Monday, November 30, 2009
மன்சூர் அலிகான் வழக்கு-நடிகர் சிட்டிபாபுவுக்கு பிடிவாரண்ட்
அரசு- பொன்சேகா மோதலால் வெளியே வரும் இரகசியங்கள்
ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது- இராணுவ நடைமுறைகளுக்கு மாறாக எதையெதையெல்லாம் செய்தாரோ- அவையெல்லாம் இப்போது அவருக்கு எதிராகவே திரும்பத் தொடங்கியிருக்கிறது. இப்படியான ஒரு நிலை வரும் என்று அவர் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றி தனக்கேயுரியது என்று கூறிவந்த அவரது வாயை அடைக்க அரசாங்கம் பெரும் முயற்சி செய்து வருகிறது. சிறந்த அரசியல் தலைமைத்துவத்தினால் தான் அதைச் சாதிக்க முடிந்ததாவும், அரசாங்கம் பிரசாரம் செய்கிறது. அதுமட்டுமன்றி இராணுவத் தளபதியை வைத்தே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான பிரசாரங்களையும் முடுக்கி விட்டிருக்கிறது.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, முன்னர் இராணுவப் பேச்சாளர்களாக இருந்த மேஜர் ஜெனரல் தயா இரத்னாயக்க, மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க போன்றோரும்; ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். போர்முனையில் சிறப்பாகச் செயற்படும் அதிகாரிகளுக்கே பதவி உயர்வு என்று கூறி ஜெனரல ஜெனரல் சரத் பொன்சேகா சேவைமூப்பு வரிசையில் முன்னால் இருந்தவர்களைப் பின்தள்ளினார் அல்லது ஒதுக்கினார். அவரது அதே பாணியில் இப்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் செயற்பட ஆரம்பித்துள்ளார்.
இது ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் நெருக்கமாகச் செயற்பட்ட அதிகாரிகளுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் கீழ் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகத்தில் பணியாற்றிய 9 அதிகாரிகள் உள்ளிட்ட 47 இராணுவ உயரதிகாரிகள் இராணுவத் தளபதியினால் இடமாற்றம் செய்யப்பட்டனர். இது வழக்கமானதொன்று அல்ல. ஜெனரல் சரத் பொன்சேகா விவகாரத்தின் எதிரொலியாக இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் தலைமையகத்தின் விசேட நடவடிக்கைப் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க வரணி 52வது டிவிசனின் பொதுக் கட்டளை அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார். விசேட படைப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது- இராணுவத் தலைமையக திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமானவர்.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகத்தில் பணியாற்றிய- பயிற்சி மற்றும் தந்திரோபாய வகுப்பு பணிப்பாளர் பிரிகேடியர் மைத்ரி டயஸ் வன்னிப் படைத் தலைமையகத்துக்கும்- ஜெனரல் சரத் பொன்சேகாவின் இணைப்புச் செயலாளராக இருந்த பிரிகேடியர் விமல் டயஸ் முல்லைத்தீவு படைத் தலைமையக நிர்வாகப் பிரிவுக்கும்- நடவடிக்கைப் பணிப்பாளர் பிரிகேடியர் டம்பத் பெர்னான்டோ மாதுறு ஓயா இராணுவப் பயிற்சி முகாமின் கட்டளை அதிகாரியாகவும்- சிரேஷ்ட பாதுகாப்பு இணைப்பதிகாரி பிரிகேடியர் குலதுங்க திருகோணமலை இராணுவ இடைத்தங்கல் முகாமின் கட்டளை அதிகாரியாகவும்- பாதுகாப்பு இணைப்பாதிகாரியாக இருந்த பிரிகேடியர் ஜனக மகோற்றி 55வது டிவிசனின் இணைப்பதிகாரியாகவும், போர் உதவியாளராக இருந்த பிரிகேடியர் அத்துல சில்வா அம்பாறை இராணுவ தளபதியாகவும், சிரேஸ்ட பாதுகாப்பு இணைப்பதிகாரியாக இருந்த பிரிகேடியர் ஹெனடிகே புனானை 23-2 பிரிகேட் தளபதியாகவும், கேணல் கபில உடலுப்பொல ஒட்டுசுட்டான் 64வது டிவிசன் நிர்வாக அதிகாரியாகவும்- 59வது டிவிசன் தலைமை அதிகாரியாக இருந்த பிரிகேடியர் துமிந்த கெப்பிடிவலன அம்பாறை இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் கட்டளைத் தளபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றங்கள் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருக்க, தனது பாதுகாப்புக்காக 600 இராணுவத்தினரையும், 10 வாகனங்களைம், 2 குண்டு துளைக்காத வாகனங்களையும் வழங்குமாறு அரசாங்கத்துக்குக் கட்டளையிடுமாறு கோரி ஜெனரல் சரத் பொன்சேகா அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதிக்கு 2 ஆயிரம் படையினரும், பாதுகாப்பு செயலாளருக்கு 500 படையினரும், இராணுவத் தளபதிக்கு 600 படையினரும், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு 120 படையினரும் பாதுகாப்பு வழங்குகின்றனர். ஆனால தனக்கு 72 படையினர் மட்டுமே பாதுகாப்புக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனது மனுவில் கூறியிருக்கிறார் ஜெனரல் சரத் பொன்சேகா. தற்போது 62 படையினர் பாதுகாப்புக்காக அனுமதிக்கப்பட்டிருப்பினும் அவர்களில் இருபது பேர் மட்டுமே சுழற்சி முறையில் ஒரே நேரத்தில் கடமையில் இருக்க முடியும். இது தனது பாதுகாப்புக்கு போதுமானதல்ல என்பது அவரது நிலைப்பாடு.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும் பங்களிப்பை செய்த தனக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால் 600 படையினரைப் பாதுகாப்புக்கு அனுமதிக்குமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு கட்டளையிடுமாறும் உயர்நீதிமன்றிடம் கோரியிருக்கிறார் ஜெனரல் சரத் பொன்சேகா. அதேவேளை அரசாங்கமோ சரத் பொன்சேகா அனுமதிக்கப்பட்டதைவிட அதிகப்படியான படையினரையும் வாகனங்களையும் வைத்திருப்பதாக இராணுவப் பேச்சாளரைக் கொண்டே சொல்ல வைத்திருக்கிறது. பதவியில் இருந்து விலக முன்னர் ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்புத் தொடர்பான கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார். அதில் கப்டன் அல்லது லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 21 கொமாண்டோ படையினர், சிங்க றெஜிமென்ட்டின் ஒரு மேஜர் மற்றும் இரு கப்டன் அல்லது லெப்டினன்ட் தர அதிகாரிகள் உள்ளிட்ட 53 படையினர், 10 சாரதிகள், 5 பெண் படையினர், ஒரு குண்டு துளைக்காத வாகனம், 3 லான்ட்றோவர்கள், ஒரு கனரக வாகனம். ஒரு வான், ஒரு 26 ஆசன பஸ் என்பன தேவை என்று பட்டியலிட்டிருந்தார். அத்துடன் 10 பிஸ்டல்கள், மினியுசி அல்லது எச்கேஎம்பி-5 ரகத் துப்பாக்கிள் 10, ரி56 துப்பாக்கிகள் 72, பத்து வோக்கி ரோக்கிகள் ஒரு தொடர்பாடல் தள இணைப்பு என்பனவும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார் அவர்.பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியில் இருந்து விலகியதும் ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்பு அணி 25 படையினராகக் குறைக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அது 72 பேராக அதிகரிக்கப்பட்டது. இதை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் 5 பெண் படையினர் தவிர்ந்த 103 படையினரை அவர் தற்போதும் பாதுகாப்புக்காக வைத்திருக்கிறார்- இது சட்டவிரோமானது என்கிறது அரசாங்கம்
4 அதிகாரிகள் உள்ளிட்ட 28 கொமாண்டோக்கள், 3 அதிகாரிகள் உள்ளிட்ட 20 படையினர், 55 பாதுகாப்பு வீரர்கள், சமையற்காரர்கள், சாரதிகள், மருத்துவப் படைப்பிரிவைச் சேர்ந்த 7 படையினர், 3 கார்கள், 7 லான்ட் றோவர்கள், ஒரு டபிள்கப், ஒரு பஸ,; ஒரு அம்புலன்ஸ், 4 வான், 9 மோட்டார் சைக்கிள்கள் என்று 103 படையினரையும் அளவுக்கதிகமான வாகனங்;களையும் சரத் பொன்சேகா வைத்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் குற்றம்சாட்டியிருக்கிறார். அதேவேளை, முன்;னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு 120 படையினர் பாதுகாப்பு வழங்குவதாக சரத் பொன்சேகா கூறிய குற்றச்சாட்டை கடற்படையின் பேச்சாளர் கப்டன் சேனாரத் மறுத்துள்ளார். அடமிரல் வசந்த கரன்னகொடவுக்கு 2 அதிகாரிகள் உள்ளிட்ட 42 கடற்படையினர் பாதுகாப்பு வழங்குவதாகவும், குண்டுதுளைக்காத வாகனம் ஒன்று, டிபென்டர் வாகனங்கள் 4, மோட்டார் சைக்கிள்கள் 4, வான்கள் 4 என்பனவே வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இரு தரப்பில் இரந்தும வெளியாகி வருகின்றன.
இந்த மோதல்களால் இதுவரை வெளிவராமல் மறைந்திருந்த பல உண்மைகளும் வெளியே வரத் தொடங்கியிருக்கின்றன. கிளிநொச்சிக்கு போவதற்கு சரத் பொன்சேகா அச்சமடைந்திருந்ததாகவும், ஜனாதிபதியே தைரியமூட்டி அவரை அழைத்துச் சென்றதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்த வெளியாகியுள்ள தகவல் சரத் பொன்சேகாவின் ஆளுமையைச் சிறுமைப்படுத்தும் நோக்குடையதாகவே தெரிகிறது. அத்துடன் தான் எப்போதும் தோல்வியடையாத ஒருவர் என்று கூறியிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் காலத்தில் மூன்று தடவைகள் முகமாலையில் படையினர் படுதோல்வி கண்டு 600 படையினரை இழக்க நேரந்ததாகவும பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன. இவையெல்லாம் போர்க்காலத்தில் நடந்த பல இரகசியங்கள் அம்பலப்படுத்துக்கு வரப் போகின்றன எனபதையே காட்டுகின்றன.
இராணுவத்தில் ஊழல்களை ஒழித்தது தானே என்று கூறிக் கொள்ளும் சரத் பொன்சேகாவே இப்போது அப்படிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை முகம் கொடுக்கக் கூடிய நிலையும் தோன்றி வருகிறது. சரத் பொன்சேகாவின் இரர்ணுவத் தளபதியாக இருந்த போது அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் பதிவு செய்யப்பட்ட ஹிகோப் என்ற நிறுவனத்தின் ஊடாகப் பெருமளவு ஆயுத தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இந்த நிறுவனம் சரத் பொன்சேகாவின் மருமகனான திலுன திலகரட்ணவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இது பற்றிய பூரண விசாரணை ஒன்றுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் நடக்கப் போகின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இது இன்னொரு புதிய பிரச்சினையைக் கிளப்பலாம். இப்படியாக இருதரப்பும் மோதிக் கொள்;வது போர்க்களத்தல் மறைக்கபட்ட பல உண்மைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரக் கூடும். இந்த உண்மைகள் இரு தரப்புக்குமே நிச்சயம் சாதகமான விளைவுகளைக் கொடுக்காது.
காஞ்சிபுரத்தில் நடனப்பள்ளி... பிஎச்டி படிப்பு... சொர்ணமால்யாவின் மறுபக்கம்
திருவண்ணாமலை கார்த்திகை விழா - பரணி தீபம் ஏற்றப்பட்டது - மாலையில் மகா தீபம்
சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்கு அரசாங்கம் தயார்?
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்கும் அதனை விடுதலைப்புலிகளே மேற்கொண்டதாக பரப்புரைப்பதற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தயாராகி வருவது தெரியவந்துள்ளது.
இதேவேளை தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படடால் அதற்கான முழமைப் பொறிப்பினையும் அரசாங்கமும் மகிந்த ராஜபக்சவுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
13-வது திருத்தத்துக்கு அப்பால் செல்லவும் பொன்சேகா தயார்! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
அவர் தெரிவித்த விபரம்:
இந்தியாவே எமது நெருங்கிய அயல்நாடு, பிராந்தியத்தில் வலுவான அயல்நாடு. இதன் காரணமாக இந்தியாவுடன் சிறப்பான உறவைப் பேணுவது அவசியம்.
சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இணைந்து நான் செயற்பட்டேன் என எவராவது கூறுவார்கள் என்றால் அது இராணுவத் தளபாடங்களுக்காகத்தான். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு அவை தேவைப்பட்டன. இந்த இராணுவத் தளபாட ரீதியான உதவிகளை அந்த நாடுகள் வழங்கின.
எனினும், யுத்தத்தில் வெல்வதற்குத் தார்மீக ரீதியாக, அரசியல் ரீதியாக உதவியது இந்தியாதான். இந்தியாவுடனான உறவுகள் எப்போதும் உயர்மட்டத்தில் இருந்துள்ளன. எதிர்காலத்திலும் சிறந்த உறவுகளைப் பேண விரும்புகிறேன்.
எங்களுக்கு அருகிலிருக்கும் சிறந்த அயல்நாடு இந்தியா. இதன் காரணமாக சிறந்த உறவுகளைப் பேணவேண்டும். இராணுவத்தில் இணைந்த நான் முதல் நாள் அந்த நாட்டுடன் சிறந்த உறவுகளைப் பேணி வந்துள்ளேன்.
நான் இராணுவப் பயிற்சிக்காகத் தளபதியாக விளங்கியபோதும் நான்கு தடவைகள் இந்தியா சென்றுள்ளேன். அந்த நாட்டு இராணுவத்தைப் பெரிதும் மதிப்பதுடன் சிறந்த உறவுகளைக் கொண்டுள்ளேன்.
தமிழர் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வுகாண வேண்டியது அவசியம். ஆனால், பெரும்பான்மைச் சமூகத்தின் விருப்பத்திற்கு இணங்கவே இந்தச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
13 ஆவது திருத்தச் சட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட சட்டம் என்பதால் அச்சட்டத்தில் மாற்றங்களைக் மேற்கொள்ளவது அவசியம் என்றார்.
சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது - பைலட்டுகள் தப்பினர்
அதில் பயணம் செய்த துணை பைலட் உயிரிழந்தார். பைலட் தப்பினார்.இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் அருகே உள்ள ஜெதா கி தானி என்ற இடத்தில் ஒரு சுகோய் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரு பைலட்டுகளும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர்.இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை செய்தித் தொடர்பாளரான விங் கமாண்டர் டி.கே.சிங்கா கூறுகையில், ஜெய்சால்மர் மாவட்டம், பொக்ரானுக்கு தென் மேற்கே ஒரு சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானது.
இதில் இரு பைலட்டுகளும் தப்பினர் என்றார்.நேற்று மாலை 4.45 மணிக்கு இந்த சுகோய் விமானம் ஜோத்பூரிலிருந்து கிளம்பியது. வழக்கமான பயிற்சிக்காக இது சென்றது. மாலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.விமானத்தை விங் கமாண்டர் ஸ்ரீவத்சவ் என்பவர் இயக்கிக் கொண்டிருந்தார். அவருடன் ஒரு நேவிகேட்டரும் இருந்தார்.விமானம் கீழே விழுவதற்கு முன்பு இருவரும் பாராசூட் மூலம் உயிர் தப்பினர்.இந்திய விமானப்படை இந்திய ஆண்டு சந்திக்கும் 13வது விமான விபத்து இது. இந்த 13 விமானங்களில் 8 விமானங்கள் போர் விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரியில் நடிகை நவ்யாநாயர் திருமணம்
நவ்யா நாயர்-சந்தோஷ் மேனன் திருமணம், கேரள மாநிலம் ஹரிப்பாடு என்ற இடத்தில், ஜனவரி மாதம் நடக்கிறது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை.
நவ்யா நாயர், `இஷ்டம்' என்ற மலையாள படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரை அறிமுகம் செய்தவர், டைரக்டர் சிபிமலையில். தமிழில், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அழகிய தீயே, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தார்.
திருமணத்துக்குப்பின் தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா? என்பதை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. என்றாலும், தன் சம்பந்தப்பட்ட படங்களின் படப்பிடிப்பை முடித்துக்கொள்ளும்படி, பட அதிபர்களுக்கு நவ்யா நாயர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
புலிகளிடமிருந்து பணம் பெற்றாவது தேர்தல் பிரசாரம் செய்வேன்’-செய்தியாளர்களிடம் சரத் பொன்சேகா
கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்
இலங்கையை கதிகலங்க வைக்கும் தமிழர்களின் 'புறக்கணிப்பு'!
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் சம்பந்தன் போட்டி?
எனினும், ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன் ஆலோசித்த பிறகே இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் சம்பந்தன் போட்டி?
எனினும், ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன் ஆலோசித்த பிறகே இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்எம்எஸ் கட்டணங்கள் 99 சதவிகிதம் குறைப்பு!!
மொபைல் சர்வீஸ் நிறுவனங்களில் அழைப்புக் கட்டணத்தை விட அதிக காஸ்ட்லியானதாக இருந்தது எஸ்எம்எஸ்தான். ஆனால் இந்த எஸ்எம்எஸ் அனுப்ப 1 KBக்கும் குறைந்த அலைவரிசை இருந்தாலே போதுமாம். இதற்கான கட்டணம் ஒரு பைசாவுக்கும் குறைவுதான்.
ஆனால் பல நிறுவனங்கள் இன்றைக்கும் 50 பைசா முதல் 1 ரூபாய் வரை எஸ்எம்எஸ் கட்டணமாக வசூலித்துக் கொண்டு வருகின்றன.இந்த உண்மையை பத்திரிகைகள் சமீபத்தில் வெளிக் கொணர்ந்தன. இதனால் தொலைத் தொடர்பு ஆணையம் ட்ராய், 'பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் எஸ்எம்எஸ் கட்டணத்தை அதிகளவு நிர்ணயிக்கப்பட்டிருப்பது உண்மைதான். விரைவில் குறைத்துவிடுவோம்' என்று சமாளித்திருந்தது.ஆனால் மக்களுக்கு உண்மை தெரிந்து கடும் கோபத்திலிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட ரிலையன்ஸ், நேற்று எஸ்எம்எஸ் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.இந்த அறிவிப்பின்படி இனி 1 எஸ்எம்எஸ் 1 பைசா மட்டுமே.
ஒரு நாள் முழுக்க எஸ்எம்எஸ் அனுப்பினால் ரூ. 1 செலுத்தினால் போதும். எத்தனை எஸ்எம்எஸ் வேண்டுமானாலும் அனுப்பித் தள்ளலாம். ஒரு மாதம் முழுக்க எல்லையில்லை எஸ்எம்எஸ் அனுப்ப ரூ 11 செலுத்தினால் போதுமாம்.பார்தி ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோனும் இப்போது எஸ்எம்எஸ் கட்டண யுத்தத்தில் களமிறங்குகின்றன.
எப்படியோ பத்திரிகைகள் கலகம், எப்போதும் போல நன்மையில் முடிந்திருக்கிறது!
ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு இந்தியாவும், சரத்திற்கு அமெரிக்காவும் ஆதரவு: தென்பகுதியில் தேர்தல் பயம் கூடும் என இராஜதந்திரிகள் கருத்து
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தமது பொதுவேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை நிறுத்தியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகவலை வெளியிடாமல் அமைதிகாத்த ஜெனரல் சரத்பொன்சேகா தற்போது தேர்தலில் தான் போட்டியிடுவதை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் போட்டியிடும் கள நிலைமை தென்பகுதியில் ஒருபோதும் இல்லாத தேர்தல் பயத்தை உண்டு பண்ணும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் வன்னி யுத்த வெற்றியுடன் சம்பந்தப்பட்ட இரு பெரும் முக்கியஸ்தர்கள் போட்டியிடுவதால் உள்நாட்டில் ஏற்படக்கூடிய தேர்தல் களேபரத்திற்கு அப்பால் இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான மறைமுகப் போட்டியில் எதிர் ஒலிப்புக்களும் ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் என அரசியல் இராஜதந்திரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றியடைய வேண்டும் என இந்தியா விரும்புகின்றது. அதேநேரம் ஜெனரல் சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைக்கூட இந்திய மத்திய அரசு விரும்பவில்லை என கூறப்படுகின்றது.
ஆனால் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிடும். ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி பெறுவதை அமெரிக்கா விரும்புவதாகவும் இதற்கான ஆலோசனைகள் ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவுக்குச் சென்ற போது வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இவ்வாறு வலம்புரி நாளிதழ் தனது இன்றைய பதிப்பில் தெரிவித்துள்ளது.
Sunday, November 29, 2009
பிரபாகரனின் பெற்றோரை ஏற்றுக்கொள்ள நான் தயார்: சரத் பொன்சேகா
அவர் உள்ளூர், அயல்நாட்டு ஊடகவியலாளர்களுடன் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது இதை அறிவித்துள்ளார்.
அப்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சரத் பொன்சேகா, நாட்டின் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக புலிகள் இயக்க போராளிகள் தமது பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் தாம் அதை வரவேற்பேன்.
தனது தேர்தல் பிரசாரத்துக்காக புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பெற்றோர்கள் தம்மிடம் வந்து சேர்ந்தாலும் அவர்களைத் தான் வரவேற்பேன் எனக் கூறியுள்ளார்.
அவர் மேலும், 50,000 ரூபாய் சொற்பத் தொகையை மட்டும் வைத்துக் கொண்டு தம்மால் அரசியல் நடத்த முடியாது. எனவே புலிகள் ஆதரவாளர்களிடமிருந்தும் நிதி உதவியை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
Saturday, November 28, 2009
சீமான் கர்ஜனை! மிரண்ட கனடா!
போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்
போர்க்குற்றங்களை முறைப்படி பதிவு செய்யும் அனைத்துலக அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கடந்த திங்கட் கிழமையன்று தொடர்புகொண்டு பேசினர். போர்க்குற்றங் களுக்கு உள்ளாக்கப்பட்ட அப்பாவி மக்கள் பலருடைய வாக்குமூலங்களை அவர்கள் சேகரித்துவிட்டதாகவும், மேலும் சில திசைகளில் முக்கிய ஆதாரங்கள் இருந்தால்தான் வலுவான, "போர்க்குற்ற வழக்கினை' உருவாக்க முடியுமென் றும் கூறி அதற்கு உதவ முடியுமா என்றும் கேட்டார்கள். அவர்கள் கேட்டவற்றை நான் இங்கு பதிவு செய்கிறேன். ஏனென்றால் இதனைப் படிக்கிற யாருக்கேனும் அவை தொடர்பான சிறு சாட்சியம் சாத்தியப்பட்டாலும்கூட அது இலங்கையை உலக அரங்கில் போர்க்குற்றவாளியாய் நிறுத்திட பேருதவியாய், வலுவான சாட்சியமாய் அமையக்கூடும். பின்வரும் சாட்சியங்களை அவர்கள் கேட்டார்கள், கேட்கிறார்கள்.
நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் வெள்ளைக் கொடியேந்தி சரணடைய வந்த விடுதலைப்புலிகள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டது நாம் அறிந்தது. உலகின் பார்வையில் இது மிக முக்கியமான போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் அதை நேரில் கண்டவர்கள் குறிப்பாக சரணடையச் சென்றவர்களில் யாரேனும் உயிர்தப்பியிருந்தால் அவர்களில் ஒருவரது வாக்குமூலமே போதுமானது என்கி றார்கள். உலகில் அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை பாது காப்பாக எல்லா செலவுகளையும் செய்து வெளிநாடு ஒன் றிற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பதிவு செய்ய அவர்கள் தயாராயிருக்கிறார்கள். அதுபோலவே சரணடைய முயன்ற பிற போராளிகளை -குறிப்பாக புலிகளின் அரசியற் பிரிவினரை சிங் கள ராணுவம் சுட்டுக்கொன்றதைக் கண்டவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களின் வாக்குமூலங்களையும் கேட்கிறார்கள்.இரண்டாவதாக, சிங்கள ராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் சாட்சியம்.
அப்பாவி ஜீவன்களை வல்லுறவுக்கு உள்ளாக்குவதை மிக மோசமான போர்க்குற்றமாக மேற்குலகம் வரையறுக்கிறது. அமெரிக்காவின் இந்நாள் வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன்கூட இது விஷயத்தில் மிக உறுதியாய் பேசி வருவதோடு -இலங்கையை "குற்றவாளி நாடு' என்றே ஒரு உரையில் வருணித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து இதுதொடர்பான வாக்கு மூலங்களைப் பெறுவது சுலபமானதல்ல. அதேவேளை உலக மனிதாபிமானச் சட்டங்களின்படி இரண்டாம் நிலை சாட்சியங் கள்கூட போதுமானது என்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உள்ளான தமிழ்ப்பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அக்கொடுமை யை யாரிடமாவது பகிர்ந்துகொண்டிருந்தால் -குறிப்பாக மருத் துவர், தன்னார்வ நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், அருட் தந்தையர்கள், அருட்சகோதரியர்கள் ஆற்றுப்படுத்துநர் (ஈர்ன்ய்ள்ங்ப்ப்ர்ழ்) இவ்வாறான யாரோடேனும் பகிர்ந்துகொண்டிருந்தால் இவர்கள் முன்வந்து அப்பெண்களுக்காய் சாட்சியம் கூறலாம். அவை அனைத்துலக போர்க்குற்ற/மனிதாபிமான சட்டங்களின் முன் நிற்கும் தன்மை கொண்டவையே என்கிறார்கள்.
அதுபோலவே சரணடைந்த பெண் போராளிகள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாய், தொடர்ந்தும் அக்கொடுமை நடந்தேறி வருவதாய் சொல்லப்படுகிறது. அது தொடர்பான நேரடி அல்லது இரண்டாம் நிலை சாட்சியங்களையும் அந்த அமைப்பினர் கேட் கிறார்கள். நான்காவதாக முள்ளிவாய்க்கால், வவுனியா, இன்னபிற இடங்களில் -அதாவது போரின் இறுதி மாதங்களிலும், போருக்குப் பின்னரும் நடந்தேறிய மானுட அவலங்களை தங்கள் கேமராக்களிலும், கை பேசிகளிலுமாய் புகைப்படம் எடுத்தவர்கள் யாரேனும் இருந்தால் -அவர்களது கேமராக்கள், கைபேசி களிலேயே இன்னும் அப்படங்கள் பாதுகாப்பாக பதிவில் இருந்தால் அவை மிக முக்கியமான போர்க்குற்ற ஆதாரங்களாக நிற்கும் வலுக் கொண்டவை. இணையதளங்களில் பேரவலத்தின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் காணக்கிடக் கின்றனதான். ஆனால் அவை சட்டத்தின் முன் ஆதாரங்களாக ஏற்கப்படும் தன்மை கொண்டவை யல்ல.
மாறாக கேமராக்களும், கைபேசிகளும் தீர்க்கமான, உறுதியான ஆதாரங்களாக நிற்கும். அவ்வாறு யாரிடமாவது இருந்தால் அவர்கள் முன்வந்து தருமாறு விரும்பிக் கேட்கிறார்கள்.மேற்சொன்ன நான்கு திசை ஆதாரங்களை யார் தர முன் வந்தாலும் அவர்களது பெயர், விபரங்கள் அனைத்தையும் பூரண ரகசியத்தன்மையோடு பாதுகாத்திட அவர்கள் வாக்குறுதி தருகிறார்கள். இன அழித்தல், போர்க்குற்ற நீதி தேடும் புனித மான வரலாற்று முயற்சியில் யாராவது மேற்சொன்ன சாட்சியங்களாக இருந்தால் வரலாற்றுப் பொறுப்புணர் வுடனும், பொது மானுடக் கடமையுணர்வுடனும் தயவு செய்து தொடர்பு கொள் ளுங்கள்.
எனது முகவரி : ஜெகத் கஸ்பர், 68, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004.
மின் அஞ்சல்: jegath66@yahoo.co.uk.
இணைய தளம் http://www.jegathgaspar.com/.
போர்க்குற்றங்கள் தொடர்பான இச்செயற்பாட்டில் என்னை அணுகியவர்கள் வெள்ளைக்காரர்கள். அவர்தம் பின்னணி என்ன, தமிழர் மீதான இந்த அக்கறைக்கு அரசியற் காரணங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதையெல்லாம் அறியவேண்டி நேரடியாகவே அவர்களை நான் வினவினேன். எனது கேள்விகளுக்கு அவர்கள் தந்த பதில் ஆறுதலாயும், மிகுந்த நம்பிக்கையாகவும் இருந்தது.இலங்கையை தமிழருக்கெதிரான போர்க்குற்றவாளியாய் நிறுத்தும் இம்முயற்சியில் இயங்கி வரும் இந்த அமைப்பினர் இப்புலத்தில் முன் அனுபவம் கொண்ட நிபுணர்கள்.
ஆனால் இப்பணியை ஏற்றுச் செய்யும்படி இவர்களை அணுகி அதற்கு ஆகும் பெரு நிதி பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் யார் என்பதுதான் நெகிழ்வான செய்தியாய் இருந்தது.
யுத்தம் 5 -நக்கீரன்கோபால்
டிபன் பரிமாறப்பட்டது. சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஏ.டி.ஜி.பி. ஜெயப் பிரகாஷ் முதல்வரிடம் சென்று ஏதோ சொன்னார். கிருஷ்ணாவின் முகத்தில் ஆச்சரியம் பரவியது. "wow.. 200 Press peoples. How can he manage them?'' என்று யோசித்தார். விஷயம் இதுதான். வெளியே 200 பத்திரிகையாளர்கள் ரொம்ப நேரமாகக் காத்திருக்கிறார்கள். நான் வெளியே வந்து பேசாமல் அவர்கள் புறப்பட மாட்டார்கள். இதைத்தான் முதல்வரிடம் ஏ.டி.ஜி.பி சொன்னார். நான் பத்திரிகையாளர்களை சந்திக்கத் தயாரானேன். கிருஷ்ணா ஆச்சரி யத்துடன் ரஜினியைப் பார்த்து "ஹேகே சமாளிஸ்தாரே' (இவரு சமாளிச்சுருவாரா?) என்றார். அதற்கு ""காது நோடி'' (பொறுத்துப் பாருங்க) என ரஜினி சொன்னார். நான் முதல்வருக்கு நன்றி தெரிவித்து, அடுத்த முறை ராஜ்குமாரோடு பார்ப்போம் என்று சொல்லிவிட்டு பத்திரிகையாளர்களை சந்திக்க கிளம்பினேன். ரஜினியிடம் கிருஷ்ணா ஏதோ சொன்னார். பிறகு ரஜினி என்னிடம், ""நைட் சொல்றேன் கோபால்'' என்றார்.மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஐ.ஜி. சீனிவாசன் என்னை பத்திரிகை யாளர்கள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, ""ஏன் சார் இவ்வளவு ஃபோர்ஸ்?'' என்று கேட்டேன். ""உங்க மேலே ஒரு துரும்புகூட படக்கூடாதுங்கிறது எங்க சி.எம். உத்தரவு சார்'' என்றார் அவர். என்னைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த பத்திரிகையாளர்கள், இத்தனை போலீஸ் பாதுகாப்புடன் வருவதைப் பார்த்ததும் சீற ஆரம்பித்துவிட்டார்கள்.""எங்களை சந்திக்க வருவதற்கு இத்தனை போலீஸ் பாதுகாப்பு எதற்கு?''""நல்ல கேள்வி கேட்டீங்க. இதைத்தான் நானும் உங்க ஐ.ஜி.கிட்டே கேட்டேன். நான் சொன்னதை சொல்லுங்க சார்'' என சீனி வாசனைப் பார்த்து சொன்னேன். அவர் விளக்கி முடித்ததும், நான் பத்திரிகையாளர்களுடன் பேச ஆரம்பித்தேன். உதயா டி.வி.யில் லைவ்வாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது இந்த சந்திப்பு. எடுத்த எடுப்பிலேயே, ""நம்ம ராஜ்குமாரை உங்க சார்பா இன்று காலையில்தான் பார்த்துவிட்டு வந்தேன்'' என்றேன். அதுவரை இருந்துவந்த பதற்றம் அப்படியே தணிந்தது. அதன்பின் 2 மணி நேரம், நீடித்த சந்திப்பை முதல்வர் கிருஷ்ணாவும் டி.வி.யில் பார்த்திருக்கிறார். பேட்டி முடிந்ததும் பெங்களூரு பத்திரிகை யாளர்கள் பலர் என்னுடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டதையும் கிருஷ்ணா பார்த் திருக்கிறார். "200 பத்திரிகையாளர்களை ஒருசேர சமாளித்த இவர், வீரப்பனையும் மசிய வைப்பார்' என்ற நம்பிக்கை அவருக்குள் அழுத்தமாக பதிந்திருப்பதாக கிருஷ்ணாவின் பி.ஏ. சாஸ்திரி என்னிடம் கூறினார்.பிரஸ் மீட் முடிந்ததும் ""ராஜ்குமார் சார் வீட்டுக்குப் போயிட்டு இன்னைக்கு நைட் என் வீட்டில்தான் தங்குறோம்'' என்று ரஜினி சொல்லியிருந்தார். பிரஸ் மீட்டுக்குப் பிறகு ரஜினி வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார் அவருடைய உதவி யாளர். ரஜினி என்னிடம், ""இவ்வ ளவு சீரியஸான செக்யூரிட்டி இருக்கும்னு நினைக்கலை கோபால். இங்கே நீங்க தங்குறது பாதுகாப்பில்லையாம். உங்களுக்காக மூணு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் புக் பண்ணி, மூணு ஹோட்டல்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போட்டிருக்காங்க. அதனால நாம ராஜ்குமார் சார் வீட்டுக்குப் போயிட்டு வந்ததும் உங்களை ஹோட்டலில் விட்டுடுறேன். காலையில் பார்க்கலாம்'' என்றார்.ராஜ்குமார் வீட்டில் இருந்தோம். சி.எம். வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் என்ன மரியாதை தந்தார்களோ அதே மரி யாதையை ராஜ்குமார் குடும் பத்தினர் எனக்குத் தந்தார்கள். ராஜ்குமாரின் மனைவி பர் வதம்மாள், வீட்டை சுற்றிக் காட்டச் சொன்னார். நல்ல வீடுதான். ஆனால், ரசித்துப் பார்க்கும் மனநிலையில் நான் இல்லை. கடத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் ராஜ்குமார் அந்தக் காட்டில் எப்படி இருந்தார். இப்போது எப்படி இருக்கிறார் என்பதை விளக்கமாகச் சொன் னேன். அவரது குடும்பத்தினர் மனநிலையும் சகஜ நிலைமைக்கு வந்தது. என்னிடம் ராஜ்குமார் பேசிய விஷயங்களை சொன்னபோது, அவர்களுக்கு சந்தோஷம். ராஜ்குமாரும் அவரது குடும்பத்தினரும் மட்டுமே அறிந்திருந்த பல தகவல்களை நான் சொல்லிக்கொண்டிருந்ததுதான் அந்த சந்தோஷத்துக்குக் காரணம். தன்னுடைய அம்மா- அப்பா படத்தை ராஜ்குமார் கேட்டிருந்தார். அதை அவர்களிடம் சொன்னேன். கொடுத்தார்கள். அதன்பின் நடுவில் நான் நிற்க, ஒரு பக்கம் ரஜினி, இன்னொரு பக்கம் ராஜ்குமார் மகன் நிற்க வீட்டு வாசலில் பத்திரிகை யாளர்களை சந்தித்தோம்.ஸ்டார் ஹோட்டலிலிருந்து தம்பி காமராஜுக்கு போன் செய்து விவரங்களை சொல்லி, கலைஞரிடம் தெரிவிக்கச் சொன்னேன். நானும் கலைஞரிடம், ""பேங்களூர் விஷயம் நல்லபடியா போச்சுண்ணே'' என்றேன். பாதுகாப்பு பலமாக இருந்ததால், பெங்களூருவில் இருந்த தம்பி ஜெ.பி., நக்கீரன் ஏஜென்ட் உள்பட யாரையும் சந்திக்க முடியவில்லை. ஹோட்டலில் இருந்த நேரத்தில் ரஜினியிடமிருந்து போன். ""கோபால்.. சி.எம். கிருஷ்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கிறார். உங்க மேலே அவருக்கு முழு நம்பிக்கை. அதைத் தான் என்கிட்டே அப்ப சொன்னார். நீங்க பிரஸ் மீட் செஞ்ச விதத்தை பார்த்துட்டு ரொம்ப அசந்து போயிருக் கிறார். 'We are selected a right person to rescue Rajkumar' னு சொல்லியிருக்கிறார் கோபால்'' என்றார். ராஜ்குமார் மீட்பு நடவடிக்கை நல்லபடியாக முடியவேண்டும் என்று அதிக அக்கறை எடுத்துக்கொண்டவர் ரஜினி. அதனால், கர்நாடக முதல்வரின் நம்பிக்கை அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. காலையில் பெங்களூரு ஏர்போர்ட்டில் என்னை வழியனுப்பி வைக்க வந்தார்.""கோபால் என்கிட்டே என்ன சொன்னீங்க.. சதாப்தி ரயிலா.. ம்... ஹா...ஹா.. ஹா... இங்கே உங்க பவர் என்னன்னு இப்ப பார்த்தீங்களா?'' என்றார் பெருமை பொங்க. எனக்கும் அவரை நினைத்து பெருமையாக இருந்துச்சு.2000-ம் ஆண்டு பெங்களூரு பயணத்துக்கும், 2001-ம் ஆண்டு பெங்களூரு பயணத்துக்குமிடையில் ஒரு வருடம் தான். ஆனால், எத்தனை மாற்றங்கள்! நான் போன் செய்ததும், என்னாச்சு கோபால் என்று ரஜினி பதறியதற்கு அதுதான் காரணம். ஏனென்றால், ஜெயலலிதா ஆட்சியால் குறி வைக்கப்பட்டது, நக்கீரன் மட்டுமா? ரஜினியும்தானே.....!
திருட்டு மூலிகைச் சாறில் வைகோ...
உங்கள் ஊரிலும் "சைபர்' குற்றவாளிகள்!
அக்காட்சி யின் பின்னணியில் சினிமா பாடல் ஒலிக்கிறது. இந்தக் க்ளிப்பைத்தான், "ஜீன்ஸ் போட்ருக்குற அந்தப் புள்ள நம்ம ஊரு. வாத்தியாரு மூஞ்சிதான் சரியா விழல' என்று அக்கறையோடு பேசுகிறது பப்ளிக்.இன்னொன்று- ஆசிரியை நம்மிடம் சொன்னது. அதில் அந்தப் பெண் அவனிடம், "என்ன நெனச்சுக்கிட்டிருக்குற நீ? நீ பாட் டுக்கு வீடியோ எடுக்குற' என்று கோபிக்கிறாள்.
அவனோ, அவள் பேச்சையும் மீறி தான் எடுத்த காட்சி களை அவளுக்கே காண்பிக்கிறான். அந்தக் கண்றாவியை அவளும் சிரித்தபடி ரசிக்கிறாள். பிறகு "மறக்காம அழிச்சிடு' என்று அவனிடம் கெஞ்சு கிறாள். இருவரின் பேச்சும் துல்லியமாகக் கேட்கிறது. ஒரு இடத்தில் அந்த ஆண், "நான் சிவகாசி பரம்பரையாக்கும். ஷட்டர ஒடச்சிட்டு உள்ளே புகுந்துருவேன்' என்று அவளிடம் ஜம்பமடிக்கிறான். இதுதான் "உள்ளூர் ஆசிரியை' என்ற டைட்டிலோடு ஒவ்வொரு செல்ஃபோனாக உலா வருகிறது.இந்த இரண்டு கவரேஜையும் இண்டர்நெட் டிலும் ஏற்றி விட்டு உலகறியச் செய்து விட்டார்கள். விருதுநகரின் காஸ்ட்லி பள்ளி ஒன்றின் ஆசிரியைதான் செல்ஃபோனில் சிக்கியிருக்கிறார் என ஊரெங்கும் பேச்சு.
"கேமரா செல்ஃபோன் விஷயத்தில் இன் னும் போதிய விழிப்புணர்வு இல்லையே பெண்களுக்கு?' -சமூக ஆர்வலர் விஜயகுமாரிடம் கேட் டோம்.""கத்தி, துப்பாக்கியை விட மோசமான ஆயுதம் இந்தக் கேமரா செல்ஃபோன். எதையாச் சும் படம் எடுக்கணும்னு அவ னவன் துடியாத் துடிக்கிறான். இந்த மாதிரி ஆணுங்களுக்கு, பொண்ணுங்க வாழ்க்கையே வௌயாட்டாப் போச்சு. ரெகவரி சாஃப்ட்வேர்ல்லாம் வந்து டெக் னாலஜிதான் ரொம்ப முன் னேறிடுச்சே. போன்ல இந்த மாதிரி படம் எடுத்தவன் அழிச்சிட்டுக் கொடுத்தாக்கூட, அதுக்கு உயிர் கொடுத்து, அதயே மெமரி கார்டுல ஏத்தி விக்கிற சர்வீஸ் சென்டர்தான் நெறய இருக்கே. அதுவும் பக்காவான வியாபாரத் தந்திரத்தோட "விருதுநகர் வங்கி யின் பெண் அலுவலர், உங்க ஊரு டீச்சர், பக்கத்து ஊரு மாணவி'ன்னு இவங்களே ஒரு தலைப்பைப் போட்டுல்ல ஜாம் ஜாம்னு தொழில் பண்ணுறாங்க. "லோக் கல் சமாச்சாரம்'னா சனங்களுக்கு ஒரு கிக் இருக்கும்னு வீக்னஸ தெரிஞ்சுக்கிட்டுல்ல அடிக்கி றாங்க.
நெட்ல கூட தஞ்சாவூர் மாமி, சென்னை ஆன்ட்டி, மதுரை மல்லிகான்னு ஊரும் பேரும் போட்டுத்தானே சுத்தல்ல விட றாங்க. எங்கேயோ, யாரோ செய்யற தப்புக்காக எந்த ஊரோ, எந்தப் பள்ளிக்கூடமோ அவமானப்பட்டு நிக்கிதுன்னா இந்தக் கொடுமைய என்னன்னு சொல்றது?நாலு சுவத்துக்குள்ள நடக்குறத அவங்களே வீடியோ எடுத்து மாட்டிக்குறது ஒரு ரகம். பொதுவான பார்க்ல, பீச்சுல, டாய்லெட்ல, கோயில் குளத்துல பெண்கள் அப்படி இப்படி இருக்கும் போது ஒளிஞ்சு நின்னு எடுத்து அதயும் பிசினஸ் பண்ணுறது இன்னொரு ரகம்'' என்றார்.18 வருடங் களுக்கு முன் தமிழ் நாட்டில் கால்பதித்த நெதர்லாந்துக்காரன் வில்லியம்ஸ் இது போன்ற குற்றங்களை ஒரு தொழிலாகவே பண்ணி வந்தான். குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்ட அவன், இன்டர்போல் போலீஸ் அளித்த தகவலின் பேரில் இப்போதுதான் கைதாகியிருக்கிறான் சென்னையில். இந் நிலையில் "சைபர் குற்றங்கள் சிவகாசியிலும், கோரமுகம் காட்டி மிரட்டுகின்றனவே?' என்றோம் சிவகாசி டி.எஸ்.பி. ராஜகோபாலிடம்,""தற்செயலாக அந்த டீச்சர் கிளிப்பிங்ஸை நானும் பார்க்க நேர்ந்தது. அது அந்த ஸ்கூல் டீச்சர்தானா என்பதை முதலில் கண்டுபிடித்து வீடியோ எடுத்த குற்றவாளியைப் பிடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியிலிருந்து புகார் தந்தால்தான், சென்னையிலிருக்கும் சைபர் கிரைம் போலீசுக்கு ஃபார்வர்ட் பண்ணி, லோக்கல் ஸ்டேஷன்ல எஃப்.ஐ.ஆர். போட்டு குற்றவாளியை தேடிப் பிடிக்க முடியும்'' என்று விளக்கினார்.அவமானத்துக்கு அஞ்சும் நம் கலாச்சாரம் சீரழிந்து வருகிறதே!
மன்மத குருக்களின் புதுப்புது சி.டி.!
கடைசிவரை பிடிபடாத பிரபாகரன், பொட்டு அம்மான்: ராஜீவ்காந்தி கொலைவழக்கு தள்ளிவைப்பு
சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்த வழக்கு, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தனியாக அமைக்கப்பட்ட தடா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர் சி.பி.ஐ.யிடம் சிக்கவில்லை. எனவே வழக்கு பிரிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நளினி, முருகன் உட்பட சிலர் மீதான வழக்கு மட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கடைசிவரை பிடிபடாத பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் மீதான வழக்கு 1992-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தனியாக பிரிக்கப்பட்டது. இந்த வழக்கு, சென்னை முதலாம் கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 17 ஆண்டுகளாக பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. வழக்கின் முக்கியத்துவம் கருதி நீதிபதியின் அறையில் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முதலாம் தடா கோர்ட்டு நீதிபதி பி.ராமலிங்கம் விடுமுறையில் சென்றிருப்பதால், 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி எம்.ஏ.ஆனந்தகுமார் அறையில் நேற்று காலையில் விசாரணை நடந்தது.
சி.பி.ஐ. அதிகாரி மற்றும் வக்கீல் ஆஜராகி 4 மூலைகளிலும் சீலிட்ட கவர் ஒன்றை தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ம் வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கையில் நடந்த போரில் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின. அவர்கள் இறப்பு சான்றிதழை சி.பி.ஐ. தாக்கல் செய்தால்தான் வழக்கு முடிவுக்கு வரும்.
நேற்றைய விசாரணையில் அவர்களின் இறப்பு சான்றிதழ் தாக்கல் செய்யப்படவில்லை என்று கோர்ட்டு வட்டாரம் தெரிவித்தது. பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை அரசு கொடுக்க வேண்டும். எனவே இவர்களின் இறப்பு சான்றிதழைக் கேட்டு இலங்கை அரசிடம் சி.பி.ஐ. தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
ரகசிய குறியீடு இல்லாத 2.5 கோடி செல்போன்கள் செயலிழக்கின்றன!
ஒவ்வொரு செல்போனுக்கும் ஒவ்வொரு ஐ.எம்.இ.ஐ. குறியீட்டு எண் இருக்கும்.ஒரு செல்போன் எந்த இடத்தில் இருந்து பேசப்படுகிறது என்பதை இந்த எண்ணின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். மேலும் செல்போன் தொலைந்து விட்டால், உரிமையாளர் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும் இந்த எண்தான் உதவும்.ஆனால் கொரியா, சீனாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வந்து விற்கப்படும் ஏராளமான செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. என்ற சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இருப்பது இல்லை. இந்தியா முழுவதும், ரகசிய குறியீட்டு எண் இல்லாத சுமார் 2.5 கோடி செல்போன்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த வகை செல்போன்களில் இருந்து பேசும் போது எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இது தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாக போய் விடுகிறது.எனவே, சமீப காலமாக தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாலும், நாட்டின் பாதுகாப்பு கருதியும் சர்வதேச குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் செயல்பாட்டை முடக்க மத்திய அரசு முடிவு செய்தது.இதைத்தொடர்ந்து, அத்தகைய செல்போன் வைத்திருப்பவர்கள் அதை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 'கெடு' விதித்திருந்தது மத்திய அரசு.அந்த 'கெடு' முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. எனவே, திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல், சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.செல்போன் உபயோகிப்பாளர்கள், 57886 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி தங்கள் செல்போனின் ரகசிய குறியீட்டு எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.
விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!
இந்த காலகட்டத்தில் சீமான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது, ‘’கோபம்’ என்று படம் எடுக்கப்போகிறேன்’ என்று சீமான் சொல்ல,பிரபாகரனுடன் பக்கத்தில் இருந்தவர் ‘சினம்’ என்று தலைப்பு வையுங்கள் என்றாராம்.
அதற்கு பிரபாகரன், ‘கோபம் என்று சொன்னால்தான் அதில் அழுத்தம் இருக்கிறது. ஒரு வேகம் இருக்கிறது. அந்த தலைப்பிலேயே படம் எடுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள். ஆனால் வாழ்த்துக்கள் மாதிரி மென்மையான படம் எடுக்க வேண்டாம்’என்று சொன்னாராம்.
அதன்படி சீமான் ‘கோபம்’காட்ட முடிவெடுத்துவிட்டார். நடிகர் விஜய்யும் சீமானுடம் இணைய முடிவெடுத்துவிட்டார்.
படப்பிடிப்புதான் எப்போது துவங்கப்போகிறது என்று தெரியவில்லை.
சுடாத நெருப்பும் சுடுகின்ற கண்ணீரும்….. மாவீரர்கள்
தமிழீழ தேசத்து மக்களைப் பொறுத்தவரை மாவீரர் நாள் என்பது புனிதர்களைப் பூசிக்கின்ற திருநாள்.
நவம்பர் 27 என்றவுடன் உலகெங்கும் வாழும் தமிழீழ தேசத்தவர்களுக்கு மாவீரர் நாள் தான் நினைவுக்கு வரும்.
ஆனால், இந்த நாளை தாயகத்தில் வெளிப்படையாக அனுஷ்டிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.
* சுற்றிலும் இராணுவக் கெடுபிடிகள் நிறைந்துள்ள தமிழர் தாயகத்தில் மாவீரர்களின் நினைவைப் போற்றும் நிகழ்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் கூர்மை பெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை இப்படியொரு இக்கட்டான நிலை தமிழ் மக்களுக்கு வந்ததில்லை. காலத்துக்குக் காலம் புலிகளின் தளப் பிரதேசங்கள் மாறிய போதும் புலிகளின் கட்டுப்பாட்டில் ஏதாவதொரு பிரதேசம் இருந்து கொண்டேயிருந்தது. அங்கெல்லாம் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடந்தேறி வந்தன. ஆனால், இன்றைய நிலையில் தாயகத்தில் ஒரு துண்டு நிலத்தில் கூட மாவீரர் நாளை சுதந்திரமான முறையில் அனுஷ்;டிக்க முடியாதளவுக்கு சிங்களத்தின் இரும்புக் கரங்கள் அழுத்திப் பிடித்துள்ளன.
மாவீரர் நாள் பற்றிய சிந்தனைகளே தமிழர்களுக்கு வரக் கூடாது என்பதற்காக பல்வேறு வாசல்களையும் திறந்து விடப் படைத்தரப்பும் அரசாங்கமும் தயாராக இருக்கின்றன. ஆனாலும் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து மாவீரர் நாளை அழித்து விட முடியாது.
அவர்களின் மனங்களில் இருந்து மாவீரர்களின் நினைவுகளை துடைத்து விட முடியாது.
தாயகத்தில் வாழுகின்ற மக்கள் ஒவ்வொருவரும் மாவீரர் நாளை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்காகக் காத்திருக்கின்றனர்.
அவரவர் மனங்களில் தீபம் ஏற்றி மாவீரர்களை நினைவு கொள்வதற்காகக் காத்திருக்கின்றனர்.
ஏனெனில், மாவீரர் ஒவ்வொருவரினதும் மரணங்கள் சாதாரணமானவை அல்ல. அவர்கள் யாரும் தமக்காக மடிந்தவர்கள் அல்ல.
மரணம் நிகழப் போவதை அறிந்து கொண்டே போர்க்களம் போனவர்கள்.
* சாவைச் தெரிந்து கொண்டே சரித்திரமானவர்கள். தமக்காகவே மாவீரர்கள் மரணத்தைத் தழுவினார்கள் என்ற உணர்வு ஒவ்வொரு தமிழனின் மனதிலும் படிந்து போயிருக்கிறது. சிலர் இதை வெளிப்படையாக காண்பிக்கின்றனர். பலர் அதை உள்ளுக்குள் போட்டுப் புதைத்து வைத்து மௌனமாக அழுகின்றனர். இதனால் தான் சிங்கள தேசத்தினால் மாவீரர்களின் நினைவுகளை தமிழ் மக்களிடமிருந்து பிரிக்க முடியாதிருக்கிறது.
மாவீரர்கள் பிற நாட்டில் இருந்தோ – வேற்றுலகில் இருந்தோ வந்து எமக்காகச் சண்டையிட்டவர்கள் அல்ல.
எம்முடனேயே பிறந்து – எம்முடனேயே வாழ்ந்து – எமக்காவே உயிர் கொடுத்தவர்கள் அவர்கள். அப்படிப் பட்டவர்களை தமிழ் மக்கள் ஒருபோதும் தமது இதயத்தில் இருந்து அகற்றி வி;ட முடியாது.
அதைச் செய்ய நினைப்பது சிங்கள தேசத்தால் இயலாத காரியம்.
* மாவீரர்களை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து மறைத்து விட சிங்கள தேசம் முயற்சிக்குமேயானால் அதைப் போன்ற தவறு வேறேதும் இருக்க முடியாது. தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைச் சிதைத்து – மாவீர்களின் தியாக வரலாற்றை மறைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், இந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறப் போவதில்லை. அதேவேளை, தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள், நினைவாலயங்களை அழித்து எமது வரலாற்றைப் புதைத்து விட எண்ணும் சிங்கள தேசத்தின் செயலுக்கு நாம் அடிபணிந்து நிற்கப் போகிறோமா என்ற கேள்வி இந்தத் தருணத்தில் எழுகிறது.
அப்படி அடிபணிவோமேயானால் அது மாவீரர்களை மறந்து போகச் செய்ய முனையும் சக்திகளுக்குத் துணை போனதாகி விடும்.
எமக்காக உயிர் கொடுத்த உத்தமர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்துவதாக அமைந்து விடும்.
மாவீரர்களைப் போற்றும் நிகழ்வுகளை தாயகத்திலும் நடத்துகின்ற சூழலை உருவாக்கும் பொறுப்பும் எம்முடையதே. இது இலகுவில் சாத்தியமான தொன்றல்ல என்பது தெரிந்ததே.
இராணுவக் கெடுபிடிக்குள் இருந்து கொண்டு அதைச் செய்ய முடியாது தான். ஆனால், சட்டரீதியாக இதற்கு வாய்ப்;புகள் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.
* 1971 இலும், 1989 இலும் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடத்திய ஜேவிபி, இதன்போது மாண்டு போன தமது உறுப்பினர்களின் நினைவாக வீரர்கள் தினத்தை கொண்டாடுகிறது. அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கும் போது தமிழ் மக்கள் மாவீரர் நாளை பகிரங்கமாக நடந்த முடியாதா? ஜே.வி.பி.க்கு ஒரு நீதி எமக்கு ஒரு நீதியா? என்ற கேள்வியை தமிழ் மக்கள் எழுப்ப வேண்டிய தருணம் இது.
மாவீரர்கள் எமது பிள்ளைகள், சகோரர்கள், குடும்ப அங்கத்தினர்கள். அவர்களின் நினைவில் சுதந்திரமாக நனைவதற்குக் கூட, தமிழருக்கு உரிமை இல்லையா?
* இறந்து போன உறவுகளுக்காக அழுவதற்குக் கூட உரிமை இல்லை என்றால் – அப்படிப்பட்ட சிங்கள தேசத்தில் தமிழ் மக்ளுக்கு எப்படி நிம்மதியான வாழ்வு கிடைக்கும். இந்த உண்மையை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்வதற்கும் இதையொரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம். மாவீரர்களை நினைவு கொள்வதற்கு சட்டரீதியான ஒரு அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சட்டவல்லுனர்கள் தயாராக வேண்டும். மாவீரர் துயிலுமில்லங்களிலும், நினைவாலயங்களிலும் கூடி – அவர்களுக்காக அழுவதற்கான, அவர்களின் நினைவை சுமப்பதற்கான உரிமைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்.
தட்டினால் தான் திறக்கும் – இது எமது விடுதலைப் போராட்டம் தந்த பாடம்.
அரசுக்கு எதிராகப் போராடி மடிந்த சிங்களவர்களை நினைவு கொள்ள முடியும் என்றால்- அதில் தமிழருக்கு எப்படி விதிவிலக்கு இருக்க முடியும்?
மண்ணுக்காக மரணித்தவர்களின் நினைவாலயங்களை அழிக்காமல் பாதுகாப்பதற்கும் சட்டரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்வதற்கு முயற்சிக்கலாம். போரில் இறந்த எதிரியின் நினைவாலயங்களைக் கூட மதிப்பது தான் உண்மையான போர் வீரர்களின் மரபு. ஆனால் அது சிங்கள தேசத்துக்குப் பொருத்தமானதொன்றல்ல.அப்படிப்பட்ட சிங்கள தேசத்துக்கு பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் ஊடாகவோ அல்லது சர்வதேச செல்வாக்குகளைப் பயன்படுத்தியோ தாயகத்தில் மாவீரர்களை நினைவில் நிறுத்துவதற்கான உரிமைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்.
மாவீரர்களை நினைவு கூர்வதற்கான உரிமைகளைக் கூடத் தர மறுக்கும் சிங்களதேசம் தமிழருக்கு வேறு எந்த உரிமைகளையும் கொடுத்து விடாது. இந்த உண்மையை சர்வதேசத்துக்கு உணர்த்துவதற்கு இப்படியானதொரு முயற்சி அவசியம். சிங்கள தேசத்தின் கதவுகளைத் தட்டி தட்டி எமக்கான உரிமைகளைக் கேட்பதற்கு தயாராவார்களா தமிழ் சட்டவல்லுனர்கள்?
கிருஸ்ணா அம்பலவாணர்
நான் அவனில்லை 2 - விமர்சனம்
கதிரையில் இருந்து விழுந்த நாள் முதல் மஹிந்தவுக்கு காலம் சரியில்லையாம்!
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப்பணிகள் முதலில் வீரவில பகுதியில் ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அமைச்சர் சாமல் ராஜபக்ஷ தனது கைத்தொலைபேசியூடாகக் கொடுத்த தகவல் மூலம் நிறுத்தியுள்ளார். பின்னர் அது மாத்தள பகுதிக்கு மாற்றப்பட்டது.புதிய விமானநிலைய அடிக்கல் நாட்டச் சென்ற மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக செல்லவிருந்த ஐ.ஐ 24 ரக ஹெலிகொப்ரரே நேற்று விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகொப்ரர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக ராணுவ பேச்சாளர் கூறினாலும் உண்மையில் ஜனாதிபதி பாதுகாப்புக்கென சென்ற ஹெலியே வீழ்ந்து நொருங்கியது.
அண்மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய மாநாட்டில் 'உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்' என பெரிய டிஜிட்டல் போர்டில் எழுதும்போது மஹிந்த சில அசௌகரியங்களுக்கு உள்ளானாராம். அதேபோல ராணுவ கண்காட்சியைத் திறந்து வைக்க முயற்சித்தபோது ரொமோட் கொண்ட்ரோல் இயங்காமல் சிக்கல் கொடுத்துள்ளது. இவ்வாறு பல சகுனங்கள் அவருக்கு கெட்டவிதமாக அமைந்துள்ளனவாம். இவற்றுக்கெல்லாம் காரணம் மஹிந்தவின் சனி மாற்றப் பலன்களே என சோதிடர்கள் எச்சரித்துள்ளனராம்.மேடையில் கம்பீரமாக அமரவந்த மஹிந்த எபோது கவிழ்ந்து விழுந்தாரோ அன்றிலிருந்து எல்லாமே கெட்டதாக அமைவதாக பேசப்படுகிறது
முமைத்கான்.. ஆடியோ விழாவில் ஜொள்ளு விட்ட பிரபலங்கள்!
சந்தர்ப்பம் கிடைத்தால் கோத்தபாயவை விசாரணை செய்வேன் - சரத்
இந்த நிறுவனமானது சரத் பொன்சேகாவின் மருமகன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே இந்நிறுவனமூடாக ஆயுதக் கொள்வனவு செய்து சரத் மோசடி செய்துள்ளதாகவும் மஹிந்தவின் வாதம் உள்ளது.ஆனால் சரத் பொன்சேகா இதற்கு நேர் எதிராக கருத்துக் கூறியுள்ளார். அரச படைகளுக்கான அத்தனை ஆயுதங்களும் கோத்தபாய ராஜபக்ஷவால் கொள்வனவு செய்யப்பட்டதே ஒழிய இந்த வியாபாரத்தின்போது விலை பேசுதல் போன்ற நிதிசார் நடவடிக்கைகள் எதிலும் தாம் ஈடுபடவே இல்லை என்கிறார் சரத். அனைத்து ஆயுதங்களும் 'Lanka Logistics' என்ற நிறுவனமூடாகவே வாங்கப்பட்டதாகக் கூறும் சரத் இந்நிறுவனத்தின் தலைவரும் கோத்தபாய தான் என்று கூறியுள்ளார்.
"ஆயுத கொள்வனவு குறித்த விசாரணைகள் கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த விசாரணை எதிர்காலத்திலும் கூட நடைபெறலாம். எனக்கு அந்த விசாரணைகளை நடத்தக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தால் நிச்சயம் அவ்விசாரணையை நடத்தி முடித்துக் காட்டுவேன்" என சரத் பொன்சேகா தாம் தான் அடுத்த ஜனாதிபதி என்பதுபோல கருத்துக்கள் கூறியுள்ளார்.தற்போதைய அரசாங்கம், எடுத்த குற்றச்சாட்டுக்கள் எல்லாவற்றுக்கும் தாமே காரணம் என்பது போல தம்மீது குற்றம் சாட்டி வருவதாகக் கூறிய சரத் பொன்சேகா உண்மையில் அரசுதான் பாதாளக்கும்பலுடன் தொடர்பு இருந்து சகல குற்றச்செயல்களிலும் ஈடுபடுகிறது என்றார். தேர்தல் பிரச்சாரம் தொடங்காத கட்டத்திலேயே இதுபோன்று இரு பகுதியும் கருத்துக்கள் வெளியிட தொடங்கியுள்ள நிலையில், பிர்ச்சாரம் தொடங்கினால் இன்னும் சிறப்பாக களைகட்டும் போல உள்ளது.
Friday, November 27, 2009
இலங்கையின் எம்.ஐ- 24 ரக உலங்கு வானூர்தி விழுந்து நொருங்கியது (3ம் இணைப்பு)
சீமான் கனடாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன
பெருமளவிலான ஈழ மக்கள் இரவோடு இரவாக திரண்டு விமான நிலையத்தில் நிற்க அவரை அதிகாரிகள் கொண்டு வந்து விமானத்தில் அனுப்பி வைத்தனர். இன்று இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு அவர் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் வருகிறார், அவருக்கு தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களும்,. நாம் தமிழர் அமைப்பினரும் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிகிறது.