Tuesday, April 27, 2010

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு: குஷ்பு மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி


shockan.blogspot.com
நடிகை குஷ்பு மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.


நடிகை குஷ்பு பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த போது, தமிழ் பெண்களின் கற்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். இக்கருத்து, தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.


கருத்து தெரிவித்த குஷ்புவை எதிர்த்து தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மேட்டூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குஷ்பு ஆஜரானார். வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், அதை ரத்து செய்ய மறுத்துவிட்டது.


இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் வழக்கை விசாரித்து வந்தது.


இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது. குஷ்பு மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment