Wednesday, April 21, 2010

சுனந்தா புஷ்கர், உண்மையில் யார் தெரியுமா? ஒரு ஹை க்ளாஸ் மசாஜ் அழகி.


shockan.blogspot.com
இருபத்தெட்டு வருடங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் வெற்றிகரமாக செயல்பட்ட இந்தியரான சசிதரூர் டெல்லி அரசியலுக்கு வந்து ஒரு சில மாதங்களிலேயே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போகுமளவிற்கு வெடித்துக் கிளம்பியுள்ள ஐ.பி.எல். குறித்த சர்ச்சைகள் பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது.

சசிதரூரின் பினாமி, அவரது எதிர்கால மனைவி என்றெல்லாம் பேசப்படும் சுனந்தா புஷ்கர், உண்மையில் யார் தெரியுமா? ஒரு ஹை க்ளாஸ் மசாஜ் அழகி. கொச்சி அணியை வாங்க ரெண்டஸ்வஸ் என்கிற கம்பெனிக்காக அதிகாரத்தை சசிதரூர் தவறாக பயன்படுத்தினார் என குற்றம் சாட்டுகிறார்களே? அந்த கம்பெனியின் முதலீடு எவ்வளவு தெரியுமா? வெறும் 5,000 ரூபாய்தான் என அதிர்ச்சித் தகவல்களை தரும் சசிதரூரின் நண்பர்கள் நடந்தது என்னவென விளக்கினார்கள்.

""கடந்த ஐ.பி.எல். அணிகள் உருவாக்கத்தின் போதே தனது மாநிலமான கேரளாவுக்கு சொந்தமாக அணி ஒன்றை வாங்க வேண்டுமென முயற்சி செய்தார் சென்னையில் இருக்கும் மலையாள டயர் கம்பெனி முதலாளி ஒருவர்.

சென்னையில் கிரிக்கெட் அகாடமியெல்லாம் நடத்தும் அவரை சுனந்தாவின் மசாஜ் சென்டரில் சந்தித்திருக்கிறார் சசிதரூர். அவரது கிரிக்கெட் ஆர்வத்தால் உற்சாகமடைந்த சசி, ""சுனந்தா நீயே உன் பெயரில் 5,000 ரூபாய் முதலீட்டில் ரெண்டஸ்வஸ் என்ற கம்பெனி சார்பாக ஐ.பி.எல். ஏலத்தில் ஐந்து லட்ச ரூபாய்க்கு டெண்டர் வாங்கி சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள கொச்சி பெயரில் கட்டிவிடு'' என அந்த தொழிலதிபர் கொடுத்த யோசனையை ஆமோதிக்கிறார். வீடியோ கான், சகாரா, போன்ற பெரிய முதலாளிகள் எல் லாரும் பயப்படுகிற மாதிரி 2,000 கோடி ரூபாய் தொகை பேசி ரெண் டஸ்வஸ் கொச்சி என்கிற புதிய அணியை உரு வாக்குகிறது.

தனது நண்பரான நரேந்திர மோடிக்கு ஆதரவாக 1500 கோடி கட்டி அகமதாபாத்துக்கு அணி வாங்க திட்டம் போட்ட லலித்மோடி அதிர்ச்சியடைகிறார்.

ரெண்டஸ்வஸ் அணியின் பின்னணியில் யார் என விசாரிக்கிறார். சசிதரூர் என தெரிய வந்ததும் கோபப் படுகிறார். 2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்பு நிராகரிக்கப்பட்ட தென்னாப் பிரிக்க அழகி காப்ரியாலாவுக்கும் மோடிக்கும் சண்டை. அவர் இந்தியாவுக்கு வர விசா தரக் கூடாது என மோடி சசியிடம் சொல்ல, அதெல்லாம் முடியாது என்று மறுத்துவிட்டார் சசி.

இந்நிலையில், சசியின் ஆதரவில் மசாஜ் அழகி ஒரு புதிய அணியை வாங்குவதா என கோபப்பட்ட மோடி, எப்படி இந்த கம்பெனி 2,000 கோடி திரட்ட முடியும்? ஒரு மசாஜ் அழகிக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைக்கும்? என கேள்விகளை எழுப்புகிறார். மோடிக்கு பதில் சொல்ல சசிதரூர் களத்தில் குதிக்கிறார். சுனந்தா மசாஜ் அழகி இல்லை. அவருக்கு கம்பெனியில் 18 சதம் பங்குகள் இருக்கிறது என்றதோடு உடனே 2,000 கோடி பணத்தை திரட்டி ஒப்படைக்கவும் ஏற்பாடுகள் செய்கிறார்.

மோடி தன் பங்கிற்கு மீடியாக்களில் சுனந்தா சசியின் பினாமி என தங்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை களை லீக் செய்கிறார். பா.ஜ.க. மூலமாக சசிதரூரின் ராஜினாமா வையும் கேட்க வைக்கிறார்.

விவகாரம் சீரியசாகிறது. உண்மையில் என்ன நடந்தது என பிரணாப் முகர்ஜியையும், அந்தோணியையும் விசாரிக்க சொல்கிறார் பிரதமர்.

சசிதரூர் இந்த அணி விவகாரத்தில் முழுமையாக பங்கெடுத்துள்ளார் என தெரிந்த பிரதமர் அவரை ராஜினாமா செய்யச் சொல்கிறார்.

உடனே சசி, சுனந்தாவின் பங்கை திருப்பி கம்பெனிக்கே தரும்படி சொல்லிவிட்டு, இதெல்லாம் பி.ஜே.பி.யும் மோடியும் செய்யும் வேலை என விளக்கம் தருகிறார்.

நீ முதலில் ராஜினாமா செய். மோடியின் சிறகுகளை நாங்கள் வெட்டுகிறோம் என மோடியின் அலுவலகத்தில் வருமான வரி ரெய்டு, அவர் மீது கிரிக்கெட் வாரியம் மூலம் நடவடிக்கை, ஐ.பி.எல்.லை நிர்வாகம் செய்ய அதிகாரிகள் கொண்ட கமிட்டி என ஒரு பக்கம் நடவடிக்கை மறுபக்கம் சசிதரூர் ராஜினாமா என பிரதமர் சமாளித்திருக்கிறார்'' என்கிறார்கள் சசிதரூரின் நண்பர்கள்.

லலித் மோடியின் ஆட்களோ, ""ஐ.பி.எல். லி-ல் இருந்து லலித் மோடி நீக்கப்பட்டால் இன்னொரு பெயரில் அவர் போட்டிகளை நடத்துவார். காரணம் அவருக்கு சரத்பவா ரின் முழுமையான ஆதரவு உண்டு. சரத்பவார்தான் சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலின் அடுத்த தலைவராக வர போகிறவர். எனவே மோடி மேல் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்'' என அடித்துச் சொல்கிறார்கள்.

"ஐ.பி.எல்லோ கிரிக்கெட் வாரியமோ இரண்டுமே ஒழுங்காக கணக்குகளை அரசுக்கு சொல்வதில்லை. கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இரண்டு இடத்திலும் ஊழல் நடக்கிறது. அதன் எதிரொலிதான் இந்த சர்ச்சைகள். இதில் யாரும் யோக்கியர்கள் இல்லை' என்கிறார்கள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும்.

No comments:

Post a Comment