Friday, November 13, 2009

விவசாயத்துக்கு பிராந்தி!

குடிமகன்களுக்குப் போட்டியாக டாஸ்மாக் கடை வாசலில்.... தற்போது குடிப்பழக்கம் இல்லாத விவசாயிகளும் போட்டிபோட்டுக்கொண்டு வரிசை கட்டி நிற்கிறார்கள். விவசாயிகளை டாஸ்மாக் பக்கம் இழுப்பது எது?யாரோ ஒரு நாட்டு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு விவசாய டெக்னிக்தான்... அவர்களை பாட்டிலும் கையுமாக டாஸ்மாக்கையும் வயற்காட்டையும் சுற்றிவர வைக்கிறது. திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இந்த வினோதக் கூத்துக்களை அதிகமாய்ப் பார்த்து வியந்தோம்..""என்னண்ணே... கடைப்பக்கம் உங்களைப் பார்த்த மாதிரி இருக்கு?''’’ என கணக்கம்பட்டி விவசாயி லட்சுமணனின் வாயை நாம் கிளறியபோது... ""ஆமா தம்பி... விவசாயத்துக்காக சரக்கு வாங்கப்போயிருந்தேன். விவசாயத்துக்கு சரக்கான்னு ஆச்சரியப்படாதீங்க. நானும் ஆரம்பத்தில் இப்படி ஆச்சரியப்பட்டவந்தான். எங்க விவசாயப் பயிர்களைப் பூச்சிகள் அதிகமா நாசமாக்குச்சு. இதுக்காக வழக்கமா நாங்க வாங்கி அடிக்கும்... எண்டோசெல்பான், மிடா, அசிலி, மாலதியான் போன்ற மருந்துகளுக்கு இப்ப பூச்சிகள் கட்டுப்படறது இல்லை. போனமாசம் கோயமுத்தூருக்குப் போனப்ப... அங்க இருக்கும் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளோட பிராந்தியைக் கலந்து அடிச்சா சுத்தமா பூச்சியெல்லாம் அழியுதுன்னு சொன்னாங்க. நானும் எண்டோசெல்பானோட பிராந்தியைக் கலந்து மக்காச் சோளப் பயிருக்கு அடிச்சிப்பாத்தேன். என்ன ஆச்சரியம்? மருந் துக்கு கட்டுப்படாத பூச்சிகள்.. பிராந்தியக் கலந்து அடிச்சதும்... ரெண்டே நாள்ல சுத்தமா செத்துப்போச்சு. இதை பார்த்த மத்த விவசாயிகளும் இப்ப பூச்சிக்கொல்லி மருந்தைவிட பிராந்தியை நம்பறாங்க''’என்றார் கூலாய்.பச்சனநாயக்கன்பட்டி விவசாயி ராமலிங்கமோ ""மருந்துகளை அடிச்சும் எங்க பருத்திப் பயிர்களை கம்பளிப்பூச்சிகள் நாசம்பண்ணி வந்துச்சு. மிடா பூச்சிக்கொல்லி மருந்தோட சரக்கைக் கலந்து அடிச்சோம். அவ்வளதான்... கம்பளியாவது கிம்பளியாவது.. எல்லாம் அழிஞ்சி போச்சு''’என்றதோடு... "100 மில்லி மருந்துக்கு ஒரு குவார்ட்டர் சரக்கைக் கலக்கணும்' என்கிற டிப்ஸையும் கொடுத்தார்.""வெறும் பூச்சிக்கொல்லி மருந்தை அடிச்சா பிரயோஜனமில்லை. சரக்கு கலந்த மருந்துக்குத்தான் வீரியம் அதிகமாக இருக்கு. இதில் பூச்சிகள் செத்து விழறதை கண்கூடாய் பார்த்தவன் நான்'' என்கிறார் சரக்கு மருந்தை அடித்துக்கொண்டிருந்த கண்ணுச்சாமி. ஒட்டன்சத்திரத்தில் தாவரங்களுக்கான மெடிக் கல் வைத்திருக்கும் முத்து சாமியோ ""இதெல்லாம் விவசாயிகளின் மூட நம் பிக்கை. இதனால் டாஸ் மாக் கடைகள்லதான் யாவாரம் அதிகமா நடக் குது''’என்கிறார் எரிச்ச லாய்.இதுதொடர்பாக வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சங்கர லிங்கத்திடம் நாம் கேட்ட போது “""இந்த விசயத்தைக் கேட்டு ஆச்சரியப் பட்டேன். இது தொடர்பா கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்திடம் கருத்து கேட்டிருக்கிறோம். அது வந்தபிறகுதான் உறுதியான கருத்துக்கு வரமுடியும்''’என்கிறார் புன்னகையோடு. போகிற போக்கைப்பார்த்தால் குடிமகன்களுக்கு சரக்கு கிடைக்காது போலிருக் கிறது.

No comments:

Post a Comment