இதுபற்றி கெளதமி கூறுகையில், "நிறைய பேர் என்னை மீண்டும் நடிக்கச் சொல்லிக் கேட்டார்கள். ஆனால் அப்போதல்லாம் மறுத்து வந்த நான், இந்தக் கதையைக் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். கிட்டத்தட்ட 8 மாதங்கள் இதற்காக என்னைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் குட்டிபத்மின். அவருக்கு நன்றி" என்றார்.அபிராமி ராமநாதன் பேசுகையில், "ஆரம்பத்தில் சில சீரியல்கள் தயாரித்தேன். இப்போது மீண்டும் அதை தொடங்கியுள்ளேன். இந்த முறை மிக விரிவாக செய்யப் போகிறோம். இப்போது கலைஞர் தொலைக்காட்சிக்கு ஒரு சீரியல் தயாரிக்கும் நாங்கள், அடுத்து எல்லா டிவிக்கும் தொடர்கள் செய்யத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இந்தத் தொடரில் கெளதமி அணியும் ஆடைகளை நல்லி குப்புசாமி நிறுவனமும், ரூ 50 லட்சம் மதிப்புள்ள நகைகளை என்ஏசி ஜுவல்லரியும் ஸ்பான்சர் செய்துள்ளன. முதல் காட்சி படமாக கேமராவை கமல்ஹாஸன் துவக்கி வைக்க, ராமநாராயணன் க்ளாப் அடித்தார்.விழாவில் குஷ்பு, கஸ்தூரி ராஜா, கல்பனா, கேஆர்ஜி, கலைப்புலி தாணு, கலைப்புலி சேகரன், விசி குகநாதன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment