Saturday, April 24, 2010

நம்பிய பெண்களை ஏமாற்றியது எப்படி? -களி தின்னும் சாமியாரின் ஒப்புதல் வாக்குமூலம்!


shockan.blogspot.com

நித்யானந்தாவை அதிரடியாகக் கைது செய்து அவரது 50 நாள் கண்ணா மூச்சி ஆட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்கள் கர்நாடக சி.ஐ.டி. போலீஸார்.

ஊருக்கெல்லாம் சந்நி யாசத்தைப் போதித்துவந்த நித்யானந்தா... திரைமறைவில் தொடர்ந்து பெண்வேட்டை நடத்திவந்ததை.... நடிகை ரஞ்சிதாவுடனான ’அந்த சி.டி. காட்சிகள் அம்பலமாக் கியது. அதுவரை அவரை கடவுளின் அவதாரம் என்று நம்பிவந்த அவரது பக்தர் களும் சீடர்களும் இதனால் நிலைகுலைந்து போனார்கள். நித்யானந்தாவின் நிஜ முகத்தைக் கண்டு கொதித்துப்போன அவரது பக்தர் கள் திருவண் ணாமலை ஆசி ரமம் தொ டங்கி... கர்நாடகாவில் இருக்கும் அவரது பிடதி தலைமை ஆசிரமம் வரை அடித்து நொறுக்கி... காறி உமிழ்ந்தனர்.

சி.டி.காட்சிகள் களேபரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில்... ஹரித்துவார் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார் நித்யானந்தா. நிலைமை மோசமாவதை அறிந்து திகைத்துப் போனவர்... அந்தக் காட்சிகள் பொய் என்றும் கிராபிக்ஸ் மூலம் சித்தரிக்கப்பட்டவை என்றும் அறிக்கை கொடுத்துப்பார்த்தார். இருந்தும் அவரது வார்த்தைகளை யாரும் நம்பவில்லை. அதோடு அவர் மீது.. கொலைமுயற்சி, மிரட் டல், கற்பழிப்பு, மத உணர்வைப் புண் படுத்துதல், பணமோசடி என அடுக்கடுக்காக வழக்குகள் பதிவானபடியே இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாய்.... நித்யானந்தாவின் படுக்கையறை விளையாட்டுக்களை படம் எடுத்த அவரது மாஜி சீடர் லெனின் என்கிற தர்மானந்தா மூலம் நக்கீரன் தொடர்ந்து நித்யானந்தாவின் முகத்திரைகளை அப்பட்ட மாகக் கிழித்ததாலும்... அவரால் கற்பழிக்கப் பட்ட ஆசிரம பக்தைகளின் வாக்குமூலங்களை நக்கீரன் தொடர்ந்து வெளியிட ஆரம்பித்த தாலும்.. ரொம்பவே அரண்டுபோன நித்யானந்தா...

பிடதி ஆசிரமத் தலைவர் பதவியை ராஜி னாமா பண்ணிவிட்டு... ஹரித்துவாரிலிருந்து தலைமறைவாகிவிட்டார்.

இதற்கிடையே... நித்யானந்தா-ரஞ்சிதா செக்ஸ் விவகாரம் கர்நாடக மாநிலத்தில் நடந்ததால்... நித்யானந்தா மீதான அத்தனை வழக்கையும் கர்நாடக மாநிலத்திடமே ஒப்படைத்தது தமிழக போலீஸ். கர்நாடக மாநிலமோ அந்த வழக்குகளை மாநில சி.ஐ.டி. பிரிவிடம் ஒப்படைக்க... இதன்பிறகே தேடல் துரிதமானது. இந்த சூழலில்தான் இமாச்சலப் பிரதேசத்தில் பதுங்கி இருந்த நித்யானந்தாவையும் அவரது சீடர்கள் 4 பேரையும் ஹிமாச்சல் பிரதேச போலீஸின் துணையோடு அள்ளி வந்திருக் கிறார்கள் கர்நாடக காக்கிகள்.

நித்யானந்தாவை டிரேஸ் பண்ணியது எப்படி?

கர்நாடக மாநில சி.ஐ.டி.பிரிவு டி.ஜி.பி. குருபிரசாத் சொல்கிறார் ""நித்யானந்தாவைக் கைது செய்ய 4 ஸ்பெஷல் டீம்களை அமைத் தோம். ஹரித்துவார் கும்பமேளாவுக்குப் போன நித்யானந்தா அங்கிருந்து கேரளாவுக்குப் போய்விட்டதாக ஒரு தகவலும் நேபாளம் போய்விட்டதாக மற்றொரு தகவலும் கிடைக்க அங்கெல்லாம் எங்கள் தனிப்படைகள் போய்... துழாவின. இந்த நிலையில் அவரது செல்போன் தொடர்புகளை வாட்ச் பண்ண ஆரம்பித்தோம். அவர் தினசரி யார் யாருடன் பேசுவார் என கணித்து அவர்களது செல்போன்களையெல்லாம் கண்காணித்தபோது... முதலில் அவர் உ.பி.யில் இருந்து பேசியதையும் பின்னர் அவர் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்து தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதையும் கண்டுபிடித்தோம். இதன்பிறகே எங்கள் டி.எஸ்.பி.க்கள் சந்திரசேகர், உசேன் ஆகியோர் தலைமையிலான டீமை அங்கு அனுப்பி வைக்கும் முடிவுக்கு வந்தோம்''’என்றார் வெற்றிப் புன்னகையோடு.

ஹிமாச்சல் பிரதேச சோலன் மாவட்ட எஸ்.பி. பிரேம் தாக்கூரோ ""கர்நாடக போலீஸ் கடந்த 17-ந் தேதி எங்களுக்கு ஒரு ஃபேக்ஸ் அனுப்பினார்கள். அதில்... நித்யானந்தா உங்கள் ஏரியாவில் பதுங்கி இருப்பதாகத் தெரிகிறது. அவரைக் கண்டுபிடித்துக் கைதுசெய்ய உதவுங்கள்’என்ற தகவல் இருந்தது. அதனால் எங்கள் தனிப்பிரிவு போலீஸ் டீமை கர்நாடக போலீஸுடன் அனுப்பிவைத்தோம். ஆரம்பத்தில் செல்போன் டவர் இங்கிருக்கும் சாய்றீ பகுதியில் நித்யானந்தா இருப்பதாகக் காட்டியது. பின்னர்தான் மாம்லீக் கிராமத்தையே தொடர்ந்து அடையாளப்படுத்தியது. அதனால் மப்டியில் ஒருங்கிணைந்த போலீஸ் டீம் நித்யானந்தா படத்தோடு அங்கே இங்கே என விசாரித்தது. அப்போது ஒரு டாக்ஸி டிரைவர்தான்... அந்த சாமியாரை ஒரு பண்ணை வீட்டில் ஒரு தரம் டிராப் செய்தேன் என்று சொல்ல... அவன் மூலம்தான் நித்யானந்தா பதுங்கியிருந்த பண்ணை வீடு கண்டுபிடிக்கப்பட்டது''’’ என்றார் நிதானமாக.

நித்யானந்தாவைக் கைதுசெய்த டி.எஸ்.பி.க்களில் ஒருவரான சந்திரசேகர் நம்மிடம்... ""21-ந் தேதி காலை 11.30-க்கு ஸ்பாட்டுக்குப் போன நாங்க... முதல்ல அந்த பண்ணை வீட்டை ரவுண்டு கட்டினோம். அவர் எந்த வழியிலாவது தப்பி ஓடிடக்கூடாதில்லையா. அப்புறம் திடீர்னு அந்த வீட்டிற்குள் நுழைந்தோம். அப்ப ஹாயா கட்டில்ல சாஞ்சிக்கிட்டு டி.வி.பார்த்துக்கிட்டிருந்தார் நித்யானந்தா. நாங்க அந்த அறைக்குள் அதிரடியா நுழைஞ்சதைப் பார்த்து ஒரு கணம் திகைத்துப்போன அவர்... கொஞ்சம் சுதாரிச்சிக்கிட்டு சிரிக்க முயன்றார். உங்கமேல கற்பழிப்பு...மோசடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதால் கைது செய்ய வந்திருக்கோம்னு சொன்னோம். உடனே அவர் இன்னைக்கு என்னோட முன்ஜாமீன் பெட்டிசன் ராம்நகர் கோர்ட்டில் விசாரணைக்கு வருதேன்னார். உங்களுக்கு ஜாமீன் கிடைக்காது. நாங்க உங்களைக் கைதுசெய்த விஷயத்தை அரசு வழக்கறிஞர் மூலம் கோர்ட்டிற்குத் தெரியப்படுத்திடு வோம்னு சொன்னோம். கொஞ்சநேரம் அமைதியாக இருந்த நித்யானந்தா, ""நான் பெங்களூருக்குத் திரும்பப் போவேன்னு நினைக்கலை. இங்கேயே ஒரு ஆசிரமம் தொடங்கி நிம்மதியா காலத்தை ஓட்டலாம்னு இருந்தேன். ப்ச்... முடியாமப் போச்சு. நான் உங்களுக்கு முழுசா ஒத்துழைப்பு கொடுப்பேன். கொஞ்சம் சாப்பிட்டுட்டு கிளம்பட்டுமா? என்று கேட்டார். அவர் மதிய உணவை சாப்பிடும்வரை காத்திருந்து அழைத்துவந்தோம். அப்போது... கொஞ்சநாள் விட்டீங்கன்னா நல்லா இருக்கும்னு சொன்னவர் எங்க தீவிரத்தைப் பார்த்து பேசாம எங்களோட கிளம்பிட்டார்.

கூட இருந்த பக்தானந்தாவையும் கைதுசெய்த நாங்க... அங்க இருந்த சீடர்கள் நித்யசனதானந்தா, சிங்கப்பூர் ஆசிரம இன்சார்ஜ் அர்மித், திருவண்ணாமலை ஆசிரம இன்சார்ஜா இருந்த ராகமய மானந்தா ஆகியோரையும் கூடவே கூட்டிட்டு வந்துட்டோம். அவர் களிடமிருந்து 8 செல்போன்கள், 3 லட்ச ரூபாய் ரொக்கம், 7 ஆயிரம் அமெரிக்க டாலர், 3 லேப்டாப்கள் என பலவற்றையும் கைப்பற்றி யிருக்கிறோம். நித்யானந்தாவையும் பக்தானந்தாவையும் தவிர மத்தவங்களை ஆசிரமத்திற்கு அனுப்பி வச்சிடுவோம். தேவைப் பட்டா பின்னால விசாரணைக்கு அவங்களைக் கூப்பிடுவோம். இங்க சிம்லா நீதிமன்றத்தில் இவங்களை ஆஜர் படுத்திட்டு நாளை வியாழக்கிழமை அவரை பெங்களூருக்குக் கொண்டுபோய்டுவோம்'' என்றார்... கைது நடவடிக்கை முடிந்த ஒரு மணி நேரத்திலேயே.

அந்த டீமில் இருந்த ஒரு சி.ஐ.டி. காக்கியோ ""ஆரம்பத்திலேயே அவரோட ஜாதகத்தை முழுசா துருவிட்டோம். நித்யானந்தா லேசுப் பட்ட ஆள் இல்லை. பெண்களை விதவிதமா ருசிக்கிறதுக்காகவே இவர் ஆன்மீகத்துக்கு திட்டமிட்டு வந்திருக்கார். பெங்களூரில் சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோவை வைத்திருக்கும் குப்புசாமி என்பவர் தன் கால்வலியை சரிப் படுத்தறதுக்காக நித்யானந்தாவை 2002-ல் தன் வீட்டிற்கு கூட்டிட்டுப்போய்... தங்க வச்சிருக்கார். அங்க இவரைப் பார்க்க வந்த பெண்களுக்கு யோகா கத்துத் தருவதாச் சொல்லி செக்ஸ் சில்மிஷங்களைப் பண்ணி யிருக்கார். அப்ப பெண்களிடம்’"ஏ'’ ஜோக்கு களைச் சொல்லசொல்லி நெளியவைத் திருக்கிறார். அதோட சிருங்கார நடனம் என்ற பெயரில் பெண்களைக் கட்டிப்பிடிச்சி ஆடுறதையும் வழக்கமா வச்சிருந்திருக்கார். அவர் தனது நெருங்கிய நண்பர் ஒருத்தரின் மனைவியின் மடியில் தலைவைத்துப் படுத்துக் கிட்டு அசிங்கம் பண்ண... இதை எதேச்சையாப் பார்த்துட்ட குப்புசாமி அவரைத் துரத்தி யடிச்சிருக்கார். இதுக்குப்பிறகு பெங்களூர் தொழிலதிபர் நாகராஜ் ஷெட்டியை நம்ப வச்சி அவரிடம் பிடதியில் 4 ஏக்கர் நிலத்தை வாங்கி ஆசிரமத்தை ஆரம்பிச்சிருக்கார். அங்கயும் அவரோட சுயரூபம் அசிங்கமா வெளிப்பட... இவர்மேல் அப்போதைய உள்துறை அமைச்சரான மல்லிகார்ஜுன கார்கேவிடமே புகார் கொடுத்திருக்கார் ஷெட்டி.

பிடதி ஆசிரமத்தில் நடத்திய ரெய்டின்போது பல ஆவணங்களையும் ஹார்டு டிஸ்க்குகளையும் கைப்பற்றினோம். அதில் 23 ஹார்டு டிஸ்க்குகளில் பதிவுசெய்யப்பட்டிருந்த பல விஷயங்கள் அழிக் கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் அழித்த தையெல்லாம் ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலம் மீட்கும் நடவடிக்கைகளிலும் எங்கள் டீம் ஒரு பக்கம் களமிறங்கியிருக்கிறது. ரஞ்சிதாவைப் போலவே பல பெண்களுடன் நித்யானந்தா கூத்த டிக்கும் ஆபாச சி.டி.க்களையும் கைப்பற்றி இருக்கி றோம். ரஜனீஷ் ஆசிரமப் பாணியில்தான் பிடதி ஆசிரமமும் இருந்திருக்கு.

நித்யானந்தாவைப் பற்றிய அத்தனை தகவல்களையும் திரட்டி வச்சிக்கிட்டுதான் அவரைத் தேட ஆரம்பிச்சோம். கைதுசெஞ்சி கோர்ட்டிற்குக் கொண்டுபோகும் போதே ரஞ்சிதா பற்றி நாங்க நித்யானந்தாக்கிட்ட கேட்டப்ப.... அதான் எல்லாம் வெட்ட வெளிச்சமாயிடிச்சேன்னு கூச்சமே இல்லாம சொல்றார். ஆள் ரொம்ப அழுத்தம். சாமியார்ங்கிற பேர்ல ஏகப்பட்ட பெண்களின் வாழ்க்கையில் விளையாண்டது சரியான்னு கேட்டதுக்கு... வாய்ப்பு கிடைச்சா எல்லா ஆண்களும் இதைத்தான் செய்வாங்க, நானும் விளையாடினேன்னு சொல்றார். கேவலமான ஆள்''’என்றார் எரிச்சல் குரலில்.

""நித்யானந்தாவை இத்தனை நாள் ஏன் நெருங்க முடியலை?'' என்றோம் அவரிடமே.

""பணபலத்தைத் தாண்டி இத்தனை நாள் அவருக்குப் பாதுகாப்பா இருந்தது மத பலம்தான். தமிழகத்தில் இந்து அமைப்புகளோட மிக நெருக்கம் பாராட்டும் ஒரு முக்கிய புள்ளி.. நித்யானந் தாவுக்கு சப்போர்ட்டா இருந் தார்.

வெளிநாட்டு கிறிஸ்தவ அமைப்புகளின் சதியால்தான் நித்யானந்தா சிக்கவைக்கப்பட்டி ருக்கிறார் என அவரையும் சிலர் நம்பவச்சிருந்தாங்க. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தரப்பினர் ரஞ்சிதாவுடன் நித்யா விளையாடும் சி.டி.யை. முழுதாகப் போட்டுக் காட்ட... அட பாதகா... என அவர் திகைத்துவிட்டார். மேலும் நித்யானந்தாவின் தில்லுமுல்லுகளையும் அந்தத் தரப்பு விவரிக்க... இதன்பிறகே... இப்படிப்பட்ட மோசடி ஆசாமிகளுக்கு நாம் துணை போனால் இந்து மதமே பாழாயிடும்... நிறையபேர் இதே நோக்கத்துக்காக சாமியார்.. சந்நியாசின்னு கிளம்பிடுவாங்கன்னு கொதிப்படைந்ததோடு... கர்நாடக பா.ஜ.க. முதல்வரான எடியூரப்பாவிடமும் உண்மையை விளக்கினார். இதன்பிறகே எங்களுக்கு கைதுக்கான சிக்னல் கிடைத்தது'' என்று கிறுகிறுக்க வைத்தார் அவர்.

22-ந் தேதி மாலை பெங்களூர் கொண்டு வரப்பட்ட நித்யானந்தாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்த போலீஸ்... அடுத்த கட்டமாக அவரை போலீஸ் கஸ்டடி யில் எடுத்து விசாரிக்கும் முகாந்திரத்தில் இருக்கிறது. இந்த விசாரணையிலும், நித்யானந் தருக்கு நடத்தப்படும் ஆண்மை பரிசோதனையிலும் மேலும் பல திகீர் பகீர் விவகாரங்கள் வெளியாகும் என்கிறார்கள் கர்நாடக காக்கிகள்.

-சகா

திருந்தாத நித்யா!



இமாச்சலத்தில் நித்யானந்தா பதுங்கியிருந்தபடியே தன்னால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலருக்கும் மிரட்டல் மெயில் அனுப்பி இருக்கிறார். காலபைரவா என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்த மெயிலில் ‘எந்த சூழ்நிலையிலும் சுவாமி மீது புகார் தரக்கூடாது. கொடுத்தால் விபரீதங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற ரீதியில் எச்சரிக்கை வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோல் அமெரிக்காவில் நிதி உதவி செய்த பலருக்கும் இதேபோன்ற மிரட்டல்கள் மெயில் மூலம் பறந்திருக்கிறது. அமெரிக்காவில் ஆசிரமத்தின் பேரில் திரட்டப்பட்ட பெரும் நிதியை கோபிகாவின் கணவரே நிர்வகித்துவருகிறார். அந்தப் பணத்தை பெங்களூருக்கு கொண்டுவருவது குறித்தும் தலைமறைவு நிலையிலேயே டீலிங் நடத்திவந்திருகிறார் நித்யானந்தா. இதையெல்லாம் கைப்பற்றப்பட்ட லேப்-டாப்பைத் துருவி கண்டுபிடித்த காக்கிகள்... நித்யானந்தாவின் கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வித விதமான செக்ஸ் படங்களை பார்த்து... ’இன்னும் இந்த ஆள் திருந்தலையே’ என அதிர்ந்து போய்விட்டார்களாம்.

1 comment:

  1. முதலுக்கே மோசம்! -தனியார் இன்சூரன்ஸ்...

    என்ற தலைப்பில் வந்துள்ள நக்கீரன் செய்தியையும் பதிவிடவும்.

    ReplyDelete