Wednesday, April 28, 2010

பிபாஷா ஊட்டிய கேக்!


shockan.blogspot.com
பிரபல மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர ராஜன் வாரிசு இந்திரஜித் 12 நாட்களில் படமாக்கி திரைக்கு வந்து கின்னஸ் சாதனை படைத்த "சிவப்பு மழை' படம் மூலமாக ஒளிப்பதி வாளராக அறிமுகமாகியிருக்கிறார். இது மட்டுமில்லாமல் முதல் படத்தின் கின்னஸ் சாதனைச் சான்றிதழை தமிழக முதல்வர் கலைஞரிடம் காண்பித்து, ஆசி பெற்றுள்ளார்.

இந்த கின்னஸ் சாதனை படத்தின் அனுபவத்தைப் பற்றி ஒளிப்பதிவாளர் இந்திரஜித்திடம் கேட்டோம்:

""ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்துவிட்டு ஒளிப்பதிவாளர் சரவணனிடம் உதவி கேமராமேனாக விஜய் நடித்த "திருப்பாச்சி', ஸ்ரீகாந்த் நடித்த "பம்பரக் கண்ணாலே', "டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்' என்ற இந்திப் படத்திலும் பணியாற்றினேன்.

அடுத்து பிரபல ஒளிப்பதிவாளர் ரவி யாதவிடம் ஏழு இந்திப் படங்களில் உதவியாளராகப் பணிபுரிந்தேன். அக்ஷய் கன்னா, ஷாயித் கபூர், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்த "36 சைனா டவுண்', சஞ்சய் தத், பிபாஷா பாசு, அஜெய் தேவ்கன் நடித்த "மிஸ்டர் ப்ராடு', பாபி தியோல், அக்ஷய் கண்ணா நடித்த "நக்காப்', பிபாஷா பாசு, கேத்ரினா கயிப் நடித்த "ரேஸ்', ஹர்மன் பவேஜா, ஜெனிலீயா நடித்த "இட்ஸ் மை லைப்', செலீனா ஜெட்லீ, இஷா கோபிகர் நடித்த "ஹலோ டார்லிங்', விவேக் ஓபராய், அருணா, நந்திதா சென் நடித்த "பிரின்ஸ் போன்ற பிரம்மாண்ட படங்களிலும் உதவி யாளராகப் பணியாற்றிய அனுபவம் உண்டு.

"கனவு காண்கிறேன்' பாடலை ஏவி.எம். ஸ்டுடியோவில் ஐந்தே மணி நேரத்தில் வைத்தியநாதன் இயக்கத்தில் பாபி நடன அமைப்பில் நான் படமாக்கி யதை யூனிட் முழுவதும் பாராட்டினார்கள். இந்த வாய்ப் பைத் தந்த ஹீரோ சுரேஷ் ஜோகிம், தயாரிப் பாளர் மீனா சக்திவேல், டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை மறக்க மாட்டேன்.

லண்டனில் நடந்த இன்னொரு மகிழ்ச்சியான விஷயம்.

"மிஸ்டர் ப்ராடு' படப்பிடிப்பில் எனது பிறந்த நாளை எனது நண்பர் மூலமாகத் தெரிந்த ரவி யாதவ், இயக்குநர் அப்பாஸ் மூஸ்தான் இருவரும் பெரிய கேக் ஒன்று ஆர்டர் செய்து, படப்பிடிப்பு நடந்த கப்பலில் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். ரவி யாதவ், அப்பாஸ், மூஸ்தான், பிபாஷா பாசு ஆகியோர் கேக் ஊட்டி வாழ்த்து சொன்னது என் வாழ் நாளில் மறக்க முடியாத சம்பவம்!'' என சிலிர்க் கிறார் இந்திரஜித்!

No comments:

Post a Comment