Wednesday, April 21, 2010

சிறுதாவூர் நிலத்தை திருப்பி தரப்போகும் ""ஜெ''!


shockan.blogspot.com

சிறுத்தைகளின் அம்பேத்கர் சுடர் விருதைப் பெற்ற கலைஞர்... "ஆதிதிரா விடர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை யார் அபகரித்தாலும்... அவர் நீதிபதி என்றாலும்... முன்னாள் முதல்வரே ஆனாலும்... அந்த நிலம் எங்கே இருந்தாலும் அதை மீட்டுத்தரும் கடமை எனக்கு இருக்கிறது'’என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார். இது ஜெ-சசி தரப்பை சங்கடத்தில் கைபிசைய வைத்திருக்கிறது.

கலைஞரின் இந்த அதிரடிப் பேச்சின் பின்னணியில்... சிவசுப்பிரமணியன் கமிஷனின் ரிப்போர்ட் இருக்கிறது என் கிறது கோட்டை வட்டாரம். சிறுதாவூர் பங்களாவைச் சுற்றி யிருக்கும் ஆதிதிராவிடர்களுக்கான நிலங்களை ஜெ-சசி தரப்பு ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தபோது அதை விசாரிக்க அமைக்கப்பட்டதுதான் சிவசுப்பிரமணியன் கமிஷன்.

காஞ்சிபுரம் சி.பி.எம். மாஜி மா.செ.சங்கர் முதலில் ஆக்கிரமிப்பு விவகாரத்தை விவரிக்கிறார்... “""ஜெ-சசி தரப்பு செய்ததை கொஞ்சம் விவரிச்சி சொன்னாதான் புரியும். சிறுதாவூரைச் சேர்ந்த 20 தலித் குடும்பங்கள்... வாழ வழி தெரியாம நின்னப்ப... 69-ல் முதலமைச்சரா இருந்த அறிஞர் அண்ணா... அந்த 20 குடும்பங்களுக்கும் விவசாயம் பண்ண தலா 2.5 ஏக்கர் நிலமும்... வீடுகட்டி வாழ தலா 10 செண்ட் வீதம் 2 ஏக்கர் நிலத்தையும் பட்டா போட்டுக் கொடுத்த தோட... சுடுகாடு போன்ற விசயங் களுக்காக உபரியா 3 ஏக்கரையும் மனமுவந்து கொடுத்தார்.

83-ல் ஒரு மோசடிக் கும்பல் வந்து விவசாயக் கடன் தர்றோம்னு அந்த விவசாயிகள்ட்ட தந்திரமா கையெ ழுத்து வாங்கி... அந்த நிலங்களின் பத்திரங்களை தங்கள் பெயருக்கு மாத்தி எழுதிக்கிச்சி. இருந்தும் யாரையும் காலிபண்ண சொல்லலை. 96-ல் இந்த நிலங்களை ஆக்கிரமிக்க ஆரம்பிச்ச ஜெ-சசி தரப்பு... தலித் மக்களை விரட்டிட்டு... கல்லையும் மண்ணையும் கொட்டி நிலத்தையெல் லாம் ஆக்கிரமிச்சிடிச்சி. அதோட ஜெ’ ஆட்சிக் காலத்திலேயே... 2005 வாக்கில் தூத்துக்குடியில் இருந்து ஒரு தாசில் தாரை செங்கல்பட்டுக்கு ஒரு பத்து நாளைக்கு மாத்தி... அவர் மூலம் அந்த நிலங்களையெல்லாம் பரணி ரிசார்ட்ஸ் என்ற பெயரில் அதன் இயக்குநர் களாகக் காட்டப்பட்ட மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் அண்ணி இளவரசி, உறவினர் சித்ரா ஆகியோர் பெயரில் மாற்றிக்கிட்டாங்க.

இதைத்தான் நக்கீரன் முதன்முதலில் ஆதாரப்பூர்வமா.... அப்போதே அம்பலப்படுத்துச்சி. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் நாங்கள் குதித்ததால் முதல்வர் கலைஞர் ஓய்வுபெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமையில் விசாரணைக் கமிஷனை அமைச்சார். அந்தக் கமிஷன் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கருத்துக்களைக் கேட்டதோட... ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களையும் நேர்மையா ஆய்வு செஞ்சிது.

அதனால் அந்த கமிஷனின் அறிக்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதியைப் பெற்றுத்தர உதவியா இருக்கும்னு நம்புகிறோம்''’என்கிறார் உற்சாகமாக.

இந்நிலையில் சிவசுப்பிரமணியன் கமிஷன் தொடர்பாக என்ன தீர்ப்பு சொல்லியிருக்கிறது என விஷயமறிந்த வட்டாரங்களில் கேட்டோம்.

""தலித் மக்களுக்கு அண்ணா கொடுத்த நிலங்களுடன் அரசுக்குச் சொந்தமான சுமார் 30 ஏக்கர் நிலத்தையும் ஜெ. ஆக்கிரமித்துள்ளார். சிறுதாவூர் பண்ணை வீட்டில் உள்ள பாதி நிலங்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டவை. அதில் அரசுக்குச் சொந்தமான நிலங்களை அரசே எடுத்துக் கொள்ளலாம் என விசாரணையின்போது ஜெ. தரப்பே ஒப்புக் கொண்டுள்ளது. எனவே பல்வேறு காலகட்டங்களில் மோசடியாக கைப்பற்றப்பட்ட நிலங்களை அரசே கைப்பற்றிக் கொள்ள வேண்டும். நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் சட்டப்படி வழக்கு தொடரவேண்டும் என மிக கடுமையான முடிவுகளை நீதியரசர், தனது தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்'' என்கிறார்கள்.

இதனால் மறுபடியும் டான்சி போன்ற ஒரு நிலமோசடி வழக்கு தன் மீது பாயும் என உணர்ந்தே இருக்கும் ஜெ., இந்த நிலங்களை உரியவர்களுக்கே மறுபடியும் ஒப்படைக்கும் முடிவை எடுத் திருக்கிறாராம். இதற்காக புதிய காம்பவுண்டு கட்டி பண்ணை வீட்டின் வடிவத்தை மாற்றுவதற்காக வாஸ்து பூஜையை புகழ்பெற்ற காஞ்சிபுரம் குருக்கள் மூலம் நடத்தியிருக் கிறார் என்கிறது கார் டன் வட்டாரம்.

No comments:

Post a Comment