Friday, April 16, 2010

அபிஷேக் அபாரம்...! - வானளாவப் புகழும் ப்ரியாமணி


shockan.blogspot.com
நான் பார்த்த ஹீரோக்களிலேயே மிகவும் அற்புதமான, அபாரமான ஹீரோ அபிஷேக் பச்சன்தான் என்கிறார் ப்ரியாமணி.

மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் அபிஷேக் பச்சனுடன் நடித்துள்ளார் ப்ரியாமணி.

படப்பிடிப்பில் அவருடன் பழகிய அனுபவங்களை பார்ப்பவரிடமெல்லாம் சொல்லி வருகிறார் ப்ரியாமணி.

சமீபத்தில் தனது பேட்டியொன்றில் இப்படிக் கூறியுள்ளார் ப்ரியாமணி:

"நானும் எத்தனையோ நடிகர்களுடன் நடித்துள்ளேன். ஆனால் அபிஷேக் பச்சனைப் போன்ற ஒரு ஹீரோவைப் பார்த்ததில்லை. எப்போதும் இளமை துள்ளும் குறும்புகளும் நகைச்சுவையுமாக, அவருடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது.

எவ்வளவு கஷ்டமான ஷாட்டாக இருந்தாலும் அபிஷேக் பக்கத்தில் இருந்தால் எளிதாக முடிந்துவிடும். மிக எளிமையான மனிதர். அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதிலும் திருப்திப்படுத்துவதிலும் அவருக்கு நிகரில்லை. எல்லோரையும் தனக்கு சமமாகத்தான் நடத்துவார்...." என்கிறார் ப்ரியாமணி.

முக்கியமான விஷயம்... இந்தப் படத்தில் நடிக்கும் அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் ஏதும் ப்ரியாமணிக்கு இல்லையாம். ஆனால் அபிஷேக்குடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் நிறையவே உள்ளதாம்.

ஐஸ்வர்யா இல்லாத காட்சிகள் என்பதால் என்னால் இயல்பாக நடிக்க முடிந்தது என்று ஒரு கூடுதல் ஸ்டேட்மெண்டையும் விட்டுள்ளார் இந்த முத்தழகி!

No comments:

Post a Comment