Tuesday, April 20, 2010

குஷ்பு, ஷ்ரேயா, ஆர்யா லண்டனில் தவிப்பு


shockan.blogspot.com
ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பால் ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்கவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு போக முடியாமல் தமிழ்த் திரையுலகினர் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனராம். படப்பிடிப்புகளும் கூட தடைபட்டுள்ளனவாம்.

மன்னார்குடியில் ஒரு சீன் வைத்து விட்டு அடுத்த சீனில் மாட்ரிட்டில் டூயட் பாடுவது தமிழ்த் திரையுலகின் வழக்கம். அந்த அளவுக்கு வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ்ப் பட படப்பிடிப்புகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

மேலும் முன்பை விட இப்போது வெளிநாடுகளில் நடைபெறும் தமிழ்ப் பட படப்பிடிப்புகள் அதிகரித்து விட்டன. ஆனால் ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பால் ஐரோப்பாவில் விமானப் போக்குவரத்த ஸ்தம்பித்துப் போயுள்ளது. இதனால் அங்கு படப்பிடிப்புகளை நடத்த முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் கோலிவுட்டினர்.

மேலும் அங்கு சென்ற நடிகர், நடிகையர்கள், சிலரும் நாடு திரும்ப முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனராம்.

சிக்கு புக்கு படத்திற்காக சென்றிருந்த ஆர்யாவும், ஷ்ரேயாவும் லண்டனில் மாட்டிக் கொண்டுள்ளனராம். அதேபோல தனது குழந்தைகளுடன் ஜாலி டூர் சென்றிருந்த குஷ்புவும் லண்டனில் மாட்டிக் கொண்டுள்ளாராம்.

எப்போது திரும்ப்ப் போகிறோம் என்று தெரியவில்லை என்று கவலையுடன் கூறியுள்ளார் குஷ்பு.

ஷ்ரேயா லண்டனில் இருப்பதால் அவரும், பிருத்விராஜும் இணைந்து நடிக்கும் மலையாளப் படமான போக்கிரி ராஜாவுக்காக ஒரு டூயட் பாடலை தேம்ஸ் நதிக் கரையில் வைத்துப் படமாக்க அந்த பட யூனிட்டார் முடிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது லண்டனுக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் அந்தப் பாடலையே டிராப் செய்து விட்டனராம்.

ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்புக்குத் திட்டமிடப்பட்டிருந்த்தும் தற்போது பனால் ஆகி விட்டதாம். இதனால் திரையுலகினர் கவலையில் மூழ்கியுள்ளனராம்.

No comments:

Post a Comment