Thursday, April 15, 2010

கமல் விரும்பிச் சாப்பிடும் சிக்கன்



கமல், சரத்குமார், பிரகாஷ்ராஜ், அஜீத், ஷாலினி, சூர்யா, சிம்பு, பிரசன்னா, விஷால், நமீதா, தேஜாஸ்ரீ... இவர்களிடம் உடம்பைப் பற்றிப் பேசினால், தங்களது உடல் எடை ஏற்ற- இறக்கத்துக்கு உடற்பயிற்சி, ஜிம் மட்டும் காரணமல்ல; சப்வே ரெஸ்டாரெண்ட் உணவும் காரணம் என்று தயங்காமல் சொல்கிறார்கள்.

1993-ஆம் ஆண்டு ஸ்பென்சர் பிளாசாவில் தொடங்கப்பட்ட சப்வே ரெஸ்டாரெண்ட் சென்னை சிட்டி சென்டர் மால், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலை, கிண்டி ஒலிம்பியா டெக் பார், ஆர்.எம்.எஸ். (பெருங்குடி) என்று விழுதுகள் விரிவடைந்து, இப்போது சென்னை கமிஷனர் ஆபீஸுக்கு எதிரிலும் ஒரு ரெஸ்டாரெண்டை தொடங்கி இருக்கிறது.

இந்த வளர்ச்சிக்குக் காரணம் சப்வேயின் ஆரோக்கியமான உணவுதான்! பொதுவாக ஓட்டலில் சமையல் அறை குப்பையாகத்தான் இருக்கும். சாப்பிடும்போது அந்தக் காட்சி நினைவுக்கு வந்துவிட்டால், சாப்பிட மனம் இடம் தராது. ஆனால் சப்வேயில் சாண்ட்விச், சாலட் உட்பட எல்லாமே ஃபிரஷ்ஷான காய்கறிகள் என்பதை உணர்த்துவதுபோல் நம் கண் முன்னேயே தயாரிக்கிறார்கள். அனுபவித்து தயார் செய்வதைப் பார்க்கலாம். கலை நேர்த்தியோடு செய்கிறார்கள்.





கமல் விரும்பி சாப்பிடுவது சிக்கன் டெரியாகியாம்.

சூர்யா விரும்பிச் சாப்பிடுவது ரோஸ்ட் சிக்கன். நமீதாதான் சப்வேயின் ரெகுலர் கஸ்டமர் என்கிறார்கள்.

பிரசன்னா, பிரகாஷ்ராஜ் எல்லாரும் ரெஸ்டாரெண்டில் வந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள். கமல், மணிரத்னமெல்லாம் வாங்கி வீட்டுக்குப் போய் சாப்பிடுகிறார்கள்.

சப்வேயில் தயாராகும் பிரட் எதிலும் அசைவப் பொருள் எதையும் யூஸ் பண்ண மாட்டார்கள். சர்வர்கள் சுத்தமாக இல்லையென்றால் கல்தா கொடுத்து அனுப்பி விடுகிறார்களாம்.

""இந்த ரெஸ்டாரெண்ட்டை இந்தியாவிலுள்ள 166 கிளைகளிலேயே படுசுத்தமான ரெஸ்டாரெண்ட் என்று தேர்வு செய்திருக்கிறார்கள்.

சுத்தம், ஃபிரஷ்னஸ், தயாரிப்பு எல்லாவற்றிலும் சப்வே- பெஸ்ட்வே என்று பெயர் வாங்கியிருக்கிறது. காரணம் எதிலும் எங்களுக்கு முழு திருப்தி ஏற்படும் வரை விடமாட்டோம்'' என்கிறார் இதன் உரிமையாளர் விபின்.

"உணவே மருந்து' என்ற ஆரோக்கியச் சிந்தனை வேகமாகப் பரவி வருவதுபோல் சப்வே கிளைகளும் அதிகமாகி வருகிறது! இந்தச் சூழ்நிலையில், சப்வே உணவு நல்ல மருந்துதானே?

No comments:

Post a Comment