Monday, April 26, 2010

செக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டது உண்மை-நித்யானந்தா

shockan.blogspot.com

இளம் பெண்களுடன் ஒப்பந்தம் போட்டு செக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக கர்நாடக சி.ஐ.டி. போலீசாரிடம் நித்யானந்தா ஒப்புக் கொண்டுள்ளார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஆசிரமத்துக்கு வரும் பெண்களில் என்னை முழுமையாக நம்பியவர்களிடம் நான் செக்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினேன். ஆராய்ச்சிக்காக தேவைப்படும்போது செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றே அதில் கூறப்பட்டுள்ளது. எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் அதை பெண்கள் வெளியில் சொல்லக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பெண்களுடன் மட்டுமே, நான் செக்ஸ் வைத்துக் கொண்டேன். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

சுடிதாருக்கு மாறிய நித்தியானந்தா சிஷ்யைகள்:

இந் நிலையில் நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகு பிடுதி ஆசிரமம் அடியோடு மாறி விட்டது. அங்குள்ள ஆண், பெண் சீடர்கள் காவி உடைக்குப் பதிலாக சாதாரண சுடிதார், பேன்ட், ஷர்ட்டுக்கு மாறிவிட்டனர்.

இந்த ஆசிரமத்தில் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் பல மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் பக்தர்கள் தங்கியுள்ளனர்.

நித்யானந்தா கைதான பிறகும் அவர்கள் தொடர்ந்து தங்கியுள்ளனர்.

முன்பு ஆண் சீடர்கள் காவி உடைந்து அணிந்தும், பெண் சீடர்கள் வெள்ளை சேலை அணிந்து இருப்பதும் தான் வழக்கம். ஆனால் நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகு பிடதி ஆசிரமம் அடியோடு மாறி விட்டது.

தற்போது ஆசிரமத்தில் இருக்கும் நித்யானந்தாவின் ஆண் சீடர்கள் காவி உடையை கழற்றி வீசி விட்டு போல் பேன்ட், சர்ட் அணிந்து வலம் வருகிறார்கள்.

இதேபோல் பெண் சீடர்கள் வெள்ளை சேலைகளுக்கு பதிலாக சுடிதார்களில் சுற்றி வருகின்றனர்.

No comments:

Post a Comment