தமன்னாவிடம் அப்படி என்ன இருக்கிறது என்று ஆத்திரப்படுகிறார்களாம் த்ரிஷாவும், நயன்தாராவும்.
இவர்கள் ஏன் இப்படி ஆத்திரப்படுகிறார்கள்.
தமிழ் திரையுலகமே தமன்னா பக்கம் சாய்ந்திருக்கிறது. சொல்லிக்கிற மாதிரி அப்படி ஒன்றும் அழகு இல்லை என்று ஆரம்பத்தில் ஓரங்கட்டப்பட்ட தமன்னாவுக்கு இப்போ செம மவுசு.
ஹூரோக்களும், இயக்குநர்களும், புரடியூசர்களும் போட்டி போட்டுக்கொண்டு தமன்னாவை புக் பண்ணுகிறார்கள். அதுமட்டுமல்ல சின்ன இடைவெளி கிடைத்தாலும் தமன்னா பற்றி பெரிய புராணம் பாடிவிடுகிறார்கள்.
படிக்காதவன் பட ஆடியோ வெளியீட்டின் போது சேரனும், அமீரும் மாறி மாறி அவரின் பக்கத்தில் நின்றுகொண்டார்கள்.
‘’எனக்கு தமன்னாவ ரொம்ப பிடிக்கும். நான் அவரோட அழகுல மயங்குறேன். அதுக்காக நான் அவர காதலிக்கிறேன்னு எழுதிடாதீங்க’’என்று ஜெயம்ரவி போட்டுத்தாக்கினார்.
தில்லாலங்கடி பட விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், தமன்னாவின் அழகு சூப்பர் என்றார். இப்போது பையா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஷங்கர், ‘’தமன்னாவின் நடிப்பில் படத்துக்கு படம் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
சீக்கிரமே அவர் சிம்ரன் இடத்தை பிடிப்பார்’’என்றார்.
சினேகா தொடர் புராணம் பாடிவரும் நல்ல நடிகர் பார்த்திபன், தமன்னா புராணம் பாட ஆரம்பித்திருக்கிறார்.
’’தினத்தந்தி குருவியார் பதிலில் தமன்னா இடுப்பில் கிள்ளினால் என்னவாகும்? என்று கேட்டு இருக்கிறார். அதற்கு பதில், ``அந்த இடம் சிவப்பாகி விடும்'' என்று இருந்தது. எந்த இடம் என்று குருவியார் சொல்லவில்லை. தமன்னாவின் இடுப்பா அல்லது கிள்ளியவரின் கன்னமா? என்று தெரியவில்லை.
எதற்காக இதை சொல்கிறேன் என்றால், ஏற்கனவே தமிழ் ரசிகர்களின் மனதில் தமன்னா இடம்பிடித்து விட்டார். இந்த படம் ரிலீசானால், சொல்லவே வேண்டாம். தமன்னா பிரேமின் ஓரத்தில் நின்றாலே ரசிகர்கள் மனதெல்லாம் ஈரமாகிவிடும். ``அடட மழை'' பாடலில் தமன்னா ஈரமாகவே வந்து நிற்கிறார். ரசிகர்கள் மனசு என்னவாகும்? திரையே பற்றிக்கொண்டு எரிகிறது.
ஏற்கனவே தமன்னா மார்பிள் சிலை மாதிரி இருக்கிறார். இந்த படம் ரிலீசுக்குப்பின், ஆண்கள் மனசுக்குள் சிலை வைக்கிற அளவுக்கு இருப்பார்’’என்று பெரிய்ய்ய்ய்ய்ய புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராணம் பாடினார்.
No comments:
Post a Comment