போவதாக முதல்வர் அறிவித்திருப்பதற்கு ஒரு பக்கம் ஆதரவு, இன்னொரு பக்கம் எதிர்ப்புன்னு குரல்கள் ஒலிக்குதே.''

""எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது கலைக்கப் பட்ட மேலவையைத் திரும்பவும் கொண்டு வருவதாக 1989லிருந்து தி.மு.க சொல்லிக் கிட்டுத்தான் இருக்குது. அ.தி.மு.க. ஆட்சி வந்தால் தீர்மானத்தை ரத்து பண்ணுது. 2006 தேர்தல் அறிக்கையிலும் இது இடம் பெற்றிருந்தது. புதிய சட்டமன்றத்தில் நடக்கும் கூட்டத்தொடரில் முதல்வர் இப்போது இதை அறிவித்திருப்பதால் ஆளுங்கட்சியில் பதவி கள் கிடைக்காமல் இருக்கிற பலருக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்குது. காங்கிரசி லிருந்தும் ஆதரிக்கிறாங்க. ஆனா, கம்யூனிஸ்ட்டு கள் இதை எதிர்க்குறாங்க. அடுத்த ஆண்டில் பொதுத்தேர்தல் நடக்க இருக்கிற நிலையில், மேலவையை மீண்டும் கொண்டு வரும் தீர்மானத்தை நிறைவேற்றி, அதற்கு ஜனாதி பதியின் ஒப்புதலை வாங்கி, எம்.எல்.சிக்களை நியமிப்பதுங்கிறது அத்தனை சீக்கிரமா நடக்கக்கூடிய காரியமில்லைன்னு அரசியல் வல்லுநர்கள் சொல்றாங்க.''

""தி.மு.க தொண்டர்களிடம் கட்சி நிலவரம் பற்றிய எதிர்பார்ப்புதாங்க தலைவரே அதிகமா இருக்குது. முரசொலி செல்வம்-செல்வி தம்பதி யரின் மகள் எழிலரசியின் வீணை அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்த அழகிரி, கலைஞரை சந்தித் துப் பேசலை. தன் தம்பி ஸ்டாலின் மேலே அழகிரிக்கு என்ன கோபம்ங்கிற காரணத்தை நம்ம நக்கீரனில் சொல்லியிருந்தாங்க. இது பற்றி ஸ்டாலின் தரப்பில் விசாரித்தேன். அவங்க என்ன சொல்றாங்கன்னா, தென்மாவட்டங்களில் எத்தனையோ இடைத்தேர்தல் நடந்திருக்குது. அதற்கெல்லாம் அழகிரி கூப்பிட்டா ஸ்டாலின் போனார்? கட்சியின் பொருளாளர்ங்கிற முறையில்தான் போனார்னு சொல்றாங்க.''

""தலைவர் பதவிக்குப் போட்டின்னு அழகிரி சொன்னது பற்றி ஸ்டாலின் தரப்பினர் என்ன சொல்றாங்க?''

""மதுரையில் ஒரு தொண்டனா இருப்பதே போதும்னு சொன்ன அழகிரி, தென்மண்டல அமைப்புச் செயலாளர் ஆனார். அதற்கப்புறம், எம்.பி. சீட் கேட்டு வாங்கி ஜெயித்து, மத்திய அமைச்சர் பதவியையும் கேட்டுவாங்கி டெல் லிக்குப் போனாரு. இப்ப லோக்கல் பாலிடிக்சுக்கு வரப்போறேன்னு அவரா சொல்றாரு.தலைவர் பதவிக்குப் போட்டி போடுறது பற்றியும் அவராத்தான் சொல்றாரு.இப்படி மாத்தி மாத்தி பேசிக்கிட்டிருக்கிறார். தென் மண்டலத்தை மட்டும் பார்த்துக்குவேன்னு சொன்னவர், இப்ப திருச்சி, கரூர்,புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் இதையெல்லாம் தன் பொறுப் பில் கொடுக்கணும்னு சொல்றாரு. நாளைக்கு இன்னும் பல மாவட்டங்களைக் கேட்பாரு. இதையெல்லாம் இப்படியே விட்டுடமுடியாதுன்னு சொல்றாங்க.''

""அவங்க ப்ளான் என்னவாம்?''

""அழகிரி கூடுதலா கேட்கிற மாவட்டங்களில் கரூரைத் தவிர மற்ற மா.செ.க்களெல்லாம் ஸ்டாலின் ஆதரவாளர் கள். திருச்சி கே.என்.நேரு, புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, நாகப் பட்டினம் ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டவங்க, எங்களைத் தலைவர் கூப்பிட்டு கேட்டால், தென் மண்டலத்துடன் போகமாட்டோம்னு நாங்க சொல்லிடுவோம்னு பேசிக்கிட்டிருக்காங்களாம். கூடுதல் மாவட்டங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது. இதில எந்த காம்ப்ரமைசும் கிடை யாதுன்னு ஸ்டாலின் தரப்பில் ஸ்ட்ராங்கா இருக்காங்க. இது தலைவர் உருவாக்கிய கட்சி. அவர் எந்த முடிவு எடுத்தாலும் எடுக்கட்டும். இனி எதையும் விட்டுக் கொடுக்க முடியாது. நான் முதல்வரா வராவிட்டாலும் பரவாயில்லைங் கிறதுதான் ஸ்டாலினோட நிலைப்பாடுன்னு அவர் தரப்பினர் சொல்றாங்க தலைவரே...''

""தி.மு.க நிலவரங்கள் சரி.. அதைப் பயன்படுத்திக்கிற அளவுக்கு அ.தி.மு.க.வும் ஸ்ட்ராங்கா இல்லையே.. ஜெ என்ன செய்யப் போறாராம்?''

""சிறுதாவூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய போது, தொண்டர்களை சந்திப்பது பற்றி நடந்த ஆலோசனையை ஏற் கனவே சொல்லியிருந்தேன். போன திங்கட் கிழமையன்னைக்கு ஜெ மறுபடியும் நிர்வாகி களை சந்தித்துப் பேசியிருக்கிறார். ஓ.பன்னீர், செங்கோட்டையன், தம்பிதுரை இவங்களெல்லாம் இருந்திருக்காங்க. தொண்டர்களை சந்திக்க எப்படி ஏற்பாடு பண்ணப் போறீங்கன்னு ஜெ கேட்டிருக்காரு.''

""என்ன பதில் வந்ததாம்?''

""அ.தி.மு.கவைப் பொறுத்தவரை 45 மாவட்டங்கள் இருக்குது. ஒரு மாவட்டத்துக்கு 25 ஆயிரம் பேரையாவது வரவழைக்கணும். அதற்கு, ஒரு மாவட்டத்துக்கு இரண்டரைகோடி ரூபாய் செலவாகும். அதற்கு பஸ் வசதி செய்து தரணும். இப்ப உள்ள நிலைமையில், அ.தி.மு.க.வினருக்கு பஸ் கொடுக்க தி.மு.க அரசு விடாது. பர்மிட்டை கேன்சல் செய்வதா மிரட்டு வாங்க. அதனால....ன்னு நிர்வாகிகள் இழுத்திருக்காங்க. உடனே ஜெ, அப்படின்னா ஆந்திரா-கர்நாடகா மாநிலங்களிலிருந்து பஸ் எடுங்கன்னு சொல்லியிருக்கிறார். அப்படி செய்ய முடியாதும்மான்னு ஸ்டேட் பர்மிட் நிலைமைகளையெல்லாம் நிர்வாகிகள் சொல்லியிருக்காங்க. இதை ஏன் அன்னைக்கே சொல்லலைன்னு ஜெ கேட்டிருக்கிறார்.''

""கிடுக்கிப்பிடி கேள்விதான்!''

அன்னைக்கே இது பற்றி யோசித்ததாகவும் உடனடியா சொன்னா கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்னுதான் சொல்லலைன்னும், தாங்கள் விசாரித்த அளவில் இதுதான் நிலைமைன்னும் நிர்வாகிகள் பதில் சொல்லியிருக்காங்க. அதைக் கேட்டுக்கிட்ட ஜெ., தன்னோட முடிவை யோசித்து சொல்வதா சொல்லி எல்லோரையும் அனுப்பிட்டார். இதற்கப்புறம், பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலை ஒடிச்சுக்கிட்ட நத்தம் விஸ்வநாதனைப் பார்க்கிறதுக்காக அப்பல்லோவுக்கு ஜெ வந்தப்ப, நிர்வாகிகளும் அவருக்காக காத்திருந்தாங்க. ஏதாவது சொல்லுவார்னு எதிர்பார்த்தாங்க. ஆனா, நான் இன்னும் எந்த முடிவும் பண்ணலைன்னு ஜெ சொல்லியிருக்கிறார்.''

""நிர்வாகிகள் என்ன நினைக்கிறாங்களாம்?''

""ஒரு மாவட்டத்துக்கு இரண்டரை கோடின்னா மொத்தமா 100 கோடி ரூபாய் செலவாகும். இப்ப இருக்கிற நிலைமையில் மா.செ.க்களும் மாநில நிர்வாகிகளும் செலவை ஏத்துக்கணும்னு ஜெ சொல்லிடுவாரோங்கிற பயத்தில் எல்லாரும் அலறுறாங்க. இவ்வளவு செலவு பண்ணி கட்சிக்காரங்களை ஒரு இடத்துக்கு கொண்டு வரதுக்குப் பதிலா, ஜெ.வே ஒவ்வொரு மாவட்டமா போய் தொண்டர்களை சந்திக்கலாம்னு நிர்வாகிகள் நினைக்கிறாங்க. அதே நேரத்தில், ஜெ சென்ட்டிமென்ட்டா ஒரு விஷயத்தை யோசித்திருக்கிறாராம். 96-ல் அ.தி.மு.க. படுதோல்வி அடைஞ்சதுக்குப்பிறகு, 1998-ல் நெல்லையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் அத்வானி, வைகோ, ராமதாஸ் இவங்களெல்லாம் கலந்துக்கிட்டாங்க. அதற்கப்புறம் 2001-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தது. அ.தி.மு.க.வுக்கு நெல்லை மாநாடு திருப்புமுனையா அமைஞ்சதால, அந்த சென்ட்டிமென்ட்டில் நெல்லையில் ஜூலையில் அ.தி.மு.க. மாநாட்டை நடத்துவது பற்றி தீவிரமா யோசிக்கிறாராம் ஜெ.''

""கார்டனிலிருந்து எனக்கும் ஒரு தகவல் கிடைச்சுதுப்பா.. தன் மனதுப்படி யோசித்துக் கொண்டிருக்கும் ஜெ., தனக்கு நெருக்கமானவங்க சொல்வதைக் கூட கேட்கிறதில்லையாம். அதனால சசிகலாவும் இப்ப தஞ்சாவூருக்குப் போயிட்டாராம். ஜெ.வோட முழு நேரமும் பூஜை.. பூஜை... பூஜை...ன்னுதான் போய்க்கிட்டிருக்குதாம்.''

""பா.ம.க. ஏரியா நியூஸ் ஒண்ணு சொல்றேங்க தலைவரே... பாலவாக்கத்தில் க்ரீன் மெடோஸ்னு ஒரு ரிசார்ட் இருக்குது. இங்கே பா.ம.க.வினருக்கு திடீர்னு ஒரு விருந்தை ஏற்பாடு செய்தார் அன்புமணி. பென்னாகரம் இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள், எம்.எல். ஏக்கள், முக்கிய நிர்வாகிகள்னு 40 பேருக்குத் தான் அழைப்பு. சாயங்காலம் ஆறரை மணிக்கு ஆரம்பிச்சு நைட்டு இரண்டரை மணி வரைக்கும் நடந்த விருந்தில், ராமதாசும் கலந்துக்கிட்டாரு. கட்சித்தலைவருக்கான இறுக்கம் எதுவுமில்லாம, எல்லார்கிட்டேயும் அவர் ரொம்ப ரெகுலரா பேசிக்கிட்டிருந்தது நிர்வாகிகளுக்குப் பிடிச்சுப்போச்சு.''

""என்ன சொன்னாராம் டாக்டர்?''

""பென்னாகரத்தில் நாம ஜெயிச்சிருக்க லாம்னு குரலில் கொஞ்சம் வருத்தம் இழையோட சொன்னாராம். அப்ப காடு வெட்டி குருவும் அவரைச் சார்ந்த நிர்வாகி களும், நாம இனிமே வன்னியர்ங்கிற அடை யாளத்தோடு முழுக்க முழுக்க செயல்பட்டா தான் பென்னாகரத்தில் வாங்குனத்துக்கு மேலே ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியும்னு சொல்லியிருக்காங்க. அதற்கு அன்புமணி, வன்னியர் சமு தாயத்தை நாம விட்டுக் கொடுக்கப் போறதில்லை. அதே நேரத்தில் யாரையும் நாம எதிரியாக்கிக்க வேணாம்னு சொல்லியிருக்காரு.''

""மற்றவங்க என்ன சொன்னாங்களாம்?''

""விருந்துக்கு வந்திருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவங்க, கூட்டணி அமைக்கணும்னு பேசியிருக்காங்க. அப்ப அன்புமணி, நாம தனித்தே போட்டியிட முயற்சிக்கலாம். 60 தொகுதியில் கவனம் செலுத்தி, 40-ல் ஜெயித்தோம்னா பெரிய கட்சிகள் இரண்டும் நம்ம தயவைத் தேடி வரும்னு சொல்லியிருக்கிறார். அதற்கப்புறம், கூட்டணி அமைக்கிற சூழ்நிலை வந்தால் யாரோடு அமைக்கலாம்னு விவாதம் நடந்தப்ப, தி.மு.க. கூட்டணிதான் பெட்டர்னு பல எம்.எல்.ஏக்கள் சொல்லியிருக்காங்க. அ.தி.மு.க. கூட்டணி சரியா இருக்காதுன்னும் குரல்கள் ஒலித்ததோடு, எதுவா இருந்தாலும் முடிவு உங்களோடதுதான்னு ராமதாஸை பார்த்து சொல்லியிருக்காங்க. விருந்தில் தொடங்கி, எலக்ஷன் ப்ளான் வரைக்கும் எல்லாமே அன்புமணி பொறுப்புங்கிறதால, இதை அன்புமணி ஆபரேஷன்னு பா.ம.க உள்வட்டத்தில் சொல்றாங்க தலைவரே!''

""ஓ...''

""அடுத்ததா ஒரு பரபரப்பு நியூஸ் சொல்றேன்.. சென்னை உள்பட தமிழகத்தில் ரொம்ப வலிமையா இருக்கிற கேபிள் நிறுவனம் சுமங்கலி. அதாவது, எஸ்.சி.வி. இந்த நிலையில், மு.க.அழகிரியோட நண்பரான ஆவடி ஜெயராமன் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த கேபிள் டி.வி லைசென்சில் ஏப்ரல் 14-ந் தேதியிலிருந்து சென்னையில் புதுசா ஒரு கேபிள் நிறுவன அலுவலகத்தைத் திறக்கப் போறாரு. சுமங்கலி கேபிளோட ஓனர், தயாநிதி மாறன். அவருக்கு அரசியல் ரீதியா ஆதரவா இருக்கிறவர் ஸ்டா லின். சுமங்கலிக்குப் போட் டியா ஜெயராமன் தொடங்குற கேபிளுக்கு அழகிரி சப்போர்ட் டா இருப்பாருங்கிறதால சிட்டியில் பரபரப்பு கூடிடிச்சி. ஏற் கனவே சுமங்கலிக்கும் ஹாத்வேக்கும் நடந்த போட்டியில ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கேபிள் ஒயரை அறுத்ததா புகார் வந்தது. இப்ப புதுசா வர்ற கேபி ளால யார், எதை அறுக்கப் போ றாங்க ளோன்னு போலீஸ் ஏரியா பதட்டத்தோடு இருக்குதுங்க தலைவரே...''

""காங்கிரஸ் வட்டாரத்திலும் இளை ஞர் காங்கிரஸ் தேர்தல் இறுதி கட்ட பரபரப்பில் இருக்குதே.. 11-ந் தேதி நடைபெறும் மாநில நிர்வாகிகள் தேர்தலை நேரில் பார்வையிட ராகுல்காந்தி வருவ தால் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்குப்பா...''

""ஆமாங்க தலைவரே.... இளைஞர் காங்கிரசுக்கு மாநிலத் தலைவர், துணைத்தலைவர், 8 பொதுச் செய லாளர்கள்னு மாநில நிர்வாகிகள் 10 பேர் ராகுல்காந்தி முன்னிலையில் தேர்ந் தெடுக்கப்படவிருக்காங்க. அதுபோல, தமிழகத்தில் உள்ள 39 எம்.பி. தொகுதிகளுக்கும் தலா 10 நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுறாங்க. எல்லாத்தையும் சேர்த்து 400 நிர்வாகிகள். இதில் மாநிலப் பொறுப்புக்குப் போட்டியிடுறவங்க, தங்களுக்கு ஏன் ஓட்டு போடணும்னு 2 நிமிட நேரம் பேசணும்ங்கிறது ராகுலோட உத்தரவு. கோஷ்டித் தகராறுக்குப் பெயர் பெற்ற தமிழக காங்கிரசார், ராகுல் முன்னாடி எந்த அடிதடியிலும் இறங்கிடக் கூடாதுங்கிறதுக்காக திருச்சி முழுக்க பலத்த பாதுகாப்பு போடப் பட்டிருக்குது.

""இரண்டு அதிகாரிகள் பற்றிய தகவலோடு நான் லைனில் வந்திருக்கேன். கிராமப்புறங்களை அக்கறையோடு கவனிக்கும் துறையின் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரொம்ப கண்டிப்பானவர். அவர் அடிக்கடி ரேஸ்கோர்ஸ் கெஸ்ட்ஹவுசில் தங்கு கிறாராம். அங்கே மோகினி நடமாட்டம் தென்படுவதாக ஏரியாவாசிகள் சொல் றாங்க. இன்னொரு அதிகாரி வீட்டு வசதித் துறையிலிருந்து பனியன் ஊருக்கு மாற்றப்பட்டவர். சம்பந்தமேயில்லாமல் பனியன் கம்பெனிகளில் புகுந்து அங்கு உள்ள இளம் பெண்களிடம் டச்சிங்... டச்சிங்... செய்கிறாராம். இதுபற்றி வாய்மொழியாக வரும் புகார்களை எப்படி விசாரிப்பதுன்னு தெரியாமல் முழிக்கிறாராம் ஏரியா எஸ்.பி.''

மிஸ்டுகால்



சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் முன் னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இப்போது திருமண மோசடி யில் சிக்கியதால் சானியா மிர்சாவை திருமணம் செய்துகொள்வதில் சர்ச்சையானது. ஆயிஷா என்ற பெண்ணை பார்த்ததேயில்லை என்று சொல்லிவந்த மாலிக், இப்போது ஆயிஷாவை விவாகரத்து செய்து விட்டு, சானியாவை திருமணம் செய்துகொள்ள முன்வந்திருக்கிறார். இதற்கு ஆயிஷா குடும்பத்தாரும் ஒப்புதல் தெரிவித்துவிட்டனர். பண விஷயத்திலும் அவர்களுக்கு திருப்தியாம். இரண்டாம் தாரமாகும் சானியாவுக்குத்தான் நெருக்கடி. திருமண சர்ச்சையால், அவரை ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்த டென்னிஸ் அமைப்புகள் அதனை நீடிக்க தயக்கம் காட்டுகின்றன.



கர்நாடக பா.ஜ.க அரசு, பிடதி ஆசிரமத்திற்கு ஆதரவாக இருப்பதாக தொடர்ந்து குற்றச் சாட்டுகள் எழுந்த நிலையில், நித்யானந்தர் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த பிரஷரும் இல்லை என்றார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. இதை யடுத்து, ஆசிரமத்தில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. நித்யா னந்தரின் இருப்பிடத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் சேலை, நகைகள் ஆகியவை ஏராளமாக சிக்கியிருக்கின்றன.



இலங்கை நாடாளுமன் றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 8-ந் தேதி நடைபெற்றது. நேரடி போட்டி நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே எளிதாக வெற்றிபெற்றதால், மும்முனைப் போட்டி நடைபெறும் இந்த தேர்தலிலும் அவரது கட்சி வெற்றி பெறும் என்ற எதிர் பார்ப்பு நிலவுகிறது. எனினும், தமிழர் பகுதியில் பதிவாகும் ஓட்டுகள் இந்த தேர்தல் முடிவுகளில் முக்கியத்துவம் பெறும் என்கிறார்கள் இலங்கை அரசியல் பார் வையாளர்கள்.



பட்ஜெட் மீதான விவாத மும் மானியக் கோரிக்கைகள் விவாதமும் மே 14-ந் தேதி வரை நடக்கும் என சபாநாயகர் அறிவித்ததில் காங் கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலர் நொந்துபோயுள்ளனர். சென்னை வெயில் உக்கிரமாக இருக்கிறது. பட்ஜெட் விவாதம் முடிந்ததும் ஒரு கேப் விட்டு, மான்ய கோரிக்கை தொடங்கும் என்று எதிர்பார்த்து, ஊட்டி-கொடைக்கானல்-ஏற்காடு போக திட்ட மிட்டிருந்தோம். அதற்கு வாய்ப்பு தராமல் இப் படி பண்ணிட் டாரே சபா நாயகர்? மே 15-ந் தேதிக்குப் பிறகு கோடை மழை வந்திடும். அப்புறம் எங்கே கோடைவாசஸ்தலங்களுக்குப் போறது என்கிறார்கள்.

No comments:

Post a Comment