சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த இரு விமானிகளும் பத்திரமாக உயிர் தப்பினர்.இந்திய விமானப்படையில் சுகோய் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து க்குள்ளாவது இது 2வது முறையாகும். கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஒரு சுகோய் விழுந்து நொறுங்கியது.
அதில் பயணம் செய்த துணை பைலட் உயிரிழந்தார். பைலட் தப்பினார்.இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் அருகே உள்ள ஜெதா கி தானி என்ற இடத்தில் ஒரு சுகோய் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரு பைலட்டுகளும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர்.இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை செய்தித் தொடர்பாளரான விங் கமாண்டர் டி.கே.சிங்கா கூறுகையில், ஜெய்சால்மர் மாவட்டம், பொக்ரானுக்கு தென் மேற்கே ஒரு சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானது.
இதில் இரு பைலட்டுகளும் தப்பினர் என்றார்.நேற்று மாலை 4.45 மணிக்கு இந்த சுகோய் விமானம் ஜோத்பூரிலிருந்து கிளம்பியது. வழக்கமான பயிற்சிக்காக இது சென்றது. மாலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.விமானத்தை விங் கமாண்டர் ஸ்ரீவத்சவ் என்பவர் இயக்கிக் கொண்டிருந்தார். அவருடன் ஒரு நேவிகேட்டரும் இருந்தார்.விமானம் கீழே விழுவதற்கு முன்பு இருவரும் பாராசூட் மூலம் உயிர் தப்பினர்.இந்திய விமானப்படை இந்திய ஆண்டு சந்திக்கும் 13வது விமான விபத்து இது. இந்த 13 விமானங்களில் 8 விமானங்கள் போர் விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment